(இங்க் பேனாக்கள்)கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.(பாகம்/6)



இங்க் பேனா 20 வருடக்ளுக்கு முன் வெகு சிறப்பாக கோலச்சிய விஷயம் இது. நாங்கள் படிக்கும் போது இங்க் பேனாவில்தான் எழுதினோம்.

ஒரு பேனாவின் விலை அப்போது 5 விருந்து பத்து ரூபாய்தான் அதை வாங்கும் போதே கடவுளின் கடை கண் பார்வை பட்டு விட்டால் நல்லது இல்லை என்றால் டெய்லி சனி நமது வெள்ளை சட்டை யுவனிபார்மில் விளையாடும்...

துணிதுவைத்து போடும் போதெல்லாம் எனக்கு திறமை இல்லை உருப்படாதது என்று சொல்லி திட்டிக்கொண்டே இருப்பாள் என் அம்மா ... பொதுவாக என் அம்மா மொத்தமாக ஒரு பாட்டில் பிரில் இங்க் வாங்கி கொடுப்பாள் நான் ரொம்ப எழுதுவேன் என்று..

எப்படியும் நான் எட்டாம் நாள் அல்லது ஒன்பதாம் நாள் வீட்டுதரையில் அமீபா கோலம் போட்டு இருப்பேன் இப்போது என் அம்மாவுக்கு என் எதிர்காலம் பற்றிய பயம் அதிகமாகி துடைப்பத்தால் வெளுத்துவாங்குவாள்..

அப்போது பிளாஸ்டிக்கில் ஒரு மை பேனா ஒன்று அறிமுகம் ஆயிருந்தது பேனா விலை60 பைசா மட்டுமே... அப்போது அது பல வண்ணங்களில் வந்து இருந்தது. அதற்க்கு பிறகு பல வருங்கள் கழித்து மிக சரியாக 12 வருடங்களுக்கு முன் வந்த ரெனால்ட்ஸ் மை பேனா
( உலகம் விரும்பும் உன்னத பேனா... விளம்பர வாசகம்) வந்து அதுவரை மாணவச்செல்வங்களிடம் கோலாச்சி கொண்டு இருந்த இங்க் பேனாக்கள் தங்கள் வசீகரத்தை இழக்க தொடங்கின.

சில நேரத்தில் இங்ன் பேனாக்கள் ஏர் லாக் ஆகி திறக்க முடியாமல் இருக்கும் இங்க் போட்டால்தானே எழுதுவது அதை திறக்க படாத பாடு பட வேண்டும். அதற்க்கு என்று சில எக்ஸ்பர்ட்கள் பள்ளியில் படிப்பார்கள் .
அவர்களிடம் எடுத்து சென்றாள் தன் பலத்தை பிரயோகித்து சட்டென திறந்து விடுவார்கள், சில நேரத்தில் அவர்களால் முடியாது.

அப்போது சட்டை துணியை பேனா மேல் வைத்து பல்லால் கடித்து அதனை திறப்பார்கள் அதனால் எப்போதும் எல்லோர்பேனாவில் பல்லால் கடித்து திறந்த அடையாள முத்திரை நிச்சயம் இருக்கும்

என் நண்பன் நாகராஜ் வெகு நாட்களுக்கு முன் அவசரத்துக்கு ஜான்சி கடித்து திறந்து கொடுதத பல் தடத்தை ஏதோ டைனோசர் பாசில் போல் கணக்கிடைக்காதது போல் பாவித்தான்.

அப்போது இங்க் பேனாவில் காஸ்ட்லியாக கலக்கிய பேனா ஹீரோ பேனா. அந்நாளில் ஹீரோ பேனாஎன்பது பணக்கார பசங்களிடம் மட்டும் இருக்கும். அப்படி வேறு யாராவது வைத்து இருக்கிறார்கள் என்றாள்அவர்கள் மாமா சவுதி அல்லது சிங்கப்பூர் இருந்து சமீபத்தில் வந்து இருக்கின்றார் என்று பொருள்.

நாராயணன் ஒரு வாத்தியார். ஆங்கில பாடம் எடுப்பார்எழுதும் போது மை பேனாவில் எழுதினால்
“ நீ என்ன மளிகை கடையில கணக்கா எழுத போறன்னு ”சொல்லி உதைத்து இங்க் பேனாவில் எழுதச்சொல்லி அடம் பிடிப்பார்...

இங்க் பேனாவில் ஒரே ஒரு பிரச்சனை அது கன்னிப்பெண் போல் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அதை யாரிடமும் இரவல் தரக்கூடாது அப்படி தந்தால் உங்கள் ஸ்டைலுக்கு அது எழுதாது அபபடி எழுதினாலும் பேப்பரை கிழிக்கும்....


பேனா எப்போது பாக்கெட்டில் வைத்து ஓடி விட்டு அலலத நடந்து திறந்து பார்த்தால் இங்க் லீக்காகி இருக்கும் அதற்க்கு பசங்க பேனா கழுயுது என்பார்கள்...

பரிட்சை கடைசிநாளில் பேனா முழுவதும் இங்க் நிரப்பி அதில் கொஞ்சம் வாழைச்சாற்றை கலந்து பசங்களின் வெள்ளை சட்டை மேல் மார்டன் ஆர்ட் வரைவோம்...

அதனை மிகச்சிறப்பாக தமிழ் படத்தில் காட்சியாக வைத்தவர் கற்றது தமிழ் படத்தின் இயக்குநர் ராம் அவர்கள்.. பரிட்சை முடிந்ததை காண்பிக்க அந்த இங்க் அடிக்கும் காட்சி வைத்து இருப்பார்....


இன்று உலக பொருளாதார மாற்றத்தால் பல பொருட்கள் மற்றும் பல விதமான பேனாக்கள் கிடைத்தாலும், புது இங்க் பேனா வாங்கி அந்த சின்ன கவரை உடனே தூக்கி போடாம பத்திரமா ஒரு வாரத்துக்கு வைத்து அதன் பிறகு அதனை தூக்கி எறிந்து பத்து பைசாவுக்கு இங்க் வாங்கி அதனை ஊத்தும்போதே கை விரல்கள் நீலக்கலராகி இப்போது பதறவது போல் எந்த கலலையும் இல்லாமல் கைகளால் துடைத்து பேனாவை மூடு்ம் போது பிரஷரில் வெளி வருவதை ஸ்டைலாக தலையில் தடவி துடைத்து எது பற்றியும் கவலைக்கொள்ளாமல் ..... அது ஒரு கனாக் காலம்...


இப்போது இங்க் பேனாக்கள் இல்லாமல் இல்லை அனால் முன்பு போல் கோலாச்சவது இல்லை என்பதே என் கருத்து...

இந்த கட்டுரை உங்கள் பழைய பள்ளி நாட்களை, ஞாபகங்களை நினைவு படுததி இருந்தால் பின்னுட்டம் இட்டு தெரியபடுத்துங்கள்...

அன்புடன்/ ஜாக்கிசேகர்

25 comments:

  1. மை ஊத்தும் போது பேனா சரியாக திறக்க வராது. அதனால் பல்லால் கடித்து திருகி திறப்பேன். என் பேனாவில் எல்லாம் அந்த பல் அடையாளம் இருக்கும்.

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

    ReplyDelete
  2. ஜாக்கியிடம் எழுத மறந்தவை....

    1.பேனா சரியாக எழுத வில்லையெனில் ஒரு அரை பிளேடால் நிப்பின் நடுவே கீறீ சரி செய்வோமே..
    2.இங்க் கடன் கொடுத்தாலோ,வாங்கினாலோ அதன் கழுத்தை திருகி சொட்டு கணக்கு எடுப்போமே.
    3.ஏப்ரல் முதல் தேதி அடுத்தவர் மேல் இங்க் தெளிப்போமே...
    4.ஹீரோ பேனா வைத்திருப்பவன் ஹீரோவாகவே கருதப்படுவானே..

    கால் ஓட்டத்தில் தலைப்பில் நானும் கொஞ்சம் எழுதலாம் என்று இருக்கிறேன்...ஜாக்கியின் அனுமதியுடன்

    ReplyDelete
  3. ஜாக்கியிடம் எழுத மறந்தவை....

    1.பேனா சரியாக எழுத வில்லையெனில் ஒரு அரை பிளேடால் நிப்பின் நடுவே கீறீ சரி செய்வோமே..
    2.இங்க் கடன் கொடுத்தாலோ,வாங்கினாலோ அதன் கழுத்தை திருகி சொட்டு கணக்கு எடுப்போமே.
    3.ஏப்ரல் முதல் தேதி அடுத்தவர் மேல் இங்க் தெளிப்போமே...
    4.ஹீரோ பேனா வைத்திருப்பவன் ஹீரோவாகவே கருதப்படுவானே..

    கால் ஓட்டத்தில் தலைப்பில் நானும் கொஞ்சம் எழுதலாம் என்று இருக்கிறேன்...ஜாக்கியின் அனுமதியுடன்

    ReplyDelete
  4. :))

    நல்ல மலரும் நினைவுகள்!

    இங்க் க பெஞ்சுல கொட்டி அதை பேனாவை கொண்டு உறிதல் செமையா இருக்கும். :)

    ReplyDelete
  5. சூப்பர் ஜாக்கி...

    //
    இந்த கட்டுரை உங்கள் பழைய பள்ளி நாட்களை, ஞாபகங்களை நினைவு படுததி இருந்தால்
    //
    ரொம்ப நல்லாவே.. :))

    ReplyDelete
  6. எங்க இருந்து தான் தேடிபிடிகிறீகள் .நல்ல எழுதுறீர்கள்

    ReplyDelete
  7. Nostalgic. Thanks for your post.
    When I went to India last time, I got myself two ink pens with a bottle of 'Camel Fountain Ink'.

    ReplyDelete
  8. இன்னமும் இங்க் பேனாவால் தான் தமிழ் எழுதவருகிறது, இதனாலேயே இன்னும் தமிழ் தட்டச்சு கைவரவில்லை.
    மிகவும் சிறப்பாக பதிவு அமைந்துமள்ளது, வாழ்த்துகள்

    ReplyDelete
  9. எட்டாம் வகுப்பில் கணிதத்தில் 100 மார்க் எடுத்தால் பார்க்கர் பேனா வாங்கி தருவதாக தாத்தா (Doctor) ஒரு முறை கூறியிருந்தார்.

    கடைசிவரை பார்க்கர் எனக்கு பிடிக்காமலே போனது.

    கொசுவத்தியை சுத்த வச்சிடிங்க ஜாக்கி.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. இன்றும் இத்தனை பேனைவகை வந்தும் ஒரு மைப்பேனை கைவசம் உண்டு. அதில் எழுதுவது அலாதியான இன்பம்.
    என் காலத்தில் ஈழத்தில் பைலற் -pilot எனும் வகை பிரபலம்; குயிங்-parker-quink எனும் மைப்போத்தலும் பிரபலம்.
    பின் பல சீனத் தயாரிப்புகள் இருந்து, போர்ச் சூழலுக்கு முன் யாழ்பாணத்தைச் சேர்ந்த K.G. குணரட்ணம் அவர்கள்
    k.G.Industries மூலம் சீயால்-Cial எனும் தயாரிப்பு மிக மலிவுவிலையில்(2 ரூபா) சகலர் பையிலும் இருந்தது.
    அதற்கு மையை உறிஞ்சி வைக்கும் அமைப்பு அதனால்; கையில் பட வாய்ப்பேகுறைவு.
    நீங்கள் குறிப்பிட்ட அந்தனை மைப்பேனாக் கூத்துக்களும் நமக்குமுண்டு.
    இந்த பேனா மை ஒரு கைமருந்தாக நெருப்புச் சுட்டால்; சுடுநீர் பட்டால் தடவுவது கிராமம்;நகரில் கூட
    வழக்கம். இதன் மருத்துவ குணம் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் பொங்குவது வற்றி எரிவு குறைவதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.
    இந்த மை எழுத்தை அழிக்க மில்ரன் எனும் திரவம் கூட விற்பனையில் இருந்தது.
    இந்த மைப் பேனா எனும் ஊற்றுப் பேனா...மறக்கமுடியாததே!!
    இதைப் படித்தவுடன் பள்ளிக்கூடம் சென்றதுபோல் இருந்தது.

    ReplyDelete
  11. அன்பு ஜாக்கி...

    வழக்கம் போலவே சிறப்பான அவதானக் கட்டுரை.

    ////
    என் நண்பன் நாகராஜ் வெகு நாட்களுக்கு முன் அவசரத்துக்கு ஜான்சி கடித்து திறந்து கொடுதத பல் தடத்தை ஏதோ டைனோசர் பாசில் போல் கணக்கிடைக்காதது போல் பாவித்தான்.
    ////

    இதத்தான் நான் உங்ககிட்ட எதிர்பாக்கிறேன். சூப்பர்.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  12. ஜாக்கி பதிவு சூப்பர்

    பள்ளி நாட்களில் இங்கி வாங்க காசு இருக்காது சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து இங்கி மாத்திரைன்னு ஓன்னு விற்கும் அதை கொண்டு இங்கி தயாரிப்போம்.

    8வது படிக்கும் காலத்தில் மாப்பளை பென்ச் மாணவன் (அதிக வருஷம் ஓரே வகுப்புல படிக்கும் மாணவன்) சைனா பேனா வச்சி இருந்தான் அந்த பேனா சிறப்பு அதை எழுத கீழ சாய்ச்சா அந்த பேனா மேல் உள்ள ஒரு பெண் உடை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.
    :-)))))))))))

    மாபெரும் அதிசயமாக பயத்துடன் பார்த்த நினவு இன்றும் பசுமையாக உள்ளது.

    பி.கு
    இந்த செய்தி எப்படியோ வகுப்பு ஆசிரியருக்கு தெரிந்து அந்த மாணவனுக்கு நல்ல பூசை நடந்தது. அந்த பாலான பேனாவையும் அவனிடம் இருந்து அவர் கைப்பற்றி கொண்டர்.

    ReplyDelete
  13. மை ஊத்தும் போது பேனா சரியாக திறக்க வராது. அதனால் பல்லால் கடித்து திருகி திறப்பேன். என் பேனாவில் எல்லாம் அந்த பல் அடையாளம் இருக்கும்.

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே\\


    உண்மைத்தான் முரளி எழுதும் போது எல்லா ஞாபகமும் எனக்கும் வந்தது நன்றி கருத்துக்கு

    ReplyDelete
  14. 1.பேனா சரியாக எழுத வில்லையெனில் ஒரு அரை பிளேடால் நிப்பின் நடுவே கீறீ சரி செய்வோமே..
    2.இங்க் கடன் கொடுத்தாலோ,வாங்கினாலோ அதன் கழுத்தை திருகி சொட்டு கணக்கு எடுப்போமே.
    3.ஏப்ரல் முதல் தேதி அடுத்தவர் மேல் இங்க் தெளிப்போமே...
    4.ஹீரோ பேனா வைத்திருப்பவன் ஹீரோவாகவே கருதப்படுவானே..//


    உண்மை தன்டோரா நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை 45 நிமிடத்தில் எழுதிய பதிவு இது. நன்றி தங்கள் கருத்துக்கு

    ReplyDelete
  15. நல்ல மலரும் நினைவுகள்!

    இங்க் க பெஞ்சுல கொட்டி அதை பேனாவை கொண்டு உறிதல் செமையா இருக்கும். :)“//


    வாவ் நல்ல விஷயம் அதை நான் எழுத மறந்துட்டேன் சாரி சிவா

    ReplyDelete
  16. சூப்பர் ஜாக்கி...

    //
    இந்த கட்டுரை உங்கள் பழைய பள்ளி நாட்களை, ஞாபகங்களை நினைவு படுததி இருந்தால்
    //
    ரொம்ப நல்லாவே.. :))

    ReplyDelete
  17. எங்க இருந்து தான் தேடிபிடிகிறீகள் .நல்ல எழுதுறீர்கள்//

    நன்றி மலர் தொடர்ந்து என் எழுத்தை வாசிப்பதற்க்கு

    ReplyDelete
  18. Nostalgic. Thanks for your post.
    When I went to India last time, I got myself two ink pens with a bottle of 'Camel Fountain Ink'.//

    பாருங்கள் இரண்டு பேனாவும் கேமல் இங்க் வாங்கியிதை குறிப்பிட்டு
    உள்ளீர்கள் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  19. இன்னமும் இங்க் பேனாவால் தான் தமிழ் எழுதவருகிறது, இதனாலேயே இன்னும் தமிழ் தட்டச்சு கைவரவில்லை.
    மிகவும் சிறப்பாக பதிவு அமைந்துமள்ளது, வாழ்த்துகள்//

    நன்றி டாக்டர் ருத்ரன் தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்

    ReplyDelete
  20. கடைசிவரை பார்க்கர் எனக்கு பிடிக்காமலே போனது.

    கொசுவத்தியை சுத்த வச்சிடிங்க ஜாக்கி.
    // அதுவே எனக்கு போதும் நன்றி வண்ணத்து பூச்சி

    ReplyDelete
  21. இந்த பேனா மை ஒரு கைமருந்தாக நெருப்புச் சுட்டால்; சுடுநீர் பட்டால் தடவுவது கிராமம்;நகரில் கூட
    வழக்கம். இதன் மருத்துவ குணம் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் பொங்குவது வற்றி எரிவு குறைவதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.//

    உண்மைதான் யோகன் நானும் இதை பார்த்து இருக்கிறேன் நன்றி

    ReplyDelete
  22. ////
    என் நண்பன் நாகராஜ் வெகு நாட்களுக்கு முன் அவசரத்துக்கு ஜான்சி கடித்து திறந்து கொடுதத பல் தடத்தை ஏதோ டைனோசர் பாசில் போல் கணக்கிடைக்காதது போல் பாவித்தான்.
    ////

    இந்த வரியை யாராவது பாராட்டுவாங்கன்னு எனக்கு தெரியும் நீங்க முந்திக்கிட்டிங்க நன்றி நித்யா...

    ReplyDelete
  23. பி.கு
    இந்த செய்தி எப்படியோ வகுப்பு ஆசிரியருக்கு தெரிந்து அந்த மாணவனுக்கு நல்ல பூசை நடந்தது. அந்த பாலான பேனாவையும் அவனிடம் இருந்து அவர் கைப்பற்றி கொண்டர்.//

    புதுவை சிவா நிறைய வாத்தியார் இப்படித்தான் நடந்துக்கறாங்க நன்றி

    ReplyDelete
  24. நான் இன்னமும் ink பேனா தான் பயன்படுத்துகிறேன்! கடைசியாக எழுதிய பரீட்சை கூட ink பேனாவால்தான். அது ஒரு தனி சோகக் கதை. விக்ரமாதித்தன் தோளில் ஏறிய வேதாளம் போல இந்தப் பரீட்சை இன்னமும் என்னை விடமாட்டேன் என்கிறது. இதைப் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner