ஜான்
மெக்கலைன்....
1990களில்
ஹாலிவுட் பட ரசிகர்களால் மிகவும்
ரசிக்கப்பட்ட பாத்திரம்...ஆம் ஜான் மெக்லேனாக நடித்த புருஸ்வில்லிஸ்க்கு பெரிய பெயரையும் ஆக்ஷன்
ஹீரோ அந்தஸ்த்தையும் பெற்றுதந்த படம் டை ஹார்ட் திரைப்படம் என்றால் அது மிகையாகது....
1988
ஆம் ஆண்டு டை ஹார்ட்டு முதல் பாகம் வெளியானது.... உயரமான ஓட்டல் கட்டிடத்தில் வில்லனால் சிறைபிடிக்கப்பட்ட மக்களை ஜான் மெக்கலைன்
எப்படி காப்பாற்றுகின்றான் என்பதே
கதை....
ஜான்
மெக்கலைன் நியூயார்க் போலிஸ் ஆபிசர்...விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்றும் இந்த
கேரக்டரை சொல்லலாம்...
ஒரு
புத்திசாலி வில்லன் ... புத்திசாலி
என்றால் சாதாரண புத்திசாலி இல்லை அதிபுத்திசாலி... அப்படி இருக்கும் வில்லனை தனி ஒரு ஆளா ஜான் மெக்கலைன் எப்படி மடக்கி வில்லன்
கையில விலங்குமாட்டறான்
என்பதுதான் டை ஹார்ட் படத்தின் தாரக
மந்திரம்..கதை... லொட்டு லொசுக்கு எல்லாம்.
இரண்டாம்
பாகம்.... ஏர்ப்போர்ட்டை முற்றுகையிட்ட வில்லன் கோஷ்ட்டியிடம் இருந்து எப்படி மீட்டு மக்களை ஜான் மெக்கலைன் எப்படி
ரட்சிக்கின்றார் என்பதே கதை...
எனக்கு
ரொம்ப பிடித்த பாகம் என்று சொன்னால் அது
இந்த பட வரிசையில் வந்த மூன்றாம் பாகம்
அற்புதமாக இருக்கும்.
பேங்கை
கொள்ளை அடிக்க வில்லன் நடத்தும் கூத்தும்
அவனை சேஸ் பண்ணி ஜான் மெக்கலைன் அவன் பருப்பை எண்ணி எடுப்பதுதான் கதை...வில்லிஸ்
மற்றும் சாமுவேல் ஜாக்சன் இந்த நான்காம் பாகத்தில் பிரமாத படுத்தி இருப்பார்கள்.... லைட்டாக லெதல் வெப்பன்
திரைப்பட சீரிஸ் சாயல் இந்த படத்தில் இருக்கும்...
நான்காம்
பாகம் கம்யூட்டரை ஹேக் செய்து மகளை கடத்தி வைத்த
மிரட்டும் வில்லனை எப்படி
மெக்கலைன் பந்தாடுகின்றார் என்பதே...
ஐந்தாம்
பாகம் எப்படி? இப்ப பார்த்துடலாம்.
================
A
Good Day to Die Hard-2013 படத்தின் ஒன் லைன்.
மெக்லைன் ரஷ்ய சிறையில் இருக்கும் தன் மொவனை எப்படி மீட்கின்றார் என்பதே
கதை.
==============
A
Good Day to Die Hard-2013 படத்தின் கதை என்ன?
ஜான்
மெக்கலைன் (புருஸ் வில்லிஸ்) பையன் ரஷ்யாவுல
ஜெயில்ல இருக்கான்.. மெக்கலைன் ரஷ்யா போறார்...ஆனா அங்க போனதும்தான்
மெக்கலைனுக்கு தெரியுது... அவரு புள்ள
பொரிக்கி இல்லை போலிஸ்ன்னு...அவன் ஒரு ஆளை கடத்த போட்ட திட்டம்தான் பொரிக்கி
வேஷம்...
ஆனா பையனுக்கு அனுபவம் கம்மி... பட் அனுபஸ்தனான அப்பன் மெக்லைன் தன்
புள்ளைக்கு எப்படி உதவுறார் என்பதுதான் கதை...
==============
படத்தின்
சுவாரஸ்யங்கள்.
புருஸ்
வயசானாலும் இன்னமும் தான் சிங்கம் என்பதை உணர்த்துகின்றார்...
படத்தில்
முதல் ஆக்ஷன் பிளாக் அதுக்கு அப்புறம் வரும் சேசிங்.. அசத்தல் ரகம்... அந்த சேசிங்
ஆக்ஷன் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து
இல்லை...
நான்காம்
பாகத்தை விட இந்த பாகத்தில் இருக்கும் ஆக்ஷன் பிளாக் பேசப்படும்... சும்மா பர பரன்னு
அதகளம் பண்ணி இருக்கின்றார்..
இந்த
படம் டால்பி அட்டோமஸ் சரவுண்ட் மிக்சிங்தொழில் நுட்பத்தில் வெளியான படம்..
இந்த
படத்தை விமர்சகர்கள் கிழி கிழின்னி கலா அக்கா போல கிழிச்சி தொங்க விட்டாலும், இந்த படம் வசூலில் பட்டைய
கிளப்பிக்கொண்டுதான் இருக்கின்றது...
விமர்சகர்கள் வைக்கும் காரணம்.... வில்லன்
பொதுவா டை ஹார்ட்டு படங்களில் செம ஷார்ப்பா இருப்பான்... பட் இந்த படத்துல அப்படி இல்லை என்பதுதான் வாதம்.. பட் இந்த
படத்துல வில்லன் அப்பாவி வேஷம் போட்டு
அன்டர் பிளே பண்ணி இருக்கான்...
டிபரண்டும்
வேணும்...ஆனாலும் அப்படி எதாவது செஞ்சா .....ஆன் ,ஊன்னு வரிஞ்சிக்கிட்டிக்கிட்டு அது சரியில்லை இது
சரியில்லைன்னு சொல்ல வேண்டியது.....
=============
படத்தின்
டிரைலர்.
===============
படக்குழுவினர்
விபரம்.
Directed by John Moore
Produced by
Alex Young
Wyck Godfrey
Screenplay by Skip Woods
Based on Characters
by Roderick Thorp
Starring
Bruce Willis
Jai Courtney
Sebastian Koch
Yuliya Snigir
Radivoje Bukvić
Cole Hauser
Music by Marco Beltrami
Cinematography Jonathan Sela
Editing by Dan Zimmerman
Studio
Giant Pictures
TSG Entertainment
Distributed by 20th Century Fox
Release date(s)
January 31, 2013 (World premiere)
February 13, 2013 (United States/Canada)
Running time 97 minutes
Country United States
Language English
Budget $92,000,000
Box office $240,367,431
=============
பைனலு
கிக்...
ரொம்பநாள்
ஆச்சி ஆக்ஷன் படம் பார்த்து....
இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் சவ சவ தனத்தை குறைஞ்சி இருந்தா இன்னும் அசத்தலாய்
இருந்து இருக்கும்... இந்த படம் பார்க்கவேண்டிய படம்.. என்பதை சொல்லிக்கொண்டு
கிளம்புறேன் சாமியோவ்.
=============
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
ஸ்டில் சூப்பர் ன்னே
ReplyDeleteபயனுள்ள மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .....
ReplyDeleteஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html
கோப்புகளை அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய! ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/internet-download-manager-v614-build-5.html
நல்ல விமர்சனம்...
ReplyDelete