இந்தியாவில் ராஜீவ்காந்தி, இந்திரா உயிர்கள் மட்டும்தான் நெய்யில் பொறித்ததா மற்ற உயிர்கள் எல்லாம் ????
மறைந்த இந்திய பிரதமர்கள் இந்திரா அவர் மகன் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்தியமண்ணில் கொடுரமாக கொலை செய்யப்பட்டார்கள். உடனே குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டார்கள். இரண்டு கொலைகளும்,ஒரு இனத்தை சீண்டி பார்க்க அது கொலைகளில் முடிந்தது.
ஆனால் மூன்று வருடத்தில் இந்தியாவில் இதுவரை 494 போ் குண்டு வெடிப்புகளில் இறந்தும் முற்றிலும் தீவரவாதத்தை வேரருக்கவும் வில்லை, முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவும் இல்லை.
பொற்கோவிலில் ராணுவத்தை நிறுத்தினார்பிரதமர் இந்திரா என்பது முதல் கொலைக்கான காரணம் .
கால ஓட்டத்தில் சிக்கியர்கள் மன்னிக்கப்பட்டார்கள். அந்த இனத்தை சேர்ந்த மன்மோகன்சிங் இன்று பிரதமர்.
ராஜீவ்காந்தி கொலை,அதே போன்ற ஒரு அரசியல் கொலைதான், இலங்கைக்கு இந்திய அமைதிபடை அனுப்பி ஜெயவர்தனே வஞ்சக சூழ்சசியால் இந்தியர்களை விட்டே தமிழர்களின் வீடுகள் மற்றும் கற்புகள் சூறையாட பட்டன. அதுதான் இரண்டாம் கொலைக்கான காரணம்.
ஆனால் இன்று வரை,விடுதலைபுலி இயக்கம் இந்தியாவில் தடை செய்ய பட்ட இயக்கமாக இருக்கிறது. இந்தய மண்ணில் அவர்கள் செய்த செயலுக்கு அவர்கள் இன்றளவும் வருத்தம் கொள்கிறார்கள். இருப்பினும் அவர்களை நாம் மன்னிக்க தயாரில்லை.
ராஜீவ் மகள் பிரியங்கா காந்தியே அது ஒரு துன்பியலான சம்பவம் என்றாலும் தமிழக காங்கரஸ் காரர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் தமிழகத்தில் அரசியல் நடத்த அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை
இந்த மூன்று வருடங்களில் 494 பேர் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு இறந்து போய் உள்ளனர்
ஆனால் இதுவரை எந்த அமைப்பையும் தடை செய்யவில்லை, அப்படி தடை செய்தாலும் கண்கானிப்பு வலையத்துக்கு உட்படுத்த பட வில்லை.
எனென்றல் ஓட்டு போய் விடும் என்ற பயம்.
இதனால் பல இஸ்லாமிய சகோதரர்கள் குஜராத் கலவரம் போல் ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுகின்றனர்.
வேற்றுமையில் ஒற்றுமைகாணும் நமது நாடு இன்னும் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும்
இந்த மூன்று வருடத்தில் தீவிரவாதத்தால் இறந்து போன494 பேரும் இந்திரா,ராஜீவ் போல் ரத்தமும் சதையுமுள்ள மனிதர்கள் என்பதை நாம் மறக்ககூடாது.
இரண்டு மூன்று தாக்குதல் செய்த விடுதலைபுலிகள் மீது இன்றளவும் இந்தியாவில் தடை இருக்கிறது . ஆனால் நம்மோடு கலந்து பழகும் மக்களோடு மக்களாக தீவிரவாதிகள் கலந்து போய் உள்ளார்கள்
இந்தியாவில் பிறந்த அனைத்து உயிர்களையும் சமமாக நடத்தப்படவேண்டும் என்பதே என் வேண்டுகோள் அதில் ராஜீவ் உயிருக்கு ஒரு மதிப்பு மற்றவர்களுக்கு ஒரு மதிப்பு என்ற பாகு பாடு வேண்டாம்.
அதே போல் ராஜீவ் கொலையை நியாயப்படுததவில்லை.
அகமதாபாத் குண்டு வெடிப்பின் போது ஒரு முஸ்லீம் பெரியவர், டிவியில் பேட்டி கொடுக்கும் போது,பொது மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்த போது அந்த பெரியவர் கண்களில் பயம் தெரிந்தது. அது போன்ற நிலை இனி ஏற்படக்கூடாது இனி மத்திய அரசு முற்றிலும் விழிப்பாக இருக்கவேண்டும்,
இந்திய உளவுத்துறை துயில்கலைந்து எழ வேண்டும்....இந்தியாவில் எல்லா உயிர்களும் விலை மதிக்க முடியாதது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்
அன்புடன்/ஜாக்கிசேகர்
Labels:
செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
பல இஸ்லாமிய சகோதரர்கள் விடுதலைபுலிகளால் கொல்லப்பட்டார்களே ! அதைப்பற்றி தங்கள் கருத்து ?
ReplyDeleteநன்றி அவன் . நான் இலங்கை அரசியல் பற்றி பேசவில்லை,அதே போல் அவர்கள் செய்யும் அனைத்தையும் நான் ஞாயப்படுத்தவில்லை, என் பதிவு இந்தியாவில் பலியாகும் உயிர்களை பற்றியும் இந்தியாவில் தீவிரவாதம் வேறருக்க வேண்டும் என்பதே...இந்தியாவில் விடுதலைபுலிகள் இயக்கம் தடை செய்ய பட்டஇயக்கம் இருந்தும் , இந்தியாவில்494 பேர் இயற்கையை மீறி கொல்லபட்டு உள்ளார்கள் அவர்களை அந்த இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்பதே. நம் மண்ணில் குஜராத் கலவரம் போல் இன்னோன்ரு நடக்ககூடாது என்பதே...
ReplyDeleteஉங்களின் பதிவை வாசித்ததில் எனக்கு தாங்கள் சொல்ல வந்தது புரியவில்லை.
ReplyDelete****நம் மண்ணில் குஜராத் கலவரம் போல் இன்னோன்ரு நடக்ககூடாது என்பதே.****
நிச்சயமாக.
நன்றி அவன், சில விஷயங்களில் வேகம் காட்டும் அனைத்தும் பல விஷயங்களில் வேகம் குறைவும். உயிர்களில் சின்ன உயிர் பெரிய உயிர் என்ற மதிப்பீடும்தான். என் பதிவின் கருத்து, மீண்டும படித்தால் ஒருவேளை புரியலாம்
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் தெளிவாக எழுதியிருக்கலாம் எனத் தோணுகிறது.
ReplyDeleteஉண்மையான காந்தியவாதிகள் இப்போது காங்கிரஸில் மட்டுமல்ல, எந்த கட்சியிலுமே இல்லை.
காங்கிரஸ் இன்று தலைமைக்கு காவடி எடுக்கும் அதுவும் குழு குழுவாக காவடி எடுத்துக்கொண்டு, பதவிக்கு அலையும் கும்பல் தானே, ராஜிவின் சொந்த மகள் பிரியங்காவே தன் தந்தையின் கொலையை மறந்தாலும் இவர்கள் மறக்க மாட்டார்கள், அதற்கு காரணம் ராஜிவ் மேல் உள்ள பாசம் காரணம் அல்ல. சோப்பு போடும் வேலைதான் அது. நேரு குடும்பம் மட்டும் காங்கிரஸ் தலைமை பெறுப்பில் இருந்து சுத்தமாக விலகட்டும், அப்புறம் பாருங்கள் இவர்களது பாசத்தை.
ஜோ நன்றி. இன்னும் சிறப்பாக எழுதலாம் ஆனால் சில விஷயங்களை இப்படித்தான் சொல்ல முடிகிறது.
ReplyDeleteதங்களின் உச்ச நீதி மன்ற பதிவு ரொம்பவும் அருமை. தமிழக காங்கிரஸ் காரர்கள் வேண்டாம் வாயில ஏதாவது வந்துடும்
ஏன மிஸ்டர் ஜாக்கி சேகர்! முழுநேர ஆர்.எஸ்.எஸ். ஊழியராக திட்டமிட்டுள்ளீரா? "குண்டுவெடிப்பை முஸ்லீம் தீவிரவாதிகள் நிறுத்திக்கொள்ளவில்லை என்றால் குஜாராத்தைப்போல இந்தியா முழுவதும் உள்ள முஸ்லீம்களை கொன்று குவிப்போம்" என்று சொல்லாமல் சொல்கிறீர்கள். இதை ஏன் சுற்றி வளைத்து, பூசி மெழுகி...
ReplyDeleteநீங்கள், அதிக சம்பளம் வாங்கும் சாஃப்ட்வேர் இளைஞனின் சல்லாபங்களோடு நிறுத்திக்கொள்வது நலம் என்று நினைக்கிறேன். //இதனால் பல இஸ்லாமிய சகோதரர்கள் குஜராத் கலவரம் போல் ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுகின்றனர்// "கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கபடுவார்களோ என்று அஞ்சுகிறேன்" என்று ரஜினி கிளப்பிவிட்டதுபோல் தோன்றவில்லை? இப்போது தோன்றுமே!
நன்றி திங்கள் நான் ஆர் எஸ் எஸ் காரனாக இருந்தால் முதலில் இப்படி பதிவு எழுதியிருக்க மாட்டேன் நீங்கள் அந்த டீவி பேட்டியை பார்க்கவில்லை.அதே போல் என் பதிவு உங்களுக்கு வேறு ஒரு அர்தத்தை தந்து இருக்கிறது, அதற்க்கு நான் பொறுப்பாளி அல்ல தங்கள் வருகைக்கு நன்றி
ReplyDelete//ஆனால் மூன்று வருடத்தில் இந்தியாவில் இதுவரை 494 போ் குண்டு வெடிப்புகளில் இறந்தும் முற்றிலும் தீவரவாதத்தை வேரருக்கவும் வில்லை, முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவும் இல்லை.//
ReplyDeleteநிலமை இப்படி இருக்க
//இந்த மூன்று வருடங்களில் 494 பேர் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு இறந்து போய் உள்ளனர்
ஆனால் இதுவரை எந்த அமைப்பையும் தடை செய்யவில்லை, அப்படி தடை செய்தாலும் கண்கானிப்பு வலையத்துக்கு உட்படுத்த பட வில்லை.
எனென்றல் ஓட்டு போய் விடும் என்ற பயம்.//
என்று அடித்துக் கூறுகிறீர்களே அது எப்படி?.
கோவை குண்டு வெடிப்பு மற்றும் மும்பை குண்டு வெடிப்புகள் இரண்டு மட்டுமே இஸ்லாமிய பெயர் கொண்ட தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்று உறுதி படக் கூறப்பட்டு ஓரளவாவது நீருபிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற அனைத்துமே முன்பு பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதம், பிறகு பங்காளாதேச தீவிரவாதிகள் என்று ஏட்டளவில் மாத்திரமே உள்ளதே, அதை நீங்கள் கவனிக்கவில்லையா?. இப்பொழுது குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்று ஏதோ "முஜாகிதீன்" -கள் கடிதம் அனுப்பியுள்ளனராம், இவையெல்லாம் வியப்பாகவே உள்ளது, குண்டு வெடிப்புகள் அனைத்துமே இஸ்லாமிய மக்களின் மீது வெறுப்பையள்ளி வீசுவதற்க்காகவேயன்றி வேறில்லை. இதை இஸ்லாமிய பெயர் கொண்டவன் செய்தாலும் இல்லை வேறு யார் செய்தாலும் குறிக்கோள் ஒன்றுதான்.
தீவிராவதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் அனைத்துமே மனித குல விரோதிகள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை, ஒழிக தீவிரவாதம்.............. ஒழிக தீவிரவாதம்..............
தீவிராவதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் அனைத்துமே மனித குல விரோதிகள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை, ஒழிக தீவிரவாதம்.............. ஒழிக தீவிரவாதம்.....”........ எனக்கும் மாற்று கருத்து இல்லை. ஸயீத்.பிரபல இந்தியா டுடே பத்திரிக்கைதலையங்கத்தை தாங்கள் படிக்க வேண்டுகிறேன்.ஆகஸ்ட் 7/13 2008 இதழை வாசியுங்கள்.
ReplyDeleteஒரு சிறு விளக்கம்.... நண்பர் ஒருவர் சட்டென ஆர் எஸ் எஸ்காரர் என்று என்னை சொல்கிறார் மற்றவர் எப்படி இஸ்லாமிய தீவிரவாதம் என்று எப்படி சொல்கீறீர்கள்? என்கிறார் இந்த வார இந்தியா டுடே பத்திரிக்கை தலையங்கத்தில் இரண்டாயிரமாவது ஆண்டில் இருந்து இந்தியாவில் 69 இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்களால்,1120 இறந்து இருக்கிறார்கள்என்று தலையங்கத்தில் எழுதியிருக்கிறது. யார் குண்டு வெடிப்பு இந்தியாவில் நிகழ்த்தினாலும் அது எந்த அமைப்பு நடத்தினாலும் கண்டனத்திற்க்கு உரியது. உயிர்களின் மதிப்பு பொதுவானது என்பதற்க்காகவே இந்த பதிவு. ஒரு முஸ்லீம் பெரியவர் தொலைகாட்சி பேட்டியில் (ஹெட்லைன்ஸ் டுடே) எல்லோரும் வதந்தியை நம்பாமல் எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை பார்த்ததால்தான்இந்த பதிவு எழுதினேன்.
ReplyDelete//பல இஸ்லாமிய சகோதரர்கள் விடுதலைபுலிகளால் கொல்லப்பட்டார்களே ! அதைப்பற்றி தங்கள் கருத்து ?//
ReplyDeleteஇதன் அர்த்தம் தமிழர்கள் இஸ்லாமிய விரோதிகள் என்பதா?அப்படியானால் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது தெரிகிறது.தமிழகத்தில் கழகமும்.இஸ்லாமிய கட்சிகளும் வேடம் போடுகிறார்களா?
அவனும் அவளுக்கும் எத்தனையோ அப்பாவித் தமிழர்களை ஹிஸ்புல்லாவின் ஜிகாத்தும் முஸ்லீம்களும் கொலைசெய்தார்களே செய்துகொண்டிருக்கிறார்களே அது மட்டும் ஏன் உங்கள் நினைவுக்கு வரவில்லை.
ReplyDeleteநன்றி நல்ல தந்தி, தங்கள் வருகைக்கு, முஸ்லீம் குடும்பத்தினரை வேறு இடம் செல்ல வைத்தற்க்காக மறைந்த விடுதலைபுலிகள் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் மிகவும் வருத்தப்பட்டதாக நினைவு
ReplyDeleteநன்றி திரிஷா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDelete//தமிழக காங்கரஸ் காரர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் தமிழகத்தில் அரசியல் நடத்த அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை//
ReplyDeletethats y still we are supposed to act against our tamil sakothararkal...
nice but too hot post...
because of anger in ur words, this post is leaning towards oneside...
keep it up...
thanks tamil, thank you so much for visiting my site
ReplyDeleteஎந்த முஸ்லீம் இயக்கங்களையும் தடை செய்யவில்லை என்பது தவறு. சிமி, அல் உம்மா, ஜிகாத்கமிட்டி உள்பட பல முஸ்லிம் இயக்கங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இருந்தபோதும் குண்டுவெடிப்புகள் தொடர்கின்றன என்றால் அதற்கான காரணம் என்னவென்று யோசிக்கவேண்டும். மேலும் இந்துத்துவ இயக்கங்கள் பற்றித் தங்கள் கருத்து என்னவென்று தெரியாமல் பொத்தாம்பொதுவாகப் பேசமுடியாது. இந்தியாடுடே தலையங்கம் எந்தளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தது, அது எப்போதாவது 'இந்து பயங்கரவாதம்; என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறதா போன்ற கேள்விகளைக் கவனத்திலிருத்துங்கள்.
ReplyDeleteஇந்தியாவின் இப்போதயத்தேவை
ReplyDeleteஅன்பு
பாசம்
பரிவுனர்வு
பரஸ்பர நம்பிக்கை
அமைதி ஆனந்தம்
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
அப்படி தடை செய்தாலும் அதனை கண்காணிப்பு வலையத்துக்குள் வைக்க வில்லை என்கிறேன்.. அது மட்டும் அல்லாமல் இந்தியா டுடே நம்பகத்தன்மை பற்றி பொதுமக்கள்தான் சொல்ல வேண்டும, பாபர் மசூதி இடிப்புக்கு பிறகுதான் எல்லாம் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்னும் தொடர் குண்டு வெடிப்பு செய்வது யார்???? நன்றி திவாகர் தங்கள் கருத்துக்கு
ReplyDeleteநன்றி விஜய் தங்கள் கருத்தே என் கருத்தும்
ReplyDelete