எனது 150வது பதிவு....பதிவர்களுக்கு உளமாற நன்றி தெரிவிக்கின்றேன்


மிக விளையாட்டாய் எழுத ஆரம்பித்த விஷயம் இப்போது 150 வது பதிவாக வந்து நிற்க்கின்றது..,எனது 100வது பதிவிலேயே நான் என் நன்றிகளை தெரிவித்து விட்டேன் இருப்பினும் தொடர்ந்து நன்றி சொல்வதில் தவறில்லை, ஏனென்றால் பதிவர்களின் ஊக்கமும் ஒத்துழைப்பும் இல்லை என்றால் இந்த 150வது பதிவு இல்லை...

முதலாவது எனது மனைவிக்கு....

பிளாக் என்பது போதையான விஷயம் என்பது எனது முப்பதாவது பதிவின் போது புரிந்து போய்விட்டது. மனைவியோடு பேசாமல் அத்தியாவசியப் பொருள் வாங்காமல் கம்யுட்டர் முன் தவம் கிடந்த பொழுதுகள் நிறைய.... அதை பொருத்துக்கொண்டு அந்த போதையில் இருந்து என்னை அன்பாய் எழுப்பியவள்.. இப்போது முன்பு போல் அவசரம் இல்லாமல் ஒரு மலைபாம்பின் நகர்தலின் பொறுமையோடு பிளாக்கில் நான் உங்களோடு தொடர்பு கொள்கிறேன்.... அதற்க்கு என் மனைவிக்கு நன்றிகள்...

என் எழுத்தின் முதல் ரசிகை அவள்தான் அவள் கொடுத்த ஊக்கம்தான் எல்லாம்...(இப்படி எழுதறதுதான் நல்லது அப்பதான் சோறு கிடைக்கும்)இரண்டாவது பதிவர் நித்யகுமாரனுக்கு

முதன் முதலில் பிளாக் எனும் விஷயத்தை அறிமுகப்டுத்தியதே நண்பர் (பதிவர்) நித்யகுமாரன்தான். எனக்கு ஆங்கிலமே அரைகுறை தமிழ் தத்துக்குத்தல்ஆனால் விட முயற்ச்சியால் கொஞ்சம் வேகம் அடிக்க கற்றுக்கொண்டேன்.... அதுவுஙம தப்பும் தவறுமாக , அப்படி அடித்து 150 எனும் போதுதான் எனக்கு ஆச்சர்யம் அளிக்கின்றது... நித்யா பிளாக்கை அறிமுகப்படுத்தியது அரை மணிநேரம்தான். ஆனால் அதனை நோண்டி நொங்கு எடுத்ததை இப்போது நினைத்தாலும் வியப்பாக உள்ளது, அதே போல் அவரை பல நேரங்களில் தொடர்பு கொண்டு இம்சை கொடுத்தது இப்போதும் என் நினைவு அடுக்குகளில்..... என் அரசியல் நிலைப்பாடும் நித்யாவின் அரசியல் கண்ணோட்டமும் வெவ்வேறானது....


முன்றாவது,
பதிவர் அதிஷா பிளாக்கில் நான் அப்போதுதான் மெல்ல அனைவருக்கும் அறிமுகமாகி கொண்டு இருக்கும் நேரம்... என் திருமணம் நடைபெற்றது, வலைபதிவர் வட்டத்துக்குஎன் திருமணதகவலை கொண்டு சேர்த்த ஜீவன்...


நான்காவதாக

உண்மைத்தமிழன்.... இப்போதும் தொடர்ந்து கைபேசியில் உறவாடும் பதிவு நண்பர். எல்லாத்துக்கும் மேலாக முரண்பட்ட கருத்துக்கள் இருவருக்கும். ஆனாலும் நல்ல நண்பர்.
கருத்து என்பது வேறு நட்பு என்பது வேறு என்பதை புரிய வைத்தவர்...


ஐந்தாவதாக

அக்னிப்பார்வை மறக்க முடியாத நபர். திடிர் என்று உலகப்படவிழாவில் நீங்க ஜாக்கிதானே? என்று அறிமுகப்படுத்திக்கொண்டவர், இப்போதும் எனது வலைதள சந்தேகங்களை தீர்த்து வைப்பவர்கள் இவரும் உண்மைத்தமிழனும்தான்...

ஆறாவதாக,
பதிவர்கள், மங்களுர் சிவா,அமெரிக்கா ராம்,
நட்டு போல்டு, வண்ணத்தூபூச்சியார்,கேபிள்சங்கர், லக்கிலுக்,முரளிக்கண்ணன்,நர்சிம் போண்றவர்கள் நேரில் பார்த்தாலும் அன்பு பாராட்டுபவர்கள்


ஏழாவதாக எனக்கு தொடர்ந்து பின்னுட்டம் அளிப்பவர்கள்

வெண்பூ, என்பார்வையில், அத்திரி , வால்பையன், குப்பன் யாஹூ, கருவெளி ராச.மகேந்திரன்( பேர் மாத்தலை சந்தோஷமா?) புதுவை சிவா, நையான்டி நைனா, வந்திய தேவன், தன்டோரா, நித்யகுமாரன், மதுவதனன்மௌ,புகளினி,கோவிக்கண்ணன்,சரவணகுமரன்,அக்னி பார்வை உண்மைத்மிழன் போன்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல...


எழாவதாக
என் எழுத்தை தொடர்ந்து முகம் சுளிக்காமல் வாசிப்பவர்கள் சங்கரராம், லோயர்,தேனியார், திரட்டி டாட்காம். மதுவதனன்மௌ, திலிப் இன் பதிவு, புகளினி,நித்யகுமாரன், குண்டுமாமா, சென், வெண்பூ, மங்களுர் சிவா, வால்பையன், குடுகுடுப்பை, நட்புடன் ஜமால், தன்டோரா, கோவிக்கண்ணன்,இவின் கோபி, அமு செய்து, உண்மைத்தமிழன், வண்ணத்து பூச்சியார், வழிப்போக்கன் சந்துரு, கருவெளி ராச.மகேந்திரன், சரவணகுமரன்,அப்பாவிதமிழன்,ரமேஷ்,தமிழர் நேசன் , அக்னி பார்வை, போன்ற எனக்கு தொடர்ந்து தோள் கொடுக்கும் தோழர்களுகளுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் பல...
எட்டாவதாக
எனக்கு தொடர்ந்து பின்னுட்டம் அளிப்பவர்கள்

வெண்பூ, என்பார்வையில், அத்திரி , வால்பையன், குப்பன் யாஹூ, கருவெளி ராச.மகேந்திரன்( பேர் மாத்தலை சந்தோஷமா?) புதுவை சிவா, நையான்டி நைனா, வந்திய தேவன், தன்டோரா, நித்யகுமாரன், மதுவதனன்மௌபுகளினிகோவிக்கண்ணன்சரவணகுமரன்அக்னி பார்வை உண்மைத்மிழன் போன்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல...100 வது பதிவுக்கு நன்றி தெரிவித்து நான் எழுதிய பதிவுக்கு என்னை பற்றி ஒரு பெரிய பதிவே போட்டு பகிங்கர கடிதம் எழுதிய பதிவர் நித்யாவின் பதிவு அப்படியே உங்கள் பார்வைக்கு,


100 பதிவு கண்ட அபூர்வ சிகாமணி அண்ணன் ஜாக்கி அவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்


ஜாக்கி சேகர் ஐயா சமூகத்திற்கு,

வந்தனங்கள். 100 பதிவு என்னும் இமாலய சாதனை புரிந்த களைப்பில் உங்கள் வாழ்க்கையில் வந்துபோன அனைவருக்கும் (பேனாவில் இங்க் ஊற்றித்தந்த பானு அக்காவையும், “காக்கா கடி” கடித்து கடலை மிட்டாய் தந்த சுரேஷையும் தாங்கள் விட்டு விட்டதற்கு என் கண்டணங்கள்) நெடுஞ்சாண்கிடையாக உருண்டு உருண்டு நீங்கள் நன்றி சொன்ன விதம் மிகவும் மெச்சத்தக்கது. இந்த பண்பினை நீங்கள் பாலகுமாரனிடமிருந்து தருவித்துக் கொண்டிருக்கலாம் என்று எண்ணுமளவிற்கு உங்களின் நன்றி கூறலின் விசுவாசம் உங்கள் பதிவெங்கும் மணக்கிறது.

பொதுவாக எண்ணிக்கையில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லை என்று சொன்னால் அது பொய். எண்ணிக்கைகள் தான் நாம் கடந்து வந்த தூரம் குறித்து நமக்கு அடிக்கடி உணர்த்துபவை. 100 என்ற எண்ணம் மிகவும் முக்கியமானது. அந்த எண்ணிக்கையை விட என்னை மிகவும் கவர்ந்த விடயம் என்னவென்றால் உங்களின் பதிவுகளில் காணப்படும் variety தான். அந்த பல்பொருள்தன்மை என்னை வெகுவாகவே கவர்ந்தது.

