1431 பயுரியா பல்பொடி(பாகம்/7)கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.


எங்கள் வீட்டில் காலையில் எழுந்ததும் பல் விளக்க நாங்கள் அந்த நாட்களில் பயண் படுத்திய பேஸ்ட்,செங்கேனி அக்கா வீட்டு பசுமாடு போட்ட சாணியில் தயாரான வரட்டியை அடுப்பில் எரித்து கிடைக்கும் சாம்பல்தான், எங்கள் வீட்டின் அந்நாளைய பேஸ்ட்...

என்னதான் சொல்லுங்கள் சாம்பலில் பல் துலக்கும் சுகமே சுகம்தான்.... என்ன சாம்பலில் பல் துலக்கும் போது புதியவர் என்றால் அந்த சாம்பல் சாறு கைகளில் விழிந்து முழங்கை வரை நீளும்..

அப்போதெல்லாம் அம்மா சின்ன வயதில் பல் விளக்கி விடுவாள் அப்புறம் அதை நானே கற்றுக்கொண்டேன். இப்போது போல் எல்லாம் அப்போது ஊருக்கு கிளம்பும் போது 5 மட்டும் அடுக்காக எடுத்துக்கொண்டு போக மாட்டார்கள் .
உள்ளாடை மற்றும் மாற்று உடைகள் மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்...ஒரு வெளியூர் கல்யாணத்துக்கு போகின்றீர்கள் என்றால் பிரஷ் பேஸ்ட் எல்லாம் அப்போது எடுத்துப்போக மாட்டோம். சேம்பிள் சோப்பு மட்டும் கடையில் வாங்கி கொள்வோம். காலையில் எழுந்ததும் வேப்பங்குச்சி,சாம்பல் இது இரண்டும் இல்லை என்றால் இருக்கவே இருக்கு செங்கல்...

வீடு கட்டும் செங்கல்லா? என்று வாய் பிளக்க வேண்டாம் அது போல் உடனடி பேஸ்ட் உலகத்தில் இல்லை என்பேன். வேப்பமரம், சாம்பல் கூட இல்லாத இடங்கள் இருக்கும் செங்கல் இல்லாத இடங்கள் மிகக்குறைவு.

செங்கலை எடுத்து ஓங்கி ஒரு கல்லின் மேல் அடித்தால் பல சி்ல்லுகளாக சிதறும் நாம் என்ன செய்ய வேண்டும் சிதறியதை விட்டு விட்டு அடித்த இடத்தில் பார்த்தால் மாவு போல் செங்கல் தூள் இருக்கும் அதுவே போதுமானது.. நாம் நம் எச்சிலை தொட்டு அந்த செங்கல் தூள் மேல் வைத்து பல்துலக்கி கொள்ள வேண்டும்... அவ்வளவுதான்.

இப்போது போல் அப்போதெல்லாம் டிவி விளம்பரங்கள் ஏதும் கிடையாது அப்படியே போட்டாலும் 5 பிள்ளைகளுக்கு அம்மாவான என் அம்மா மனதை எந்த விளம்பரங்களும் ஒன்றும் செய்ய முடியாது...

எந்த வெளியூர் பேனாலும் எங்க அம்மா வாங்கும் முதல் பல் பொடி 1431 பயுரியா பல் பொடிதான்

அந்த 1431பல்பொடியை அந்த வயதில் பார்த்தாலே எனக்கு எரிச்சலாக வரும் அதை வாயில் வைத்தால் எரியும், அதை கோல்கெட் போல் சுவைத்து விழுங்க முடியாது..நான் கோல் கேட் பேஸ்டின் ரசிகன்

( அப்படி விழுங்குவதை என் அம்மா பார்த்து தொலைத்து ராட்சசியாகி
அப்படி செய்வியா?, அப்படி செய்வியா? என்று வாயில் போட்டு உதடு கிழிந்து என் வாய் வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு , நான் தேம்பி தேம்பி அழுது, மகது கேட்காமல், என் அம்மா என்னை சமாதானப்படுத்த முயல, நான் மண்ணில் விழுந்து அங்க பிரதட்சனம் செய்தது எல்லாம் இந்த 1431 பயுரியா பல்பொடி கட்டுரைக்கு தேவையில்லை என்பதால் அடுத்த பத்திக்குபோகிறேன்.)

(குறிப்பு மண்ணில் அங்கபிரதட்சனம் செய்ததற்க்காக என் அம்மா தனி பூஜை நடத்தியது தனிக்கதை..)

1431 பார்தாலே எனக்கு குமட்டிக்கொண்டு வரும்... எப்படா தண்ணி ஊத்தி வாய் கொப்பளிக்கலாம் என்று இருக்கும்...

அப்போதெல்லாம் சுவர் விளம்பரங்களில் இந்த 1431 பயுரியா பல்பொடி விளம்பரத்தை பார்த்து இருக்கலாம்.

ரேடியோவில் வேறு

1431 புயுரியா பல் பொடி இந்தியா இலங்கை சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏராளமாக விற்பனையாகும் பல்பொடி 1431 பயுரியா பல்பொடி என்று கொளுத்தி போட்டுக்கொண்டே வேறு இருப்பார்கள்...

என் அம்மா1431 பல் பொடி தகர டப்பாவில் பலப்பம் மற்றும் சின்ன பெண்சில் போட்டு கொடுத்து என்னை பள்ளிக்கு அனுப்புவாள் எல்லா பசங்களும் பியாஸ்டிக் டப்பா எடுத்து வரும் போது நான் மட்டும் பயுரியா பல் பொடி தகர டப்பாவில் பலப்பம் பெண்சில் எடுதது செல்வேன்...

இந்த பல்பொடியில் பல் விளக்கினாள் பல் மற்றும் ஈருகள் உறுதியாக இருக்கும் என்று பொய் சொல்லி பல் தேய்க்க வைப்பாள் என் அம்மா. அதன் பிறகு மெல்ல மெல்ல 1431 மேல் உள்ள பயம் போய் அந்த சுவையையும் ரசிக்க ஆரம்பித்து விட்டேன்

அதன் பிறகு டிவி மீடியா தமிழ் நாட்டில் வளர்ச்சி அடைய அடைய மெல்ல மெல்ல 1431 கதை இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது என்பேன்.

அதன் பிறகு கோல்கேட்தனது பாடலை டிவியில் விளம்பர படு்த்தியது,

வாழ்க்கை வாழ்வதற்க்கே வெற்றி நிச்சயம் எனக்கே, பெற்றேனே சுவாச புத்துணர்ச்சி நீத்தம் பூரிக்குதே மனக்கிளர்ச்சி

என்று அந்த பாடல் அப்போது கொல்கேட் ஜீங்கில்ஸ் அதுதான்
அதற்க்கு தமிழகம் மெல்ல தலை சாய்தது....
ஆயிரம் சொல்லுங்கள் அந்த 1431 மணம் பல் விளக்கிய பிறகும் கைகளை விட்டு போகாது...இன்று டியுப்களில் பற்பசைகள் வந்த விட்டாலும் எழைகளின் பொருளாதார மற்றும் கவுரவ பல் பொடியாக விளங்கிய1431 பயுரியா பல்பொடி வாழ்க்கை ஓட்டத்தில் காணாமல் போய் விட்டது.

1431 பயுரியான்னா இன்னா அர்த்தம் தலிவா?என்க்கு பிரியவே இல்லை
உங்களுக்கு???????

குறிப்பு.... கால ஓட்த்தில் காணமல் போனவை தொடருக்கு நல்ல வறவேற்ப்பு உங்களிடத்தில் இருந்து அமோகமாய் கிடைப்பதால், காலஓட்த்தில் புதிதாய் வந்தவை பற்றி எனது பார்வையில் எழுத இருக்கிறேன் இது போல் அதற்க்கும் பின்னுட்ம் இட்டு என் எழுத்தை உற்சாகப்படுத்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது..

அன்புடன்/ஜாக்கிசேகர்

18 comments:

 1. //ஆயிரம் சொல்லுங்கள் அந்த 1431 மணம் பல் விளக்கிய பிறகும் கைகளை விட்டு போகாது//

  உண்மை தல .. சோப்பு போட்டு கழுவினாத்தான் கைகளை விட்டு போகும்.......

  நல்ல மலரும் நினைவுகள்

  ReplyDelete
 2. எங்க வீடுல சைவம் அசைவம் ரெண்டும் உண்டு, அதேபோல பல் பொடியிலும் ஸ்வீட் காரம் ரெண்டும் உண்டு... புரியல? கோபால் பல்பொடி-தான் பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கும்.

  அதுசரி பயோரியா பத்தி சொன்னீங்களே அந்த 1431-ன்னா என்னன்னு தெரியுமா? அதுல ஒரு மேட்டர் இருக்குப்பா...

  ReplyDelete
 3. கூட்டுத்தொகை 9 வருமாறு அமைத்தார்களோ என்னவோ?

  டபுள் செவென், ட்ரிபிள் பைவ், 501 போல ஃபேன்ஸி நம்பர் மாதிரி வைத்த்ருந்தாலும் பரவாயில்லை.

  143 - (ஐ லவ் யூ) சொல்ல உபயோகப்படும் நம்பர் 1 பல்பொடி என்பதால் 1431 யா?

  நல்ல பதிவு

  ReplyDelete
 4. நல்ல நினைவு கூறல். நானும் பயோரியா 1431 பயன் படுத்தியிருக்கேன்

  http://brandnama.blogspot.com/2007/03/brand-named-1431-pyorrhea-palpodi.html

  அன்புடன்
  சீமாச்சு

  ReplyDelete
 5. கோபால்தான் சூப்பர், 1431 எரியும், கோபால் சாக்கரின் கலந்த சாம்பல் நல்ல டேஸ்ட்

  ReplyDelete
 6. தலைவரே...

  கோபால் பல்பொடி அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு 1431 பயோரியா பல்பொடி என் வாழ்க்கையிலும் விளையாடி இருக்கிறது. வழவழப்பான எரிச்சல் தரும் சுவையுடன் அந்த வாழ்வை இப்போது நினைத்தால் சுகமாகத்தான் இருக்கிறது.

  அன்பு நித்யன்

  ReplyDelete
 7. நான் இன்னும் யூஸ் பண்றது 1431 பல்பொடி தான். விருதுநகர்ல அதுக்கு இன்னும் டிமாண்ட் இருக்கு. சில நேரங்கள்ல கடையில் போயி கேட்ட சின்ன டின்னை (4 ரூ) எடுத்துத் தர்றாங்க. பெரிய டின் (7.50 ரூ) வர வர காலியாடுதுன்னு சொல்றாங்க.

  ReplyDelete
 8. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதயுடன்)
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

  இவன்
  உலவு.காம்

  ReplyDelete
 9. //ஆயிரம் சொல்லுங்கள் அந்த 1431 மணம் பல் விளக்கிய பிறகும் கைகளை விட்டு போகாது//

  உண்மை தல .. சோப்பு போட்டு கழுவினாத்தான் கைகளை விட்டு போகும்.......

  நல்ல மலரும் நினைவுகள்//


  நன்றி அத்திரி தங்கள் வருகைக்கு

  ReplyDelete
 10. அதுசரி பயோரியா பத்தி சொன்னீங்களே அந்த 1431-ன்னா என்னன்னு தெரியுமா? அதுல ஒரு மேட்டர் இருக்குப்பா...//

  அது என்னனு சொல்லுங்க அரசூரான் அவலாய் இருக்கிறேன்

  ReplyDelete
 11. 143 - (ஐ லவ் யூ) சொல்ல உபயோகப்படும் நம்பர் 1 பல்பொடி என்பதால் 1431 யா?

  நல்ல பதிவு// நன்றி முரளி தங்கள் வருகைக்கு

  ReplyDelete
 12. நல்ல நினைவு கூறல். நானும் பயோரியா 1431 பயன் படுத்தியிருக்கேன்

  http://brandnama.blogspot.com/2007/03/brand-named-1431-pyorrhea-palpodi.html

  அன்புடன்
  சீமாச்சு//  நன்றி சீமாச்சு தங்கள் முதல் வருகைக்குக்கும் கருத்க்கும்

  ReplyDelete
 13. கோபால்தான் சூப்பர், 1431 எரியும், கோபால் சாக்கரின் கலந்த சாம்பல் நல்ல டேஸ்ட்// உண்மை குடுகுடுப்பை கோபால் பல்பொடி சூப்பர் ஒத்துக்கொள்கிறேன்

  ReplyDelete
 14. கோபால் பல்பொடி அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு 1431 பயோரியா பல்பொடி என் வாழ்க்கையிலும் விளையாடி இருக்கிறது. வழவழப்பான எரிச்சல் தரும் சுவையுடன் அந்த வாழ்வை இப்போது நினைத்தால் சுகமாகத்தான் இருக்கிறது.// உண்மைதான் நித்யன் கோபலிடம் கொஞ்சம் சொரசொரப்பு இருக்கும்1431விடம் அது மிஸ்ஸிங்

  ReplyDelete
 15. நான் இன்னும் யூஸ் பண்றது 1431 பல்பொடி தான். விருதுநகர்ல அதுக்கு இன்னும் டிமாண்ட் இருக்கு. சில நேரங்கள்ல கடையில் போயி கேட்ட சின்ன டின்னை (4 ரூ) எடுத்துத் தர்றாங்க. பெரிய டின் (7.50 ரூ) வர வர காலியாடுதுன்னு சொல்றாங்க.\\

  நன்றி ரிஷி தங்கள் தகவலுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது

  ReplyDelete
 16. கரகாட்டம், உறுமி மேளம், பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம், தோல் பொம்மலாட்டம், தெருக் கூத்து, இங்க் பேனா, பெண்களிடத்தில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆண்களின் வீர விளையாட்டு (சிலம்பம், மடுவு போன்றவை) இதுமாதிரி எத்தனையோ தொலஞ்சு போச்சுங்க சார். .....முத்து ஐயர் muthuaiyer@yahoo.com

  ReplyDelete
 17. அருமையான பதிவு வாழ்த்துக்கள்....நண்பரே...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner