(பாகம்/2) பார்த்தே தீர வேண்டிய படங்கள்..........


பார்த்தே தீர வேண்டிய படங்கள் ஒரு முன்னுரை..............

ஒரு படத்தை எப்படி பார்ப்பது என்று முதலில் நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டும்
ஒரு படத்தை எந்த இடையூறு இல்லாமல் பார்க்க வேண்டும். படம் பார்க்க வேண்டும். அதுவும் நல்ல படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே படம் பார்க்க வேண்டும். பல பிரச்சனைகளை வைத்துக்கொண்டு படம் பார்க்க வேண்டாம்.

ஒரு திரைப்படத்தின் ஆரம்ப பத்து நிமிடங்களை ஹீக் என்று அழைப்பார்கள் அதாவது எதோ எதோ பிரச்னைகள் மற்றும் மன நிலைகளில் படம் பார்க்க வரும் ரசிகனை, அந்த படத்தின் தொடக்க காட்சிகள் அந்த படத்தோடு அந்த ரசிகனை
கட்டி போட வேண்டும்.
பொதுவாக பத்து மணிக்கு படம் என்றால் ஒன்பது ஐம்பதுக்கு தியேட்டர் உள்ளே இருக்க வேண்டும். ஆனால் நம்மவர்கள் பத்து இருபதுக்கு உள்ளே வந்து எல்லாருடை காலை மிதித்து விட்டு படம் போட்டு எவ்வளவு நேரம் இருக்கும்?என்று நம்மிடம் எறிச்சலுட்டும் கேள்வியை கேட்டுவைப்பார்கள். “எவ்வளவோ சீக்கிரமாகதான் வந்தேன் கொஞ்சம் டிராபிக்ல மாட்டிகிட்டேன்”என்று நாம் கேட்காமலே விளக்கம் எல்லாம் தருவார்கள்.

நமது படங்கள் எல்லாம் முதலில் ஹீரோ என்ட்ரி உடனே ஒரு சாங் வைத்து விடுவார்கள். நம்மாளு ஒரு தம் போட்டு வெட்டி கதை பேசி எல்லாருடைய காலை மிதிச்சு படம் போட்டு பத்து நிமிஷம் இருக்குமா? என்ற கேனை கேள்வி கேட்கும் போதுதான் நம்ம டைரக்டர்கள் மெயின் சப்ஜெக்டுக்கு வருவாங்க...(உம்) ராமராஜன் படங்கள்

சரிசார் ஹீக் படங்களுக்கு எதாவது உம் கொடுங்கள் சார் .

ஓகே தனுஷ் நடிச்ச பொல்லாதவன் படம் பார்த்து இருப்போம் அதுல, எடுத்ததும் ஹீரோ திரையை பார்த்து சில வசனம் பேசுவார், நான் ரெண்டு பேரை போட்டுட்டன், ரெண்டு பேர் தப்பிச்சு என் வீட்டுக்கு போயிருக்காங்க, அவுங்க போறதுக்குள்ள நான் வீட்டுககு போகனும். எனக்கு கால்ல ஒரு வெட்டு வேற விழுந்து இருக்கு, என்று சொல்லி நடந்து வந்து, ஒரு பல்சர் பைக் அருகே ரத்தகாயங்களுடனும் கையில் கத்தியுடன் வந்து நிற்பார்.

ரத்தகாயங்களுடனும் நிற்க்கும் ஒரு ஹீரோ எல்லாத்துக்கும் இந்த “பல்சர்பைக்”தான் காரணம் என்று சொன்னால் உங்களுக்கே மனதில் கேள்வி வரும் எப்படி இந்த பைக் காரணமாக இருக்கும்என்ற கேள்விகளோடு கவனமாக கதை மேல் ஒன்றி படம் பார்க்க துவங்குவீர்கள்.

பொதுவாக பொல்லாதவன் வெற்றிக்கு அந்த கதையுடன் பார்வையாளனை கட்டி போட்ட விதம்தான் அந்த படத்தின் வெற்றிக்குகாரணம் தறுதலை புள்ள, காதல், அப்பனை எதிர்த்தல் போன்ற பல விஷயங்கள், பார்த்து பார்த்து சலித்து போன கதை என்றாலும், அதை வெற்றிமாறன் கொடுத்த விதம் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்பேன்.

பொல்லாதவன் படத்தின் கூடுதல் வெற்றிக் காரணம் நான் முன்பே சொன்னது போல் தமிழர்கள் 15 நிமிடம் படம் ஓடி பார்ப்பவர்கள் அதனால் பொல்லாதவன் படத்தின் முதல் பத்து நிமிடங்களை பார்க்கவில்லை என்றால் திரும்பவும் அந்த படத்தினை பார்த்தே ஆக வேண்டும் அதனால் கூட அந்த படம் ஓடி இருக்கும்
( சும்மா ஜோக்கு)


சரி ஒரு படம் எப்படி இருக்கவேண்டும்? இந்த பொருளாதார பிரச்சனைகள் மிகுந்த வாழ்வில் எந்த படம் இரண்டு மூன்று நாட்கள் அந்த படத்தின் பாதிப்பு தொடர்ந்து இருக்கிறதோ அதுதான் நல்லபடம். (உம்) காதல் திரைப்படம்.

சார் எங்களுக்கு ஷகிலா நடிச்ச கனவில் கில்மா கூடதான் என் நெஞ்சிலேயே மூணு நாலு, நாளைக்கு இருக்கு அது எப்படின்னு நண்பர் நித்யயயயா போல கேள்வி கேட்க கூடாது. அந்த மாதிரி படங்கள் உங்க நெஞ்சிலயும் இருக்கும்,உங்க கு.........இருக்கும்.
( உங்க குண்டக்க மண்டக்க கேள்வியிலயும் இருக்கும்னு சொல்ல வந்தேன்)

லெட்மீ கம் டு த பாயிண்ட்....
இப்போது நான் எழுத போகும் படங்கள் சத்யஜித்ரே காலத்து பழம்காலத்து படங்கள் அல்ல....

அதே போல் சோகத்தை மட்டும் பிரதானமாக கொண்ட படங்கள் அல்ல.பொதுவாய் பிளாக் அண்டு ஓயிட் படங்களை பற்றி நான் எழுத போவது இல்லை. நான் சொல்ல போகும் படங்கள் உங்களுக்கு அந்த படம் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.

எனென்றால்அவார்டுவாங்கும் எல்லா படங்களும் சூப்பர் படங்கள் அல்ல, போன உலக பட விழாவுக்கு முந்தய உலக படவிழாவின் போது எழுத்தாளர்கள் சுபா வை சந்தித்தேன், அவர்கள் இருவரும் என்னுடைய நண்பர்கள் அதிலும் பாலகிருஷ்னன் எப்போதும் என்னை நினைவில் வைத்து இருப்பவர்...

அவர்கள் ஒரு உக்ரென் நாட்டு படம் பாத்து விட்டு வெறுத்து போய் வெளியே வந்தார்கள் அந்த படத்தின் கதை என்னவென்று கேட்டேன் சார் ஒருத்தன் கேமராவை பத்து நிமிஷம் பார்த்துகிட்டே இருக்கான்சார் அப்புறம் இன்னொருத்தன் காட்டுறாங்க என்ற வெறுத்துபோய் சொன்னார்கள். சில படங்கள் படம் பார்த்தவர்களை வெறுக்க வைக்கும் படங்களும் இதில் அடங்கும்நாம் அப்படி பட்ட படங்கள் இல்லாமல் ரொம்பவும் எல்லோரையும்,என்னையும் கவர்ந்த படங்களை இனி பார்ப்போம். நீங்கள் பின்னுட்டம் மற்றும் உங்கள் ஓட்டுக்களை வைத்தே என் கலைதாகம் அதிகரிக்கும்

அன்புடன்/ ஜாக்கிசேகர்

12 comments:

 1. பொல்லாதவன் நல்ல படம் மேலும் தரமான படம், எவராயினும் வாழ்கையில் ஒரு தடவையாவது பார்க்க வேண்டிய படம்,
  வாழ்த்துகள் வெற்றிமாறன்

  ReplyDelete
 2. ஜாக்கி சேகர் மற்றவர் மனது புண் படும் படி கூறாமல் நீங்கள் சொல்ல வந்த கருத்தை பற்றி மட்டும் கூறினீர்கள் என்றால் சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 3. கிரி நீங்கள் சொல்வது எனக்கு விளங்க வில்லை,நான் இந்த கட்டுரையில் எவர் மனதையும் புண்படுத்தவில்லையே...

  ReplyDelete
 4. நன்றி துரை தங்கள் வருகைக்குக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 5. ஆவலுடன் இருக்கிறோம்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. நன்றி சரவணகுமரன், தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 7. படங்களின் ஆரம்பத்தில் இருப்பதாக நீங்கள் சொல்வதைப் போன்ற ஒரு ஹூக் இந்த கட்டுரையின் முதல் பாகத்திலேயே வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இனி வெளுத்துக்கட்டுங்கள்.

  ஆனாலும் ஷகீலா படங்களின் பாதிப்பு 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே இருப்பதாக சொல்வதை நான் வன்மையாக மறுக்கிறேன்.

  அன்பு நித்யன்

  ReplyDelete
 8. நன்றி நித்யா,தங்கள் வருகைக்கு,உங்கள் தொடர் ஊக்குவிப்பு்க்கும்

  ReplyDelete
 9. /
  பின்னுட்டம் மற்றும் உங்கள் ஓட்டுக்களை வைத்தே என் கலைதாகம் அதிகரிக்கும்
  /

  உங்க கலை தாகத்தை கூட்ட எங்கள் கொலைமுயற்சி பின்னூட்டம்1

  ReplyDelete
 10. /
  பின்னுட்டம் மற்றும் உங்கள் ஓட்டுக்களை வைத்தே என் கலைதாகம் அதிகரிக்கும்
  /

  உங்க கலை தாகத்தை கூட்ட எங்கள் கொலைமுயற்சி பின்னூட்டம்2

  ReplyDelete
 11. /
  பின்னுட்டம் மற்றும் உங்கள் ஓட்டுக்களை வைத்தே என் கலைதாகம் அதிகரிக்கும்
  /

  உங்க கலை தாகத்தை கூட்ட எங்கள் கொலைமுயற்சி பின்னூட்டம்3

  ReplyDelete
 12. //நித்யகுமாரன் said...
  ஆனாலும் ஷகீலா படங்களின் பாதிப்பு 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே இருப்பதாக சொல்வதை நான் வன்மையாக மறுக்கிறேன்.//

  பின்ன.. அடுத்த வெள்ளிக்கிழமை படம் மாத்தறவரைக்கும் இருக்கும்.. கரெக்ட்டா நித்யா..?

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner