(பாகம்/1)அனைத்து வலைபதிவர்களுக்கும் ஒரு அறிவிப்பு....


பொதுவாய் நான் வலைபதிவுலகுக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் இதுவரை 9304 பேர் என் பதிவை வாசித்து விட்டார்கள்... என் எழுத்து ரசிக்க தக்கதாகவே இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். இறைவனுக்கும் நன்றி.எனக்கு தமிழ் புதினங்கள் வாசிக்க கற்று கொடுத்த என் அன்னைக்கும் என் நன்றிகள். சில விஷயங்களை சுவை பட எழுதிகிறேன் என்பது எனக்கே தெரிகின்றது .

என் பதிவுகளை மாற்று வலை பக்கத்தில் தொடர்ந்து இடம் கொடுக்கும் நண்பர்களுக்கும், மற்றும் பல வாசக நண்பர்கள் என் பக்கத்தினை லிங்க் கொடுத்து மற்றவருக்கு படிக்க உதவியாய் இருந்தவர்களுக்கும் என் நன்றிகள்


தொடர்ந்து என் பதிவை வெளியிட்டுவரும் தமிழ் மணத்துக்கு என் நன்றிகள் தேன்கூடு எப்போதாவதுதான் என் பதிவை வெளியிடுகிறது அதே போல்தான் தமிழ் கனிமை மற்றும் தமிழ் வெளி போன்றவைகள் எல்லாம்......
மூன்று மாதங்களுக்கு முன் என் வீட்டுக்கு எதெச்சையாக வந்த நண்பர் நித்யா
http://nithyakumaaran.blogspot.com/ பதிவை துவக்கி கொடுத்தார்.அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். எற்கனவே பதிவுகள் பற்றி தெரிந்து இருந்தாலும், என் தயக்கங்களை உடைத்து என்னை உற்சாகபடுத்தியது நித்யாதான்.

பொதுவாய் பிறர் வலைதளம் சென்றாலும் கருத்து மோதலில் சிக்காமல் இருக்கவே நான் ஆசைபடுபவன் இருப்பினும் என் எழுத்துக்ளை தொடர்ந்து வாசித்து பின்னுட்டம் இட்டும் உற்சாக படுததிவரும் பதிவர்கள், மங்களுர் சிவா, வெண்பூ,நித்யா,இவன், கிரி,போன்ற சில முகம் தெரியாத பதிவர்களுக்கு என் நன்றிகள்.

மங்களுர் சிவா ஒரு படி மேலே போய் அவர் பதிவில் எனது பதிவை இனைக்க அவர் பதிவு மூலமாக நிறைய பேர் வாசிக்கிறார்கள் திரு மங்களுர் சிவாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்


நான் நிறைய படங்கள் பார்ப்பவன், நான் ஒரு கேமராமேன். நான் இதுவரை முன்று குறும்படக்ள் இயக்கி இருக்கிறேன். நான் இயக்கிய முதல் படம் துளிர் எனும் படம் மாநில அளவிலான குறும்பட போட்டியில் முன்றாம் பரிசு பெற்றது.

நிறைய உலக பட விழாக்களில் கலந்து கொண்டு இருக்கிறேன்.யார் யாரோ படங்களின் விமர்சனங்கள் எழுதும் போது,
நான் ரசித்த நெகிழ்ந்து போய் கண்களில் ஜலம் வைத்து பார்த்த படங்களை

“பார்த்தே தீர வேண்டிய படங்கள்”

எனும் தலைப்பில் எழுத போகிறேன் உங்கள் மேலான கருத்துக்களையும் ஆதரவுகளையும் கொடுக்க வேண்டுகிறேன்.

இதில் எந்த நாட்டு மொழிப்படமாக இருந்தாலும் அது இந்த வரிசையில் இருக்கும். அது வாசகர்கள் முன்பே பார்த்த படமாக கூட இருக்கலாம்.

எல்லா நல்ல படங்களையும் இந்த அடைப்புக்குள் சேர்க்க வேண்டும் என்பதே என் எண்ணம்

அன்புடன்/ ஜாக்கிசேகர்

20 comments:

 1. ரொம்ப நல்லது.பதிவுகளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. நன்றி பிரேம், தங்களின் பதிவை விரும்பி வாசிப்பவன் நான் தங்களின் அப்டுடேட் விஞ்ஞான அறிவுப்புகளுக்கு...

  ReplyDelete
 3. தொடர்ந்து நல்ல பதிவுகள் எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. “பார்த்தே தீர வேண்டிய படங்கள்”
  பதிவுகளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 5. எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதினால் நன்றாக இருக்கும். வெளியிடுமுன் ஒருமுறைக்கு இருமுறை படித்து திருத்தி அதன்பின் வெளியிடலாம்.

  ReplyDelete
 6. அண்ணாத்த லட்சரூபாய்க்கு 136 ரூபாய்க் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞன் அந்த தொடர்கதை படிக்கிறப்பவே தெரிஞ்சது உங்ககிட்ட ஒரு ஃபயர் இருக்குன்னு

  (யார்பா அது ஃபயர் குடுங்க பீடிபத்த வெச்சிக்கிறேன்கிறது!?!?)

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள். கருத்து மோதல் எதிலும் தலையை குடுக்காதீர்கள் பதிவு எதிர் பதிவு என இழுத்து அது உங்கள் தொழிலை பாதிக்கும்.

  ReplyDelete
 8. நிச்சயமாக கிரி தங்கள் ஆசிர்வாதம்

  ReplyDelete
 9. உங்கள் பின்னணி வியக்க வைக்கிறது ஜாக்கி. வலையுலகில் பலதரப்பட்ட துறைகளில் இருந்தும் பதிவர்கள் இருப்பதும் அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள முடிவதும் சந்தோசத்தை தருகிறது.

  பட விமர்சன தொடருக்காக காத்திருக்கிறேன்.

  உங்களை பதிவர் சந்திப்பில் எதிர்பார்த்திருந்தோம். அடுத்த முறையாவது ஏமாற்றாதீர்கள் ஜாக்கி.

  ReplyDelete
 10. நிறைய வேலை பளுவுக்கு மத்தியில் இந்த பதிவுகளை எழுதுகிறேன் கொத்தனார், பிழைகளோடு எழுத வேண்டும் என்பது என் வேண்டுதல் அல்ல.. கீ பேடில் தமிழ் எழுத்து ஒட்டி வைத்து தேடி தேடி அடிக்கிறேன், பிழைகள் வராமல் முயற்ச்சிக்கிறேன்

  ReplyDelete
 11. ஆவலோடு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 12. நன்றி சிவா தங்கள் வருகைக்கும் உற்சாகத்திற்க்கும்

  ReplyDelete
 13. வெண்பூ நன்றி தங்கள் வருகைக்கு, நான் டெலி சீரியல் கேமராமேனாக மூன்று சீரியல்களில் பணி புரிந்து இருக்கிறேன் வாழ்கைசுழலில் சிக்கி வேறு வேலைக்கு சென்று விட்டேன் அது பற்றிய பதிவுகள் விரைவில்.....

  ReplyDelete
 14. நன்றி வேளரசி தங்கள் வருகைக்கு

  ReplyDelete
 15. இந்தியன் உங்கள் ஆவலை நிச்சயம் பூர்த்தி செய்ய முயற்ச்சிக்கிறேன்

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் jackiesekar ...

  ReplyDelete
 17. mangalore siva thank you so much for your advice

  ReplyDelete
 18. ரொம்ப நல்லது.பதிவுகளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

  repeatu

  ReplyDelete
 19. சீக்கிரம் எழுதுங்க தலைவரே...

  மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  அன்பு நித்யகுமாரன்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner