Total Recall /2012 / டோட்டல் ரீகால் / நினைவிழந்தவன்.


  


1990 களில்  ஆர்னால்டு ஸ்வாஷநெகர் நடிக்க, பவுல் வெர்ஹோவன் இயக்கி  தாறு  மாறாக பாக்ஸ்  ஆபிசில் பட்டையை கழட்டிய படம்தான் டோட்டல் ரீகால்...
22 வருடத்துக்கு முன் தொழில் நுட்ப வசதிகள் அதிகம் இல்லாத காலத்திலேயே  உலக ரசிகர்களை ஆச்சர்யபடுத்திய ஆக்ஷன் படம்  இந்த திரைப்படம்.. 


தொழில் நுட்ப வசதிகள்  சாத்தியப்பட்டு இருக்கும் இந்த காலத்தில் அதே பெயிரில்  அந்த திரைப்படத்தை ரீமேக் செய்து இருக்கின்றார்கள்..


1966 ஆம் ஆண்டு சயின்ஸ்பிக்ஷன் எழுத்தாளர் பிலிப் கே டிக்  , எழுதிய we can remember it for you holesale… என்ற சிறுகதையின் திரைவடிவம்தான்... இந்த  டோட்டல் ரீகால் திரைப்படம்..

===================

டோட்டல் ரீகால் திரைப்படத்தின்  ஒன்லைன் என்ன?  

 தன் நினைவு தப்பி வாழ்ந்து வரும் ஒரு உளவாளி தன் நினைவுகளை மீட்டு எடுப்பதே இந்த திரைப்படத்தின்  ஒன்லைன்.


==================


டோட்டல் ரீகால் திரைப்படத்தின்  கதை என்ன?  

2084 ஆம் அண்டு  மூன்றாம் உலகப்போர் முடிந்து  மனிதர்கள் வாழவே முடியாத  கிரகமாக நமது பூமி மாறிக்கிடக்கின்றது.. இரண்டே இடங்களில்தான் மனிதர்கள் வசிக்கின்றார்கள்.. ஒரு பகுதி மக்கள் வசிக்கும்  இட த்தை United Federation of Britain என்றும்  பூமியின் மறுபகுதியில் வசிக்கும் மக்கள்  பகுதியை  The Colony என்றும் அழைக்கின்றார்கள்.. United Federation of Britainக்கு வேலை செய்ய  காலனியில்  இருந்து தினமும் தொழிளாளர்கள் சென்று வருகின்றார்கள்.. 


United Federation of Britainஇல்   இருக்கும் தலைவன் காலனியையும் அங்கு இருக்கும்  மக்களை அழித்து விட்டு அந்த இடத்தில் புதிய  நகரத்தை உருவாக்க  நினைக்கின்றான்.. இதில் தன் பழைய நினைவுகளை இழந்நது போன உளவாளி நாயகன் Doug (Colin Farrell) எப்படி காலனி மக்களை  அழிவில் இருந்து மீட்கின்றான் என்பதே படத்தின் மீதிக்கதை..


====================
 படத்தின் சுவாரஸ்யங்கள்....


  Doug  என்ற  கதா பாத்திரத்தில் Colin Farrell நடித்து இருக்கின்றார்... ஆக்ஷன் காட்சிகளில்  மிக அற்புதமாக  நடித்து இருக்கின்றார்...


பொதுவான சயின்ஸ்பிக்ஷ்ன் படங்களில் எல்லோராலும் அதிகம் ரசிக்கப்படும விஷயம் எதிர்கால உலகம் எப்படி இருக்கும் என்பதுதான்.?? 2084 இல் உலகம் எப்படி இருக்கும்? என்ன விதமான போக்குவரத்து மேம்பட்டு இருக்கும் ,மனிதர்களின் உடைகள் எப்படி இருக்கும்? மேம்பட்ட விஞ்ஞான வளர்ச்சி எப்படி இருக்கும் ?என்பதாய் படம் பார்க்கும் போது சாதாரண பார்வையாளனுக்கு ஆர்வம் இருக்கும்.. அவைகளை ஒரளவுக்கு இந்த படத்தில் ரசிக்க வைத்து இருக்கின்றார்கள்...


1990 இல் வந்த ஒரிஜினல் படத்தில் ,நினைவுகள் இழந்து இருக்கும் அர்னால்டுக்கு மனைவியாக வில்லி கேரக்டரில் கவர்ச்சி புயல் ஷேரன்ஸ்டோன் நடித்து இருப்பார்.  அவர் நடித்த அதே  கேரக்டர் படம் நெடுக இந்த பாகத்தில் வருவது போல திரைக்கதை  அமைத்து இருக்கின்றார்கள். ஷேரன் ஸ்டோன் இடத்தில் யாரையும்  வைத்து பார்க்க முடியவில்லை.. அட அட என்ன கண்ணுடா?

 ஆக்ஷன் சேசிங் காட்சிகள் ஆக்ஷன் ரசிகர்களை ரொம்பவே திருப்தி அளிக்கும் விதத்தில் காட்சிகளை எடுத்து இருக்கின்றார்கள்.. முக்கியமாக அந்த லிப்ட் சேசிங் காட்சிகள் சீட்டு நுனிக்கு உங்களை  உட்கார வைக்கும்  அளவுக்கு படமாக்கி இருக்கின்றார்கள்..



 ஆனால் ஒரிஜினல் படத்தில் மாஸ் கிரகத்தை பின்புலமாக வைத்து காட்சிகளை எடுத்து இருப்பார்கள்.. அதனால் அது புதுவித அனுபவத்தை கொடுத்தது... முக்கியமாக வித்யாச முகம் கொண்ட மனிதர்கள் என்று புது பின்புலத்தையும் புது அனுபவத்தையும் அந்த திரைப்படம் பெற்று  தந்தது.. பெரிய டூவிஸ்ட் என்று சொல்லிக்கொள்ள  அத்தி பூத்து போல் அங்காங்கே இந்த ரீமேக் திரைப்படத்தில்  தென்படுவது பெரிய குறை......


1990 ஆம் ஆண்டு  அர்னால்டு நடித்து வெளியான டோட்டல் ரீகல்  திரைப்படத்தை பார்த்து ரசிக்காதவர்கள் இந்த திரைப்படத்தை பார்த்தால் நிச்சயம் புது அனுபவத்தை தரும்.. ஆனால்  ஒரிஜினல் திரைப்படத்தை  பார்த்தவர்கள் இந்த  ரீமேக் திரைப்படத்தை பார்க்க நேர்ந்தால் ஏதோ ஒன்று இந்த திரைப்படத்தில் மிஸ் ஆனது போல தோன்றுவதை மறுக்க முடியாது...


================
 படத்தின் டிரைலர்...


================

படக்குழுவினர் விபரம்

Directed by Len Wiseman
Produced by Neal H. Moritz
Toby Jaffe
Screenplay by Kurt Wimmer
Mark Bomback
Story by Ronald Shusett
Dan O’Bannon
Jon Povill
Kurt Wimmer
Based on "We Can Remember It for You Wholesale" by
Philip K. Dick
Starring Colin Farrell
Kate Beckinsale
Jessica Biel
Bryan Cranston
John Cho
Bill Nighy
Music by Harry Gregson-Williams
Cinematography Paul Cameron
Editing by Christian Wagner
Studio Original Film
Distributed by Columbia Pictures
Release date(s)
August 3, 2012
Running time 121 minutes
Country United States
Language English

=-======================
பைனல் கிக்.

டோட்டல் ரீகால் பரபரப்பான ஆக்ஷன் அட்வெஜ்சர்ரகம். பழைய   படத்தை பார்த்தவர்களுக்கு இந்த படம் டைம்பாஸ் படம்... அந்த படத்தை பார்க்காதவர்களுக்கு இந்த படம்.. பார்க்கவேண்டிய ஆக்ஷன் படம்...



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

7 comments:

  1. பழைய டோட்டல் ரீகால் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். செவ்வாய் கிரகக் காட்சிகள் நல்லாயிருக்கும். படம் விறுவிறுன்னு நிக்காம ஓடிக்கிட்டேயிருக்கும்.

    காலின் பேரல் நடிச்சதுக்காகப் பாக்கலாம்னு நெனச்சேன். ஒங்க விமர்சனம் படிச்சப்புறம் அந்த ஆசை காணாமப் போயிருச்சு. வேற படம் பாத்துக்கலாம்னு தோணுது.

    ReplyDelete
  2. ஜாக்கி ஷரோன் ஸ்டோன் கண்ணு மட்டுமா அழகு அவ்வவ்வவ்

    ReplyDelete
  3. வணக்கம் ,
    உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம்....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner