
உலகின் மிக அழகிய கடற்கரை எங்கள் கடலூரின் சில்வர்பிச் கடற்கரைதான் என்பேன். 4கிலோமீட்டர் தூரத்துக்கு வெள்ளை மணலாய் மிக அழகாக இருக்கும். இப்போது அந்த அழகு போய்விட்டது,அகோர பசியுடன் சுனாமி வந்து அந்த அழகை எல்லாம் சின்னாபின்னமாக்கிவிட்டது.
சின்ன வயதில் விடியலில் அப்பா, கைலி ஈரம் சொட்ட சொட்ட நடந்து வந்தால் அவர் கடலில் நீந்தி விட்டு வந்து இருக்கிறார் என்று அர்த்தம்.
ஒரு முறை மாசி மகத்துக்கு அப்பாவுடன் கடலில் குளிக்க சென்றேன். அப்போது எனக்கு வயது எட்டு.
மற்ற அப்பாக்கள் போல் என் அப்பா கரையில் குளிக்கும் ரகம் அல்ல. என்னை முதுகில் வைத்துக்கொண்டு கடலில் வெகு தூரம் நீந்துவார் கடலில் இருந்து பார்க்கும் போது கரை தெரியாது சுற்றிலும் ஒரே தண்ணிராக காட்சி அளிக்கும் . அவர் எப்படி திசை கண்டுபிடித்து நீநதுகிறார் எப்படி கரையை கண்டு பிடிக்கிறார், என்பது அந்த வயதில் எனது மில்லியன் டாலர் கேள்வி.
கடலில் எல்லா சாமிக்கு தீர்த்தவாரி நடந்து கொண்டு இருந்த போது, நானும் அப்பாவும் கடலில் அழம் சென்று நீந்தி வருவதாக இருந்தோம். மூன்று முறை கடலின் உள்ளே போய்வந்து விட்டோம். நான்காவது முறை அப்பா கேட்டார் ? என்னடா வீட்டுக்கு போலாமா? அல்லது இன்னோருமுறை கடல்ல உள்ளே போய் விட்டு வரலாமா? நான் வீட்டுக்கு போலாம் என்று சொல்லி இருக்க வேண்டும். சின்ன பையன் கடலின் பொங்கி வரும் அலையின் சீற்றத்தை பார்த்து ஒரே குஜலாக இருந்தேன்.

நான் அப்பாவிடம் இன்னோரு முறை என்று சொன்ன அந்த நேரத்தில் சனிஸ்வர பகவான் மெல்ல ஸ்மைல் செய்தார். அப்போது கடலை பார்த்து அலையை பார்த்து குதித்ததை என் அப்பா நன்றாக ரசித்தார், நான்காவது முறைஅப்பாமுதுகில் வைத்துக்கொண்டு கடலில் நீ்ந்தினார் நீந்திக்கொண்டு இருந்தவர் ஜயோ என்றார் . அப்பா அப்படி பதறி நான் பார்த்தது இல்லைஅவர் துடித்தார் நான் சுற்றி பார்த்தேன் சுற்றிலும் தண்ணீர் முன்பு மூன்று முறை வந்த போது தென் பட்ட மீனவ படகுகள் கூட இந்த முறை தென்படவில்லை.அப்பா தரையில் இருப்பதாக நினைத்து கொண்டு பதட்டத்தில் என்னை கடலில் இறக்கி விட்டார்.
நான் கலங்கலான கடல் தண்ணீரின் உள்ளே மெல்ல கீழே சென்று கொண்டு இருந்தேன், அப்பா எங்கு போனார்? அவருக்கு என்ன ஆயிற்று? தெரியாது அவர் வருவாரா? தெரியாது. நான் கீழே ரொம்பவும் கீழே போய் கொண்டு இருந்தேன். அந்த ஆழ்கடலின் இறைச்சல் இல்லாத அமைதி என்னை என்னவோ செய்தது....
அந்த வயதில் எனக்கு அந்த அனுபவம் புதிதாக இருந்தது. நான் மூச்சை மட்டும தம் கட்டி இருந்தேன் தண்ணீர் ஒரு மிடறு விழுங்க வில்லை.
வெகு தூரத்தில் என் அப்பா வேகமாக நீந்தி வருவது என்க்கு தெரிந்தது அப்பா என் அருகில் வந்தார் என் தலைமுடி பிடித்தார் கடலில் மேல் மட்டத்துக்கு வந்தோம் என்ன அப்பாவிடம் என்ன ஆச்சு என்று கேட்டேன்? அவர் ரொம்பவும் பதட்டமாக இருந்தார். பதில் ஏதும் சொல்லவில்லை முன்னைகாட்டிலும்வெகு வேகமாக நீந்தினார்.
அவர் நீந்தும் போது பின்னால் நீர் பிரிந்து செல்லும் இடத்தை பார்த்தேன் ரத்தமாக இருந்தது. நான் மெல்ல பயப்பட ஆரம்பித்தேன், கடலின் கரைக்கு வந்த போது அப்பா காலில் ரத்தம் குற்றால அருவி போல் கொட்டிக்கொண்டு இருந்தது,எங்கள் ஊர் ஆட்கள் கடலில் குளித்து கொண்டு இருந்தவர்கள் எல்லோரும் ஓடி வந்து ரத்த ஓட்டத்தை நிறுத்த டான்டக்ஸ் ஜட்டி,கோமனம், பட்டாபட்டி டிராயர்,பத்து அடியில்பாதி உடம்பை காட்டி கொண்டு குளித்து கொண்டு இருந்தபேபி அக்காவின் புது உள்பாவாடைஎன்று எல்லாம் போட்டு கட்டியாகி விட்டது. ரத்தம் நின்ற பாடி்ல்லை.

காயத்தின் தன்மை பார்த்து அந்தகாயம் நடுக்கடலில் திருக்கை மீனின் வால் காலில் அடித்ததால்அந்த காயம் ஏற்ப்பட்டதாக சொன்னார்கள்,மிகச்சரியாக அந்த கணத்தில் இருந்துதான் வெயில் படத்து பசுபதியின் அப்பாபோல் என் அப்பாவும் என்னை வெறுக்க ஆரம்பித்தார்.....
அதன் பிறகு கடலிலும் கரையிலும் நிறைய சம்பவங்கள் நடந்தாலும் இன்று கடலை பார்த்தாலும் அந்த குதுக்கலம் ஏற்படுத்துவதையும் மனசு லேசாக மாறுவதையும் மறக்க முடியாது. பூமியில் மூன்று பாகம் கடல் நீரால் சூழப்பட்டு உள்ளது, அந்த கடலின் உள்ளே மறைந்து கிடக்கும் விஷயங்கள் ஏராளம். இமயமலையின் உயரத்தைவிட மிக ஆழமான பகுதிகள் கடலின் உள்ளே இருக்கின்றன.
கடல் மேற்புரத்தி்லிருந்து பார்க்கும் போது கரையை தவிர உள்பக்கம் அமைதியாக இருக்கும் கடல், பெண்ணை போல் அதனுள்ளே எண்ணற்ற மர்மங்களை தன்னகத்தே வைத்து இருக்கிறது.
பொதுவாக கடலின் கரையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் பெரிய ஆழம் இல்லாத பகுதிகள்தான் இருக்கும் இதற்க்கு காண்டினென்டல் பிளேஸ் என்று சொல்வார்கள். இதற்க்கு அப்புறம்தான் கடலில் உண்மையான அழம் ஆரம்பிக்கும்அதற்க்கு பெயர் அபய்ஸ் (ABYSS)என்று சொ்லுவார்கள் அந்த ஆழப்பகுதி்யையும் விட்டு வைக்காத மனித குலம் அங்கு நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமே அபய்ஸ். இந்த படத்தை டைட்டானிக் இயக்குனர் ஜேம்ஸ் கேமரோன் இயக்கினார் இந்த படம் வெளியான ஆண்டு 1989.
வாழ்வில் நாம் எவ்வளவோ படங்களை பார்த்து இருக்கிறோம் ஒரு சில படங்கள்தான் நமக்குநிறைய கற்றுக்கொடுக்கின்றன அந்த வகையில் கடல் ஆழத்தில் இப்படித்தான் இருக்கும் என்று உலகை அரிய வைத்த படம் அபய்ஸ் . இந்த படத்தை நான் பாண்டிச்சேரி ரத்னாவில் பார்த்தேன்.
கதைப்படி படத்தின் பத்துநிமிடங்கள் மட்டுமே வெளியில் காட்டுவார்கள் மற்ற காட்சிகள்எல்லாம் கடலில் உள்ளே எடுதது இருப்பார்கள். படத்தின் எல்லா பிரேம்களிலும் கடல் தண்ணீர் வியாபித்து இருக்கும். படத்தின் இரண்டரை மணி நேரமும் நாம் ஏதோ கடலின் அடி ஆழத்தில் இருப்பது போல் நாம் ஃபில் செய்யுவோம், அந்த ஃபிலிங்தான் இயக்குநர் ஜேம்ஸ்கேமரோனுக்கு கிடைத்த வெற்றி......

படத்தின் கதை.....
அமேரிக்க கடற்படைக்கு சொந்தமான நீர் முழ்கி கப்பல் ஒன்று அனு ஆயுதங்களுடன் கடலின் ஆழத்தில் பயனம் செய்து கொண்டு இருக்கிறது, ஏதோ ஒரு இது ஒரு அது சரி ஏதோ விவரிக்க முடியாத ஒன்று அந்த நீர்முழ்கி கப்பல் அருகில் வந்ததும் அந்த நீர் முழ்கியின் அனைத்து செயல்பாடுகளும் சில நிமிடங்கள் முடக்க படுகின்றன. திரும்பவும் மின்சாரம் வந்தத போது எதிரில் இருக்கும் பாறையில் மோதி150 பேருடன் ஜலசமாதி ஆகின்றது
அமேரிக்க ராணுவம் விஷயத்தை வெளியே தெரியாமல் அந்த அணுகுண்டை எடுக்க அங்கு கடலுக்கு கீழே பெட்ரோலியம் கண்டுபிடிக்கும் குழுவிடம் உதவி கேட்கிறது. முதலில் மறுத்தாலும் பிறகு ஒத்துக்கொண்டு அந்த குழு உதவி செய்ய சம்மதிக்கின்றது.அந்த குழுவின் தலைவராக ஹீரோ ஈட்ஹரிஸ் நடித்து இருக்கிறார்.அவர்களுக்குள் ஏற்படும் கருத்து மோதல்கள்,கடலில் மேல் இருக்கும் கப்பல் புயலில் அகப்பட்டு கடலுக்கு கிழே இருக்கும் இவர்களுக்கும் மேலே இருக்கும் தாய் கப்பலுக்கான தொடர்பு துண்டித்து விட அந்த அணு குண்டை எப்படி கைப்பற்றினார்கள் இவர்கள் குழுவிலேயே இருக்கும் ஒருவன் வில்லனாக மாறி அந்த அணுகுண்டை வேடிக்க வைக்க டைம் செட்பண்ணி விடுகிறான் அவன்அதை வெடிக்கவைக்க முயற்ச்சிக்க அந்த அணுகுண்டு20000அடி ஆழமான கடலுக்கள் உள்ள பள்ளதாக்கில் விழுந்து விட அந்த அணுகுண்டு வெடிக்காமல் செயலிழக்க பட்டதா? அவ்வப்போது தலை காட்டும் அந்த அது,அந்த இது, அந்த அது என்ன? என்பதை வெள்ளிதிரையில் கான்க....
படத்தை பற்றிய சுவாரஸ்யங்களில் சில.....
இந்த படத்தின் இயக்குனர் ஜேம்ஸ்கேமரோன் என் வாழ்வில் மறக்கமுடியாத டைரக்டர் ஏன் என்றால்....
1994ல் நான் MOUNT ROADல் இருக்கும் LIC எதிரில் சென்டிக்கோ ஸ்கூட்டர் கம்பேனியில் கயவர்களால் ஏமாற்றப்பட்டு செக்யுரிட்டி வேலை பார்த்துக்கொண்டு இருந்த நேரம். அப்போது ஜேம்ஸ் கெமரோனின் ஜட்ஜ்மென்ட் டே 2 அலங்கார் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருந்தது. தேவி தியேட்டரில் கிளிப் ஹங்கர் ஓடிக்கொண்டு இருந்தது...
அப்போது சைடு வருமானமாக பிளாக்கில் டிக்கெட் வித்துக்கொண்டு இருந்தேன் அலங்காரில் அன்று கூடிய கூட்டத்ததால் என் சாப்பாட்டு பிரச்சனையை சில நாட்களுக்கு தீர்த்தவர் இந்த படத்தின் டைரக்டர் ஜேம்ஸ்கேமரோன்.
சரி அபய்ஸ் படத்துக்கு வருவோம் இந்த படத்தின் வெளிப்புற படபிடிப்பு என்பது வெறும் 15 நிமிடங்கள்தான்.
படத்தில் ஏற்படும் ஆமானுஷ்ய அமைதியையும் அந்த மூச்சி விடும் சத்தத்தையும் நீங்கள் கடலுக்கு அடியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
இப்படி கூட கடலுக்கு அடியில் ஒரு சப்ஜெக்ட்டை எடுத்து அதனை மிக சுவாரஸ்யமாக எடுக்கமுடியும் என்பதற்க்கு இந்த படம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
நீர்முழ்கி கப்பலுக்கு அடியில் இருக்கும் பினத்தை பார்த்து பதட்டத்தில் மூச்சு தினறும் போது அந்த மூச்சிதினறல் நமக்கு ஏற்படுவது போல் ஏற்படுததும் பதட்டம் செம டைரக்டர் டச்...

கிளைமாக்ஸ் யாரும் எதிர் பாராதது....
சில நம்ப முடியாத பல விஷயங்கள் படத்தில் பல இருந்தாலும் இந்த பூமியில் சிலது நடக்கவே நடக்காது என்று யாராலும் சொல்ல முடியாது...
எல்லா இயற்க்கை சீற்றத்துக்கும் மூல காரணம் நாம்தான் என்தை பொட்டில் அடித்து சொல்லி இருக்கிறார்கள்...
1993ல் சில மாறுபாடுகளுடன் திரும்பவும் இந்த படம் வெளியிடப்பட்டது....
இந்த படத்தை பார்த்தால் டைட்டானிக் படம் எப்படி இவ்வளவு அற்புதமாக எடுத்தார்கள் என்பது இந்ந படத்தை பார்த்தால் புரியும் ஏனென்றால் டைட்டானிக் படத்தை எடுத்தது இதே டைரக்டர்தான்
இந்த படம் விஷீவல் எபெக்ட்டுக்காக ஆஸ்க்கார் விருது இந்த படம் பெற்றது.
இந்த படத்தி்ன் இயக்குநர் டைட்டானிக்,ட்ரூலைஸ்,டெர்மினேட்டர் போன்ற படங்களை எடுத்தவர்.
கடலுக்கு அடியல் அதுவும் ஆழ் கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்.
முச்சு பேச்சு இல்லாமல் கிடக்கும் மனைவியை ஆழுது பு ரண்டு நடிக்கும் காட்சியை கணக்கில்லாமல் எண்ணற்ற தமிழ்பட டைரக்டர்கள் சுட்டு தள்ளினார்கள்
அன்புடன்/ஜாக்கிசேகர்
//உலகின் மிக அழகிய கடற்கரை எங்கள் கடலூரின் சில்வர்பிச் கடற்கரைதான்//
ReplyDeleteவழிமொழிகின்றேன் :)
நல்ல பதிவு. தண்ணீர் பயமுள்ள எனக்கு இதை படிக்கும்போதே மூச்சு வாங்கியது.
நன்றி கிஷோர் தங்கள் பாராட்டுக்கு
ReplyDeleteஅருமையான விமர்சனம் ஜாக்கிசேகர் அவர்களே. பெண்ணின் மனசின் ஆழத்தை முத்தழகின் புகைப்படத்தைப்போட்டுக் காட்டிவிட்டீர்கள்.
ReplyDeleteநன்றி தேவன் தங்கள் பாராட்டுக்கு
ReplyDelete//கொப்புறான சத்தியமா நம்ம முத்தழகுதாங்க//
ReplyDeleteஹிஹிஹி
ஜூப்பரு
அன்பு ஜாக்கி,
ReplyDeleteஉங்களின் சொந்தக்கதையோடு இணைத்துத்தந்திருப்பதினால் ஒரு புதிய வாசிப்பனுபவம் வருகிறது.
முத்தழகு படம் சூப்பருங்க...
அன்பு நித்யன்
நன்றி வால் தங்கள் வருகைக்கு, முத்தழகுவின் முத்தான படம் இதுதான் என்பது எனது தாழ்மையான கருத்து
ReplyDeleteநன்றி நித்யா,புதிய வாசிப்பனுபவம் வந்தால் அது என் உழைப்புக்கு கிடைத்த வெற்றி நன்றி தங்கள் பாராட்டுக்கு
ReplyDelete