ரேடியோ கேட்டு வளர்ந்தவர்களுக்கு மட்டும்...


சிலவற்றின் ரிஷி மூலம் நதிமூலம் தேடிப்போனால் அது கொடுக்கும் சுவாரஸ்யம் அலாதியானது...
அப்படித்தான் நண்பர்  கார்த்திக் நாகராஜன் எனக்கு ஒரு இசைக்கோர்வையை எனக்கு அனுப்பி வைத்தார்...


 அந்த இசைக்கோர்வையை கேட்ட போது  என்னுள் என் பால்ய கால நினைவுகள் பீரிட்டு வந்துக்கொண்டே இருந்தன..  ரேடியோ கோலோச்சிக்கொண்டு இருந்த  காலக்கட்டத்தில் நேரம் தெரிந்துக்கொள்வதில் இருந்து செய்தி அறிந்துக்கொள்வது வரை ரேடியோவை  சார்ந்தே  வாழ்க்கை வாழ்ந்த அந்த சிறுவயது காலக்கட்டத்தில் இந்த இசைக்கேட்டகாதவர்கள் யாரும் இருக்க முடியாது...


காலையில் ஆறுமணிக்கு ரேடியோவை ஆன்  செய்தால் காலை  ஒன்பதரை மணிக்கு விவத்பாரதியின் வர்த்தக ஒளிபரப்பு முடியும் போது இந்த இசை இசைக்கும்...


இந்த இசைக்கேட்டவுடன் பள்ளிக்கு நேரமாகி விட்டது  என்று மாணவர்களும் வேலைக்கு  செல்பவர்களும் விழுந்தடித்துக்கொண்டு பணிக்கு கிளம்புவோம்....

சின்ன வயதில் இதை யார்  இசைத்தார்கள் இதன் நதிமூலம் ரிஷிமூலம் எதை பற்றியும் தெரியாது.. என்னை பொறுத்தவரை  அது ஒரு  இசை...ஆனால் இதனை வாசிக்க இத்தனை பேர் உழைப்பு தேவையாய் இருக்கின்றது என்று  நினைக்கும்  போது ஆச்சர்யமாக இருக்கின்றது...


நம்மில் பலருக்கு இது எந்த இசைக்கோர்வை என்பது பலருக்கு தெரிந்து இருக்க நியாமில்லை...நம்மை பொறுத்தவரை இந்த இசை ஒலித்தால் மணி ஆகி விட்டது... வீட்டை பூட்டிக்கொண்டு  வேலைக்கு கிளம்பவேண்டும் என்பதுதான் மனதில் பதிந்து  போன விஷயமாக இருக்கும்.


1877 ஆம் ஆண்டு பிரெஞ் Camille Saint-Saens கம்போசரால் இந்த இசைக்குறிப்பு எழுதப்பட்டு அது நாடு கடந்து நம் ரேடியோ விவதபாரதியில் ஒவ்வோரு நாளும் நிகழ்ச்சியை முடிக்க இந்த இசைக்கோர்வை பயண்படுத்தப்பட்டது....

இந்த இசைக்கோர்வையை எழுதியCamille Saint-Saens  பணம் கொடுத்தார்களா என்பது எல்லாம் நமக்கு தெரியாது.,..

 விவத பாரதியின் வர்த்தக ஒளிபரப்ப கேட்டு வளர்ந்த சமுகத்துக்கு இந்த இசைக்கோர்வையை கேட்கும் போது அது கடந்து வந்த பாதையை  பார்க்கையில் ஆச்சர்யமே...

1877 ஆம் ஆண்டு இசைக்கப்பட்ட இசைக்கோர்வையை இப்போது கேட்டாலும் நட்ம் உடல் சிலிர்க்கின்றது காரணம் அது நம் நாட்டில் தொடர்ந்து  ரேடியோவில்  தினமும் ஒளிபரப்ப பட்டதுதான்...

130 வருட பழமை வாய்ந்த இந்த  இசையை கேட்டு அனுபவியுங்கள்... ஒருகாலத்தில் இந்த இசை பலரை சுறுசுறுபாக்கி வேலைக்கு மற்றும் பள்ளிக்கு பின்னங்கால் பிடறியில் பட ஓட வைத்த காட்சி இன்னும் என்  நெஞ்சில் பசுமையாக...

கேட்டு ரசிக்க அந்த இசைக்கோர்வை இதோ......






குறிப்பு 

கார்த்திக் சார் மிக்க நன்றி.........

பிரியங்களுடன்
ஜாக்கி சேகர்.




நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

11 comments:

  1. மிக அருமையான பகிர்வு . .




    நன்றி

    ReplyDelete
  2. பசுமையான நினைவுகள்..

    ReplyDelete
  3. JACKIE : Thanks for sharing this video. By listening to the first string, i went to my GOLDEN School days...

    Thanks for Karthik as well...

    ReplyDelete
  4. This reminds me of listening to PONGUM POOMBUNAL - PIRANTHA NAAL VALTHUKKAL ETC., of Ceylon Tamil Channel - After srilankan war, we are missing this radio channel very much. Great loss to us which is irreparable.

    ReplyDelete
  5. A NICE FLASHBACK. THANKS FOR SHARING JACKIE.

    ReplyDelete
  6. மீண்டும் விவித பாரதியை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி! அருமையான மறக்க முடியாத இசை!

    ReplyDelete
  7. Thank you Jackie!!! Excellent Video!! Nice Memoriess

    ReplyDelete
  8. Jackie....I have shared this info in FB and given the link to your site...

    ReplyDelete
  9. நன்றி நண்பர்களே.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner