(பாகம் -4)ஒரு கார் டிரைவரும், ஒரு டிரக் டிரைவரும்... (DUEL) ஆங்கிலபட சினிமா விமர்சனம்



நிறையா பேரு இந்த படத்த பார்த்து இருப்பாங்க, அது மேட்டர் காதன்டி இந்த படம் பார்க்காதவங்களுக்கான நுவீஸ் இது
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

__ நம்ப டைனோசர் படம் எடுத்த ஸ்பீல் பெர்க் துரை எடுத்த பஸ்ட்டு எடுத்த பாயாஸ்கோப் இது , அந்த ஊர்ல மாமியார் மருமக சண்ட இல்லை அதனால மூக்கு சிந்த வைக்கிற சீரியல் எடுக்க சொல்லாம ஒரு படம் எடுக்க சொன்னாங்க , ஸ்பீல்பெர்க் தன் திறமைய நிருபிச்ச படம் .



கதை தக்கனுன்டுதான். ஒருத்தன் ஒரு சிவப்பு கலர் கார்ல ஏறிஒரு வேலை விஷயமா, கலிபோர்னியா பாலைவனம் வழியா ரொம்ப துரரம் கார்ல போறான் அப்போ ஒரு டேங்கர் லாரி அவனை காரை கிராஸ் பன்னுது அப்புறம் , போய் டிவிடி வாங்கி பாருங்கன்னா .



அஞ்சாதே படத்துல மொகம் காட்டாத மொட்ட பாஸ் கூட இந்த படத்தோட இன்ஸ்பிரேஷன்தான் . குறிப்பு செலவே இல்லாம படம் எப்படி சுவாரஸ்யமா எடுக்கறது எப்படின்னு இந்த படம் கத்துதரும் எல்லா ஊடகத் துறை மாணவர்களும் தவறாம பார்க்க வேண்டிய படம்
_

படத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள்....



படத்தில் ஒரு டிரக்கையும் காரை வைத்து ஒரு திரில்லர் தர முடியும் என்பதை திரையுலக பிதாமகர் ஸ்பீல் பெர்க் நிறுபித்தார் ..

முதலில் தொலைகாட்சி படமாக எடுத்து பின்பு இதை முழுநீள திரைப்படமாக மாற்ற பட்டது..

எல்லோர் மனதிலும் இருக்கும் ஆழ் மனது பயத்தை தன் கதைக்கு அடி நாதமாக எடுத்துக்கொண்டார்

படம் பார்த்து விட்டு எந்த லாரியும் ஹாரன் சத்தத்ததோடு நம்மை கடந்தால் ஈரக்குலை நடுங்கும்
_____________________________________________________________________________________
அன்புடன்- ஜாக்கி சேகர் _______________________________________

11 comments:

  1. riteu... 2:30 மணி நேர படம்னு வகுக்கப்படாத விதி இல்லாம இருந்த தமிழ் சினிமாலையும் இப்டி அட்டகாச படங்கள் வரும் .. உதாரணம் அக்கு

    ReplyDelete
  2. ஒரு முறை US-ல இருக்கறப்போ சேனல் மாத்திட்டு இருக்கும்போது HBO-வுல மாட்டுச்சு. பாதியில இருந்து பாத்தேன். ரொம்ப பிடிச்சுப் போயி என்ன ஏதுன்னு பாத்தா ஸ்பீல்பெர்க்கோட படம். அப்புறம் இன்னொருவாட்டி முதலிலிருந்து பார்த்தேன். சூப்பரான படம். இன்னொரு பாசம் என்னன்ன நான் இருந்த தென் கலிபோர்னிய பகுதிய வச்சி எடுக்கப்பட்ட படம். Road rage அப்படிங்கறத மையமா வச்சி ஹாலிவுட்ல பல படங்கள் வந்திருக்கு.

    ReplyDelete
  3. உண்மை யாத்ரீகன் ஃ படத்தின் போட்டோகிராபர் எனது நண்பன் அசோக். அவன் படத்தின் ஸ்பெசல் ஷோ டிக்கட் கொடுத்தும் என்னால் வேலை பளுகாரணமாக ஃ படத்தை பார்க்க முடியவில்லை...

    ReplyDelete
  4. நீங்கள் கொடுத்து வைத்தவர் பெத்தராய்டு, படிபிடிப்பு நடந்த பகுதியிலேயே இருந்து இருக்கிறீர்கள்

    ReplyDelete
  5. அண்ணாத்த உங்களை ஒரு தொடர்விளையாட்டுக்கு கோத்துவிட்டுருக்கேன்!

    http://mangalore-siva.blogspot.com/2008/08/blog-post_30.html

    ReplyDelete
  6. ஜாக்கி சேகர்,

    திரை விமர்சணம் பதிவில் உங்களுடைய பின்னூட்டம் படித்தேன். உங்களுடைய பதிவு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. உங்களுக்கு விருப்பமிருந்தால் உங்கள் இடுகைகளின் சில வரிகளை எங்கள் வலைப்பதிவில் பதிந்து வாசகர்களை உங்கள் பதிவுக்கு இட்டுச் செல்லலாம்.

    மற்றபடி தொடர்ந்து எழுத எனது வாழ்த்துகள்!

    பாலாஜி.

    ReplyDelete
  7. தலைவரே...

    இன்னும் கொஞ்சம் விரிவா எழுதுங்க. உங்ககிட்ட இருந்து இன்னும் நிறையா எதிர்பார்க்கிறோம்.

    அன்பு நித்யன்.

    ReplyDelete
  8. நன்றி சிவா நேரம் கிடைத்ததும் தொடர் விளையாட்டில் கலந்து கொள்கிறேன்

    ReplyDelete
  9. நன்றி பாலஜி தங்கள் பாராட்டுக்கு, நிச்சயமாக

    ReplyDelete
  10. நன்றி நித்யா , உங்கள் கருத்துக்கு என் அடுத்த பதிவு பதில் சொல்லும்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner