சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (10/03/2013)


ஆல்பம்

ஈழ பிரச்சனை தமிழ்நாட்டில் சூடு பிடித்து இருக்கின்றது....
சிறுவன் பாலச்சந்திரன் புகைபட வெளியீட்டுக்கு பிறகு  பாராளுமன்றத்தில் கட்சி பேதம் பார்க்காமல் ஈழ பிரச்சனையை  நமது எம்பிக்கள் பேசி இருக்கின்றார்கள்... லயோலா கல்லூரி மாணவர்கள் தொடர்  உண்ணாவிரத போராட்டத்தை  அறிவித்து  நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்...முக்கியமாக மாற்றந்தாய் மனோபவாத்துடன் மத்திய அரசு நடக்குமேயானால் தனித்தமிழ்நாடு போராட்டம் வலுக்கும் என்று மத்திய அவையில் தைரியமாக திருமாவளவன் பேசிய பேச்சுக்கு அவரை மனதார  வாழ்த்துவோம்.

===========
நேற்று மவுண்ட் ரோட்டில் நின்றுக்கொண்டு ஒரு ஆயிரம் ரூபாய் பணமுடையில் தவித்து போனேன்... எதிரில் ஈகோவுக்காக 88 கோடியை செலவு செய்து மருத்தவமனையாக மாறப்போகின்றது புதிய  தலைமைசெயலகம்... துறைமுக மதுரவயல் பறக்கும் சாலை 500 கோடி முழுங்கி 20 சதவிகித பணிகளை மட்டும் முடிந்து  அதே ஈகோ  காரணமாக பாதியில் நிற்க்கின்றது...பல   கோடிகளை கடலில் விழுங்கி விட்டு சேதுசமுத்திரம் முச்சு பேச்சு இல்லாமல் இருக்கின்றது...பணப்பிரச்சனை,கடன்  எல்லாம் சமான்யனுக்குதான்.... அதிகாரவர்கத்துக்கும் அரசுக்கு அது பற்றிய கவலையே இல்லை.

=============
மை கிளிக்.

====================================
மிக்சர்.
மெட்ரோ ரயில்  பணிகள் பாதி முடிந்து  விட்டன...மெட்ரோ ரயில் பாலங்கள் நகரத்தில் ராட்சத அனகோண்ட பாம்பு  போல வளைந்து நெளிந்து  செல்கின்றன...மெட்ரோரயில் பாலத்தின் இடுப்பு வளைவில் என்னை கவர்ந்த வளைவுகள் என்று பார்த்தால்....  அசோக் பில்லர் ,உதயம் தியேட்டர், காசிதியேட்டர் எதிரில்  உள்ள வளைவுகள் மிக  அழகாய் இருக்கின்றன.
===================
மெட்ரோ ரயில் பணி காரணமாக பழைய கட்டிடங்கள் எல்லாம் பீதியில் இருக்கின்றன... மவுன்ரோட்டில் பீ ஆர் அண்டு சன்ஸ் கடைக்கு பக்கத்தில் பாதி கட்டிடத்தை மெட்ரோ ரயில் பணிக்காக தன் அக்ட்ரோபஸ் கரத்தால் பல இடங்களை அபேஸ் செய்து விட்டன.
========
சில தினங்களுக்கு முன் பாக்ஸ் ஆக்ஷன் டிவியில் lader 49 படம் பார்த்து கண்கள் குளமாகி போகின ....ஏற்க்கனவே பார்த்த படம் என்றாலும்  ஜாக் உயிரோடு இடித்த கட்டிடத்தில் உள்ளே மாட்டிக்கொண்டு ஆக்சிஜன் கிடைக்காமல் உயிர் விடும்  அந்த காட்சியும் அதன் பிறகு  அவன் மனைவியிடம் விஷயத்தை சொல்லி பியுனரல் காட்சிகளும் பின்னால் ஒலிக்கும்  shine your light  பாடலும்  அது ஏற்ப்படுத்திய தாக்கம் மனதை பிசைந்துக்கொண்டு இருக்கும் போது.... சேனல் மாற்றினால் பொதிகையில் ஏழிலகம்  தீ விபத்தில் ஆபிஸ் ரேங்கில் இருந்து மற்ற அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக தானும் களத்தில் இறங்கி தீ கங்குளை உடல் முழுவதும் சுமந்து, அழகான முகத்தை  இழந்து, தன் ஒரு கம்பீரபெண்மணியாக முகத்திலும் கைகளிலும் தீத்தழும்புகளோடு 40 பர்சென்ட் தீக்காயங்களோட உட்கார்ந்து தொலைகாட்சியில் பெண்களுக்கு முன் உதாரணமாக பேசிய பிரியா ரவிச்சந்திரன் என்ற சென்னை தீயனைப்பு  படை அதிகாரியை பார்க்கும் போது  நெஞ்சு கணக்கின்றது...உங்க வீரத்துக்கும் உங்கள் விவேகத்துக்கும், உங்கள்  தைரியத்துக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...   பிரியா  மேடம் வீ லவ் யூ................

=================

டிபன்ஸ் காலனி பக்கம்  மாலை வேலைகளில் நாய் மேய்க்கும் பெண்களையும் அவர்கள் மேய்க்கும்  நாய்களையும் பார்க்கையில் நாயாக பிறக்கக் கூட கொடுப்பினை வேண்டும்  என்ற உண்மையை உணர வைக்கின்றார்கள்.

==================
ஒரே இடத்தில் நின்றுக்கொண்டு இருக்கும் போது  கொசு கடிக்கும் அது இயல்பு... ஆனால் இப்போது எல்லாம் நடக்கும் போதே கொசுக்கள் கடிக்கும் அளவுக்கு பரிணாமவளர்ச்சி  பெற்று விட்டன... சிங்கார சென்னைக்கு கொசுக்காரசென்னை என்று பெயர் மாற்றி விடலாம்...மாநகராட்சிக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மிக்க நன்றி.
===========
குறுநில மன்னர்கள் மற்றும் சிற்றரசர்கள் தமிழ்நாட்டில் இன்னமும் ஒழிந்து விடவில்லை….அரசு ஒதுக்கிய ஏசி அறையில் உட்கார்ந்துக்கொண்டு ஐஏஎஸ்,ஐபிஎஸ்,மற்றும் இயக்குனர்கள் என்ற போர்வையில் தமிழ் நாட்டில் இன்னும் ஆட்சி பரிபாலனம் அவரவர் துறையில் செய்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்ஏழு மலை ஏழுகடல் தாண்டி இருக்கும் கிளியின் உயிரைக்கூட எடுத்து வந்து விடலாம்ஆனால் இவர்களை சந்திப்பதும் இவர்களிடம் உத்தரவு வாங்குவதும் குதிரைக்கொம்பாக இருக்கின்றது….. ஆனால் பத்தா இல்லாத நேர்மையான சில அதிகாரிகள் இருக்கின்றார்கள்.... உதாரணத்துக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் ஆனந்தவிகடனில் எழுதப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு போல நேர்மையான அதிகாரிகள் இன்னமும் இருக்கின்றார்கள். அவர்களை போன்ற நேர்மையான ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகளால்தான் கோட்டையில் இயற்றப்படும் திட்டங்கள் கடைகோடி தமிழக குடிமகனுக்கு கொண்டு போய் சேர்க்கின்றார்கள்..

=============================
தோழியோடு பேசிக்கொண்டு இருந்தேன்.... அது ஏன் சென்னை மாநகர பேருந்துல....ஏறும் ஆண்கள் எல்லாம் பொம்பளை பக்கம் திரும்பி நிக்கறாங்க? இப்பா பொம்பளைங்க நாங்க ஏறுகின்றோம்... லெப்ட்ல பொம்பளைங்க சீட்டு ... பஸ்ல ஏறினதும் பொம்பளை பக்கம் திரும்பி நிக்கறோம்... ரைட்டுல ஆம்பளைங்க சீட்டு ... பஸ்ல ஏறும் ஆம்பளைங்க ஆம்பளைங்க உட்கார்ந்து இருக்கும் பக்கம் திரும்பி நிற்க்கவேண்டியதுதானே? என்று கேட்டாள்... அது ஏன் ?எல்லா பஸ்ல நிக்கற எல்லா ஆம்பளையும் பொம்பளை பக்கம் திரும்பி நிக்கறான்... 
நான் சொன்னேன்...அப்பதான் அவனுங்களுக்கு வசதியாக இருக்கும் என்று கண்ணடித்தேன்... என்னை அடிக்க வந்தாள்....ஆனால் அவள் கேட்கும் கேள்வியில் உண்மை இல்லாமல் இல்லை.. .பட் அவ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும்னா.. ஈர்ப்புதான் பெண்மீதான் ஈர்ப்புதான் அப்படி நிக்க காரணம்... அதே போல அந்த பக்கம் படிக்கட்டு இருக்கறதும் ஒரு காரணம் என்று பேஸ்புக் நண்பர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றார்கள்..திரும்பி பொம்பளை பக்கம் நிக்கறது தப்பில்லை..ஆனா கூட்டம் அதிகமாகி அதையே சாக்கா வச்சி இம்சிக்கறது பெரிய தப்பு...அப்படி உதைவாங்கிய சிகாமனிகள் பற்றி எனது பிளாக்கல் மாநகர பேருந்து பதிவில் பதிந்து இருக்கின்றேன்.....



நான் கூட பொம்பளைங்க பக்கம் திரும்பி நின்று... பயணிக்கு பெண்களை பார்த்து ரசித்து இருக்கின்றேன்... ஆனால் இம்சித்தது இல்லை....

============================
உன் வாழ்க்கையில் நீ அவமானப்பட்டு நடு ரோட்டுல நிக்கறப்போ.. எவன் உனக்கு ஆதரவா சொம்மாகோசரம் ஒரு சப்போட்டுக்காவது உன் பக்கம் நிக்கறானோ ? அவன்தான் நீ சந்தோஷமா இருக்கும் போது , உன் பைக்கு பின்னாடி சீட்டுல குந்திக்கினு வர தகுதியானவன் :-) ஜாக்கிசேகர் அவதானிப்பு.

===========



கிண்டி ரேஸ் கோர்ஸ் 5 பர்லாங் ரோட்டில் இருந்து வேளச்சேரிக்கு பட்டியாலா அணிந்த ஸகூட்டி ஒன்று, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் சொல்வது போல, ப்பா பொண்ணா அல்லது பேய் ஓட்டுதா என்று தெரியாத அளவுக்கு வேகம்....எனக்கு சின்னதா சட்டுன்னு ஈகோவை உரசி பார்த்தா போல ஒரு சுருக்....என்னோட 125 சிசி ச்சே இது எனக்கு பெரிய அவமானம்ன்னு முனக...டிஎன்ஏவில் இருக்கும் புரானகால வேட்டையாடும் வேகம் குதிரையை போல கணைத்து சிலிர்த்து எழ, வேகம் எடுத்தேன்...பினிக்ஸ் மால் கிட்ட பட்டியாலா ஸ்கூட்டியை ஓவர்டேக் பண்ணிட்டேன்... பட் திரும்ப குருநானக் காலேஜ்கிட்ட அவ என்னை ஓவர் டேக் பண்ணிட்டா... சட்டுன்னு பட்சி சடசடக்க அமைதியாகிட்டேன். சிம்பிள். அவ விழுந்தான்னா அப்படியே ஏந்தி ஆஸ்பிட்டல் சேர்த்துட்டுதான் மறுவேளை பார்ப்பாங்க... பட் ஒரு ஆம்பளை விழுந்தா ....தவிச்ச வாய்க்கு பத்து நிமிஷம் கழிச்சி தண்ணி கிடைச்சாலே எதேஷ்டம்....125 சீறுச்சி திரும்ப போலாம்ன்னு... டேய்ன்னு ஒரு அதட்டல் போட்டேன் அடங்கிடுச்சி... ஏற்க்கனவே இப்படி நடந்து இருந்தாலும் திரும்ப திரும்ப இது நடக்குது....

====================


எருமை மாடு போல கண்ட இடத்தில் சாலையை கடக்கும் பெண்களிடம் வராத கோவம், அதே போல ஆனால் அவர்களை விட வேகமாக சாலையை கடக்கும் ஆண்களின் மீது வருவதை என்னவென்று சொல்வது..???? ச்சே என்ன பாரபட்சம்..?

==============


சமீபத்தில் ரியல் அன்னலட்சுமி  என்ற ஒரு கட்டுரை எழுதி  இருந்தேன்... அந்த கட்டுரையை படித்து விட்டு அதை   பிரிண்ட் அவுட் எடுத்து அந்த அம்மாவிடம் ஒரு நண்பர் கொடுத்து இருக்கின்றார்... அதை பார்த்து அந்த அம்மாவும் அவர் பெண்ணும் எனக்கு போன் செய்து  பாரட்டினார்கள்...பேச்சியம்மா என்பது அவர் பெயர்.... பிரிண்ட் அவுட் அவரிடம் கொடுத்த நண்பருக்கு மிக்க நன்றி...இப்போதெல்லாம் அங்கே சாப்பிட போனால் கோவிலுக்கு போக போவதில் இருந்து, வேண்டுதல் அனைத்து விஷயத்தையும் என்னிடத்தில் பகிர்ந்துகொள்கின்றார்...

=================


இளகிய மனம் கொண்டோர் அடுத்த பக்கத்துக்கு அபிட் ஆகிவிடுங்கள்....இந்த படம் நிறைய பேருக்கு அதிர்ச்சியை கொடுக்கலாம்.... 

உங்கள் அதிர்ச்சியை தூக்கி குப்பையில் போடுங்கள்...50வருட பாரம்பரியம் மிக்க ஜேம்ஸ் கதாபாத்திரத்தின் மனது என்ன பாடு படும், எப்படி துடி துடித்து இருக்கும் என்பதை சற்றே யோஜித்து பார்த்தீர்களா? 

இந்த படத்தை பார்த்துவிட்டு பெரிய ‘’மனது ‘’ கொண்ட ஹேலிபேரி எட்டு ரவுண்டு போட்டும் போதை இறங்கி, பித்துக்குளி முருகதாஸ் ரேஞ்சிக்கு ஆடிக்கொண்டு இருப்பதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஜென்மத்தில் இப்படியான காட்சி எனக்கு கொடுத்து வைக்க சான்சே இல்லை என்றாலும் போட்டோஷாப்பில் சாத்தியப்படுத்திய வாசக நண்பர் பொன் சந்தருக்கு என் அன்பும் நன்றியும்.

MY NAME IS BOND.....JACKIE BOND..../டேய் அங்க என்ன சத்தம்? சும்மா சொல்லி பார்த்தேன்பா... :-)


==============
நான்வெஜ் 




நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 


6 comments:

  1. ஜாக்கி 007 கடைசியா நீ கூட ஹாலிவுட்டுக்கு தான் போவேன்னு தெரியும்யா ?????

    எருமை மேய்ச்ச ஏரிக்கரையை மறந்திடு்ங்காய்யா..................

    இப்படிக்கு
    ஜாக்கி 007 ரசிகர் மன்றம்

    ReplyDelete
  2. அனேகமா அடுத்த தேர்தல்ல சென்னை கொசுங்க போட்டி போடும் போல. என்னமா உறுஞ்சுதுங்க!!

    ReplyDelete
  3. தல கலக்குரிங்க

    ReplyDelete
  4. ஜாக்கி வணககம்
    எழிலகம் முழுவதும் மரததூண் இருக்கும் போது concrete கட்டிடத்துக்குள் போவது போல் உள்ளே போனால் இடிந்து விழாமல் என்ன செய்யும்?

    ReplyDelete
  5. 007 is the final kick...... good one.. nice post jackie....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner