EMBRACE OF THE VAMPIRE-2013/ரத்தக்காட்டேரி..





பொதுவாக வாம்பயர் என்று அழைக்கப்படும் பேய் மனிதர்கள் யாரை கடித்தாலும் அவர்களுக்கும் இரண்டு சிங்கப்பல் முளைத்து விடும்...
ஆனோ பெண்ணே யார் பேயாக இருந்தாலும்  எதிராளியோடு மோகத்தில் உறவாடி ....நல்ல டெம்ட் ஏறும் சமயம் கழுத்து பக்கம்  முத்தமிட்ட படி வந்து கழுத்தில் பல் பதித்து ஸ்ட்ரா போட்டு  உறிஞ்சுவது போல, ரத்தத்தை உறிஞ்சி, அதுவும் ரத்தத்தை உறிஞ்சம் போதுகூட அதுங்க சுகமா கழுத்தை காட்டிக்கிட்டு தேமென்னு எந்த சொரனையும் இல்லாம நின்னு தொலையுங்க... 


   இதுதான்  ஐரோம்பிய வேம்பயர் படங்களின் காட்சிகள்... இதுல கொஞ்சம் சவுண்ட் எபெக்ட் எல்லாம் போட்டு, நம்மை  கொஞ்சம் பயமறுத்த பார்ப்பாங்க... ஐரோப்பிய தேசம் எங்கும் வெம்பயர் பேய்ன்னா எல்லாருக்கும் கிளி பிடிக்கும் நம்ம ஊர் ரத்தக்காட்டேறி போல வேம்பயர் பேய்கள்..

 இது போன்ற திரைப்படங்களில் வாம்பயர் யாருன்னு இன்ட்ரவல் வரைக்கு சஸ்பென்ஸ் வச்சி அழைச்சிக்கிட்டு போவாங்க...  சில நேரத்துல படத்தோட ஓப்பனிங்களிலேயே வேம்பயர் யாருன்னு சொல்லிட்டு  அது கொலை பண்ணற ஆட்களை பார்த்து பயந்து போய்... அந்த பேய்க்கிட்ட காமத்தோட  சொக்கும் போது கழுத்துக்கடி நிச்சயம்...

 வேம்பயர் பேய்கள் முக்கிய அழகா இருக்கும் அஇது முதல் தகுதி... அது  வேம்பயர் ஆணாக இருந்தாலும் சரி... பெண் வேம்பயராக இருந்தாலும் சரி... அழகாக இருக்க வேண்டும் அப் போதுதான் கிறங்கி போய் மயங்குவார்கள்...

 வேம்பயர் மேட்டர் பண்ண்ணுது போல டெம்ட் பண்ணிட்டு திடிர்ன்னு பேயா மாறி கடிக்கும்போது  சின்ன வயசுல சீட்டுக்கு அடியில போய் மறைஞ்சிக்கிட்டு எல்லாம் படம் பார்த்தது நியாபகம்..

============
சார்லோ  பருவவயதுப் பெண்... பள்ளி பருவத்தை விட்டு கல்லூரியில் கால் வைக்கின்றாள்..அவள் மனதில்  இனம்புரியாத பயம் தோன்றிக்கொண்டே இருக்கின்றது. அவளை  துஷ்ட் ஆவி துரத்துவது போல ஒரு  எண்ணம் அவளை வாட்டி வதைக்கின்றது... அவள் ஒரு கத்தி சண்டை  பைட்டரும் கூட... அவள் துஷ்ட ஆவியின் அலைகழிப்பில் இருந்து எப்படி  மீண்டாள்... என்பதே நேரம் இருந்தால் படத்தை பாருங்கள்... படத்தை  இயக்கி இருப்பது,..,Carl Bessai
================
டிரைலர்.


============
பைனல்கிக்.

இந்த  படத்துல என்ன புதுமைன்னு கேட்கறிங்களா?-
ஒரு பெண்வேம்பயரா  ஒரு  லெஸ்பியன் வேம்பயர் வருது... அது கடிச்சி ரத்தம் குடிக்கற இடத்தை நான் சொல்ல மாட்டேன்....புதுசா வேம்பயர் படத்தை பார்க்கறவங்களுக்கு இதுபுதுசா இருக்கலாம்... நாயகி  நல்லா  இருக்கா... லெஸ்பியன் வேம்பயரை பார்க்க ஆசை இருந்தா படத்தை பாருங்க மக்கா... பியூர்லி டைம்பாஸ் படம். கண்டிப்பாக வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
 

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner