THE SEASONING HOUSE/இங்கிலாந்து/உலகசினிமா/வாய் பேச முடியாதவளின் பழிதீர்த்தல்.







  பிரிட்டிஷ் திரில்லர் படம்...


வாய் பேச முடியாது, காது கேக்காது  அப்படி ஒரு சின்ன பெண்ணை  கொடுரமான விபச்சார விடுதிக்கு அழைச்சு வராங்க... அவ அங்க இருந்து எப்படி தப்பிக்கறான்ற  ஒன்லைன்தான்... ஆனா மிரட்டி இருக்காங்க...  பத்து  பொண்ணுங்க ஒரு வீடு என்று கதைக்களத்தை வைத்துக்கொண்டு  கலக்கியிருக்கின்றார்கள்...

கதை ரொம்ப சிம்பிள்...


போர் நடக்கும் பகுதியில் இருக்கும் மிலிட்டிரி ஆபிசர் போரின் போது... வீட்டில் இருக்கும் அத்தனை பேரையும் சாகடித்து விட்டு.... வயதுக்கு வந்த பெண்களை  மட்டும உயிரோடு அழைத்து  வந்து விபாச்சாரம் செய்யும் மாமாவிடம் ஒப்படைத்து விடுவான்... அவன் இவர்களை கொடுரமான  விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வரும் பணத்தை மிலிட்டிரி ஆபிசரும் மாமாவும் பிரித்துக்கொள்ளுவார்கள்... இதுதான் கதையோட நாட்...

சிம்பிள் கதைதான்  ....


 பட் திரைக்கதையை கன்டெயினர்  கப்பலில் முறையா அடிக்கி வச்சது போல சீன்ஸ் அமைச்சதால இந்த படத்தை உட்கார்ந்து திரில்லா பார்க்க முடியுது... வழக்கமான கதைன்னு ஒதுக்கி வைக்க முடியலை..

படத்தோட ஆரம்பத்துல பொண்ணுங்க  விக்டர் என்ற மாமாவின் எதிரே நிக்கறான்க... அவன் சொல்லறான்... யாரும் தப்பிச்சி போகாதிங்க...  என்னை நம்புங்க.. அதே போல நானும் உங்களை நம்பறேன்.. ஒரு பொண்ணை அழைக்கின்றான்... அப்படி தப்பிச்சி போவனும்ன்னு  முயற்ச்சி பண்ணா என்று அந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை சொருகி கிலி ஏற்ப்படுத்துகின்றான்...

 இது ஒரு உதாரணம்....


 பட் படத்தை தன்னோட கிளவரான நடிப்போட நம்மை  உள் வாங்க செய்து அழைத்து செல்வது... ஏஞ்சல் பாத்திரத்தில் நடித்து இருக்கும் ரோஸிடே....  சான்சே இல்லை...மிலிட்டிரி மேன்கள் படுக்கையில் எந்த  மாதிரி நடந்துக்கொள்ளுவார்கள் என்று  காட்டி  இருக்கின்றார்கள்.. அதே   போல  அதீத வேலமான காமத்துக்கு சுத்தம் ஒரு பொருட்டு அல்ல என்றும் காட்சி படுத்தி இருக்கும் இயக்குனர் Paul Hyett  ஒரு தீபாவளி ஸ்வீட் பாக்ஸ் பார்சேல்...........

போர் நடக்கும் பகுதியில் பாதிக்கப்படும் அப்பாவி இளம்பெண்கள் எப்படி  எல்லாம் சீரழிக்கபடுகின்றார்கள் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு உதாரணம்...

  போர் சூழலில் சிக்கும் அப்பாவி இளம் பெண்கள் பற்றி வேறு ஒரு பார்வையில் அவர்களுடைய சோகங்களை இந்த திரைப்பட்ம் உரத்து பேசுகின்றது...

போரில் பெற்றோரை இழந்த அனாதையான இளம்பெண்களை எவ்வளவுக்கு எவ்வளவு துன்புறுத்த முடியுமோ? அந்த அளவுக்கு துன்புறுத்துகின்றார்கள்.. அதே போல  சாகடித்தாலும் யாரும் பாடியை கிளைம் பண்ணி போராட்டம் நடத்த போவதில்லை என்ற ஆதிக்க திமிர்.

அவ யோனி உட்புறம் கிழிச்சிடுச்சி என்ற போது அதை பற்றி கிஞ்சித்தும் கவலைபடாமல் அடுத்த கஸ்டமரை அனுப்பி காசு பார்ப்பது என்று ரியாலிட்டியை படற விட்டு இருக்கின்றார் இயக்குனர்...
 அதே போல  அந்த வாய் பேச முடியாத பெண்ணின் மேல் வரும் சாப்ட் கார்னர்.. அவளுடைய உடம்பு மட்டுமே என்பதையும் ஒரு காட்சியில்  காட்டி விடுகின்றார்கள்..
பட் அவள் தப்பிக்க வேண்டும் என்று மனம் பதபதைக்கின்றது...

 படம் பார்த்து முடிக்கும் போது போர் வேண்டாம் என்று கண்டிப்பாக உங்கள் மனம் எண்ணும்...

இந்த படம்  நிறைய உலகபடவிழாக்களில் கலந்து கொண்டு நிறைய பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்  விமர்சனங்களை  பெற்று இருக்கின்றது...
 

==============
 படத்தோட டிரைலர்.


 
=============
படக்குழுவினர் விபரம்.


Directed by     Paul Hyett
Produced by     Michael Riley
Written by     Paul Hyett
Conal Palmer
Helen Solomon
Adrian Rigelsford
Starring     Rosie Day
Kevin Howarth
Sean Pertwee
Music by     Paul E. Francis
Cinematography     Adam Etherington
Editing by     Agnieszka Liggett
Studio     Sterling Pictures
Distributed by     Kaleidoscope Film Distribution
Release date(s)    

    23 August 2012

Running time     98 mins
Country     United Kingdom
Language     English
==============
பைனல்கிக்.

 கழுவி கழுவி ஊற்றிய கதை என்றாலும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.... முக்கியமாக வாய் பேசமுடியாமல்  இருப்பது போல தன் நடிப்பை வெளிப்படுத்திய ரோசி டேவுக்கு  கண்டிப்பாய் பார்க்கலாம்... அதே போல அந்த பெண்ணோடு நடக்கும் உடலுறவு காட்சிகளை ரொம்ப நீட்டாக படமாக்கி இருக்கின்றார்கள்... இரண்டே ஷாட்...
 கண்டிப்பாக இந்த  படம் வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்.
===========
படத்தோட ரேட்டிங்.

பத்துக்கு ஐந்தரை.

===========
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

 
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

4 comments:

  1. விமர்சனமும் டிரைலரும் மிரட்டலா இருக்கே அண்ணே....!

    ReplyDelete
  2. பட அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
  3. டிரைலர் மிரட்டலா இருக்கு அண்ணா....
    படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது விமர்சனம்.

    ReplyDelete
  4. படம் பார்த்தேன் மிக அருமை..நன்றி

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner