யாழினிக்கு பிறந்தநாள் (யாழினி அப்பா)15/03/2013 யாழினிக்கு இன்று பிறந்தநாள்.


இரண்டு வயது பூர்த்தியாகி இருக்கின்றது....

பிக்கி ஆன் த ரெயில்வே  பிக்கிங் த ஸ்டொன் பாடலும்.. இந்தியாவின் தந்தையாரு பாடல் என் எல்லா ரைம் பாடல்களையும் பாடுகின்றாள்....

பாடல் கேட்கும் போது  கூட ஏர்ட்டெல் சூப்பர் சிங்கரில் நடுவராக இருக்கும் எஸ்பி சைலாஜா வையாவ வெட்டறது போல தாளத்துக்கு ஏத்தது போல  பண்ணறா....

பேச்சு சரளமாக வர ஆரம்பித்து விட்டது. காயத்திரி மந்திரமும், நெஞ்சுக்குள்ளே பாடலும் பாடுகின்றாள்..

எனக்கு பிடித்த பாட்டு ஏதாவது ஒலித்தால் அப்பா உங்க பாட்டு என்று  சொல்லி அந்த பாட்டை மேலும் ரசிக்கின்றாள்...


மாற்றன் படத்தில் கம லாங்வே கோரசை  அப்படியே பாடுகின்றாள்... எட்டவது படிக்கும் போதுதான் எனக்கு  லவ்வுக்கு  லைக் என்ற வாக்கியத்துக்கும் அர்த்தம் தெரியும்..

நான் ஏதாவது பாடினால் பல்பு கொடுக்கின்றாள்...

இந்த செய்தியை ஏஆர்ரகுமானோ அல்லது அவரது ரசிக நண்பர்களோ படித்தால் ரொம்ப சந்தோஷபடுவார்கள். சில நேரங்களில் சில பாடல்களை வீட்டிலோ அல்லது வெளியிலோ சத்தமாக நான் பாடுவதுண்டு, அது போல ஏலே கிச்சா வந்தாச்சு கடல் பாட்டை நான் சத்தமாக பாட, சின்ன சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்த யாழினி என் அருகில் வந்து சொன்னாள்..... அப்பா பாடாத… “கேட்க சகிக்கலை ’’என்று சொன்ன போது…. நான் வாழ்க்கையில் வெறுப்பின் உச்சத்துக்கே சென்று விட்டேன் . இதை விட பெரிய பல்பு வேறு யார் எனக்கு கொடுக்க முடியும்????


வீட்டில் இருக்கும் அத்தனை பொருட்களையும் எடுத்து வந்து அப்பா இந்தாங்க என்று என் கைகளில் தினிப்பது அவளின் பெரிய  பொழுது போக்கு... அதே போல திருட்டுதனத்துக்கு குறைவு இல்லை...

ஒரு பெரிய பாலை எடுத்து என் மேல் கோபமாக எரிந்தாள்... நான் முறைக்க ஆரம்பித்த உடன் அப்படியே பிளேட்டை  மாற்றி என்னை கூல் பண்ண.... அப்பா கேட்ச் போட்டேன்பா என்று சொல்லுகின்றாள்....

என் மனைவி அப்படியே அலன்டு போய்விட்டாள்....

நான் அசால்ட்டாக சொன்னேன்.

நாம ரெண்டு பேருமே பயங்கரமான ஆளுங்க.. பின்ன அவ எப்படி இருப்பா...?

அதே போல யாழினிக்கு கோபம் மூக்கு மேல் வருகின்றது..

அர்த்தமுள்ள பொழுதுகளையும் கணங்களையும்  உருவாக்கிகொடுப்பவர்கள் பெண் குழந்தைகளே என்பதை எனக்கு  உணர்த்துபவள் அவளே...

இரண்டு நாளைக்கு முன் பைக் புட்ரெஸ்ட்டில் இடித்துக்கொண்டேன்... அப்போது ஒன்றும் தெரியவில்லை... இரண்டு  நாளுக்கு  பின் அதாவது நேற்று காலை  என்னால் சுத்தமாக  கால் ஊன்றி  நடக்க முடியில்லை...

என்னருகில்  வந்தாள்...

என்னப்பா ஆச்சி..

கால்ல அடி பட்டுடிச்சி..

இங்கயா?

ஆமாம்.

 என் காலை   தன் பிஞ்சு விரல்களால் என் கால்களை  பிடித்து விட்டாள்....அப்ப இப்ப பரவாயில்லலையா? என்று கேட்ட போது

எல்லா வலியும் நொடியில் பறந்த போனது போல ஒரு உணர்வு.ஹ

எங்களுக்கு பெண் குழந்தைதான்  பிறக்கும்..... பெயர் யாழினி என்று ஆறுமாதத்தில் பெயர் செலக்ட் செய்து விட்டோம்..... ஆண் குழந்தை பிறந்தால் அப்புறம்  பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தோம்....

இரண்டு வருடம் முன் இதே தினத்தில் குழந்தை பிறந்து விட்டது என்று செவிலிகள் தூக்கி வந்தார்கள்.. ஒருவேளை ஆண் குழந்தையாக இருந்தால் என்று ஒரு  கணம் நினைத்தேன்... அந்த  நினைப்புக்கு  அவள் என் கால்  பிடித்த விட்ட்ட கணத்தின் போது அப்படி நினைத்தமைக்கு  இப்போது  வருந்துகின்றேன்.

சாமியே சைக்கிள்ள போனானாம்......பூசாலி  புல்லட் கேட்ட கதையாக  பலருக்கு இப்படி ஒரு சூழல் வரலாம்.. எனக்கு வந்து இருக்கின்றது...

அதனால்  இன்று மாலை  என் வீட்டில்  சின்னதாக கேக் கட் பண்ணி,   வெட்டிய கேக்கை தட்டில் வைத்து அதனோடு மிக்சர் வைத்து ஒரு காபியை கொடுத்து யாழினி பர்த்டேவை ஒப்பேற்றலாம் என்று முடிவு  செய்து இருக்கின்றேன்.

நேரம் இருப்பின்   நேரில் வந்து யாழினியை வாழ்த்தவும்....

வரமுடியாதவர்கள் உங்கள் ஆசிகளை அவளுக்கு வழங்குங்கள்...


பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்(யாழினி அப்பா)


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

65 comments:

 1. யாழினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. யாழினிக்கு இனிய வாழ்த்துக்கள் ஜாக்கி

  ReplyDelete
 3. என் ஆசிகளும் அன்பு முத்தங்களும்.:)

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் .... நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்... நீடூழி , சீரும் , சிறப்பும்மாய் ..எல்லாம் பெற்று வளமாய் வாழ்க ...வாழ்க வளமுடன்

  ReplyDelete
 5. யாழினி பாப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா..யாழினியால் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களும் சந்தோசத்தால் நிறைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 6. யாழினிக்குட்டிக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 7. 2113il idhu pondra padhivai poda vaazhtthukkal

  ReplyDelete
 8. Hi jackie,

  Convey my wishes to Yazhini. May god give all weath and heath to her.

  ReplyDelete
 9. Many more happy returns of the day Yazhini papa

  ReplyDelete
 10. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ! ! - யாழினிக்கு....

  ReplyDelete
 11. பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழினி,

  என் மகன் பெயர் எழிலன். என் மனைவியை, குழந்தை பிறப்பிற்காக (21/07/2008) அன்று விடியற்காலை 4.30 மணிக்கு, புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். உள்ளே ஒருவரையும் அனுமதிக்க மறுத்துவிட்டனர். குழந்தை பிறந்த தகவல் சொன்னதும், ஒருவர் மட்டும் உள்ளே வர அனுமதி வழங்கப்பட்டது. என் மாமியார் உள்ளே போக முயன்றார். நான் தடுத்து நிறுத்தி அவரிடம் ஒரு சீட்டு கொடுத்து அனுப்பினேன். பையனாக இருந்தால், ‘எழிலன்’ பெண்ணாக இருந்தால்,’யாழினி’. அப்போது எனது நோக்கம் தமிழில் வரும் ‘ழ்’ நிச்சயம் பெயரில் வரவேண்டும். அனேகமாக இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் யாழினியும், என் இல்லத்திற்கு வந்து விடுவாள் என்று நினைக்கிறேன்.

  என் வாழ்த்துக்களை யாழினியிடம் தெரியப் படுத்துங்கள்.

  ReplyDelete
 12. யாழினிக்கு !!!!!என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!

  ReplyDelete
 13. Chocolate sweety ..Many many ..many more happy returns of the day

  ReplyDelete
 14. Happy b'day to yazhini jackie.U r celebrating every moment of your daughter happily.....

  ReplyDelete
 15. MY HEARTIEST BLESSINGS TO YAZHINI WISH HER ALL THE BEST IN HER LIFE

  IF AT ALL YOU WANT TO PRESENT ANYTHING FOR HER, PLEASE TAKE AN LIC POLICY IN HER NAME - PREMIUM AMOUNT WILL BE AROUND RS.10000/- PER ANNUM I DID IT FOR MY DAUGHTER WHEN SHE WAS JUST TWO YEARS OLD AND SHE IS REAPING THE BENEFIT NOW.

  one more thing - a child is a child whatever be the gender.

  ReplyDelete
 16. happy birth day yalini... god bless u maa...

  ReplyDelete
 17. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. Many more happy returns to yazhini..!!1

  ReplyDelete
 19. Iniya pirantha naal vazthukkal yaalinikku

  ReplyDelete
 20. Iniya pirantha naal vazthukkal yaalinikku

  ReplyDelete
 21. Many more happy returns of the day Yazhini :)

  ReplyDelete
 22. Many more happy returns of the day Yazhini :)

  ReplyDelete
 23. யாழினிக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

  ReplyDelete
 24. யாழினிக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

  ReplyDelete
 25. குழந்தைக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 26. குழந்தைக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 27. யாழினிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 28. பிறந்தநாள் வாழ்த்துகள் யாழினி

  ReplyDelete
 29. நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழினிக்கு

  ReplyDelete
 30. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் குழந்தைக்கு.

  ReplyDelete
 31. யாழினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. I wish Yazhini a bery very happy birthday and many more happy returns of the day.

  ReplyDelete
 33. Happy Birthday Wishes to யாழினி

  -Nanthana & Family

  ReplyDelete
 34. யாழினிக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.

  "எங்களுக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்..... பெயர் யாழினி என்று ஆறுமாதத்தில் பெயர் செலக்ட் செய்து விட்டோம்..... ஆண் குழந்தை பிறந்தால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தோம்...."

  We were in the same situation with the same outcome.

  ReplyDelete
 35. யாழினிக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.

  "எங்களுக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்..... பெயர் யாழினி என்று ஆறுமாதத்தில் பெயர் செலக்ட் செய்து விட்டோம்..... ஆண் குழந்தை பிறந்தால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தோம்...."

  We were in the same situation with the same outcome. :-)

  ReplyDelete
 36. வாழ்த்திய அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 37. வரும் (16,17) சனி,ஞாயிறு இரண்டு நாட்கள் பெங்களுர் வாசம். நேரம் கிடைத்தால் நண்பர்களை சந்திப்போம்.....

  ReplyDelete
 38. யாழினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 39. யாழினி சின்ன குட்டி இளவரசிக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்.. blessings and loving wishes to you .

  ReplyDelete
 40. யாழினி குட்டிக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.
  ஜாக்கியை மீண்டும் பெற்றெடுத்த(நிஜமாக நிறைய பண்படுத்தி இருக்கிறாள் வெகு நாள் உங்கள் எழுத்தினை வாசிப்பவன் என்ற முறையில் கூறுகிறேன் ) பெண் குழந்தையை பெற்றவனுக்கு நாள்தோறும் நன்னாள் தான்.நொடிபொழுதில் சொர்கத்தை உணர வைப்பார்கள் பெண் குழந்தைகள் தங்களின் பேரண்பு மூலம்.பெயருக்கு ஏற்றார் போல் இசை மழை மழலையாய் பொழிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 41. யாழினி செய்யும் குறும்புகள், நீங்கள் வாங்கிய பல்புகள் எல்லாம் ரசிக்கும் படியாக உள்ளன :)

  Happy Birthday to Yazhini! May God Bless Her in binds and folds!!

  ReplyDelete
 42. Wish u many more happy returns of the day.

  ReplyDelete
 43. I also have two angels, god made me lucky guy...... wish u a very very happy birthdy da chellam......

  ReplyDelete
 44. யாழினிக்கு மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள் ஜாக்கி

  ReplyDelete
 45. பிள்ளைகள் சுகம் யாதெனக் கேட்டேன் பெற்று பார் என்று இறைவன் பணித்தான் என்ற கண்ணதாசன் வரிகள் தான் ஞாபகம் வருகிறது. எனது பெண் குழந்தையும் யாழினியைப் போலத்தான். நான் வாய் கட்டாமல் இனிப்பைச் சாப்பிடும்போது என்னை தனது அன்பால் கட்டுபடுத்தும் எனது குடும்ப டாக்டர் எனது பெண் சாய் ஹரியாளி தமிழ் படுத்தி பார்த்தால் எனது குலதெய்வத்தின் பெயர் வரும் அது கடலூர் டான்பாக் கிற்க்கு அருகில் உள்ள பச்சை வாழி அம்மன். யாழினிக்கு எனது உள்ளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 46. Belated birthday wishes Yazhini!

  ReplyDelete
 47. Belated Birthday wishes Yazhini...God Bless...

  ReplyDelete
 48. Belated birthday wishes Yazhini...God Bless..

  ReplyDelete
 49. யாழினிக்குட்டிக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 50. பிள்ளையை வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner