ஐ யம் சாரி மணி சார்....

 ஜெம்ஸ் சாக்லேட் கொடுத்தால்.... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்


கிரீச்சில் அவளை அழைக்க போகும் போது, அவள் என்னை பார்த்து விட்டால்... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அவளை பாரட்டி முத்தம் கொடுத்தால்... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஏதாவது வண்டியை ஓவர்டேக் செய்தால்... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

முழுநிலவை சுட்டிக்காட்டினால்.... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

கிண்டி அருகே தலை தடவி செல்லும் பிளைட்டை பார்த்தால்.... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

வெளியே அழைத்து போக வண்டியை ஸ்டார்ட் செய்தால்... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

பேப்பரில் குட்டி பூனை படம் வரைந்து காட்டினால்.... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

கக்கா போனதை கழுவி விட்டு புது ஜட்டி மாட்டிவிட்டால்.... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

புதிய பென்சில் வாங்கி கொடுத்தால்.... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

கலராக சீரியல் விளக்கு பார்த்தால் ..... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அலையடிக்கும் கடலை பார்த்தால்..... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

கால் நக்க வெறியோடு வரும் அலையில் கால் நனைத்தால்.... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

சத்தியம் தியேட்டர் உள்ளே லாபியில் ஓடியபடி.... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

மொட்டை மாடிக்கு விளையாட போலாம் என்றால்... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

உச்சி முகர்ந்து பாராட்டி முத்தா கொடுத்தால் .... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

பீச்சிக்கு போலாம் என்று உறுதியளித்தால்...... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

காசு மணி துட்டு துட்டு பாட்டு டிவியில் போட்டால்.... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

இப்படித்தான் உற்சாகத்தை ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று கை முஷ்ட்டி உயர்த்தி கத்தி.... யாழினி வெளிபடுத்துவாள்.....

1990 ஆண்டு பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கின்றேன்... சினிமா மீது அதீத காதல்..... அக்னிநட்சத்திரம் திரைப்படம் படம் மூலம் சினிமா என்ற நவீன ஊடகத்தை டெக்னிக்கலாக என்னை பார்க்க வச்சவர்....

அவரோட அஞ்சலி படம் ரிலிஸ்....கடலூர் வேல்முருகன் தியேட்டர்ல...

கடலூர் வேல்முருகன் தியேட்டர்ல... வெள்ளிக்கிழிமையில் இருந்து படம் என்று பேப்பர் விளம்பரம் சொன்னது....விளம்பரத்தில் 5 காட்சி என்று போட்டு இருந்த காரணத்தால் ....நான் காலை ஒன்பது மணிக்கே தியேட்டர் வாசலில் வாட்ச்மேன் வேலை பார்க்க ஆரம்பித்தேன்...

பதினோரு மணிக்குதான் நாலு பேர் வந்தார்கள்.... அரை மணி நேரத்தில் மணி ரசனை தெரிந்த, கந்தசாமி நாயிடு கல்லூரி பெண்கள் ஒரு பத்து பேர் வந்து இருந்தார்கள்.... அதன் பின் மெல்ல மெல்ல கூட்டம் சேர்ந்து.... மொத்தம் 200 பேருடன் முதல் காட்சி ஓடியது...

எனக்கு படம் பிடித்து இருந்தது....இப்போது போல சென்னை அவ்வளவு பரிட்சயம் எனக்கு இல்லை....செல்லுலாய்டில் மட்டுமே இந்த சென்னை நகரத்தை பார்த்து ரசித்து இருக்கின்றேன்...


படத்தில் காட்டிய பசங்க எல்லாம் , ரொம்ப இன்டலெக்சுவலா இருப்பாங்க... படத்துல காட்டிய பசங்க எல்லாம்....எதை சொன்னாலும் ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ன்னு படம் புல்லா கத்திக்கிட்டு இருந்தாங்க....

ஓத்தா சென்னையில இருக்கற அப்பார்ட்மென்ட்ல வசிக்கற காலியான் குட்டிங்க எல்லாம் இப்படித்தான் கத்தி தொலையுமா? படம் பார்க்கும் போது கோரசா படத்துல பசங்க கத்துற சீன்ல இரிடேட் ஆனேன்...


எங்க ஊர்ல ஸ்கூல் லீவ் விட்டா மட்டுமதான்.... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு புழுதி பறக்க அண்ணா கயித்துல சிறை படுத்திய டிரவுசரை பிடிச்சிக்கிட்டு கத்திக்கிட்டு ஒடுவோம்...ஆனா இந்த படத்துல எல்லாத்துக்கும் இதுங்க கத்தி தொலையுதுங்க என்று மணியை சபித்த படி வீடு வந்து தொலைந்தேன்.. மற்றபடி படம் எனக்கு ரொம்பவே பிடிச்சி இருந்துச்சி....


ஆனா மணிரத்னம் இன்டெலக்சுவல்தான்... அப்பார்ட்மென்ட் மற்றும் சென்னை பசங்களின் உற்சாகத்தை அழகா பதிவு செஞ்சி இருந்தார்... எனக்குதான் அப்பபுரியலை... தேவையில்லாம இரிட்டேட் ஆனேன்...

மணியை வேற மனசால திட்டினேன்...ஒரு கடலூர் வாசியா....

யாழினி சென்னை வாசியா ஆயிட்டா....

யாழினி அப்பா நைட்டு பைக்ல வெளியே ஒன்னை கூட்டிப்போறேன் சொன்னேன்.......

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....................

மணிசார்....அந்த பசங்க... கத்தன ஷாட்டை வேணும்ன்னு வச்சி இருக்கிங்கன்னு நினைச்சி உங்களை கடிச்சிங்கிட்டேன்... 23 வருடம் கழித்து உங்களிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்கின்றேன்... சென்னை பசங்க எல்லாம் அப்படித்தான் இருக்குதுங்க...எத்தனை வருடம் ஆனால் என்ன? ...ஐ யம் சாரி மணி சார்....






















பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

9 comments:

  1. இது போல் நான் மன்னிப்பு கேட்டது சுஜாதா சாரிடம்
    தீர்க்கதரிசனம் என்பது இது தான்

    ReplyDelete
  2. இது போல் நான் மன்னிப்பு கேட்டது சுஜாதா சாரிடம்
    தீர்க்கதரிசனம் என்பது இது தான்

    ReplyDelete
  3. இது போல் நான் மன்னிப்பு கேட்டது சுஜாதா சாரிடம்
    தீர்க்கதரிசனம் என்பது இது தான்

    ReplyDelete
  4. ஹஹா சூப்பர் .... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....................

    ReplyDelete
  5. நாமும் சிறுவர்களாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று ஏங்க வைத்த படம்..

    ReplyDelete
  6. I could recollect that there is a college by the name kandaswamy college for women in Cuddalore through your essay. There was no memory at all about this college on my mind though i spent around 15 years in Cuddalore.but your essay helped me in recollecting about this college. Have you mailed this essay to Mr.Maniratnam?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner