நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது மகளிர் தினம் கொண்டாட?????

(வரதட்னை கேட்டு தொல்லை படுத்திய மாமியார் மீது புகார் கொடுக்க செல்லும் இந்திய பெண்)




கள்ளிப்பால் கொடுத்து பெண்குருத்துக்களை அழிக்கிறோம், சுக்கு காபி குடிச்ச நாய்க்கு நெஸ்காப்பி கேக்குதா? என்று கவுண்டமணி சொல்வது போல் பெண் குழந்தைக்கு படிப்பு எதற்க்கு என்று சொல்லி வளர்க்கிறோம்.

என்ன இருந்தாலும் அடுத்தவன் வீட்டுல போய் வாழுற பெண்தானே என்று பெண் பிள்ளைகளை மித மி்ஞ்சிய அலட்சியத்துடன் வளர்க்கிறோம்.

புருஷன் வீட்டுக்கு போய் எதுவுமே தெரியாது என்று சொல்லி என் மானத்தை வாங்குறதுக்கா? என்று சொல்லி வத்த கொழம்பு வைக்க கற்றுக்கொடுத்து அவளை ஒரு வேலைக்காரி மனோபாவத்துடன் வளர்க்கும் மிக பலவீனமான சமுக அமைப்பு நம்முடையது.


வீட்டில் ஆண்பிள்ளை கேட்க்கும் பொருளுக்கும் பெண்பிள்ளை கேட்கும் பொருளுக்கும் வாங்கி கொடுப்பதில் வித்தியாசம் காட்டுகிறோம்.

ஆண்பிள்ளை இரவில் இரண்டு மணிக்கு தண்ணி அடித்து விட்டு வந்து படு்த்தாலும் நாம் ஏதும்
சொல்வதில்லலை ஆஞ்சிநேயர் கோவில் போய் அரை மணி லேட் ஆனால் 3வது கடை டைலர் சொல்வதை கேட்டு தீர விசாரிக்காமல் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்போம்
( தீர விசாரித்ததில் கிளாஸ்மெட் புஷ்பாவுடன் பேசி விட்டு வந்து இருப்பது தெரியும்.)


படித்த மருமகள் மாமியார் சொல்வதில் சில விஷயங்கள் அபத்தமாக இருந்தால் அதை எதிர்க்கும் போது , அவளை வீழ்த்த மாடி வீட்டில் வாடகைக்கு குடி இருக்கும் கல்யானராமனையோ அல்லது குழந்தை பர்த் டேவுக்கு வந்து போன சிகப்பான யாராவது ஒருவருடன் கதை கட்டி அவளை மனதளவில் வீழ்த்துவது....

காசுக்காகவும் புகழுக்காவும் டூப்பீசில் நடித்த போட்டோவை லட்ஜை இல்லாமல் ரசிப்பது( என்னைத்தான் சொல்லறேன்)


அழகு இருந்தாலும் அழகு இல்லாவிட்டாலும் ஒரு பெண் இருக்கும் குடும்பமாக பெண் தேடுவது.... அப்போதுதானே மொத்த சொத்தையும் ஆட்டையை போடலாம்.

27ஹெச் பஸ்ஸில் கடுமையான கூட்ட நெருக்கத்தை பயண்படுத்திஅந்த பெண்ணின் பின்புறம் நின்று பேண்ட் ஜீப்பை அவுத்து இரண்டு முன்று பிரேக்குகளில் அந்த பெண்ணின் சுடிதார் பின்புறத்தை அசிங்க படுத்த அந்த 20 வயது வேலைக்கு போகும் பெண் அது என்ன என்று தொட்டு பார்த்து கதறிஅழுததை எப்படி மறக்க முடியும்.

( அதன் பிறகு பயணிகளால்அவன் உதடுகிழிந்ததும் ஒரு பல் ஆடிக்கொண்டு இருப்பதை பார்த்து நான் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை)

நீங்கள் ,இப்போது கூட பாருங்கள் ஷேர் ஆட்டோக்களில் நம் பெண்கள் படும் சித்தரவதையை....

இரண்டாம் நாளு, “வயுத்துல உயிர் போற வலி”, ஃபுலோவேற அதிகமா இருக்கு செத்த நீங்களே காப்பி கலந்துக்குங்க என்று சொல்லி,காபியை தனக்கும் கலந்து, மனைவிக்கும் கலந்து வரும் ஆண்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு என்பேன்.

மாப்பிள்ளை வந்துட்டார், மாப்பிள்ளை எழுந்து விட்டார் ,மாப்பிள்ளை வாய் கொப்பளித்தார் , மாப்பிள்ளை காக்கா போயிருக்கிறார் என்று ஆடும் மாமியார்கள் மாற வேண்டும். இங்கு இந்த அளவுக்கு ஏத்தி விடுவதால்தான், தன் வீட்டிலும் மனைவி அப்படி ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.
( மாமியார் ஆடியது தன் பெண்ணை கண்கலங்காமல் வைத்து கொள்ள வேண்டும் என்ற பாசம் என்பதை எத்தனை மாப்பிள்ளைகள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்)

வரதட்சனை சீர்வரிசை கொடுக்க வக்கு இல்லாதகாரணத்தால் ஜன்னல் வெறிக்கும் , இந்திய பெண்கள் பல கோடி பேர்....

கையில கேஷா ஒரு லட்சம், 25 பவுன் நகை, சீட்டி 100 பைக் வாங்கி கொடுத்தால் அந்த மாப்பிள்ளை சூத்.... அதுல உட்காராது அது பல்சர் பைக்லதான் உட்காரும், டிவி, பிரிட்ஜ்,வாஷிங் மெஷின், என்று ஆட்டையை போடுவதும், குழந்தை பிறந்ததும், தாய் வீட்டு சீர் என்று தலையை மொட்டை அடிக்கும் மனசாட்சி அற்ற மனிதர்களை மாற சொல்லுங்கள்...

பெண்ணை படிக்க வைக்கவே யோசிப்பது , நன்றாக படிக்கும் பெண்ணை பாதியில் நிறுத்தி அப்புறம் படிப்புக்கு ஏத்த மாப்பிள்ளைக்கு எங்க போறது என்று ஒரு வளரும் சமுகத்தையே நாசம் செய்வது.....


கல்சர் என்ற போற்வையில் பெண்ணை மட்டும் மட்டம்தட்டுவது, கல்சர் ஆணுக்கும் என்பதை மறந்துவிடுவது...

பிறந்ததில் இருந்து பெண்களுக்கான செலவு

எல்கேஜி டூ பத்தாம்வகுப்பவரை படிப்பு செலவு............... ஒரு லட்சம்

15வயசு லிருந்து 45 வயசுவரை நாப்கின் செலவு.............பதினெட்டாயிரம்

மேல்நிலை படிப்பு செலவு...........................................................ஒருலட்சம்

கல்லூரி செலவு (கலைக்கல்லூரி இல்லாத)........................ஆறு லட்சம்


காஸ்மெட்டிக் செலவு.....................................................................50 ஆயிரம்

நிச்சயதார்த்த செலவு.......................................................................... 2 லட்சம்

கல்யான செலவு வரதட்சனை உட்பட.........................................10 லட்சம்


ஆடி சீர் ........................................................................................................20ஆயிரம்

வலைகாப்பு செலவு..............................................................................75 ஆயிரம்


குழந்தை பிறப்பு செலவு டாக்சி செலவு உட்பட.......................1 லட்சம்

குழந்தைக்கு தாய் வீட்டு சீர்................................................................75 ஆயிரம்


மொத்தம்29 லட்சத்து 48 ஆயிரம் இவ்வளவு செலவு அப்பர் மிடிள் கிளாஸ் நிலமை. அப்புறம் நடுத்தர குடும்பம், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் நிலமையை நினைச்சு பாருங்க...

ஒரு பொம்பள புள்ளைய பெத்து வளத்து கல்யாணம்ம் பண்ணி கொடுக்க இவ்வளவு செலவு புடிச்சா,

ங்கோத்தா அன்னாடங்காட்சிங்க கள்ளிப்பால் கொடுக்கறதுல என்ன தப்புங்கறேன் ,

செங்கேனி, ராசாத்தி,லட்சுமி போன்ற பட்டிக்காட்டு ஜனங்களை நாம வேற குத்தம் சொல்லிக்கிட்டு ......


இன்பத்தை கருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதரை உருவாக்கினாள் பெண்
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண், விலையற்ற செல்வம் பெண் என்று பாடத்தான் லாயிக்கு.....


நம் சமுக அமைப்பு முற்றிலும் மாற வேண்டும். கவிஞர் வாலி காதல்தேசம் படத்தில் எழுதிய மேலுள்ள பாடல் வரிகள் நமக்கு புரியும் போது நாம் மகளீர் தினம் கொண்டாடலாம்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

37 comments:

  1. அண்ணே நீங்க எந்த வருசத்துல இருக்கீங்க அண்ணே... பத்து வருசம் பின்னாடி இருக்கீங்கன்னு நினைக்கிறேன்... நீங்கள் எழுதிய பல விசயங்கள் 10 வருசத்துக்கு முன்னாடி தான் இருந்திச்சின்னு நினைக்கிறேன்....... இப்ப உள்ள ஜெனரேசன்ல ரொம்ப குறைவு அண்ணே..... இப்ப நல்லாத்தன் இருக்காங்கோ

    ReplyDelete
  2. முத்தழகு படம் சூப்பர் அண்ணே........ கலைக்கண்ணோடுதான் பாத்தேன்

    ReplyDelete
  3. உங்கள் கோபம்.... ஆராத காயங்களைப் போல இருக்கின்றன...

    ஒரு சகோதரனாய் தந்தையாய் இருந்து கோபப்படும் ஆண்கள் அனைவரும்... மாப்பிள்ளை என்ற வேசம் கிடைத்ததும்... வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதையா.... எப்படித்தான் அப்படி மொத்தமா மாறிடுறாங்கனு தெரியல...

    ஆண்கள் மட்டுமல்ல... காரணம் என்பதையும் சிறிது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்...

    மாமியாராகும் போது... மருமகளாய் தவித்திருந்த பெண்ணின் குணம் எப்படி மாறிப்போகிறது என்பது இன்னும் விளங்காத புதிர் தான்...

    ReplyDelete
  4. அண்ணே அதெல்லாம் இருக்கட்டும்,

    உங்க எழுத்துக்கு எடையில அந்தப் பொண்னோட போட்டோவை மூணு தடவை பயன்படுத்தி இருக்கீங்க?

    அந்தப் பொண்ணுக்குத்தான் கோவம், உங்களுக்கு என்ன காமமா?

    போட்டோவை தூக்குயா!

    ReplyDelete
  5. அய்யா நீங்கள் எழுதியிருப்பது கடந்த கால கதைகள்
    இப்போது ஆண்கள் பெண்களிடம் மாட்டிக்கொண்டு படும் நரக வேதனைகளை கேட்க
    கண்களில் ரத்தம்கசிகின்றது(நடிகர் பிரசாந்த் கல்யாணம் பண்ணி கிட்டு கோர்ட் படி ஏறி ஏறி ஏறங்கியது)
    நீங்கள் எழுதியுள்ள மேட்டர் ஹரியானா,ராஜஸ்தான், ஆந்திரா,போன்ற வட மாநிலங்களில் வேண்டுமானால் நடக்கலாம்
    இங்கு டாப் கிழிந்துவிடும்
    பெண்களுக்காக வன் கொடுமை சட்டம் வந்துவிட்டது. அதனை தவறாக பெண்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று சமீபத்தில் விஜய் தொலைகாட்சியில் விவாதமே நடந்தது உங்களுக்கு தெரியாதா?
    தற்ப்போது பெண்கள் எவ்வளவோ முன்னேறிவிட்டார்கள்
    ஆண்களைவிட அதிகம் சம்பாதிப்பதால் எத்தனையோ ஆண்களுக்கு திருமணம் ஆகாமல் தவித்து கொண்டிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியாது போலும்.
    கரிசல் காட்டு கதைகள் ஏதோ சில மாவட்டங்களில் இருக்கலாம். அதுகூட ஜாதி கொடுமையினால்தான் நடக்கிறது.
    படித்தவர்களின் மத்தியில் பெண்களும் ஆண்களும் சரிசமமாக போகும் போக்கு வந்துவிட்டது
    கள்ளிப்பால் கொடுப்பது போன்றவைகள். கூலி வேலைக்கு போகும் படிக்காத மக்கள் மத்தியில்தான் இருக்கிறது.
    பெண்களும் ஆண்களும் சேர்ந்து கூத்தடிக்கும் காட்சியை அநேகமா எல்லா தொலைகாட்சியிலும் பார்க்கலாம். அவைகளையெல்லாம் அய்யா பார்க்கவில்லை போல் தெரிகிறது.
    எனவே அவர்கள் மகளிர் தினம் கொண்டாடுவதை யாரும்தடுக்கமுடியாது
    எனவே வாழ்த்து சொல்லி வையுங்கள்.எதற்காகவாவது உதவியாக இருக்கும்.
    நீங்கள் கூறுவதுபோல் பெண்கள் சில இடங்களில் கொடுமைபடுத்த படுவதற்கு முக்கிய காரணகர்த்தா பெண்களாகத்தான் இருக்கும்.
    ஆண்கள் பெரும்பாலும் வாயில்லா பூச்சிகள் என்பது அனைவருக்கும் (பெண்களுக்கும்) தெரிந்ததே.

    ReplyDelete
  6. அத்திரி,நாம் சென்னையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றத்தை வைத்து நீங்கள் சொல்கிறீர்கள்... சேன்னை மட்டுமே தமிழ்நாடு அல்ல என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  7. கலைக்கண்ணோடு முத்தழகு படத்தை பார்த்ததுக்க நன்றி

    ReplyDelete
  8. ஒரு சகோதரனாய் தந்தையாய் இருந்து கோபப்படும் ஆண்கள் அனைவரும்... மாப்பிள்ளை என்ற வேசம் கிடைத்ததும்... வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதையா.... எப்படித்தான் அப்படி மொத்தமா மாறிடுறாங்கனு தெரியல...//



    எனக்கும் தெரியலை ராஜேந்திரன்...

    ReplyDelete
  9. ஆண்கள் மட்டுமல்ல... காரணம் என்பதையும் சிறிது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்...

    மாமியாராகும் போது... மருமகளாய் தவித்திருந்த பெண்ணின் குணம் எப்படி மாறிப்போகிறது என்பது இன்னும் விளங்காத புதிர் தான்...//



    உண்மைதான் என் எழுத்தின் அடிநாதத்தை நீங்களாவது புரிந்து கொண்டீர்களே அது போதும் எனக்கு....

    ReplyDelete
  10. நாம் சென்னையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றத்தை வைத்து நீங்கள் சொல்கிறீர்கள்... சேன்னை மட்டுமே தமிழ்நாடு அல்ல என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்//

    என்பார்வை நீங்கள் சொல்வது உண்மைதான் நான் ஏற்றுக்கொள்கிறேன்..

    நாம் சென்னையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றத்தை வைத்து நீங்கள் சொல்கிறீர்கள்... சேன்னை மட்டுமே தமிழ்நாடு அல்ல என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  11. முறு உங்கள் கேள்வி எனக்க சிரிப்பை வர வழிக்கின்றது

    ReplyDelete
  12. //jackiesekar said...
    அத்திரி,நாம் சென்னையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றத்தை வைத்து நீங்கள் சொல்கிறீர்கள்... சேன்னை மட்டுமே தமிழ்நாடு அல்ல என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்//

    நீங்க சொன்ன மாற்றம் சென்னையில மட்டும் இல்லை .... நம்ம தமிழ்நாட்டுல சின்ன டவுன்ல கூட மாற்றம் இருக்கு அண்ணே அதைத்தான் சொன்னேம்ண்ணே.........

    ReplyDelete
  13. அத்திரி சார் நீங்க சொல்லறது எனக்கு புரியாம இல்லை,ஆனா இப்பவும் நீங்க பத்து பர்சென்ட் வளர்ச்சியை பற்றி மட்டும்தான் சொல்லறிங்க...ஆனா, இன்னமும் 90 ப்ர்சென்ட் பேரை பத்தி நீங்க யாரும் கவலை பட்டதா தெரியலை...

    நான் கவலைபடறது அந்த 90 பர்சென்ட் பேருக்காகதான்

    ReplyDelete
  14. உங்களுக்கு கல்யாணம் ஆகியும் பெண்களுக்கு விடுதலை வேணும்னு சொல்றது புரியல அண்ணே..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  15. நீங்க கவலை படுவதெல்லாம் நல்லா தெரியுது... நீங்க நல்லதே நினைச்சு போட்டிருந்தாலும் சரி (?) அங்கங்கு நீங்கள் எதிர்ப்பதற்கு மாறாக வெளியிடப்பட்டுள்ள படங்களையும் நீக்கி விடுவது.. உங்கள் கருத்திற்கு மரியாதை தரும் என்பது என் கருத்து...

    எல்லாத்துக்கும் விளம்பரம் தேவைதான்... கவனத்தை ஈர்க்க வேண்டியது உங்கள் கடமைதான் உங்கள் கருத்துக்களை எடுத்து செல்வதற்காக... ஆனால் கையாளும் முறைகள் அடிநாதத்தையை (கழுத்தறுத்து) அடக்கம் செய்வதை போல் இருந்தால்..

    உங்களது...கருத்தை பற்றி பெருமையாக என் சகோதிரியிடமோ தோழியிடமோ... பேசத்தான் முடியும்... அவரை இங்கு வந்து படிக்க சொல்ல முடியுமா?

    சிறிது சிந்திக்கவும்...

    (பெயர சொல்லாட்டியும் பரவாயில்லை... மாற்றி சொல்லவேண்டாமே!)

    ReplyDelete
  16. லூசாப்பா நீ? என் (ஆண்) திருமணத்திற்கு 100 பவுன், காரு எல்லாம் கேக்குது ஒரு ஆளு.(காதலிச்ச குத்தத்துக்கு). நானும் சேர்க்குறன். முடியல. காலம் மாறிப் போச்சுதுப்பா..

    ReplyDelete
  17. சென்னையை பார்த்து தொன்னைகளும் மாறிக்கொண்டு வருகின்றன
    விசுவின் அரட்டை அரங்கத்தில மாவட்டம்தோறும் பொங்கி எழும் பெண்களின் உணர்ச்சி பேச்சுக்களும், தொலைகாட்சிகளில் மகளிருக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் போன்றவை பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.
    ஆனால் ஆண்கள்தான் பெண்களுக்காக குரல் கொடுகின்றனர்
    .முதலில் பாரதி மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்றான்.
    ஆனால் சில மாமியார்களும், மாப்பிள்ளைகளும், நாங்கள் மடமையை கொளுத்தமாட்டோம். அந்த மருமகளையே கொளுத்துவோம் என்று கங்கணம் கட்டி கொண்டு பல ஈன பிறவிகள் வாழ்ந்துகொண்டுதான் இருகின்றன. அவர்களை யார் திருத்துவது?
    அசிங்கமாக உடை உடுத்துவதும், ஆபாசமாக திரைப்படங்களில் கூதடிப்பதும் பெண்கள்தானே ஒழிய ஆண்கள் இல்லை.
    கவர்ச்சிக்கும் காசிற்க்கும், புகழுக்கும் அடிமையாகும் பெண்களால்தான் பெண்கள் சமுதாயமே தன்னை சுலபமாக அடிமைபடுத்திகொண்டு விடுகிறது.
    அழகி போட்டிகள், பொது விடுதிகளுக்கு சென்று, குடிப்பது, நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, ஆண்களுடன் சுற்றுவது போன்ற ஆபத்தான செயல்களை செய்து விட்டு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் மட்டும் உடனே தங்கள் சுதந்திரம் போய்விட்டதாக மாதர் சங்க அமைப்புக்களுடன் சேர்ந்துகொண்டு கூக்குரலிடுவது.
    பெண்கள் பெண்களாக இருந்தால் மட்டுமே அவர்கள் பாதுகாக்க படுவார்கள்
    மேலை நாடுகளைபோல் அவர்களும் ஆணுக்கு சமமாக நாங்கள் கூத்தடிக்க தயார் என்றால் அவர்களை அவர்களே காப்பாற்றி கொள்ள வழி வகைகளை தேடிக்கொள்ளவேண்டும்.
    சமுதாயத்தில் நடக்கும் முறைகேடுகள் அனைத்திற்கும் தொலைகாட்சிகளில்/திரைபடங்களில் காட்டப்படும் பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் தான் காரணம்.
    அது இல்லை என்று சினிமாவை நம்பி பிழைப்பவர்கள் கூறும் நொன்டி சாக்கு ஏற்றுக்கொள்ளமுடியாது.
    நம் நாட்டு பண்பாடு கடைப்பிடிக்கபட வேண்டும்
    ஏதோ ஒரு சில தற்காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கலாம்.
    அதற்காக அனைத்தையுமே சரி இல்லை என்று ஒதுக்கி தள்ளி
    மேனாட்ட்டு கலாசாரத்தை கைகொள்ளுவது
    கொள்ளி கட்டையை எடுத்து தலையை சொறிவதற்கு ஒப்பாகும்.
    அந்நிய ஆண்களுடன் பெண்கள் சகஜமாக் பேசுவதும்,ஊர் சுற்றுவதும்,
    உறவு கொள்வதும், பிரிவதும்,ஆண் துணையின்றி வாழ்க்கை நடத்துவதும் திரைப்படங்களுக்கும், பட்டிமன்றங்களில் விவாதிப்பதற்கும்
    வேண்டுமானால் சுவையாக இருக்கலாம்.
    ஆனால் பெண்கள் என்னதான் நாகரீகமாக உடை உடுத்தாலும், கல்வி கற்றாலும் வேலைக்கு போய் பணம் சம்பாதித்தாலும்,
    பாதிப்பு தங்களுக்கு என்று வரும்போது அனைத்தும் அடிபட்டு போய்விடுகின்றன என்பது வெளிப்படை.
    அடிமைதனத்திர்க்கும், அன்பிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளாத வரை இந்த முரண்பாடுகள் தொடரும்.
    புரிந்துகொண்டு விட்டு கொடுக்கும் குணம் இல்லாத வரைக்கும் அகந்தை குணம் எல்லோரையும் ஆட்டிதான் படைக்கும்.

    ReplyDelete
  18. எனதருமை நண்பருக்கு,

    இதுபோல் ஒரு பக்கம் நடந்தாலூம் சில கெடுமதிபெண்கள் படுத்தும் பாட்டையும் நீங்கள் அறியவேண்டும் என்பது என் விருப்பம்
    என் வலைபூ பக்கத்திர்க்கு சென்று பார்வையிடவேண்டுகின்றேன்

    http://tamizhsaran-antidowry.blogspot.com

    ReplyDelete
  19. உங்கள் கோபம் நியாயமானது தான்!
    முதலில் வரதட்சணை என்பதௌ அடியோடு ஒழிக்கவேண்டும்.

    அதை கொடுப்பதும் தவறு, வாங்குவதும் தவறு!

    ReplyDelete
  20. வர தட்சணையை வாங்குவது /கொடுப்பது குற்றம்
    இது எப்படி இருக்கு?
    பொது இடங்களில் புகைப்பதுகுற்றம்
    இந்த இடத்தில் எச்சில் துப்பாதே/குப்பைகளை போடாதே/சிறுநீர்கழிக்காதே
    குடித்துவிட்டு வாகனங்களை ஒட்டாதே
    போன்ற அறிவிப்புகளை போன்றதுதான் இதுவும்
    கண்ணதாசன் எழுதினான் ஒரு பாடல
    தந்தை தவறு செய்தான், தாயும் இடம் கொடுத்தாள்
    வந்து பிறந்து விட்டோம்,பந்தம் வளர்த்துவிட்டோம்.

    அப்பன் வாங்கினான் வரதட்சினை மாமனாரிடம்
    அவர் மகளை தாயாக்க
    இப்போது இருவரும் அதையேதான் செய்கின்றார்கள்
    தங்கள் மகனுக்காக /மகளுக்காக.
    இதில் சாதி இல்லை/மதமுமில்லை/உயர்ந்தோர் இல்லை/தாழ்ந்தோர் இல்லை /ஏழை இல்லை/பணக்காரன் இல்லை
    இருக்கிறவன் இஷ்டப்பட்டு கொடுக்கிறான்
    இல்லாதவன் பரிதவிக்கிறான். அதுமட்டும் விவாதிக்கப்படும் செய்தியாகிறது.
    மற்றவைகள் அடுத்த நாள் வெளியபடும் செய்தியில் மறைந்துபோகிறது.
    முந்திய செய்தியும் அப்படியே.

    ReplyDelete
  21. அண்ணே..

    டோட்டல் சரண்டராயிர்றேன்..

    நீங்க எழுதின எழுத்துக்களுக்கு(மட்டும்) ஒரு ரிப்பீட்டு கொடுத்துக்குறேன்..

    அப்படியே அப்பீட்டு ஆகிக்கிறேன்..

    ReplyDelete
  22. முதலில் பெயரை தவறாக சொன்னதற்க்கு மன்னிக்கவும் மகேந்திரன், படத்தை பற்றி சொல்கிறேன். கவரவேண்டும்இ பிறர் பாராட்ட வேண்டும் என்று எழுதுகின்றோம்... அதற்க்காக இந்த மாதிரி படம் போட வேண்டிய அவசியம் இல்லை, அதே போல் நெட்டில் நிறைய படங்கள் இருக்கினற்ன,
    ஒர படத்தின் ஆபாசத்தை பெரும்பாலும் அதக் பின்புலம் தீர்மானிக்கின்றன என்பேன். அதே பெண் அந்த கோலத்தோடு ஒரு பாம்ரூமில் இருப்பது போல் இருந்தால் அது ஆபாசம், அந்த பெண்ணின் கண்ணில் தெரியும் கோபத்தை பாருங்கள் அது ஆபாசத்தை உங்களுக்கு அறிவிக்காது என்பது என் எண்ணம்

    ReplyDelete
  23. அத்திரி திருமணம் நடந்த பின்பு பெண்கள் மேல் இன்னும் மதிப்பு அதிகரித்து இருக்கிறது

    ReplyDelete
  24. அப்பன் வாங்கினான் வரதட்சினை மாமனாரிடம்
    அவர் மகளை தாயாக்க
    இப்போது இருவரும் அதையேதான் செய்கின்றார்கள்
    தங்கள் மகனுக்காக /மகளுக்காக.
    இதில் சாதி இல்லை/மதமுமில்லை/உயர்ந்தோர் இல்லை/தாழ்ந்தோர் இல்லை /ஏழை இல்லை/பணக்காரன் இல்லை
    இருக்கிறவன் இஷ்டப்பட்டு கொடுக்கிறான்
    இல்லாதவன் பரிதவிக்கிறான். அதுமட்டும் விவாதிக்கப்படும் செய்தியாகிறது.
    மற்றவைகள் அடுத்த நாள் வெளியபடும் செய்தியில் மறைந்துபோகிறது.
    முந்திய செய்தியும் அப்படியே.//

    என் பார்வையில் உங்கள் கருத்து ஏற்புடையதே....

    ReplyDelete
  25. வரதட்சனையை ஒழித்தாலே பாதி பெண்கள் நலம் பெருவார்கள் வால்பையன் உங்கள் கருத்துக்கு நன்றி வால்பையன்...

    ReplyDelete
  26. அண்ணே..

    டோட்டல் சரண்டராயிர்றேன்..

    நீங்க எழுதின எழுத்துக்களுக்கு(மட்டும்) ஒரு ரிப்பீட்டு கொடுத்துக்குறேன்..//


    நன்றி தமிழா, தங்கள் வருகைக்கு

    ReplyDelete
  27. நம் நாட்டு பண்பாடு கடைப்பிடிக்கபட வேண்டும்
    ஏதோ ஒரு சில தற்காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கலாம்.
    அதற்காக அனைத்தையுமே சரி இல்லை என்று ஒதுக்கி தள்ளி
    மேனாட்ட்டு கலாசாரத்தை கைகொள்ளுவது
    கொள்ளி கட்டையை எடுத்து தலையை சொறிவதற்கு ஒப்பாகும்.//

    நுற்றுக்கு 100 உன்மையான வரிகள் என் பார்வையில்

    ReplyDelete
  28. லூசாப்பா நீ? என் (ஆண்) திருமணத்திற்கு 100 பவுன், காரு எல்லாம் கேக்குது ஒரு ஆளு.(காதலிச்ச குத்தத்துக்கு). நானும் சேர்க்குறன். முடியல. காலம் மாறிப் போச்சுதுப்பா..//


    நானும் சேர்க்கிறேன் முடியலை...
    வேதனை புரிகிறது,

    கொடுப்பதை தடுக்கவேண்டாம் கட்டாய படுத்தாதீர்

    ReplyDelete
  29. இதுபோல் ஒரு பக்கம் நடந்தாலூம் சில கெடுமதிபெண்கள் படுத்தும் பாட்டையும் நீங்கள் அறியவேண்டும் என்பது என் விருப்பம்
    என் வலைபூ பக்கத்திர்க்கு சென்று பார்வையிடவேண்டுகின்றேன்

    http://tamizhsaran-antidowry.blogspot.com//


    உங்கள் பக்கம் சென்று கதை அறிந்தேன் வருத்தம் கொள்கிறேன்....

    பாதிக்கப்பட்டட ஆண்கள் பத்து பர்சென்ட் என்றால் பெண்கள் 90 பர்சென்ட்

    ReplyDelete
  30. அண்ணே மிக அருமையான பதிவு. பின்னூட்டங்களும் மிக அருமை.

    ReplyDelete
  31. நன்றி மங்களுர் சிவா

    ReplyDelete
  32. பெண்ணை பெத்தவனே
    உன் மகள் புகுந்த வீட்டில்
    மகிழ்ச்சியாக மாளிகையில் வாழ
    நீ மளிகை கடை முதல் மார்வாடி கடை வரை
    கடன் வாங்கி மாய்ந்து போக வேண்டுமா?
    வேண்டாம் அய்யா இந்த விஷ பரிசோதனை
    கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்ததைபோல்
    பெண் பார்க்கும் படலம் முடித்தவுடனே தெரிந்துவிடும்
    பெண்ணை பார்த்தவர்கள் பணம் தின்னி பேய்களா
    அல்லது உன் மகளை தன் மகள் போல் எண்ணி
    காப்பார்களா என்று
    எச்சரிக்கையாய் இல்லாவிட்டால் அழிந்தது
    உன் மகளின் வாழ்வும் உன் வாழ்வோடு சேர்ந்து
    பெண்ணே உனக்கு அழகு இருக்கலாம், அறிவு இருக்கலாம்
    ஆனால் உன் தகுதிக்கு மீறி இடத்தை நாடினால்
    அது உன் வாழ்விற்கு நீயே வைத்து கொள்ளும் வேட்டு
    பகட்டு என்றைக்குமே திகட்டி போகும்
    அளவிற்குமேல் உண்ணப்படும் இனிப்பு போல
    அன்புள்ளம் கொண்டவரால்தான் உன் வாழ்க்கையில்
    வசந்தம் வீசும்.
    ஆடம்பர பொருட்களோ ஆடம்பர வாழ்க்கையோ அல்ல என்பதை
    உணர்ந்துகொள்.

    ReplyDelete
  33. very intresting writeup and very intresting comments and arguments. i just feltback myself..

    Thanking you,

    ReplyDelete
  34. நன்றி தனிகை தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  35. As my husband's instruction, i have read ur blog. It's very intresting and i agree with all ur statements about women's difficulties. very fine. But i also disagree with the photos u were repeated in three places and i read all the comments and i read ur answers regarding this, ok. Actually what i feel is u can place that photo in anyone place, u can place any other photos regarding the topics which u have discussed. This what I felt, ok .Keep going sir..

    By
    Mrs.Latha Thanigaivel

    ReplyDelete
  36. நன்றி திருமதி தனிகை தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்...


    அந்த போட்டோ என் பார்வையில் ஒரு குடும்ப பெண்ணை இந்த சமுகம் எப்படி எல்லாம் அலைகழிம்மு இருக்கிறத என்பதை உணர்த்தவே அந்த படம் வெவ்வேறு கோணங்களில் கிடைத்ததை பயண் படுத்தினேன்...

    நீங்கள் கவனித்துப்பார்த்தால் எல்லா படங்களிலும் வெவ்வேறு மனிதர்கள் ஆனால் ஒருவர் கூட அந்த பெண்ணின் மானத்தை தன் சட்டை தந்து காக்கவில்லை....


    உங்கள் கருத்து அந்த போட்டோவை ஒரு இடத்தில் போட்டு இருக்கலாம் என்பது...

    எனது முக்கியத்துவம்நான் எழுதிய வரிகளில்தான்.. போட்டேவை நீ்ங்கள் சொல்வது போல் யோசிக்க வில்லை...


    குமுதமும் ஆனந்த விகடனும் இந்த முன்று படங்களையும் பயண்படுத்தின.. அவர்கள் விற்பனைக்கு போட்டார்கள் என்று வைத்துக்கொள்ளலாம்..

    எனக்கு இந்த எழுத்தால் என்ன பயன்.. இது ஆத்ம திருப்திக்கு எழுதுவது...

    இந்த படத்தை பார்த்து நான் காம சுகம் அடைவதாக யாரேனும் நினைத்தால் வலைதளத்தில் இதை விட அழகான உரிச்ச கோழிகளின் படங்கள் நிறையவே இருக்கின்றன என்பது எனது தாழ்மையான கருத்து...

    நன்றி
    ஜாக்கிசேகர்

    ReplyDelete
  37. காமம் என்பது அணைக்க முடியாத தீ போன்றது
    அதிலும் பெண் மீது ஆணுக்கும் ஆண் மீது பெண்ணுக்கும் இருக்கும் ஈர்ப்பு இயற்கையாக இருந்தாலும் அதை உணர்ந்துகொண்ட பின் அதிலிருந்து மனித மனம் மீள்வது அரிது.
    இதைதான் புராணத்தில் வரும் யயாதி மன்னனின் கதை உணர்த்துகிறது. தனக்கு வயதானபின்பும் காம உணர்ச்சியை அடக்க முடியாமல் தன் மகனின் இளமையை பெற்றுக்கொண்டு தன் முதுமையை அவனுக்கு அளித்துவிட்டு இன்பத்தில் ஈடுபடுகிறான்.பிறகுதான் அவன் உணர்கிறான் இந்த காமசுகம் அனுபவிக்க அனுபவிக்க மென்மேலும் வளர்ந்துகொண்டே போகும் தீ என்பதை உணர்ந்து தன் மகனிடம் இளமையை திரும்ப அளித்துவிட்டு தன் முதுமையை மீண்டும் பெற்றுக்கொண்டு அனைத்தையும் துறந்துவிட்டு வனத்திற்கு சென்று தவத்தில் ஈடுபட்டு ஞானத்தை பெறுகிறான்.
    ஒரு குழந்தை பெண்ணை தாயாக பார்க்கிறது
    ஆனால் ஒரு பருவமடைந்த ஆணோ ஒருபெண்ணை தனக்கு இன்பம் தருபவளாக பார்க்கிறான்.
    அனைத்தையும் துறந்து ஞானம் பெற்ற ஞானிகள் ஆணென்றும்,பெண்ணென்றும் பார்ப்பதில்லை அவர்களை ஆத்மாவாக பார்க்கிறார்கள்.
    அதாவது அவர்கள் தரித்திருக்கும் வடிவங்களை கருத்தில் கொண்டு பார்ப்பதில்லை.
    அந்த உயர்ந்த நிலையை நாம் அடையும் வரை இந்த வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.
    எனவே இவைகளை எல்லாம்பார்க்கும் எண்ணம் இருந்தால் பார்த்து ரசித்துவிட்டு போவதுதான் சரி.
    கோயில் கோபுரங்களில்,தேரின் அடித்தட்டில் ஆணும் பெண்ணும் இணைந்த சிலைகளை காண்கிறோம், ஆபாசம் என்று நினைக்கிறோமா?
    ஏனென்றால் நாம் அவைகளை பார்க்க அங்கு போவதில்லை
    நம்முடைய மனம் கோயிலுக்குள் வீற்றிருக்கும் அல்லது
    தேரின் மீது பவனி வரும்இறை உருவத்தின் மீது இருப்பதுதான் காரணம்
    பிடிக்கவில்லைஎன்றால் அடுத்த செய்திக்கு தாவுதல் நலம்.
    அவரவர் தளத்தில் அவர்களுக்கு பிடித்த செய்திகளை,தகவல்களை,படங்களை வெளியிடுகிறார்கள். அவ்வளவுதான்.
    அதனால் தான் கண்ணதாசன் ஒரு பாடலில் எழுதினான்.
    உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
    உனக்கு நீதான் நீதிபதி
    மனிதன் எதையோ பேசட்டுமே
    உன் மனத்தை பாத்துக்க நல்லபடி.
    நம் மனதை நல்லபடி பார்த்துக்கொள்வது நம் கையில் தான் உள்ளது.
    அதில் பிறர் தலையிட அனுமதிப்பது நமக்கு நாமே தொல்லைகளை வரவழைத்துக்கொள்வது..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner