சாதனை மனிதர் ஜான் வில்லியம்ஸ்(happy birthday John Williams) (பாகம்/2)



இன்று இசைக்கு வயது 82.....


இன்று 81 வயது முடிந்து 82 வயது ஆரம்பிக்க போகின்றது.... ஆம்  இசையமைப்பாளர்  ஜான் வில்லியம்சுக்கு இன்று பிறந்தநாள். (பிப்ரவரி.8)

ரைட்... விஷயத்துக்கு வருவோம்.....

தமிழகத்தில் மன்மதராசா பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம்...  எப்படி பிரபலமாச்சு? எதனால் பிரபலமாச்சு? என்று மண்டை காய்ந்து கொண்டு இருந்தார்கள்... அப்போது இசையமைப்பாளர் தீனாவை பேட்டி கண்டார்கள்... அவர் சொன்னார்... மக்களோட பல்ஸ் எனக்கு நல்லா தெரியும் ... அதை கேட்ட கங்கை அமரன் மிக காரசாரமாக இது ஆணவ பேச்சு என்பதாக படித்ததாக, கேட்டதாக நியாபகம்...

ஜானிடம் கேட்டார்கள்...

அது எப்படி? திடிர் என்று சில டுயூன்கள் இசையமைப்பாளர்களுக்கு சிக்குகின்றன..? அதுவும் வரலாற்று புகழ் பெறுகின்றன....? அது எப்படி தோன்றும்? திடிர் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே அது  தோன்றி விடுமா?  சட்டென ஞான திருஷ்ட்டியில் தோன்றி  உடனே  நோட் எடுத்துக்கொள்வீர்களா?

இல்லை ... என்னுடைய வாழ்க்கையில் அப்படி எல்லாம் ஞானதிருஷ்ட்டியில் டொய்ங் என்று எந்த டியூனும் இதுவரை தோன்றியது இல்லை... ஆத்மார்த்தமாக அது பற்றிய சிந்தனையாகவே நான் வேலை பார்த்துக்கொண்டு இருப்பேன்.....  நிறைய நோட்டுகள் ஏற்கனவே எழுதிய   நோட்டுகள்  என என்  முன் பல வந்து பல் இளிக்கும்... இருப்பினும் அவைகளை புறம் தள்ளி விட்டு   இதுக்கு  மேல்  டிரை செய்ய  என்ன  இருக்கின்றது என்று மனது யோசிக்கும் போது  ஒரு புது நோட் ஒன்று உதயமாகி என்னோடு பயணித்து  இருக்கின்றது என்கின்றார்...


கடமையை ஆத்மார்த்தமாக செய்து கொண்டு இருந்தால்  கண்டிப்பாக  அந்த மேஜிக் நிகழும் என்கின்றார்.... உட்காந்து யோசித்தேன் சட்டென டியூன்  பிடித்து மியூசிக் கம்ப்போஸ் செய்து விட்டேன் என்று ஜல்லியடிக்கும் நிகழ்வுகள் என் வாழ்க்கையில்  நிகழ்ந்த்தே இல்லை என்கின்றார் ஜான்...


37 வருட காலம்........... ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் வலம் வருபவர்... அவர்கள் நட்பு ஒரு ஆத்மாத்தமான நட்பு என்பேன்....


Close Encounters of the Third Kind என்ற படம் 1977  ஆம் ஆண்டு ஸ்டீவன் இயக்கத்தில் ஜான் மீயூசிக்கில்  வெளி வந்தது... இது ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம்...  அதன் பின்னனியை அலசினால் பல சுவராஸ்யங்கள் எட்டிபார்க்கின்றன...


Close Encounters of the Third Kind படத்தில் வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவது போன்ற கதையமைப்பு..... இதற்கு முன் ஜான் ஜாஸ் படத்துக்கு இரண்டு நோட்டில் இசையமைத்து இருந்தார்... இந்த படத்துக்கு பைவ் நோட்டில் இசையமைக்க சொன்னார்... காரணம்... பைவ் நோட்டுக்கு மேலே சென்றால் அது மெலோடியாக மாறி விடும் என்பதால் அப்படி ஒரு இசை வேண்டாம் என்றார் ஸ்டீவன்....


யோவ் ஜாக்கி நீ பாட்டுக்கு நோட்டு , ரப் நோட்டு பேர் நோட்டுன்னு சொன்னா.... எங்களுக்கு எப்படி  புரியும்...? புரியும் படியா சொல்லுங்க...
ஆர்மோனியத்தில் வெள்ளை கட்டை கருப்பு கட்டை இருக்கின்றது அல்லவா? அதில் ஒரு கட்டையை அழுத்தினால் வரும் டங் என்று ஒரு சத்தம் வரும் அல்லவா? அதுக்கு  பேருதான் ஒரு நோட்டு இப்ப புரிஞ்சிடுத்தா,..?


லெட்ஸ் கோ  டூ த   நெக்ஸ்ட்  சாப்டர்.


Close Encounters of the Third Kind படத்தில்  வேற்றுகிரகத்தில் இருந்து வரும் வேற்று கிரகவாசிகளுடன் எப்படி உரையாடுவது என்பதுதான் மேட்டர்... அதுக்கு தான் ஸ்டீவன் ஜானை லந்து பண்ணிக்கொண்டு இருந்தார்...


உதாரணத்துக்கு வெற்று கிரகவாசிகளுக்கு மொழி தெரியாது... அவர்கள் மொழி நமக்கு தெரியாது நம் மொழி அவர்களுக்கு புரியாது... ஆனால் இரண்டு பேரும் பேசியாக வேண்டும்... அதுக்கு இசையும் கலர்களும்தான் உதவியாக வேண்டும்... அதனால் பைவ்  நோட்டுக்கு மேல் வேண்டாம் என்றார் ஸ்டீவன்..


உதாரணத்துக்கு ஹலோ என்ற வார்த்தை ஜந்து  வார்த்தையை கொண்டது... அதுக்கு மேல் ஹவ் ஆர் யூ  என்றால் நமக்கு புரியும் வேற்று கிரகவாசிகளுக்கு புரியாது  அல்லவா,? அதனால் ஐந்து நோட்டுக்கு உள்ளேயே இசையமைக்க சொன்னார்... ஸ்டீவன்..

ஜான் அசரவில்லை... முதலில்  பைவ்  நோட் காமினேஷனல் 340 டியூன்களை ஜான், ஸ்டீவனுக்கு போட்டு காண்பித்தார்...


ஓத்தா பெரிய மயிறு டைரக்டரு...? 340 டியூன் போட்டுட்டேன்... இதுவரைக்கு ஓக்கே சொல்லலை...கையல்லாம் நோவுது...ஸ்டீவன்   பியானோவுல உட்கார்ந்தா தெரியும்?  ஒக்காலி அவன் மட்டும் மியூசிக் டைரக்ட்ரா இருந்து நான் டைரக்டரா இருந்தா......... வடிவேலு கமெடி போல அவன் மண்டையில் நங்குன்னு ஒரு கொட்டு கொட்டி இசை எங்கு இருந்து வருது தெரியுமா? என்று  அடித்து கேட்க வேண்டும் என்று  ஜான் மனதுக்குள் கருவவில்லை...


ஜான் தன் நண்பனை அழைத்தார்...12  கட்டை( நோட்)  இதுல பைவ் நோட் காமினேஷன்ல் இன்னும் எத்தனை டியூன் போடலாம் என்று கேட்டார்.. அவர் நண்பர் கால்குலேட்டர் எடுத்து ரெண்டு தட்டி தட்டி ,ஒரு லட்சத்து இருபத்தி அஞ்சாயிரம் டியூன் போடலாம் ஜான் என்றார்...

ஜான் மயக்கமடையவில்லை...இயக்குனருக்கு தனக்கும் நிறைவு ஏற்ப்படும் வரை  முயற்சி  செய்து கொண்டே இருந்தார்...ஏய் ஜெனி லவ்யூ என்பதை சொன்னால் வெகு   எளிதாக புரிந்துகொள்ளப்படும்... பேசப்போவது  வேற்று கிரகவாசிகளுடன் அதனால் இரண்டு  பேரும்   சாட்டிஸ்ப்பேக்ஷன் வரும் வரை  ஏகப்பட்ட டீயூன்கள்  போட்டு 5 நோட்டில் ஒரு டியூனை கண்டுபிடித்தார்கள்....

 இன்றளவும் பைவ் நோட்டில் ஜான் இசையமைத்த Close Encounters of the Third Kind படத்தின் மீயூசிக் இன்றளவும் பேசப்படுகின்றது...



உங்களுக்கு  ஒன்று தெரியுமா? Close Encounters of the Third Kind படத்துக்கு மியூசிக் போட ஒரு நாள் இல்லை இரண்டு நாள் இல்லை முழுதாக இரண்டு வருடங்கள் பிடித்தன..... பிரிபுரொடக்ஷனில் ஸ்டீவன் ஜானை  போட்டு கிழி கிழி என்று கிழித்தார்...அந்த உழைப்பு தான்... அந்த வருடத்தில் நடைபெற்ற 50 வது ஆஸ்கர் விருதுகளில்  இந்த திரைப்படம் எழு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.. ஆனால் ஆஸ்கார் இந்த படத்துக்கு கிடைக்கவில்லை... ஆனால் ஜானுக்கு இதே ஆண்டில் ஸடீவன் மற்றும் ஜானும் சேர்ந்து பணி புரிந்த படமான  ஜாஸ் படத்துக்கு  ஆஸ்கார் கிடைத்தது...


Close Encounters of the Third Kind ராப்பகலா செய்த வேலை , இரண்டு வருஷ உழைப்பு, அதுக்கு ஆஸ்கார் கிடைக்கவில்லை என்றாலும் இந்த பூமி பந்தில் இருக்கும்  எந்த இசையமைப்பாளருக்கும் கிடைக்காத அறிய  கிரீடம் ஜானுக்கு மட்டுமே உரித்தானது...


இன்னமும் இந்த பிரபஞ்சவெளியில் ஏதாவது ஒரு கோளில்  எங்காவது ஒரு உயிரினம் இருக்கும் என்று மனித சமுகம் இன்னமும் நப்பிக்கொண்டு இருக்கின்றது....

கண்டிப்பாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று  அமெரிக்க வாண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா நினைக்கின்றது... 

அண்டவெளியில் Close Encounters of the Third Kind படத்துக்கு இசையமைத்த அவரது பைவ் நோட் தீம்  பிரபஞ்ச வெளியில் சிக்னல் அலைகளாக அனுப்ப்படுகின்றது... இந்த சவுன்டை கேட்டு ஏதாவது ஒரு ஜீவராசி தம்மோடு  தொடர்பு  கொள்ளாதா? என்று நாசா அனுதினமும் ஏங்கி வருகின்றது...பிரபஞ்சவெளியிலும்   இசைபரவசெய்த  அந்த பெருமைக்கு  சொந்தக்காரர்  இந்த பூமி பந்தில் வாழும்  இசையமைப்பாளர் ஜான் வில்லியம்ஸ் மட்டுமே....



80 வயதிலும் இன்றும்  வாரத்தில் 5 நாட்கள் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு செல்கின்றார்...  வேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ,தனக்கு தோன்றிய இசைக்கோர்வைகளை எழுதி வைக்கின்றார்..


ஜான் பேப்பர் பேனோ யூஸ் செய்து இதுவரை நோட்ஸ் எடுத்ததே இல்லை  நோட்டும் பெண்சிலும்தான் அவருடைய உற்ற தோழன்...

 ஜான் ஒரு பேட்டியில் சொல்கின்றார்...


"I'm happy to be busy," Williams says. "I'm happy to have a wonderful family. And I think also, especially for practicing musicians, age is not so much of a concern because a lifetime is just simply not long enough for the study of music anyway. You're never anywhere near finished. So the idea of retiring or putting it aside is unthinkable. There's too much to learn."

81 வயதாகி விட்டது...  மாட்டை மேச்சோமா? கோலைபோட்டோமா என்று இல்லாமல் இசை என்பது ஒரு கடல் நான் அதில் கொஞ்சமே கற்று தேர்ந்து இருக்கின்றேன்.. நான் கற்றுக்கொள்ள   நிறைய இருக்கின்றது... எனக்கு ஓய்வு என்பதே கிடையாது என்கின்றார்... அதுதான் ஜான்வில்லியம்ஸ்.



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


குறிப்பு....

திரும்ப ஸ்டீவன், ஜான் கூட்டனி 2012 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் கதவை தங்கள் பணிபுரிந்து இருக்கும் லிங்கன் படத்துக்கு  தட்டி இருக்கின்றார்கள்...12 நாமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றது...  அதில் பெஸ்ட் மியூசிக்கும் ஒன்று.. இந்த  ஆஸ்கர் கிடைந்தால் 5 ஆஸ்காரோடு ஆறாக ஜானுக்கு எண்ணிக்கை கூடும்  இந்த பிறந்தநாளில் அவருக்கு அஸ்கர் சாத்தியமாக அவரை வாழ்த்துவோம்...





ஹேப்பி பார்த்டே ஜான் வில்லியம்ஸ்...





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அருமையான அலசல்.நிறைய விஷயங்களை தெரிந்துக்கொண்டேன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner