சென்னை அதன் மாலை நேர இயக்கத்தில் குறியாய் இருந்தது....
நேற்று இரவு எட்டு மணி... அந்த பெண் ஹோண்டா ஆக்டிவாவை தள்ளிக்கொண்டு வியர்வை வழிய கேகே
நகர் சிவன் பார்க் அருகே நடந்து சென்றுக்கொண்டு இருந்தார்....
முதலில் அவரை நான் தாண்டி சென்றாலும் மனது கேட்கவில்லை... ஒருவேளை
பெட்ரோல் இல்லையென்றால் அந்த பெண் எவ்வளவு தூரம் நடந்து செல்ல வேண்டி வரும்? பக்கத்தில் பெட்ரோல் பங்கும்
இல்லை...
நகரம் அதன் இயக்கத்தில் குறியாக இருந்தது...வீட்டுக்கு
அவசரமாக போய் பெரிய வேலை இல்லை என்பதால் அந்த பெண் நடந்து வர
காத்திருக்க ஆரம்பித்தேன்... இது போல வலிய உதவி செய்ய போகும் போது
இருக்கும் பெரிய பிரச்சனை என்னவென்றால்..? பெண்கள் தங்களை உலக பேரழியாக பாவித்துக்கொண்டு,
நம்மை ஈன பார்வை பார்ப்பார்கள்...
தேள் கொட்டும் இயல்புடையது.... நாம் காப்பாற்றும்
இயல்புடையவன் என்ற அந்த சித்தாந்தத்தை ஒரு சில இடங்களில் நான்
பிரயோகபடுத்துபவன்...ஒரு வேளை அந்த
ஆக்ட்டிவா... ஈன பார்வை என்னை பார்த்து விட்டால்..??? சரி கிளம்பலாம்
என்று நினைத்தேன்...
ஒருவேளை அந்த பெண்ணுக்கு இன்று மென்சஸ் டைம்மாக இருந்தால்
இன்னும் அந்த வேதனையோடு எவ்வளவு தூரம்
நடக்க வேண்டுமோ? என்று யோசித்த காரணத்தால்
நின்று வெயிட் செய்தேன்...
என்னம்மா பிரச்சனை?
பெட்ரோல் இல்லைங்க...
பங்க் பக்கத்துல எதுவும்
இல்லை... நான் வேணா வாங்கி வரட்டா...
இல்லைங்க இன்னும் ரெண்டு
தெரு தள்ளிதான் வீடு... தம்பிக்கு போன் செஞ்சி இருக்கேன்... வந்துக்கிட்டு இருக்கான்...
அப்ப சரிம்மா... நான் கிளம்பறேன்....
அண்ணா.....
நான் திரும்பினேன்...
ரொம்ப நன்றிங்கண்ணா...
நாகத்தம்மன் கோவில்ல இருந்து
தள்ளிக்கிட்டு வரேன்... யாரும் ஒரு
வார்த்தை கூட என்னன்னு கேட்கலை...ரொம்ப சந்தோஷம்...
ரொம்ப தேங்கஸ்ண்ணா.....
அண்ணா என அழைக்கு சில அழைப்புகளில் பாசமும், நேசமும் ,
கனிவும் ஒளிந்து இருக்கும்
இந்த
தேங்ஸ்ண்ணாவில் எல்லாமும் உணர்ந்தேன்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
வலிய சென்று உதவுவதில் வரும் தயக்கம் சில சமயம் தவிர்க்க இயலாதது.
ReplyDeleteதல, இந்த தேங்ஸ்ண்ணா உங்களுக்கு சந்தோசமா,சோகமா புரியலையே...
ReplyDeleteஇந்த பதிவில் மெல்லிய சோகம் எனக்கு தெரியுது. ஒரு வேலை என்னோட கன்றாவி மண்டைக்கு அப்படி தோணுதா???
அண்ணா என அழைக்கு சில அழைப்புகளில் பாசமும், நேசமும் , கனிவும் ஒளிந்து இருக்கும்
ReplyDeleteஇந்த தேங்ஸ்ண்ணாவில் எல்லாமும் உணர்ந்தேன்.. i felt like this is the heart beat of this post..............
அண்ணா என அழைக்கு சில அழைப்புகளில் பாசமும், நேசமும் , கனிவும் ஒளிந்து இருக்கும்
ReplyDeleteஇந்த தேங்ஸ்ண்ணாவில் எல்லாமும் உணர்ந்தேன்..I felt like these lines are the heart beat of this post (thumbs up for this post)
சில நேரம் இப்படி பட்ட நிகழ்ச்சிகள் சின்ன விசயமா இருந்தாலும் மனச நெகிழ வச்சிடுது
ReplyDeleteஇது போன்ற நிகழ்வுகள் மனசை நெகிழ வைத்துவிடும்...
ReplyDeleteToday I went to nearby provision shop, there one man was asking for some route. I asked him which place you have to go. He stared me and gave wierd look. That time I heard mind voice "Ithu unnakku thevaya"...
ReplyDeleteசத்தியமான வார்த்தைகள்! நெகிழ வைத்த பதிவு! நன்றி!
ReplyDelete\\அண்ணா என அழைக்கு சில அழைப்புகளில் பாசமும், நேசமும் , கனிவும் ஒளிந்து இருக்கும் இந்த தேங்ஸ்ண்ணாவில் எல்லாமும் உணர்ந்தேன்..// VERY TRUE
ReplyDeleteசிறுபதிவானாலும் உங்களின் அக்மார்க் பதிவு...
ReplyDeleteNice.
ReplyDeleteKeep it up.