நீங்கள் அநியாயமாக சாகடித்த அந்த பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளன் அவ்வப்போது என் நினைவில் வந்து போவதுண்டு. சினிமா தியேட்டருக்குள் உணரும் வியர்வை பிசுபிசுக்கை அனுபவ சுருதியோடு சொன்ன உங்கள் வார்த்தைகளும், அப்போதைய அரசியல் சமூக சிக்கல்களை நக்கல் வழிய வழிய வறுத்தெடுத்த உங்கள் பாங்கும் அதீத கவர்ச்சியை அந்த தொடர்கதைக்கு வழங்கின என்றால் அது மிகையாகாது.

அதைப்போன்றதல்லாமல் வேறொரு genre ல் ஒரு புதிய தொடர் எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். கள்ளக்காதல், பஸ் ஸ்டாண்டு லாட்ஜ், சாவி துவாரத்தில் எட்டிப் பார்க்கும் ரூம் பாய், அநியாயமாய் உச்சக் கட்டத்தில் கிழிந்து போகும் காண்டம், வேடிக்கை பார்க்கும் செயலற்ற தமிழக போலீஸ் என்று தொடங்கி நீங்கள் பிளந்து கட்டி எழுதினால் சாரு தலைமையில் ஒரு கூட்டமே வந்து உங்கள் எழுத்தை உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச்செல்லும் பணியை மேற்கொள்வார்கள். பிறகு நீங்கள் தனித்தளம் தொடங்கி இடைவேளை விட்டு இளைப்பாறலாம். இது குறித்து நீங்கள் பரிசீலிக்கவும்.

உங்களின் சினிமா பற்றிய புரிதலும் அது குறித்தான பார்வையும், சினிமாவில் உங்களுக்கு நெருக்கமானவர்களின் அறிவு விசாலமும் எனக்கு ஓரளவு தெரியும். நம் பதிவுலகில் முணுக் முணுக் கென்று வாரம் ஒரு திரைவிமர்சனம் எழுதும் பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சினிமா என்பது என்ன... அதன் வலிகள் என்ன... இவர்கள் எழுதும் குப்பைகளால் வரும் பாதிப்புகள் என்ன என்பதெல்லாம் தெரியாது. சினிமா பற்றிய புரிதலை நம் சக பதிவர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சியில் புது கட்டுரைத்தொடர் எழுதலாம் (அதற்கெல்லாம் சத்தியமாக பின்னனூட்டமே வராது என்பது வேறு விஷயம்). சினிமா என்று தலைப்பிட்டு விட்டால் போதும், அதைப் படிக்க இங்கு அனைவரும் தலைப்பட்டு வருவார்கள் அது போதும். உலக சினிமா பற்றிய உங்கள் தொடரில் நல்ல திரைப்படங்களை நீங்கள் அறிமுகப்படுத்தும் பணி மேலும் தொடரட்டும்.

அம்புட்டுதான் சாமி... எனக்கு இப்ப உத்தரவு குடுங்க...


அன்புடன் நித்யகுமாரன்....

நண்பர் நித்யாவின் மேலுள்ள பாராட்டும் வரிகள்தான் எனக்கு உற்சாக டானிக்

தொடர்ந்து என் வளர்ச்சிக்கு உறுதுனையாய் இருக்கும் அத்துனை பேருக்கும் இந்த ஜாக்கிசேகரின் நெஞ்சார்ந்த நன்றிகள்....

அன்புடன்/ஜாக்கிசேகர்

28 comments:

 1. வாழ்த்துகள் சகோதரா :)

  ReplyDelete
 2. வாழ்த்துகள் அண்ணே...

  ஹாஹா... பதிவில் படம் சூப்பர்...

  :-)))

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர்

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 5. அட.. அதுக்குள்ள 150-ஆ..?

  இப்பத்தான் ஆரம்பிச்ச மாதிரியிருக்கு ஜாக்கி..!

  நன்று.. நன்று.. நன்று..

  மென்மேலும் தொடர்ந்து வலையுலகின் வளர்ச்சியில் பெரும் பங்கெடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்..

  ReplyDelete
 6. 150 குதிரைகளை திறம்பட செலுத்திய ஜாக்கிக்கு கிண்டியில் ஒரு சிலை வைக்கலாம் என்று நினைக்கிறேன்.நன்கொடைகள் வரவேற்கப் படுகிறது

  ReplyDelete
 7. 150 குதிரைகளை திறம்பட செலுத்திய ஜாக்கிக்கு கிண்டியில் ஒரு சிலை வைக்கலாம் என்று நினைக்கிறேன்.நன்கொடைகள் வரவேற்கப் படுகிறது

  ReplyDelete
 8. தலைவருக்கு நமஸ்காரம்.

  ”அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சானே” என்று ஸ்ரேயாவிற்காக துப்பாக்கி கொண்டு சண்டைபோட்டு, துப்பாக்கியை வீசி எறிந்து சண்டைபோட்டு, பின்புறம் இருக்கும் வில்லனை திரும்பிப் பார்க்காமல் துப்பாக்கியை மட்டும் திருப்பிச் சுட்டு, படுக்கையில் ஸ்ரேயாவை வீழ்த்திய பிறகும் பட்டுப் போர்வையின் வழியாக எதிரிகளை சுட்டு வீழ்த்தி - அடா அடா அடா... இப்படி நம்ம சிவாஜி படும் எல்லா பிரயத்தனங்களையும் பட்டு இன்று 150வது பதிவை இட்டு தொடர்ந்து கொண்டிருக்கும் குதிரைஓட்டுநர் சேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பற்பல...

  உங்கள் பணி தொடரட்டும். பதிவுகளுக்கிடையேயான இடைவெளியை இன்னும் குறைத்தால் மிக்க நலம்.

  பேரன்பு நித்யன்

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் ஜாக்கி!

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் ஜாக்கி. 150 பதிவுகள் இட்டு நீங்கள் நந்தகுமாரனாகிவிட்டீர்கள்

  ReplyDelete
 11. தலைவரே நன்றி list-ல என்னோட பெயரையும் சொன்னிங்க ஆமாங்க சிறு துறும்ம்பும் பல் குத்த உதவும்

  ReplyDelete
 12. என் இனிய ஜாக்கி & திருமதி ஜாக்கி சேகர்க்கு வாழ்த்துகள்
  மேலும் பல வலை சாதனைகள் செய்ய.

  தோழமையுடன்
  புதுவை சிவா.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ..

  150அ.. உங்ககிட்டயிருந்து நான் இன்னும் எதிர்பார்க்கிறேன்....

  நிறைய எழுதுங்கள்.. நங்கள் இருக்கிறோம், படிக்க.

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் 150 க்கு
  பின்னூட்டம் அளிப்பவர்கள் இரண்டு முறை வந்துருக்கு!
  அம்புட்டு நன்றியா எங்க மேல!

  ReplyDelete
 15. துயா, சின்னபையன்,வால்பையன்,அக்னி பார்வை,புதுவை சிவா, சிந்தாமணி , வந்தியதேவன், நானைசிவா நித்யகுமாரன், உண்மைத்தமிழன் , தண்டோரா,நட்புடன் ஜமால், குடுகுடுப்பை,கிரி,அப்பாவிதமிழன், சின்னபையன்இ மனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

  ReplyDelete
 16. துயா, சின்னபையன்,வால்பையன்,அக்னி பார்வை,புதுவை சிவா, சிந்தாமணி , வந்தியதேவன், நானைசிவா நித்யகுமாரன், உண்மைத்தமிழன் , தண்டோரா,நட்புடன் ஜமால், குடுகுடுப்பை,கிரி,அப்பாவிதமிழன், சின்னபையன் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் ஜாக்கி...

  சுவாரஸ்யமானது உங்கள் எழுத்து... சமயத்தில் கோபம் தெறிக்கும்... தொடர்ந்து கலக்குங்க... :-)

  ReplyDelete
 18. அன்பு நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  விரைவில் இருநூறாவது பதிவுக்கும் வாழ்த்த வருவேன்..

  ReplyDelete
 19. வாழ்த்துகள்! வாழ்த்துகள்!! வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 20. /
  (இப்படி எழுதறதுதான் நல்லது அப்பதான் சோறு கிடைக்கும்)
  /

  இதெல்லாம் நெம்ப ஓவரு சொல்லிபுட்டேன் :)

  ReplyDelete
 21. வாழ்த்துகள். முயற்சி இருந்தால் 150 என்ன? 1500 யை கூட விரைவில் எட்டிவிடுவீர்கள்.

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் ஜாக்கி...

  சுவாரஸ்யமானது உங்கள் எழுத்து... சமயத்தில் கோபம் தெறிக்கும்... தொடர்ந்து கலக்குங்க... :-)

  நல்லது சரவணகுமார் மி்க்க நன்றி தங்கள் வாழ்த்துக்கு

  ReplyDelete
 23. நன்றி மங்களுர் சிவா,

  உங்களுக்க சொன்னாலும் சொல்லாட்டியும் சோறு கிடைச்சிடும் போலஇருக்கு

  ReplyDelete
 24. நன்றி வண்ணத்தூபூச்சியார் தங்கள் வாழ்த்துக்கு

  ReplyDelete
 25. நன்றி மாதேவி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner