(பாகம்/3) பாம் வைக்கும் டீச்சர்...... HEAVEN 2002 திரைப்பட விமர்சனம்

பாம் வைக்கும் பள்ளிகூட டீச்சர்......





பாடம் சொல்லி கொடுக்கும் டீச்சர் பாம் வைத்தால் என்னவாகும்? அதுதான் ஹெவன் படத்தின் கதை ...

ஹெவன் படத்தின் கதை....
பிலிப்பா ஒரு பிரிட்டிஷ் டீச்சர் அவள் கணவன் மோசமான மருந்து உட் கொண்ட காரணத்தால் இறக்க நேர்கிறது.
அந்த ஊரில் இருக்கும் பெரிய டான் மருந்து கம்பெனி போர்வையில் போதை மருந்துகள் தயாரிப்பதால் அந்த மருந்து பிலிப்பா கணவன் நோய்க்காக எடுத்துகொள்ள,மருந்து ஓவர் டோஸ் ஆகி டீச்சர் பிலிப்பா கணவன் இறக்க நேர்கிறது.


இந்த உண்மை கண்டு பிடித்த டீச்சர் பிலிப்பா உண்மைகளை போலீ்ஸில் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தானே அந்த டானை கொல்லநினைக்கிறாள். கொஞ்சம் கடுகு உளுத்தம் பருப்பு,கொஞ்சம் கடலை எண்ணையில், வறுத்த ரவை கொட்டி உப்புமா செய்வது போல் ஒரு பாம் தயாரிக்கிறாள். அந்த பாம் சிறிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது

(படத்தின் இயக்குநர் Tom Tykwer, கதநாயகனுக்கும் கதநாயகிக்கும் முக்கியமான காட்சி பற்றி விளக்குகிறார்)

அந்த பாம் வெடிக்கும் போது ஒருவர் மட்டுமே இறக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் தாயரிக்கப்பட்டது.

இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர் Krzysztof Kieslowski அபார மூளை செயலாற்றலால்,டீச்சர் பிலிப்பா அந்த மருந்து கம்பெனி டானை கொல்வதற்க்காக வைக்கப்ப்ட்ட பாம் வெடித்து இரண்டு சிறுமிகள்அவர்களின் தகப்பன், மற்றும் ஒரு வேலைகார பெண்மணிஎன நால்வர் இறக்கிறார்கள். டீச்சர் கைது செய்யபடுகிறாள்.

அவளை என்கவுன்டர் செய்ய அதிகார வர்கம் ஆவலாய் பறக்கிறது,அவளுக்கு மொழிப்பெயர்பாளனாக வரும்
FILIPPO - Giovanni Ribisi கதாநாயகன்அவளை காப்பாற்றுகிறான். அவளோடு அவன் காதல் கொள்கிறான். அவர்கள் சிறையில் இருந்து தப்பிக்கிறார்கள்,அதன் பிறகு இருவரும் பிடரியில் கால் பட ஓடுகிறார்கள், ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அவர்கள் போலீஸில் மாட்டி க்கொண்டார்களா?அல்லது தப்பித்தார்களா? என்பதை ரொம்பவும் அற்புதமாக அலுப்பு தட்டாமல் சொல்லி இருக்கிறார்கள்..



படத்தின் சிறப்புகள்...

1. விஷீவலாய் இந்தபடம் ஒரு அற்புதமான பொக்கிஷம்

2.டீச்சர் பாம் வைக்க போகும் ஆரம்ப காட்சிகள் எதிலும் தேவை இல்லாமல் டயலாக் வைக்காமல் விஷீவலாகவே திரைக்கதை அமைத்து இருப்பது...

3.பாம் எடுத்துக்கொண்டு அவள் ரோட்டில் போகும் போது லோவ் ஆங்கிளில் ஒரு பெரிய டவர் பில்டிங் காட்டும் போது, எங்க பாட்டி ஸ்டைலில் சொல்ல வேண்டும என்றால் நம் ஈரக்கொளையே நடுங்குது...

4. தன் வைத்த பாமில் இரண்டு குழந்தைகள் இறந்தது அறிந்து டீச்சர் மயக்கம் ஆவதும் கதாநாயகன் அவள் மேல் காதல் கொள்வதும் மிக இயல்பாய் எடுக்கப்பட்டு இருக்கிறது

5. பால் வண்டியில் தப்பிக்கும் போது அவர்கள் தப்பி விட்டார்கள் என்பதை பால் வேனின் பின்புறக்கதவு திறந்து நடு ரோட்டில் பால் கேன்கள் உருள்வது டைரக்டரின் திறமைக்கு சான்று....

6. படத்தின் ஒளிப்பதிவாளர் Frank Griebe இவர் படத்தின் இரண்டாவது ஹீரோ, முக்கியமாக ஹெவன் என்று பேர் போடும் அந்த ஒரு ஈகிள் ஐ வீயுவ் ஷாட் ஒன்று போதும்...

7. படத்தின் ஈகிள் ஐ வீயுவ் ஷாட் காட்சிகள் இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம் மற்றும் நல்ல வீஷீவல் டேஸ்ட் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் தப்பி போகும் ரயிலை டாப் ஆங்கிளில் காட்டுவதும் கொள்ளை அழகு...


8.இயக்குநர் Tom Tykwer காலத்தால் அழியாத ரன் லோ லா ரன் படத்தை எடுத்த பிதாமகர்.

9.இந்த படம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்தது ,94 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் சிலருக்கு புரியாமல் போகலாம் அப்படி புரிய வில்லை என்றால் படத்தை மறுமுறை அவர்கள் பார்க்கவேண்டும்


10.இந்த படத்தை 60செகன்ட் பிரிவியு மற்றும் த வால் ஸ்டிரிட் ஜெர்னல் போன்ற பத்திரிக்கைகள் வெகுவாய் புகழ்ந்துள்ளன

இதுவாழ்வில்தவற விடாமல் பார்க்க வேண்டிய படம். எப்போது இந்த பதிவை படித்தாலும் இந்த படத்தை பார்த்தாலும் பின்னுட்டடடம் இட்டு என்னோடு உஙக்ள் சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்....


உங்கள் கருத்து மற்றும் விமர்சனங்கள் எதிர்பார்த்து காத்து இருக்கும்...


அன்புடன்/ஜாக்கிசேகர்

15 comments:

  1. நன்றி யாத்ரீகன் படத்தை பாருங்கள் இன்னும் நீங்கள் மறக்கமாட்டீர்கள்

    ReplyDelete
  2. sure.. ipovey DVD reserve panivachachu...

    time kedaikumbodhu indha link paarunga.. http://yaathirigan.blogspot.com/2008/08/2.html

    ReplyDelete
  3. நன்றி யாத்ரீகன் தங்கள் ஆர்வத்திற்க்கு

    ReplyDelete
  4. அன்பு நண்பருக்கு,

    என்னடா இது நாம எழுதி இத்தனை நாளாச்சு ஒரே ஒருத்தர் மாத்திரம் பின்னூட்டம் போட்டிருக்காரேன்னு வருத்தப்படாதீங்கோ. Harry potter கதையோடு J.K. Rowling அலையாத பதிப்பகங்கள் இல்லை.

    ஓரளவு பழைய திரைப்படங்களைப் பற்றிக்கூட ஐயா எழுதலாமே...

    பாகம் 1க்கு பிறகு, பாகம் 3 வந்து விட்டதே... பாகம் 2 எங்க சார்?

    அப்படியே Heaven DVD அனுப்பி வச்சீங்கன்னா ரொம்ப புண்ணியமாப் போகும்.

    அன்பு டன் நித்யகுமாரன்.

    ReplyDelete
  5. நீங்கள் சொல்லிய விதம் படம் பார்க்கும் ஆவலை அதிகரிக்கிறது!

    ReplyDelete
  6. மங்களுர் சிவா, தங்கள் வருகைக்கும் தங்கள் ஊக்கத்திற்கும் என் நன்றிகள் பாகம் 2 தவறு எங்கே நிகழ்ந்தது என்றால் வலைபதிவர் அறிவிப்பையும் இதில் சேர்த்து விட்டேன்.

    ReplyDelete
  7. நன்றி நித்யா தங்கள் ஊக்குவிப்புக்கு, ஒரளவு பாய திரைபடங்கள் பற்றியும் எழுதுகிறேன்

    ReplyDelete
  8. வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் பார்க்கிறேன்.. உங்களது விமர்சனம் படத்தினை பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்ல வைக்கிறது. நன்றி ஜாக்கிசேகர்..

    ReplyDelete
  9. ஏதோ உங்களை போன்ற மத்த பதிவர்கள் அதரவும் ஊக்கமுமே இந்த எழுத்தார்வத்துக்கு காரணம் என்பேன், இந்த விமர்சனஙக்ளை இன்னும் நிறைய பேர் படித்து பயன் பேற ஏதாவது உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்

    ReplyDelete
  10. இந்தப் படம் பார்த்ததில்ல. ரன் லோலா ரன் படம் பார்த்திருக்கேன். வித்தியாசமான படம்.

    ReplyDelete
  11. இந்தப் படம் பார்த்ததில்ல. ரன் லோலா ரன் படம் பார்த்திருக்கேன். வித்தியாசமான படம்.

    ReplyDelete
  12. பெத்ராய்டு இந்த படம் பாருங்கள் அந்த படத்தை ஒப்பிடும் போது இது கொஞ்சம் வேகம் குறைவுதான் ஆனால் நல்லபடம்

    ReplyDelete
  13. வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன்.. தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner