சன் டிடிஎச்சின் போங்காட்டம்....

வீ்ட்டுக்கு வீடு சன் டைரக்ட் வீட்டுக்கு வீடு சன் டைரக்ட் என்று கண்ணி்ல் கண்டுடிக்கமுடியாத அளவுக்கு பிரச்சனையுள்ள தமன்னா சன் விளம்பரத்தில் பாடியது நாம் அறிந்ததே...

நானும் கேபிளுக்கு சரியான மாற்று என்று எண்ணி சன் டிடிஎச் சேவை வாங்கினேன் முதலில் காமெடித்திரை எங்களிடம் மட்டும்தான் இருக்கிறது வேறு யாரிடமும் இல்லை என்றார்கள்.

கொஞ்சநாளில் காமெடித்திரை தெரியவில்லை இப்போது காமெடித்திரைக்கு பணம் கட்டினால்தான் காமெடித்திரைக்கிடைக்கும் என்று காமெடி பண்ணுகிறார்கள்...


நாம் அவர்கள் டிவிக்களை அதிகம் பார்பதால் வரும் டி ஆர் பி ரேட்டிங் வைத்து விளம்பரதாரர்களிடம் காசு பார்த்து விட்டு நம்மிடமே அவர்கள் டிவியை பார்பதற்க்கு காசும் வாங்கி ச்சே அவர்களுக்கு என்ன அற்புதமான திறமை பாருங்கள்....

அவர்கள் தாத்தா நடத்தும் இசையருவி பார்க்க வேண்டும் என்றாலும் மொய் வைத்தால்தான் அதையும் பார்க்க முடியும்....

அதே போல் 500 ரீச்சார்ஜ் கார்டு வாங்கினேன் மூன்று மாதத்துக்கு 150 ரூபாய் வீதம் ரூபாய் 450க்கு ஆங்கில திரைப்படசேனல்களுக்காக அர்பனித்தேன் மிச்சம் 50 ரூபாய் எங்க சார்? என்றால் அது சேவை கட்டணமாம்.

என்னை பொருத்தவரை கேபிள் பெஸ்ட்


அவர்களிடம் என்ன பிரச்சனை என்றால்

ஹலோ நான் 3 வது தெருவுல இருந்து ஜாக்கி பேசறேன் கேபிள் வரலை...

சார் கேபிள் செக் பண்ணிக்கினு இருக்கம் சார் என்று இரண்டு நாளுக்க இழுத்து விடுவார்கள்...

முதலில் காமெடித்திரை இலவசம் என்றார்கள் இப்போது காசு என்கிறார்கள் ஆனால் அதற்க்கு பதில் அதித்யா வருகின்றது...கொஞ்ச நாளில் அதையும் பே சேனலாக மாற்றி விட்டு சேனல் கலா வரும் என்று எண்ணுகிறேன்.

கண்கள் பனித்தன இதயம் இனித்தது......


அன்புடன்/ஜாக்கிசேகர்

15 comments:

 1. இது பற்றி நான் போன அக்டோபரில் இட்ட பதிவில் இவ்வாறு எழுதினேன்.
  “புதிதாக காமெடி சேனல் வருவதாக சன் டீவி பல நாட்களாக அமர்க்களமான விளம்பரங்களை தந்து வருகிறது. ஆனால் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் அது வேண்டுமானால் சன் டைரக்ட் இணைப்பை பெற வேண்டும். ஏதோ செட் டாப் பெட்டி மாதிரி என்று வைத்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். எது எப்படியாயினும் கிட்டத்தட்ட 1000 ரூபாய் முதற்கண் செலவாகும் என அறிகிறேன். அப்புறம் மாதம் 100 ரூபாய் மொய் வேறு தனியாம். இப்போதே அதே 100 ரூபாய்கள்தான் எனது கேபிள் ஆப்பரேட்டர் பெற்று கொள்கிறார். காமெடி சேனல் நிகழ்ச்சிகளும் அதில் தற்சமயத்துக்கு வருகின்றன. வரும் 15-ஆம் தேதிக்கு பிறகு இதில் அது அவ்வாறு இலவசமாக வராது என அறியப்படுகிறது. பிறகு ஏன் இலவசமாக இப்போது தருகிறார்களாம்?

  விஷயம் என்னவென்றால், இலவசமாக நிகழ்ச்சிகளை பார்த்து அதை நாம் விரும்பி, பிறகு பணம் கொடுத்து பார்க்க வேண்டுமாம். அப்படியானால் இலவசமாக காட்டப்படும் நிகழ்ச்சிகள் தரமாக இருந்தால்தானே அவர்கள் நினைப்பது போல நடக்கும்? அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே. ஸ்க்ரீன் எகிறுவதுதான் அதிகம். அப்படியே தெரிந்தாலும் எல்லாமே பல முறை பார்த்து அலுத்த காட்சிகள்தான். சன் டீவி மட்டுமின்றி ராஜ், விஜய், ஜயா டிவி சேனல்கள் வேறு கணிசமான அளவில் நகைச்சுவை காட்சிகள் போடுகின்றன.

  மேலும் என்னைப் போன்ற கூட்டாளிகள் யூ ட்யூபுக்கு போனால் இம்மாதிரி காட்சிகள் அனேகமான அளவில் கொட்டி கிடக்கின்றன. ஆகவே முரளி மனோஹருக்கு நான் கூற விரும்புவது இதுதான். “இப்ப என்ன ஆயிடுத்துன்னு இந்த காமடி சேனலுக்காக சன் டைரக்ட் வாங்க வேண்டும்? அவர்கள் கொடுக்கும் சீன்கள் அப்படி ஒன்றும் ஆவலைத் தூண்டவில்லையே”.
  பார்க்க: http://dondu.blogspot.com/2008/10/blog-post_13.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 2. இந்த மாதிரி செய்வாங்கன்னு நெனச்சேன். செய்து விட்டார்கள். தங்கள் அறிவிப்புக்கு நன்றி. உங்களுக்கு ஒன்று தெரியுமா? இங்கே மும்பையில் நான் இருக்கும் இடத்தில கேபிள் கனெக்சன் ப்ரீ.

  ReplyDelete
 3. தம்பி ஜாக்கி,

  இவங்க என்னதான் போங்காட்டம் ஆடினாலும், நீங்க உதயசூரியனுக்குத்தான் ஓட்டு போடுவீங்க... கேட்டா, அவரு மட்டும்தான் (திறமையா) கொஞ்சமா திருடுவாரு, மத்தவங்க எல்லாம் (திறமை பத்தாததுனால) அதிகமாக திருடுவாங்கன்னு ஒரு சூப்பர் வியாக்ஞானம் சொல்லுவீங்கோ...

  கண்கள் பனிக்கத் துவங்கியிருக்கிறது. அது பொழியத் துவங்கவும் தூரம் அதிகமில்லை.

  உங்களையெல்லாம் நினைச்சா எனக்கு பாவமாயிருக்கு. தமன்னா சொன்னா படிக்காதவன் படம் பாத்துட்டு ஜாலியா இருக்கணும். அவ்வளவுதான். sun dth வாங்கினா இப்படித்தான்.

  முத்தழகு முத்தழகு படம் பிரமாதம். உங்கள் பொதுசேவை வாழ்க.

  அன்பு நித்யன்

  ReplyDelete
 4. நன்றி டோண்டு சார் தங்கள் முதல் வருகைக்கு, தங்கள் விரிவான மடலுக்கும் என் நன்றிகள்

  ReplyDelete
 5. நைனா சார் மும்பையில ஃபிரியா ? ஏன்சார் வயத்து எறிச்சல கௌப்பறிங்க

  ReplyDelete
 6. நன்றி ஆகாய மனிதன்

  ReplyDelete
 7. இவங்க என்னதான் போங்காட்டம் ஆடினாலும், நீங்க உதயசூரியனுக்குத்தான் ஓட்டு போடுவீங்க... கேட்டா, அவரு மட்டும்தான் (திறமையா) கொஞ்சமா திருடுவாரு, மத்தவங்க எல்லாம் (திறமை பத்தாததுனால) அதிகமாக திருடுவாங்கன்னு ஒரு சூப்பர் வியாக்ஞானம் சொல்லுவீங்கோ...  எப்படி தலைவரே இப்படி போட்டு தாக்கறிங்க

  ReplyDelete
 8. /
  அவர்கள் தாத்தா நடத்தும் இசையருவி பார்க்க வேண்டும் என்றாலும் மொய் வைத்தால்தான் அதையும் பார்க்க முடியும்....
  /

  எனக்கு தெரிந்து மொய் வைத்தாலும் இப்போதைக்கு இசையருவி சன் டிடிஎச்ல் வராது :((((

  ReplyDelete
 9. மங்களூரில் கேபிள் மாத சந்தா 220 அதனால் சன் டிடிஎச் பரவாயில்லை என இருந்தது. வேறு டிடிஎச் ஆப்பரேட்டர்கள் வந்தவுடன் இசையருவி கூட தராத சன் டிடிஎச் மீது எரிச்சல்தான் வருகிறது :(((

  ReplyDelete
 10. "கண்கள் பனித்தன இதயம் இனித்தது......"

  :-)))))))))))))))))))))

  Jaki Good punch

  ReplyDelete
 11. எனக்கு தெரிந்து மொய் வைத்தாலும் இப்போதைக்கு இசையருவி சன் டிடிஎச்ல் வராது :((( நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  ReplyDelete
 12. அதை விட கொடுமை, கடந்த நாலு நாட்களாக விஜய் டி வி யின் முக்கியமான நிகழ்ச்சியான airtel சூப்பர் சிங்கர் பொழுது விஜய் டி வி தெரிவதில்லை சண் dth இல்.

  டிஷ் வாங்க போகும் சக நண்பர்களே, சண் dth தவிருங்கள்.

  குப்பன்_யாஹூ

  ReplyDelete
 13. இதுவும் ஒரு வியாபாரத் தந்திரம்தான்.. ஏன் மாட்டிக் கொள்கிறீர்கள்..? கேபிளாரே வருக.. வருகன்னு சொல்லி வரவேற்றிர வேண்டியதுதானே..!

  //நித்யகுமாரன் said...
  தம்பி ஜாக்கி//

  என்ன இது அக்கிரமமா இருக்கு..?! இப்படிக்கு ஆளாளுக்கு தம்பி.. தம்பின்னு கூப்பிட ஆரம்பிச்சா.. என் நிலைமையெல்லாம் என்னாகுறது..?!

  ReplyDelete
 14. The leopard won"t change its spots.
  naai vlai yaarum nimirttha mudiyaathu.
  ulagil Tamizh naattu makkalai pola elichavaayargal engum kidaiyaathu.
  ivargal thalai etthanai thadavai mottaiaditthaalum meendum avargakidanthaan meendum mottaiyadikka thalaiyai kaattuvathu evargal rathathil ooripona onru.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner