நல்ல படங்களை புறக்கணி்க்கும் நம்மவர்கள்....
நல்ல படங்களை தமிழர்கள் புறக்கனிப்பது என்பது இன்று நேற்று நடக்கும் விஷயம்ல்ல , சில படங்கள் நல்ல விளம்பர படுத்தபட்டும் சரியாக ஓடாது. சில படங்கள் காதநாயகர்களின் ரசிகர்களின் போட்டியால் படங்கள் படு தோல்வி அடையும்
சில படங்கள் மிக நன்றாக இருந்தும் படம் வாங்கிய வினியோகஸ்தர்கள்,மற்றும் இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் அலட்சியத்தால் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களின், சினிமா பற்றிய புரிதல் காரணமாக படம் ஓடாமல் போய்விடும் அந்த வகையில் நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான கண்னா அந்த வகையை சார்ந்தது அல்லது மேலுள்ள லிஸ்ட்டில் சேர்க்கபட்டவை எனலாம்.
கண்னா படம் பற்றி ஒரு சிறு விமர்சனம்...
கோவையில் ஒரு பணக்காரர் பிரகாஷ்ராஜ் மற்றும் அவர் மனைவி சரண்யா இந்த தம்பதிகளுக்கு ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் பெண். மற்றும் ஒரு பையன் இருக்கிறார்கள்.பெண் ஊட்டிக்கு சுற்றலா செல்கையில் அங்கு கண்னா எனும் வாலிப வயதுடைய பையன், அந்த பெண்ணுக்கு பழக்கம் ஆகிறான். சுற்றுலா முடிந்து வந்தாலும் அந்த பையன் ஞாபகமாக இருக்கும் அந்த பெண் பெற்றோருக்கு தெரியாமல் ஊட்டிக்கு சென்று அந்த பையனை சந்திக்க விருப்புகிறாள் அந்த பத்தாம் வகுப்பு படித்த அந்த பெண் அந்த கண்னா என்ற பையனை சந்தித்தாளா? அந்த பத்தாம் வகுப்பு பருவ பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள் என்ன? என்பதுதான் கதை .
தமிழில் இந்த மாதிரி கதை முயற்ச்சிகள் எப்போதாவது அத்தி பூத்தாற் போல் நடக்கும் விஷயங்கள். இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு பிரகாஷ் ராஜுக்கு கொடுத்த சம்பளமாவது கிடைத்து இருக்குமா என்பது தெரியவில்லை.
பெண்னை கானோம் என்றதும் பிரகாஷ்ராஜ் ஒரு நடுத்தர தகப்பனின் அவஸ்தையை மிக அழகாக வெளிபடுத்தி இருக்கிறார் அதே போல் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷுலா பெரும்பாலான படங்களில் தன் மார்பையும், இடுப்பையும் நம்மி களம் இறங்கும் இவர் இந்த படத்தில் தன் நடிப்பை நம்மி களம் இறங்கி இருக்கிறார் அது நன்றாகவே கை கொடுத்து இருக்கிறார்.
பெண் கிடைத்த உடன் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல்அந்த பெண்னை அனைத்து கொண்டு தேற்றுகிறார்கள் பாருங்கள் அது ஒன்று போதும் இது நல்ல படம் என்று உணர்த்த...
படத்தை இயக்கிய திரு ஆனந் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.படத்தில் எந்த லாபமும் கிடைத்து இருக்காது.இருப்பினும் இந்த மாதிரி கதைகளை படமாக்க முன் வந்த தயாரிப்பாளருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
அன்புடன் /ஜாக்கிசேகர்
Labels:
சினிமா விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
oh.. indha padathai pathi kaelviyey patadhilai .. yepo vandhadhu ?
ReplyDeleteசென்ற வாரம் டி.வி யில் இந்தப் படம் பார்த்தேன், நன்றாக இருந்தது.
ReplyDeleteஇந்தப் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளர்களும் கண்டிப்பாக பாராட்டப் பட வேண்டியவர்கள்.
யாத்ரீகன் கற்றது தமிழ் வந்து இரண்டு மாதத்துக்கு பிறகு வந்தது
ReplyDeleteநிச்சயமாக வெங்கட் உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒன்றே
ReplyDeleteநல்ல விமர்சனம்.
ReplyDeleteஅந்த பெண் தன் இடுப்பையும் சதையையும் நம்பி இறங்கியிருந்தால் நம்மவர்கள் இதை வெற்றிப்படமாக்கியிருப்பார்களோ என்னவோ!!
:))))))
படம் பாக்கலை :(