நீங்கள் வெளிநாட்டுவாழ் இந்தியரா? (பாகம்/17) swades


தமிழ் நாட்டில் ஒரு சமுகம் இருக்கின்றது, அவர்கள் கல்யாணங்களில் காபிக்கு அடுத்த படியாக அவர்கள் உறவினர்களிடம் கேட்கும் விஷயம், எங்க உங்க புள்ள ஸ்டேட்ஸ்ல எங்க இருக்கான் என்பதுதான்... அப்படி இல்லை என்றால் அது கவுரவ குறைச்சலாகி விடும்...

அதனால் அவர்கள் பிள்ளைகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஐஐடி சென்னையில் படிக்கும் போதே ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள அமெரிக்கன் எம்பஸி வாசலில் கொஞ்சம் கூட வெட்கம் பார்க்காமல் விடியற்கலையிலேயே இடம் பிடித்து, கடனை உடனை வாங்கி படிக்க வைத்து அவனை அமேரிக்காவுக்கு அனுப்பினால்...

அதன் பிறகு மேட்ரி மோனியலில் பெண் தேடி பெத்தக்கடனுக்கு கற்புள்ள பெண்ணை கட்டிக்கொடுத்து அவனை திரும்பவும் அமெரிக்காவுக்கு அனுப்பினால்அதன் பிறகு பெற்றோரை திரும்பிக்கூட பார்க்க மாட்டான்...

அதன் பிறகு பிள்ளை பாசத்தில்58 வயதில் கம்யுட்டர் கத்துக்கொண்டு வெப்கேம் வழியாக பிள்ளையையும் அவன் மனைவியையும் அசைவுகளாக பார்த்து, கொஞ்சம் நாள் கழித்து பேரப்பிள்ளையையும் அதே போல் பார்த்து ஆசையாக தூக்கி கொஞ்சக்கூட முடியாத அபாக்கிய சாலிகளாக இருந்து, விக்கி கொண்டால் கூட அல்லது நெஞ்சு வலித்தால் கூட அமிர்த்தாஞ்சன் போட்டு மார்பு நீவி விடாத படி தொலை தூரத்தில் இருக்கும் பிள்ளைகள்...


கொஞ்சம் நாளில் மண்டையை போடும் போது கூட எட்டிப்பார்க்காமல் பிளைட் சார்ஜ் கணக்கு போட்டு மொத்தமாக பெற்றோர் மண்டையை போடும் போது வந்து கண்ணம்மா பேட்டையில் மீசை எடுத்து , மினரல் வாட்டர் குடித்து,


“ எப்படித்தான் இந்த சென்னையில இருக்கறீங்களோ, ரொம்ப ஹாட்டா இருக்கு”
இதுவே ஸ்டேட்டா இருந்தா எப்படி இருக்கும் தெரியுமா?

என்று அலட்டி சாவுக்கு வந்த வளரும் ஒரு தலைமுறையை உசுப்பி அவனுக்கும் யூ எஸ் கனவை ஊட்டி திரும்பவும் ஒரு தகப்பன் கடன் வாங்கி வட்டி கட்டி படிக்க வைத்து ஸ்டேட்ஸ்க்கு பிள்ளையை அனுப்புவதை கவுரவமாக நினைத்து அனுப்பி வைத்து பிறகு புறக்கனிக்கப்பட்டு நெஞ்சு நீவி விட ஆளில்லாமல் அனாதையாக சாவது தொடர்கதையாகவே இருக்கின்றது, திரும்பவும் வீடு வந்து அலட்டி மீசை எடுத்து மினரல் வாட்டர் குடித்து...

நன்றாக யோசித்து பாருங்கள் நம் வரிபணத்தில் கட்டிய அண்ணா பல்கலைக்கழகம்,ஐஐடி, அரசு மருத்தவ கல்லூரி போன்றவற்றில் படித்து அதுவும் மானியத்துடன் படித்து, மேற்படிப்புக்கு காசும் வாங்கி கொண்டு அங்கு சென்று அங்கேயே தங்கி நம் நாட்டையே பழிக்கும் பலரை நான் பார்த்து இருக்கிறேன்.

அண்ணா பல்கலைக்கழகம்,ஐஐடி, அரசு மருத்தவ கல்லூரி போண்றவைகள் என்னை பொறுத்தவரை வெளிநாட்டுக்கு எக்ஸ்போர்ட் செய்யும் நிறுவனங்கள் என்பேன்...
சமீபத்தில் கூட அமேரிக்காவில் பேராசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனால் சுட்டுக்கொள்ள பட்டார், அதுபற்றி ஆகோ ஓகோ என்று கூட நம் சட்டசபையில் பேசினார்கள் அவர் உசிலம்பட்டி கிராமத்து பள்ளி்யில் வகுப்பு எடுத்த போது இறந்து போய் இருந்தால் ஒரு நாய் கூட சீன்டி இருக்காது.. அவர் அமேரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்...

இதில் கொடுமை அவரின் பெற்றோருக்கு தமிழக அரசுதான் பாஸ்போர்ட் எடுத்து பிளைட் டிக்கெட் எடுத்துக்கொடுத்து அனுப்பியது...
ஒரு பேராசிரியர் அப்பா அம்மாவை அமெரிக்கா அழைத்த சென்று கூட காட்டவில்லை....


அப்படி தாய் நாட்டில் படித்து தன் நாட்டு மக்களுக்கு ஏதும் செய்யாமல் சுக வாசியாக இருக்கும் அல்லது அப்படி போய் நம் நாட்டை கேவலமாக நினைக்கும் சில மேல்தட்டுவர்கத்தை பிடரியில் அடித்து யோசிக்க வைத்து இருக்கும் படம்தான் ஸ்வதேஷ்...


ஸ்வதேஷ் என்றால் தேசம் என்று பெயர்.
இந்த படத்தை லகான் எடுத்த டைரக்டர் அஸ்வகோஷ் கவுரிக்கர் இயக்கி இருக்கிறார்.
படத்தின் கதை இதுதான்.....

மோகன் அமேரிக்காவில் நாசாவில் வேலை செய்யும் இந்தியன்... அவனுக்கு பெண் சகவாசம் புட்டி சகவாசம் ஏதும் இல்லாதவன், வாகன விபத்தில் தன் பெற்றோரை இழந்தவன்...நாசவில் ராக்கெட் ஏவுதளத்தில் தலமை பொறியாளன்.
தன் பெற்றோர் நினைவு நாளின் போது தன் வளர்ப்புதாய் காவேரி அம்மாவை நினைத்து பார்த் போது அவரை தொடர்பு கொண்டு பல நாட்கள் ஆகின்றதை உணர்கிறான்...காவேரி அம்மாவை தேடி அவன் இந்தியா வருகிறான்...

வந்த இடத்தில் காவேரி அம்மாவின் தூரத்து சொந்தம் உள்ள ஒரு பெண்ணும் ஒரு பையனும் அவர் பாதுகாப்பில் வாழ்கிறார்கள், காவேரி அம்மாவை அமேரிக்கா அழைத்து போய்விடலாம் என்று கணவு கண்ட மோகனுக்கு அது பெரிய சிக்கலாக இருக்கிறது...

அவன் இந்தியாவில் மிக முக்கியமாக காவேரி அம்மா இருக்கும் சரன்பூர் கிராமத்தில் அந்த மினரல் வாட்டர் குடிக்கும் என்.ஆர்.ஐ என்ன செய்கிறான், அவன் சந்திக்கும் கிராமத்து பிரச்சனைகள் என்ன, அந்த வெள்ளந்தி மனிதர்கள் அவனோடு சினேகம் கொண்டார்களா?

காவேரி அம்மாவின் வளர்ப்பு பெண்ணாக இருக்கும் பெண்ணுக்கு மோகனை பிடிக்கவில்லை அவன் மனதில் அவள் இடம் பெற்றாளா? நாசாவில் இருந்து 28 நாள் லீவில் வரும் மோகன் காவேரி அம்மாவை அழைத்து சென்றான என்பதை வெள்ளித்திரையில் காண்க....


படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

இந்தியாவின் எல்லா பிரச்சனைகளையும் ஒரு படத்தில் கொண்டு வர முடியுமா முடியும் என்று தனது திரைக்கதையால் நிருபித்து இருக்கிறார் இயக்குநர்.

இந்தியாவின் அடிப்படை பிரச்சனைகள் எல்லாவற்றையும் சுவாரஸ்யமான தனது திரைக்கதை அமைப்பில் கொண்டு வந்து இருப்பார்இயக்குநர் கொளரிக்கர்...

என்.ஆர்.ஐ என்றால் நான் ரிட்டர்னிங் இந்தியன் என்று போகிற போக்கில் நக்கல் வேறு...

படம் முழுக்க இந்தியாவின் வறுமையையும் கல்வி அறிவு பெறாத நமது கிராமத்து வெள்ளத்தி மனிதர்களை பற்றிய விஷயங்களை அலசிஆராய்ந்து இருப்பார்...

ஷாருக்கானுக்கு இந்த படம் அவர் கெரியரில் ஒரு மயிலறகு என்றால் அது நூத்துக்கு நூறு உண்மை...

பள்ளி சிறுவர்களின் பள்ளி கட்டிட பிரச்சனை அதில் திண்டாமை, படிப்பறிவில்லாத கிராமத்து மனிதர்கள், அவர்களிடம் நம்மிடம் இப்போதும் வாழும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் என கதை சொன்ன விதம் அற்புதம்...

காயத்திரி ஜோஷி என்ற புதுமுக பெண்தான் ஷாருக்கின் ஜோடி. அந்த பெண்ணுக்கு பெரிய கவர்ச்சி விஷயங்கள் இல்லை என்றாலும் அவரின் எடுப்பான கண்கள் சிறப்பான நடிப்பை பெற்றுத்தந்தன....

ஷாருக் மற்றும் காயத்ரிக்கு ஏற்படும் காதல்காட்சிகளில் இருக்கும் ரிச்நெஸ் நீங்கள் எந்த படத்திலும் பார்த்து இருக்க முடியாது என்பேன்.

முதன் முதலில் ஷாருக் இந்தியாவுக்கு வருவதை காண்பிக்கும் போது மேலிருந்து பார்க்கும் போது ஒரு செம்மண்நிற இந்தியமண் தெரியும் அதை பார்க்கும் போது நமக்கு உடம்பு மனதும் சிலிர்க்கும்


முதியோர் இல்லத்தில் காவேரி அம்மாவை தேடி வருகையில் ஒரு கிழவி காவேரி அம்மா கொடுத்து வச்சவ அவளை தேடியாராவது வராங்களே என்று சொல்லி விட்டு துடைக்கும் போது முதியோர் தனியே படும துயரங்களை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது....

தன் குத்தகை நிலத்தில் வரும் பணத்தை வாங்க ஷாருக்கை காவேரி அம்மா அனுப்பும் போது,ஷாருக் டிராவல் செய்யும் இடங்களையும் அதன் இடர்பாடுகளையும் தனது இசையாலும் ஒளிப்பதிவாலும் அழகாக எடுக்க வைத்து இருப்பார் இயக்குநர்ஷாருக் முதன் முதலில் அந்த பெண்ணை புத்தக கடையில் பார்த்து கல்குலேட்டர் இல்லாமல் கணக்கு போடும் அவளின் புத்திசாதுர்யத்தில் மயங்குவது...

வீட்டில் அவளை பெண்பார்க்க வரும் போது முதலில் அவளுக்கு கல்யாணம் என்பதை நம்பாமல் பிறகு அவள் சீவி சிங்காரித்து இமைக்கொடாமல் பார்த்து அந்த கல்யாணம் நடக்ககூடாது என்று மனதில் நினைத்து வெளியே போய் தம் போடும் போது நம்ம ரஹ்மான் ஒரு பிட் போடுவார் பாருங்கள் பரம சுகம்...
திரும்பவும் உள்ளே வந்து அந்த கல்யாணம் கை கூட வில்லை என்றதும் ஷாருக் மிகிழ்வார் பாருங்கள் அது 100 சிவாஜிக்க சமம்...

குத்தகை பணம் வாங்க இந்திய ரயிலிலும் பஸ்ஸிலும் அடிபட்டு மிதி பட்டு போகும் போது, அவன் இந்தியாவின் மக்கள் வாழ் முறையை புரிந்து கொள்வதாக காட்சி அமைத்தது ரொம்பவும் அழகு

பணம் வாங்காமல் அந்த ஏழை விவசாயிக்கு பணம் கொடுத்து விட்டு அவர் வீட்டில் இரவு உணவு உண்டு கண்கலங்குவார் பாருங்கள் அதுதான் ஷாருக்...

திரும்ப ரயி்லில் வரும் போது ஒரு கிராமத்து ரயில் ஸ்டேஷனில் ரயில் நிற்க்க ஒரு சிறுவன் கையில் தண்ணி்25 பைசா எனக்கூவி கூவி விற்க்கும் போது எவர் கண்ணும் கலங்கும் இடம் அது... அப்போது ரயில் மேல் காமிரா வைத்து ஜிம்மி ஜிப் கிரேன் மூலம் மிக அழகாக படம் பிடித்து இருப்பார்கள்...


ஷாருக்கும் அவளுக்குமான காதலை மிக மிக அழகாக கவித்துவம்தோடு சொல்லி இருப்பார்கள்...

என்னை பொறுத்தவரை மேக்கிங்கில் இந்த படம் ஒரு அற்புதமான படம் என்பேன்..

இந்த படத்தின் ஒளிப்பதிவு, மகேஷ்அனாய் செய்து இருக்கிறார் .
மிக சிறப்பான நேர்த்தியான ஒளிப்பதிவு....

இந்த படத்தில் வரும் போஸ்ட் மேன் கேரக்டர் ஆகட்டு்ம், அமெரிக்காவில் தபா வைக்க ஷாருக்கொடு சுத்தும் அந்த கேரக்டர் மற்றும் காவேரி பாட்டி போண்றவர்கள் எப்போதும் நம் மனதில் இருப்பார்கள்....

இந்திய ரசிகர்கள் இந்த படத்தை வெற்றி பெற செய்யவில்லை, அதே போல் கதை அமைப்பு படி இது பொறுமையாக நகரும் திரைக்கதை,மற்றும் கடைசி வரை கதாநாயகி தொப்புளை கூட காட்டாததாலும், ஷாருக் ஒரு பொறுப்பான இந்திய குடிமகனாக நடித்ததை அவர் ரசிகர்கள் விரும்பவில்லை...

ரஹ்மான் ஜி இந்த படத்துல பின்னனி இசையில மிரட்டி இருப்பார் பாடல்கள் எல்லாம் சூப்பர்

இயக்குநர்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர்....
அஷ்வக் கோஷ் கவுரி்க்கர் சிறந்த இயக்குநர் நாட்டு பற்று உள்ள, பொறுப்புள்ள இயக்குநர் என்பதில் ஐயம் இல்லை...இந்தபடம் நல்ல அறிவு இருந்தும் வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் கொடுக்க காத்து இருந்தும் இன்னும் கல்பாக்கத்திலும், ஸ்ரீஹரிக்கோட்டாவிலும்,இன்ன பிற ஆராய்சி நிறுவணங்களில் பணியாற்றும் என்னற்ற விஞ்ஞானிகளுக்கு என் நன்றிகள் முக்கியமாக நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு...அன்புடன்/ஜாக்கிசேகர்

36 comments:

 1. நல்லா எழுதி இருக்கீங்க. ஒரு NRI
  இல்லை ரெண்டு NRIகள்.

  ReplyDelete
 2. மிக அருமையான விமர்சனம். என்.ஆர்.ஐக்கள் பற்றிய முன்சுருக்கம் - 'சுருக்'

  ReplyDelete
 3. /

  இந்திய ரசிகர்கள் இந்த படத்தை வெற்றி பெற செய்யவில்லை, அதே போல் கதை அமைப்பு படி இது பொறுமையாக நகரும் திரைக்கதை,மற்றும் கடைசி வரை கதாநாயகி தொப்புளை கூட காட்டாததாலும், ஷாருக் ஒரு பொறுப்பான இந்திய குடிமகனாக நடித்ததை அவர் ரசிகர்கள் விரும்பவில்லை...
  /

  என்னத்த சொல்ல !?!?
  :(

  ReplyDelete
 4. ஸ்வதேஸ் - அருமையான படம் தல.
  ஷாருக், இசை, கதாநாயகி, பாடல்கள், கதை -- எல்லாமே சூப்பர்..

  ReplyDelete
 5. நல்ல பதிவு. ஆற்றாமையை இயல்பாக ரசிக்கும்படி எழுதியுள்ளீர்கள்

  ReplyDelete
 6. என் நண்பன் அமெரிக்காவில் படிக்க போய் அங்கு பல கூலி வேலைகளை பார்த்து ஒரு வழியாக ஒரு வேளையில் சேர்ந்துவிட்டான்..அதன் பிறகு அவன் இந்தியா வந்தபோது போட்ட சீன் தாங்க முடியவில்லை ....

  நல்ல படைப்பு ஜாக்கி

  ReplyDelete
 7. மிக சிறப்பான பதிவு ஜாக்கி

  பதிவின் தாக்கம் சிறு கிறுகள்

  பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை
  பந்த காட்டும் அயல் வாழ் அடிமைகள்
  வாழ்வின் பயணிக்கும் போலி எல்லைகள்
  தாய் நாட்டின் நலனை மறந்த நோள்ளைகள்..

  ReplyDelete
 8. என் மனசு வலிக்கிறது, 19 வருடங்கள் சவுதியில் குடும்பத்துடன் வாழும் நாங்கள் பெற்றதை விட இழந்தது அதிகம். இன்னும் அதை உணர தயாரில்லை. இதுதான் உண்மை. உங்கள் எழுத்தில் உள்ள அழுத்தம் என் மனதை தொட்டது. நன்றி !

  ReplyDelete
 9. படத்தோட விமர்சனமா இல்லாம ஒரு கட்டுரை மாதிரி எழுதியிருக்கீங்க ஜாக்கி.. நல்லா இருக்கு.. பாராட்டுகள்..

  ReplyDelete
 10. Thanks for your commentary. I will definitely watch this movie.
  Speaking on behalf of those Desis who live abroad in the US:
  1. If you live in the US for a while, return to India, and drink that local water, you will definitely fall sick. It is not just the quality of water, but also the fact that your body is not used to the micro-organisms that live on the other side of the world. Considering that you will be India only for a short period of time, it is wise to drink a distilled water than regular water that others drink.
  2. India has tropical climate. US has totally different climate. It is common to express displasure about the humidity during the trip. If the parents or relatives were to visit the US, they will be complaining about the cold/snow/chilliness/dry-heat. Or they will complain about the fact that they cannot walk to a local tea shop or convenient store to buy stuff on a daily basis.

  Please don't see it as 'alattal' but as a human tendency to complain about the lack of level of comfort.

  ReplyDelete
 11. நன்றி குடுகுடுப்பை தாங்கள் தொடர்ந்து அளித்துவரும் அதரவுக்கும் பின்னுட்டத்திற்க்கும் நன்றி..

  ReplyDelete
 12. மிக அருமையான விமர்சனம். என்.ஆர்.ஐக்கள் பற்றிய முன்சுருக்கம் - 'சுருக்'//  நன்றி சிவா,தொடர் வருகைக்கும் தொடர் பின்னுட்டத்துக்கும்

  ReplyDelete
 13. இந்திய ரசிகர்கள் இந்த படத்தை வெற்றி பெற செய்யவில்லை, அதே போல் கதை அமைப்பு படி இது பொறுமையாக நகரும் திரைக்கதை,மற்றும் கடைசி வரை கதாநாயகி தொப்புளை கூட காட்டாததாலும், ஷாருக் ஒரு பொறுப்பான இந்திய குடிமகனாக நடித்ததை அவர் ரசிகர்கள் விரும்பவில்லை...///


  இந்த படத்தின் மேக்கி்ங் மிக அற்புதம் சிவா ஆனா படம்தான் ஓடலை அதற்க்குநான் சொன்ன காரணம் தான் வேற காரணம் இல்லை  /

  ReplyDelete
 14. ஸ்வதேஸ் - அருமையான படம் தல.
  ஷாருக், இசை, கதாநாயகி, பாடல்கள், கதை -- எல்லாமே சூப்பர்..//

  மிக உண்மையான விஷயம் சின்ன பையன் நன்றி

  ReplyDelete
 15. நல்ல பதிவு. ஆற்றாமையை இயல்பாக ரசிக்கும்படி எழுதியுள்ளீர்கள்//


  நன்றி முரளி தங்கள் கருத்துக்கு

  ReplyDelete
 16. என் நண்பன் அமெரிக்காவில் படிக்க போய் அங்கு பல கூலி வேலைகளை பார்த்து ஒரு வழியாக ஒரு வேளையில் சேர்ந்துவிட்டான்..அதன் பிறகு அவன் இந்தியா வந்தபோது போட்ட சீன் தாங்க முடியவில்லை ...//

  உண்மை அக்னி அந்த சீனை வெறுக்கிறேன்...
  நம் நாடு யார் சொத்தையும்,எவர்நாட்டையும் சேத படுத்தாமல் வளர்ந்து வரும் தேசம் நம் நாட்டை குத்தம் சொல்வதை ஏற்க்க முடியாது..

  நம்ம நாடு பழமையான நாடு நிறைய மூட பழக்க வழக்கங்கள், நிறைய ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளுடன் வளர்ந்து வரும் தேசம் 400 வருட சரித்திரம் கொண்டது அமேரிக்கா தேசம்...
  நன்றி அக்னி

  ReplyDelete
 17. என் மனசு வலிக்கிறது, 19 வருடங்கள் சவுதியில் குடும்பத்துடன் வாழும் நாங்கள் பெற்றதை விட இழந்தது அதிகம். இன்னும் அதை உணர தயாரில்லை. இதுதான் உண்மை. உங்கள் எழுத்தில் உள்ள அழுத்தம் என் மனதை தொட்டது. நன்றி !///


  நன்றி முத்தையா
  இந்த பாராட்டுக்காக இன்னும்நிறைய ஊக்கத்துடன் எழுதுவேன், தாங்கள் உணர்ந்து என் எழுத்து உங்கள் நெஞ்சை தொட்டது பாருங்கள் அது போதும்... சினிமா விமர்சனம் யார் வேண்டுமானலும் எழுதலாம் அதில் ஏதாவது செய்தியை நான் கற்ற அனுபவத்தை எங்களிடம் சேர்க்க வேண்டும் என்பதாலேயே இவ்வளவு நேரம் எடுத்து எழுத வேண்டியதாயிருக்கின்றது

  ReplyDelete
 18. படத்தோட விமர்சனமா இல்லாம ஒரு கட்டுரை மாதிரி எழுதியிருக்கீங்க ஜாக்கி.. நல்லா இருக்கு.. பாராட்டுகள்..//


  பாராட்டுக்கு நன்றி வெண், மேலே முத்தையா சொன்னது போல் மனசை தொட்டால் போதும்... நன்றி

  ReplyDelete
 19. Please don't see it as 'alattal' but as a human tendency to complain about the lack of level of comfort.//

  உங்கள் கருத்து ஏற்புடையதே, அதில் மாற்றுக்கருத்து என்பதே கிடையாது...என் நண்பன் அமெரிக்காவில் படிக்க போய் அங்கு பல கூலி வேலைகளை பார்த்து ஒரு வழியாக ஒரு வேளையில் சேர்ந்துவிட்டான்..அதன் பிறகு அவன் இந்தியா வந்தபோது போட்ட சீன் தாங்க முடியவில்லை ...//

  உண்மை அக்னி அந்த சீனை வெறுக்கிறேன்...
  நம் நாடு யார் சொத்தையும்,எவர்நாட்டையும் சேத படுத்தாமல் வளர்ந்து வரும் தேசம் நம் நாட்டை குத்தம் சொல்வதை ஏற்க்க முடியாது..

  நம்ம நாடு பழமையான நாடு நிறைய மூட பழக்க வழக்கங்கள், நிறைய ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளுடன் வளர்ந்து வரும் தேசம் 400 வருட சரித்திரம் கொண்டது அமேரிக்கா தேசம்...


  நண்பர் அக்னி நண்பர் போட்ட சீனைதான் வெறுக்கிறோம் ஒப்பிட்டலவில் போடும் சீன்..வாட்டர் சீத்தோஷனநிலை ஏற்றுக்கொண்டாலும் கூட மற்ற ஒப்பீடுகளைதான் வெறுக்கின்றோம்


  நன்றி பாலா உங்கள் கருத்துக்கு....

  ReplyDelete
 20. நானும் இந்த படத்தை பார்த்திருக்கிறேன்......நீங்கள் சொன்ன விதம் அருமை.
  அசுதோஷ் என்னோடு வேலை செய்தவரின் கிளாஸ்மேட்.இந்த படம் வெளிவருவதற்கு முன்னால் ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

  ReplyDelete
 21. நல்ல விமர்சனம்.
  NRI க்கு 2 விதமான அர்த்தங்களா? இன்னொன்றும் இருக்கு
  Now Returning Indians.

  ReplyDelete
 22. நானும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை.

  உங்கள் விமர்சனமே முதல் அறிமுகம்.

  நன்றி..

  தாங்கள் இதுபோல் தங்களுடைய சீரிய கருத்துக்களை, நிறைவான விமர்சனங்களை இதே போன்று 8 பக்கங்களுக்கு குறையாமல் எழுதி என்னைப் போன்ற அப்பாவிகளைக் காப்பாற்ற வேண்டுமாய் கேட்டுக் கொல்கிறேன்.!

  ReplyDelete
 23. அண்ணன் “உ”னா “தா”னா அவர்களை வழிமொழிகிறேன்.

  super

  அன்பு நித்யன்

  ReplyDelete
 24. நம்ம நாடும் பல துறைகளிலும் வழர்ந்து வெற்றி பெறட்டும் .நம் நாட்டவருக்கு நம் நாட்டிலீயே வேலை கிடைக்கட்டும் .உலகில் அமைதிபிரக்கட்டும் என்று பிராத்திப்போம் .இது தொடர்பாகா நானும் ஒரு பதிவு போட்டுள்ளேன்

  ReplyDelete
 25. நன்றி பட்டாம் பூச்சி தங்கள் வருகைக்கு, மறு முறை இயக்குநரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் என் அன்பா சொல்லுங்கள்

  ReplyDelete
 26. நல்ல விமர்சனம்.
  NRI க்கு 2 விதமான அர்த்தங்களா? இன்னொன்றும் இருக்கு
  Now Returning Indians. நன்றி குமார் காலஓட்டத்தக்கு ஏத்தமாறி நீங்களும் ஒரு பிட்டை போட்டு தாக்கறிங்க...

  ReplyDelete
 27. தாங்கள் இதுபோல் தங்களுடைய சீரிய கருத்துக்களை, நிறைவான விமர்சனங்களை இதே போன்று 8 பக்கங்களுக்கு குறையாமல் எழுதி என்னைப் போன்ற அப்பாவிகளைக் காப்பாற்ற வேண்டுமாய் கேட்டுக் கொல்கிறேன்.!//


  யோவ் உனா தானா, நான் எப்பவாவதுதான் இதுபோல் எழுதுறேன் ஆனா நீ எப்பயும் இப்படித்தான் எழுதற நன்றி உனா,தானா

  ReplyDelete
 28. அண்ணன் “உ”னா “தா”னா அவர்களை வழிமொழிகிறேன்.

  super//

  நன்றி நித்யன் தங்கள் வருகைக்கு

  ReplyDelete
 29. நம்ம நாடும் பல துறைகளிலும் வழர்ந்து வெற்றி பெறட்டும் .நம் நாட்டவருக்கு நம் நாட்டிலீயே வேலை கிடைக்கட்டும் .உலகில் அமைதிபிரக்கட்டும் என்று பிராத்திப்போம் .இது தொடர்பாகா நானும் ஒரு பதிவு போட்டுள்ளேன்//


  நன்றி மலர் தங்கள் முதல் வருகைக்கு. உங்கள் கருத்துதான் என்னுடையதும் நன்றி

  ReplyDelete
 30. நீங்க எழுதுற மாதிரி மக்களும் இருக்குறாங்க. நான் இல்லை என்று சொல்ல வில்லை. இந்தியாவிலயே இருந்து கொண்டு பெற்றவர்களையும், சகோதர சகோதரிகளயும் கண்டு கொல்லாமல் இருப்பவர்களும் இருக்கிறார்களே.

  அதற்கு என்ன சொல்ல்கிறீர்கள். நாங்கள் அனுப்பும் பணத்தை வைத்து கொண்டு இந்திய அரசாங்கம் நூற்று கணக்கான மக்கள் திட்டங்களை நிறைவேற்றுகிறது என்பதை மறந்து விடாதீர்கள் அன்பரே.

  IIT Students இது வரை இந்தியாவுக்கு அனுப்பி இருக்கும் பணம் சுமார் 1,68,000 கோடி என்கிறது புள்ளி விபரம்.

  நீங்கள் IIT-காக செலவு செய்த தொகையை விட இது மிக அதிகம்.

  இது தவிர Foriegn Investments என்று கோடி கோடியாக வந்து கொட்டுவதெல்லாம் இந்த நரி-கல்தானே.

  பொத்தாம் பொதுவாக IT, People working in IT என எல்லோரையும் திட்டுவதை தவிர்கலாமே.

  அவர்களும் மனிதர்கள் (ம) இந்தியாவின் மின்னல் வேக வளர்ச்சிக்கான தூண்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

  Every advantage has it's own disadvantage.

  திருத்தும் வேண்டி இருப்பது அனைவரிடமுமே.

  அயல் நாடு சென்று உழைத்து பணம் அனுப்பும் மனிதனை நோகும் முன் உள்நாட்டில் உழைக்காமல் இருப்பவர்களை கண்டியுங்கள் முடிந்தால் தண்டியுங்கள்.

  நன்றி...

  ReplyDelete
 31. ஹாய் ஜாக்கி
  நான் சொல்ல நினைத்ததை பாலா word - by - word சொல்லி விட்டார். Generalization வேண்டாமே. இந்தியாவில் இருந்து கொண்டு அமெரிக்கரை போல உண்டு (Pizza) , உடுத்தி (shorts, gowns etc), பேசி (X Y ZEE, 4 ஒ 1, Gas for Petrol etc) வாழுவோர் அநேகம்.

  அமெரிக்கா வந்த அனைவரும் பெற்றோரை மறக்க வில்லை (exceptions cannot be examples). ஜூன் - செப் மாதங்களில் வார இறுதியில் நயாகரா சென்று காண வேண்டும் - It looks like a summit for retired Indians - so many NRIs bring their parents and show them around.
  என் அம்மாவின் கைப்பேசி என் 9380411145, why dont you speak to her and see what has changed in me after going to US. அக்னி பார்வையின் கருத்தை ஏற்கிறேன், அப்படிப்பட்ட ஆட்களும் இருக்கிறார்கள். நானும், பாலாவும் (I dont even know who he is), வெட்டிப்பயல் பாலாஜியும் இன்னும் பலரும் உள்ளனர். ஏன் நாங்கள் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை?
  நான் இந்தியா வந்திருந்த பொது நடேசன் பூங்காவில் சந்தித்தும் கடையில் தேநீர் அருந்தியதும் மறந்திருக்காது என நம்புகிறேன்.
  ஜாக்கி - நீங்கள் கூறியது தவறு என்று கூறவில்லை, Generalization வேண்டாம் என்று தான் கூறுகிறேன். Hope you understand my view...
  என்றும் அன்புடன்
  ஸ்ரீராம் Boston USA

  ReplyDelete
 32. அன்பு நண்பர் ஸ்ரீராமுக்கு,

  அந்த படத்தினை பார்த்தால் அந்த பதிவின் அர்த்தம் புரியும்.அந்த பதிவு இந்தியாவை விட்டு சென்று மாறியவர்களையும் அலட்டியவர்களையும் சாடிய விஷயம்... மாறாத உங்களை பற்றி அல்ல...

  நான் எப்போதுமே மறக்க முடியாத சந்திப்புஅது நடேசன் பூங்காவில் தேநீர் அருந்தி நெடு நேரம் கதைத்தது..

  அன்புடன் ஜாக்கி

  ReplyDelete
 33. அன்புள்ள நண்பர் ராஜாவுக்கு

  உங்கள் கூற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன், என் நண்பர்களில் சிலர் அமெரிக்கா போய் பெற்றவர்களை யும் ,சொந்த நாட்டினரையும் மறந்து போனவர்களை சாடிய பதிவு....

  நாட்டு்க்கு செய்வது அப்புறம், அப்பா இழுத்து பரித்துக்கொண்டு இருக்கின்றார் என்று செய்தி அனுப்பிய போது ரொம்ப சீரியஸ் என்றால் மட்டுமே சொல்லுங்க என்ற தகவல் மட்டுமே பதிலாக வந்தது...ஆனால் போன் செய்யலாமே அதுவும் செய்யவில்லை....

  மற்றபடி உங்கள் கருத்து ஏற்புடையதே....

  அன்புடன் ஜாக்கி

  ReplyDelete
 34. Dear Jackie, Your comments are really good. we love that movie very much, and Shahrukh did fantastic job in that movie. That girl also did very well and composed. Music is very brilliant. Whenver they show in any channel we will watch again and again.
  Last time i wrote your name (Jackey) wrong.
  Lakshmi Ramkumar from Moscow, Russia

  ReplyDelete
 35. Dear Jackie , Your comments are excellent. I always look forward your writing in any blog spot. We also love that movie.
  Lakshmi Ramkumar from Moscow , Russia

  ReplyDelete
 36. Dear Mr. Shekar,

  I have been reading your blogs for a few months now. You write well and I appreciate it. Congratulations on your writing skill.

  But, I do not agree with this blog. Let me ask you a few questions.

  I do not know your background. But let us consider that you were one of the millions of Indians who moved away from a small village in India to a big town in India. The question for such a person is:

  1. Did you not study in a elementary school in you native place?
  2. Why did you leave your native place and move to Chennai?
  3. Did your parents live with you or were they in your native place alone?
  4. Did you not find doing your work and surviving in Chennai easier than in your village?
  5. When you go back to your village, where there might not have been any facility for proper sanitation, do you not complain about it?

  I have so many questions like this. Just that, now a days, the world has become such a small place that instead of village and cities, people travel between countries.

  Actually, I would like to have a very healthy discussion with you on this if you wish. I can be reached at +91 98948 17206 after 09:00 PM IST anyday.

  It is a misconception of a few people that we do not care about the society. Its the other way around, the Indian society is unfortuantely so corrupted that, it does not provide the required growth and quality of life for people.

  We Indians are centimental idiots (including me). No other educated developed nation has people who are so centimental without observing the facts.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner