Lasting (2013) "Nieulotne" /உலகசினிமா/ போலந்து/ நிலைக்கும் காதல்.





போலந்து  நாட்டு படங்கள் நிறைய பார்த்து  இருக்கின்றேன்..
அதனால் இந்த படத்தை மிக எதிர்பார்ப்புடன் பார்த்து தொலைத்தேன்.. ஆனால் என் பொறுமையை சோதித்து விட்டார்கள்... என்றே சொல்லவேண்டும்...


மைக்கேல்,கரினா இரண்டு பேரும் கல்லூரியில்  படிக்கின்றார்கள்.. வேலை பார்க்க ஸ்பெயினின் ஒதுக்குபுற விவசாய தோட்டத்தில்  வேலை பார்க்கின்றார்கள்... இரண்டு பேரும் கணவன் மனைவி போல என்று பாலிஷாக எழுதாமல்  இரண்டு நாளோரு மேனியும் மெட்டரோரு பொழுதாக பொழுதை கழிக்கின்றார்கள்... ஆனால் இவர்கள் வாழ்க்கையில் விதி விளையாடுகின்றது...


ஒரு பிரைவேட் பிராப்பர்ட்டி ஏரியில் குளிக்கும் போது அந்த ஏரியா ஆளோடு வாய் தகராரில் மைக்கேல் சண்டையிட   அவன் இறந்து போகின்றான்..கரீனா கர்பமாகின்றாள்... அவளிடம் அவன் கொலை செய்ததை ஒப்புக்கொள்ளுகின்றார்கள்... 



இரண்டு பேரும் பிரிகின்றார்கள்.. அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை  நேரம் கிடைக்கும் போது  படத்தை பார்த்து யான் பெற்ற இன்பத்தை பெற்று மகிழுங்கள்..

==================
படத்தின் டிரைலர்..



========
படக்குகுவினர் விபரம்...
Director:
Jacek Borcuch
Writer:
Jacek Borcuch
Stars:
Jakub Gierszal, Magdalena Berus, Ángela Molina
=========
பைனல்கிக்.

பெரிய பாலத்தில் இருந்து இரண்டு பேரும் குதிக்கின்றார்கள் என்று எதிர்பார்ப்பு ஏகத்துக்கு  எகிறி வைக்கின்றார்கள். பட்.



கொலை நடந்த உடன் பெரிய எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி விட, பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று நகம்  கடித்துக்கொண்டு இருக்கும் போது பிட்டு தியேட்டரில் இரண்டு பிட்டு போட்டதும் பொசுக்குன்னு லைட்டை போட்டு வெளியே அனுப்புவானுங்களே அது போல டாமல்ன்னு  படம் முடிச்சிடுச்சின்னு சொல்லிடறானுங்க... என்ன செய்யறது.. ??முதலில்  வரும் வயதுக்கு வந்தோருக்கான காட்சியோடு  தலையிலடித்துக்கொண்டு எழுந்து வரவேண்டியதுதான்..சுடான்ஸ் பிலிம் பெஸ்ட்டிவலில் கலந்து தொலைச்சி  இருக்கும் இந்த படம்...
 



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

  1. why ur reviews are short? select movies to review in your style. dont write shortly.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner