விஜய் டிவியிடம் இருந்து மற்ற டிவிக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்

விஜய் டிவி சதந்திர தின நிகழ்ச்சிகள் நேற்று ஒளிபரப்பியது. அதில் அவர்கள் சாதனை செய்த தமிழர்களின் பெயர், மற்றும்அவர்கள் எந்த துறையில் சாதனை செய்தார்கள் என்ற தகவல்களை ஒளிபரப்பியதோடு அவர்களுக்கு விஜய் டிவி தனது நன்றியை தெரிவித்து “தமிழன் என்று சொல்லடா” என்று வீர முழக்கம் இட்டது. சாதனை செய்த தமிழர்களுக்கு அங்கிகாரம் அளிக்கும் விதமாக பாரட்டு சொன்னது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

சாதனை தமிழர்களை நமது சுதந்திர தின நாளில் அவர்களை பெருமை படுத்திய விஜய் டிவிக்கு இந்த ஜாக்கிசேகரின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல....

தொடரட்டும் விஜய் டிவியின் சமுதாய பணிகள்
வாழ்த்துக்கள்

அன்புடன்/ ஜாக்கிசேகர்

6 comments:

 1. வழிமொழிகிறேன்

  நித்யகுமாரன்

  ReplyDelete
 2. நீங்கள் சொல்வது மிகவும் சரி ஜாக்கி. டிவிக்களை பொறுத்தவரை சினிமா என்பது அதன் ஒரு பகுதியாகத்தான் இருக்கவேண்டும், விருந்தில் இனிப்பைப் போல. ஆனால் இது போன்ற முக்கிய நாட்களில் அவர்களின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் என்னவோ இலையெல்லாம் இனிப்பைப் பரிமாறியது போல ஒரு உவ்வே..

  சுதந்திர தினத்தன்றும் காலை முதல் மாலைவரை வெறும் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளையே ஒளிபரப்புவதை இவர்கள் எப்போதுதான் நிறுத்துவார்களோ.

  விஜய் டிவியின் ஒரு சில நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இவற்றிலிருந்து வேறுபடுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

  ReplyDelete
 3. வாருங்கள் வெண் நீங்கள் சொல்வது உண்மைதான்

  ReplyDelete
 4. நன்றி நித்யா தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner