(பாகம் 9) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை


கமல் விபத்தில் இறந்து பாடியை கமல் குடும்பத்தினர்பெற்று கல்பாக்கம் வந்து நிருவுக்கு தகவல் சொல்லினர். இனி நடந்தவைகளை சிறுதுளிகளாக பார்க்கலாம்


1. நிருவுக்கு கமல் இறந்த தகவல் சொன்னதும் அவள் எதையாவது கிடைத்ததை உடுத்தி வராமல் ஜீன்ஸ் பேண்டும் டீ ஷர்ட்டுமாக வந்த போது எல்லோரும் வாயடைந்து போனார்கள். அதுவும் இடுப்பில் பெல்ட் அணிந்து செல்போன் பவுச் மாட்டி வந்த போது இறுதி சடங்குக்கு வந்தவர்கள் மற்றும் பெண்கள் இது பற்றி அதிகம் பேசினர்.

2, கமல் இறப்பதற்க்கு முன்று மாதங்களுக்கு முன்பு நிரு சாயலில் உள்ள ஒரு பெண்ணை இ சி ஆர் ரோட்டில் ஒரு இளவயது ஆணுடன் பைக்கில் பார்த்ததாக சொன்ன போது கமல் அதை நம்ப மறுத்தான்

3. செய்தி கேள்வி பட்டதும் 15 டெம்போ டிராவலர் வேன்களில் எல்லாபெங்களுர் நண்பர்களும் பாலினம் பார்க்காமல் வயது வித்தியாசம் பார்க்காமல் வந்து சேர்ந்தனர்

4. இறுதி சடங்கு முழு செலவுகளை கமல் பெங்களுர் நண்பர்கள் ஏற்றனர்.

5. கமலின் பெண் குழந்தைகளை சாவுக்கு வந்தவர்கள் எல்லோரும் பரிதாபமாக பார்த்தனர்

6. நிரு என்னதான் உழுது புரண்டு அழுதாலும் அவள் இன்னும் ஒரு வருடத்தில் வேறு ஒருவனை நிச்சயமாக அவள் திருமணம் செய்து கொள்வாள் என எல்லா பெண்களும் சத்தியம் செய்யாத கறையாக பேசினார்கள்

7.பெங்களுர் நண்பர்கள் ஒரு நல்ல நண்பனுக்கு இப்படி ஒரு முடிவா என அழுது புரண்டனர்


8.கமல் குடும்பம் மற்றும் அவன் தெரு நண்பர்கள் , சுற்றம் எல்லோரும் எல்லா கடவுள்களையும் சபித்தனர்


9.கமல் பெங்களுர் நண்பர்கள் எல்லோரும் ரூபாய் 25 லட்சம் பணம் திரட்டிஇரண்டு மாதத்திற்க்கு பிறகு கமல் பெயரில் ஒருடிரஸ்ட் ஆரம்பித்து எழை குழந்தைகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தனர். நிருவின் பெற்றோர் சாவுக்கு வந்து போனதோடு சரிஅதற்க்கு பிறகு அவர்கள் பிரேமில் வரவே இல்லை.


10.விபத்தில் கமலுடன் இருந்த நண்பன் இன்னமும் மனநல மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறான்


(முற்றும்)


அன்புடன்/ஜாக்கிசேகர்

6 comments:

  1. வாழ்த்துக்கள் சேகர். ஒரு நல்ல தொடர் எழுதியதுக்கு.

    வருத்தமான முடிவு. ஆனால் நிஜத்தில் இதுபோல எல்லாம் நடக்கத்தானே செய்கிறது.

    ReplyDelete
  2. ஜாக்கி சார்,

    இது போன்ற சோகமான முடிவைத்தருவதற்காகத்தானா கதையை அளவு கடந்த காமெடி ஒப்பீடுகளோடு எழுதினீர்கள்...?

    ஆயிரமாயிரம் கமல்கள் நாள்தோறும் இப்படி இறந்துகொண்டிருக்கிறார்கள். நிருக்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு அருகில் நடக்கும்போதுதான் அதன் வீரியம் நம்மை நேரடியாக தாக்குகிறது. வலி தோய்ந்த இந்த கதை படிக்கும் போது தந்த சுவாரஸ்யம், முடிக்கும்போது வருத்தமாக மாறுகிறது.

    உங்களின் style of writing முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. நல்லதொரு கதை சொன்னதற்கு மிக்க நன்றி.

    தொடர்ந்து பல கதைகளைத் தாருங்கள் எனக்கேட்டுக் கொள்கிறேன்.

    அன்பு நித்யகுமாரன்.

    ReplyDelete
  3. நன்றி நித்யா தங்கள் வாழ்த்துக்கு, நீங்கள் மி்ஸ்டர் பீன் என்ற தொடரை போகோ சேனலில் பார்த்து இருக்கலாம் எல்லா எப்ஸோடுகளிலும் காமெடி இருந்தாலும் முடியும் போது மெலிதான சோகம் இருக்கும். அந்த உத்திதான் இந்த கதையிலும்... அது மட்டும் அல்ல இயக்குநர் பாலா போல் சோகபக்கங்களை மட்டும் சொல்லபோவது இல்லை, எல்லா பக்க பாதைகலிலும் பயணிப்பதுதான் எனக்கு சகமான விஷயம். இது உண்மை சம்பவம் பெயர் மாற்றப்ட்ட கமல் பாத்திரம் இன்று உயிரோடு இல்லை.. இன்னும் நிறைய விஷயங்கள் வேலை பளுகாரணமாக சொல்லவில்லை. அது மட்டும் அல்ல. கமல் பெங்களுரூவில் எல்லோருக்கும் பழக்கமானவன் அதனால்தான்.....

    ReplyDelete
  4. நன்றி மாங்களுர் சிவா . தங்கள் தந்த தொடர் ஆதரவுக்கும், வாழ்த்துக்களுக்கும்

    ReplyDelete
  5. realy sad story....thanks for the story jackie
    i searched last part9 finally i got readed full story today 13.12.13...gud luck

    ReplyDelete
  6. realy sad story....
    last partaa thedi padichaeen....readed full story today evening13.12.13

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner