அவனுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும்…. எனக்கும் அப்படித்தான்…
ஜாக்கி அண்ணே, ஜாக்கி அண்ணே என்று கூட பொறந்த பொறப்பு போல அப்படி, வாய் நிறைய கூப்பிடுவான்…
ரொம்ப நாள் ஆயிடுச்சி…. பெங்களுர் வந்தா
அவசியம் சந்திக்கலாம்ன்னு சொன்னான்… எனக்கு
இந்த வாட்டி டைமே இல்லை ரொம்ப டைட்… ஆனாலும் சன்டே எனக்கு போன் செஞ்சான்…
ஜாக்கி அண்ணே எங்க இருக்கிங்க….?
வீட்டுலதான் இருக்கேன்…
பிரியா இருந்தா வரட்டுமா என்றான்…
வாடா, ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்கு
போகனும்.... போகலை..
புரோக்கிராம் சேஞ் ஆயிடுச்சி…. கண்டிப்பா வா….
அவன் பெயர் கார்த்தி…. எங்க மாவட்டத்து பையன்தான்… பிளாக் படிச்சி அறிமுகம்,…
பெங்களுர் போன போது, வீட்டுக்கு வந்து பார்த்துட்டு அப்படியே அவன் கார்ல சினிமாவுக்கு போனோம்… கார்த்திக்கு-
கார்ன்னா ரொம்ப பிடிக்கும். இன்டிரியர் எக்ஸ்டீரியர் எல்லாத்தையும் ரசனையோடு செஞ்சி
வச்சி இருப்பான்…
ரெண்டு பேரும் கார்ல போனோம்... விமல் நடிச்ச எத்தன் படம்
பார்த்தோம்ன்னு நினைக்கிறேன்…..
அதுக்கு அப்புறம் அவன் ஆன் சைட் சிங்கப்பூர்க்கு போகும்
போதும் சரி…. வரும் போதும் சரி…. போன் பண்ணி
ஊருக்க கிளம்பறேன்.. ஊருக்கு வந்த போதும் சரி. அண்ணே ஊருக்கு வந்துட்டேன்….
யாழினி எப்படி இருக்கா? அண்ணி எப்படி
இருக்காங்க…. என்று விசாரிக்காமல் போன் வைத்ததே இல்லை…
போன ஞாயிற்று கிழமை பெங்களுரில் இருந்த
போது நேரில் வந்தான்.. காரை ஸ்போர்ட்ஸ் கார்
போல ஸ்டிக்கர் ஒட்டி கலக்கி இருந்தான்… ரேசில் கார் கிளம்பும் போது கட்டம் கட்டமாக
இருக்கும் ஒரு கொடியை காட்டுவாங்களே.. அது
போல கட்டத்தை காரோடு பேனட்ல ஸ்டிக்கார ஒட்டி
இருந்தான்.
முன்னைக்கு சற்றே இளைத்து இருந்தான்.,,
வீட்டுக்கு வந்தான்… யாழினி எங்கண்ணே…
அவளும் ,அவுங்க அம்மாவும் தூங்கிட்டு இருக்காங்க.. வீட்ல பால் இல்லை
வாடா வெளியே போய் டீக்குடிக்காலாம் என்று அழைத்து போனேன்….
ரொம்ப நாள் கழிச்சி ரெண்டு பேரும் சந்திக்கறோம்
டீக்குடிச்சா நல்லா இருக்காதுண்ணே…
சரி உன் ஆசையை ஏன் கெடுப்பானே.. என்று இரண்டு பேரும்
அருகில் இருந்த பாருக்கு போனோம்…
அண்ணே ஹாட்டா…
இல்லைடா சாயங்காலம் நான் ஊருக்கு போறேன்…. பீர் போதும்…
இரடூ ............பீர்.
வேற ஏதாவது வேணுமா?
வேண்டாம்….
ரொம்ப நாளைக்கு பிறகு மல்லையாவுக்காகவும் ,திபிகா படுகோனுக்காகவும் கிங்
பிஷர் ஸ்டராங் பியரை சிறு கசப்புடன் விழுங்கினேன்.
எப்படி கார்த்தி
போவுது..?
நல்லா போவுது…
பட் ஒர்க் செமை டைட்டா போவுது… வீடு
வாங்கிட்டேன்…. அதனால இன்னும் செம டைட்டா இருக்கு என்றான்….
ஜாக்கி அண்ணே… உங்க ஒர்க் எல்லாம் எப்படி போகுது?
இங்கயும் அப்படித்தான்…. என்று என்
ஆதங்கத்தை கொட்டினேன்… முக்கால் வாசி பீர் குடித்து ,எனக்கு ஏப்பம் ஈனஸ்வரத்தில் முனகி வெளியே வர…
ஏண்ணே பழைய கலகலப்பு இல்லையே….
வீடு வாங்கனப்பா ,நாலு லட்ச
ரூபாய் கடனை நண்பர் உடனே வேணும் என்கின்றார்… நாலு மாசம்
டைம் கேட்டேன்.. பட் இந்த மாசம்தான் கடைசி.. மார்ச் மாசம் என்பதால் ஆபிஸ்ல பேப்பர் இன்னும் தரலை.. லோன் டிரை பண்ணிக்கிட்டே இருக்கேன்..கொடுக்க
முடியலைன்னா ஆசையா வாங்கின வீட்டை விற்றாவது
தரேன் என்று சொல்லிவிட்டேன்…
ஏண்ணே அவருகிட்ட நிலைமைய சொல்லலாமே…
இல்லை அவரு நிலைமையும் சரியில்லை அதான்…. நாலு மாசத்துல நாலு லட்சம் எப்படி முடியும் சொல்லு….?
மூன்று மாசம் ஆயிடுச்சி… நிம்மதியா
தூங்கி… இரண்டு மாசத்துல நிறைய சரக்கு அடிச்சிட்டேன்…
சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் எரிஞ்சி விழுந்து கொடுமையா லைப் போயிக்கிட்டு இருக்கு…
நினைச்சது ஏதுவுமே சோதனையா இந்த நாலு
மாசத்துல நடக்கவேயில்லை…இப்ப கூட பெங்களுர் வந்தா மைன்ட் ரிலாக்சா இருக்குமேன்னு வந்தேன்…
ஓ அதான் பிளாக் முன்ன போல எழுதறது இல்லையா அண்ணே?
எழுதற மூடே இல்லைடா….ஒருத்தன் கிட்ட கடன் வாங்கற… அப்படின்னா உன்னோட சந்தோஷம்,
மரியாதை, சுய மரியாதை, கவுரவம், அற்ப சந்தோஷம் முதற்க்கொண்டு எல்லாத்தையும் கடன் வாங்கினவன் கால்ல வச்சிட்டுதான் கடன் வாங்கறவன் வாழுறான்…. சில நேரத்துல ஏன்டா வீடு வாங்கினோம்ன்னு இருக்கு…?
அண்ணே.....நானும் வீடு வாங்கிட்டேன்.. செம டைட்… என் காரோட பேப்பரை வேனா
தரேன்.. இப்பத்திக்கு என்னால இவ்வளவுதான் முடியும்….
அந்த வார்த்தை போதும்டா கார்த்தி… பட் எப்படியாவது
பணத்தை கொடுத்துடுவேன் நம்பிக்கை இருக்கு… இரண்டு வாரத்துக்கு முன்ன அதே சிந்தனையில பாத்ரூம்ல போய் ,கதவை சாத்திட்டேன்
நினைச்சு உட்கார…ஒருத்தன் கதவை வேற திறந்து பார்த்து ஷேம் ஷேம் பப்பு
ஷேம் ஆயிடுச்சி…ரெண்டு மாசமாவே அப்படித்தான்.. ஒரு கோவம்
இருந்துக்கிட்டே இருந்திச்சி… எவனாவது, எந்த
மயிறானாவது சிக்கனா அடிச்சி துவைச்சி போடனும்
அளவுக்கு கோபம் இருந்திச்சி…..
யாழினி பார்த்டேவுக்கு முன்ன வரை… இரண்டு
நாளைக்கு ஒரு நாள் குடிச்சி தள்ளிட்டேன்…82
கிலோ நான்… இப்ப 90 நாள்… சரி நடக்கறது நடக்கட்டும் நம்பிக்கையை இழக்க வேணாம்ன்னு தோனிச்சி இப்பதான் வெளியே வந்தேன்…
சரி நீ ஏன் ரொம்ப டல்லா இருக்கே கார்த்தி…
பணப்பிரச்சனை, வேலை பிரச்சனை, அப்புறம்
எனக்கு ரொம்ப பிடிச்ச அக்கா இறந்துட்டாங்க…
ஓ
ஐயம் சாரி.. அக்காவுக்கு வயசு என்ன?
55 இருக்கும்னே…
என்ன உடம்பு சரியில்லையா?
கொலை செஞ்சிட்டாங்கண்ணே…
பாட்டிலில் கடைசி ஒரு வாய் இருந்த பியரை வாயில் சரிக்க அவன் சொன்னதை
கேட்டு எகித்துக்கொண்டு வெளியே வர முயற்சி செய்தது…
மினி பீர் இரண்டு என்றேன்… யாருடா..?
எங்க மாமான்னே…
மாமாவா ?என்னடா பிரச்சனை….
இரண்டு பேரும் பேரன் பேத்தி எடுத்துட்டாங்க…இப்ப போயி… அவன் கண்
கலங்கினான்….
நான் அவனை வெறித்து பாத்தேன்… சின்ன பீரை திறந்து அரை பாட்டிலை காலி
செய்து, உதட்டு நுரையை தொடைத்து ....அவன் பேச காத்து இருந்தேன்..
அக்கா மாமாவுக்கு ரெண்டு பொம்பளை புள்ளைங்க…மாமா
எந்த வேலைக்கும் போவமாட்டார்…. அதிமுகாவுல
இருக்கார்… அக்கா குடும்பத்தை தோள்ல
சுமந்தா… தையல் வேலை செஞ்சி இரண்டு பொண்ணையும்
படிக்க வச்சா… மாமா எந்த வேலையும் செய்ய மாட்டார்..
அரசியல்ன்னு சுத்தி வந்தார். எந்த வேலைக்கும்
போகமாட்டார்… அக்கா தச்சி வச்சி சேமிச்ச காச எடுத்துக்கிட்டு போய் மூக்கு முட்ட குடிச்சிட்டு
வருவார்.. வீட்டுக்கு வந்தா சண்டைதான்..
மொத பொண்ணை கட்டிக்கொடுத்தாங்க.. ஒரு
பேத்தி ஒரு பேரன்…. பொறந்துச்சி…
,ரெண்டாவது பொண்ணுக்கு மாப்பிளை பார்க்க ஆரம்மபிச்சாங்க…இவுரு
என்ன சென்னாரு .,.........என் தங்கச்சி பையனுக்கு கொடுக்கலாம்னார்….
எங்க அக்கா என்ன சொல்லிச்சி..? உன் வகாராவுல நான் வாழ்ந்து கிழிச்சி லடச்சணம்தான் ஊரு
முழுக்க சிரிப்பா சிரிக்குதே,….எனக்குன்னு ஆசையா ஒரு முழம் பூ வாங்கி வந்து கல்யாண
ஆனா நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் கொடுத்து
இருப்பியா? என் பவுசுதான் சிரிப்பா சிரிக்குதே… என் பொண்ணையும் பாழுங்கினத்துல தள்ள சொல்லறியா? என்
உயிரே போனாலும் நடக்காது… என் அண்ணனோட சின்ன பையனுக்குதான் கொடுப்பேன் என்று இரண்டு பேருக்கும் இரண்டு மாதத்துக்கு மேல் சண்டை…
ஊர்ல கரண்ட் இல்லை… மாமா நைட்டு எழு
மணிக்கு தண்ணி அடிக்க காசு கேட்டு இருக்கார்… அக்கா கொடுக்க முடியாது.. என்று சொல்லி இருக்கின்றார்….
கடன் வாங்கி போதையோடு பத்து மணிக்கு வந்து
இருக்கார்…. கரண்ட் இருந்திச்சி… சண்டை போட்டு இருக்காங்க.. என் தங்கச்சி மவனுக்குன்னு
இவரும்… என் அண்ணண் பையனுக்குதான் என் ரெண்டாவ.து
பொண்ணை கொடுப்பேன்னு…. திரும்ப ரெண்டு பேருக்கும் சண்டை….
அடக்கொடுமையே… என்றேன்.
குடிக்க காசு கொடுடின்னு திரும்ப சண்டை போட்டு இருக்கார்… அதான் மூக்கு முட்ட குடிச்சி
இருக்கியே… ???நாளைக்கு காலைல குடிக்கறதுக்கு பணம் கொடுடி….
கரண்ட்டு போயிடுச்சி….. அக்கா என்ன
பண்ணி இருக்காங்க.. காவெளெக்கை கொளுத்தி வச்சிட்டு ,விசிறி எடுத்து விசிறிக்கிட்டே அப்படியே கண்ணை அசந்து இருக்காங்க…
மாமா என்ன பண்ணி இருக்கார்…. குடி வெறியில, கோவத்துல
பக்கத்துல சுவத்துல சாத்தி இருந்த கடப்பாரைய எடுத்து அக்கா மண்டையில ஒரே போடு… மூளை சிதறிடுச்சி…
அப்பயும் அவருக்கு வெறி அடங்கலை… கடப்பரையால மாருல சொருகிட்டு
போலிஸ்ல போய் சரண்டர் ஆயிட்டார்…
கைல விசிறி வச்சி விசிறறது போல அப்படியே மூளை சிதறி அக்கா செத்துகிடந்து
இருக்காங்கன்ணே…பாடியை பாத்தாவங்க சொல்லி சொல்லி ஆத்து போறாங்க……
தையல் வேலை செய்து, புருஷனுக்கு குடிக்க காசு கொடுத்து, இரண்டு பெண் பிள்ளைகளை வளர்த்து,
ஒன்றை கட்டிக்கொடுத்து, அடுத்த பெண்ணையும்
கட்டிக்க வருபவன் ஆசையாக ஒரு முழம்
மல்லிப்பூவாவது ஆசையாக வாங்கி கொடுக்க வேண்டும் என்ற கனவோடு போராடி கடப்பாரைக்கு உயிரை கொடுத்த அந்த பெண்மணியை எனக்கு நினைக்கையில்
துக்கம் தொண்டையை அடைத்தது….
மாடிவாளவில் ஒரு நான் வெஞ் ஒட்டலில்
சாப்பிட்டு விட்டு விடை பெற்றான்…
அண்ணே வீட்ல டிராப் பண்ணட்டுமா?
வேணாம்டா….
என்ன பிரைட்டா இருக்கிங்க… போதையா?
ச்சே அப்படின்னா?
பட் பிரைட்டா இருக்கிங்க… வந்த போது
இருந்ததை விட இப்ப எவ்வளவோ தேவலாம் ஐயம் ஹேப்பி… என்று சொல்லியபடி காரில் பறந்தான்..
அவன் அக்காவின் வலியை ஒப்பிடுகையில் எதுவுமே பெரிய
பிரச்சனை இல்லை என்று எனக்கு தோன்றியது………….
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Sorry to type in English. Everybody in this world got problems thala , anthe Kashtathai somewhat neenge kadanthu poiteenganna , later unaluku ninaichu pakrapo sugama irukkum , ungaluku irukure nalla mansuku neenge kandipa ithe kadanthu poveenge ( I don't know u personally but I am reading ur blogs from your first post - u helped lot of people and still helping and continue to help in the future also) . I pray god for you to pass this difficult phase in ur life. Sorry again for tanglish (typing from phone) - Mayavaram suresh-Nigeria
ReplyDelete//பட் பிரைட்டா இருக்கிங்க… வந்த போது இருந்ததை விட இப்ப எவ்வளவோ தேவலாம்//
ReplyDeleteBeer adicha effect-a?
இக்கறைக்கு அக்கறைப்பச்சை... எல்லாம் தூசிப்போல பறந்து போகும். கவலையை விட்டு தள்ளுங்க.. மனதை திடப்படுத்துங்க.. !
ReplyDeleteஅவங்க கதைய கேட்டதும் மனசு கனத்து போச்சு.. இதுவும் கடந்து போகும்..
ReplyDeleteVery sad to hear about the fate of Karthy's sister.
ReplyDeleteI hope you raise the money in time to pay back your loan.
ஹாய் ஜாக்கி அண்ணா.....
ReplyDeleteSorry jackie, I thought to scold u well for not reviewing world movies as before. but u r in such a bad situation. dont worry sure u will pay back ur debts and soon come back and write good movies. pls take care ur health. dont drink much. monthly once u drink.
ReplyDeleteDear Jackie, Please be reminded that the loan and liquor are the evils in our day to day life. Try to overcome soon. But, I respect your honesty for sharing your feelings with us.
Deletebasic reason is habit of drinking. It is a gift of our rulers. A.I.A.D.M.K family also suffers. this news should be conveyed to Amma. We are trying and serving towards Total prohibition.
ReplyDeleteஇதுவும் கடந்து போகும்... என்ன செய்வது...
ReplyDeleteஎனக்கும் இதே பிரச்சினைதான் அண்ணா... கடனை வாங்கி வீடு கட்டிவிட்டேன்.... மே மாதம் கிரஹப்பிரவேசம்... இருக்கிற உறவுகள் கூட செய்ய மனம் வரமால் இருக்கிறார்கள்... புதுவீடு குழந்தைகளுக்கு சந்தோஷம்... கடன் சுமை.... தூக்கம் மறக்க வைக்கிறது....
Hard to read your pain and your friend's pain. Nothing to say. But don't loose your hope. Everything will be alright. Each & every people will have their own bad time. We should think next step is going to be upward. So keep your mind free. Its easy to give advice, but hard to go through. Keep yourself free from worries. You will be alright and this will change soon. Take care
ReplyDeleteNa aludhutu irukan.... Can't control my self
ReplyDeleteஇதனால அனைவருக்கும் சொல்லவந்தசேதி குடி குடியை கெடுக்கும்.
ReplyDelete