சாண்ட்விச் அண்டு நான்வெஜ்/புதன்/04/04/2012


ஆல்பம்..

எட்டி நடுமார்பில்  உதைக்க எத்தனித்து அந்த உதை அடிவயிற்றில் விழுந்தால் எப்படி இருக்கும்... ??அப்படி ஒரு மனநிலையில்தான் தமிழக மக்கள் இருக்கின்றார்கள்..
ஏற்கனவே மின்வெட்டில் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் இப்போது மின்சாரக்கட்டணத்தை அதிரடியாக அரசு உயர்த்தி இருக்கின்றது.. எதிர்கட்சிகள் மற்றும் மக்களின் பெருத்த எதிர்ப்பு காரணமாக மின்கட்டணத்தை உயர்த்திய மறுநாள் சட்டசபையில் மின் கட்டணத்தை கொஞ்சமே கொஞ்சம் குறைத்து இருக்கின்றார்.. வாடகை வீட்டில் இருக்கும் ஒண்டு குடித்தனக்காரர்கள் எல்லாம்  செத்தான்டா சேகரு மனநிலையில் இருக்கின்றார்கள்..
============
இதயம் இனித்தது கண்கள் பணிந்தது என்று கலைஞர் சொன்னதுக்கு பொங்கிய மீடியாக்கள்.. நடுநிலை போர்வையில் இருக்கும் ரத்தத்தின் ரத்தங்கள் போயஸ் தோட்டத்தில் அதே இதயம் இனித்தன கண்கள் பணிந்தது சமீபத்தில் நடந்த போது வாயே திற்க்கவில்லை...வாயில் பெவிக்காலின் பலமான இணைப்பை போட்டு விட்டார்கள் போல...... வாயை திற்ககவே கானோம்..என்னவோ முதல்வர் ஜெயலிலிதா350 சீசீ மோட்டர் சைக்கிளின் திரட்டலை திருக்கிக்கொண்டு இருக்கும் போது சசிக்கலாவை திடிர் என்று  இறக்கி விட்டு விட்டு பறக்க போகின்றார் என்று தொடை தட்டிய நடுநிலை ரராக்கள்.. இப்ப பாருங்க அம்மா எப்படி புயலென பறக்க போறாங்க என்று சிலர் சொல்லிகொண்டு இருந்தார்கள். புயல் புஸ்ஸாகி விட்டது..
============
சினிமா ஸ்டிரைக் வரும் ஏழாம் தேதியில் இருந்து  தொடங்கப்போவதாக பெப்சி அறிவித்து இருக்கின்றது.. இருப்பத்தி நாலாயிரம் மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்று பெப்சி சொல்லுகின்றது..  பெப்சிக்கு பதில் புதிய அமைப்பை அமைத்தே தீருவோம் என்று தயாரிப்பாளர் சங்கம் சொல்லுகின்றது.. வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுக்க ஆரம்பித்தவன்.. படம் ரிலிசாயிடும் பணத்தை செட்டில்  பண்ணிடறேன்னு சொல்லிக்கொண்டு இருக்கும் டெக்னிஷியன்கள் உதவி இயக்குனர்கள் எல்லாம் பீதியில் இருக்கின்றார்கள்.. ஷுட்டிங் இருந்தால் சாப்பாட்டு பிரச்சனையை சமாளித்து விடலாம் என்று கனவுகளோடு இருந்த உதவி இயக்குனர்கள் தவித்து போய் இருக்கின்றார்கள்...பெப்சி  அமைப்பு ஆப்பை அசைத்த பீதியில் இருக்கின்றது என்பதே  உண்மை..
============
புதிய தலைமை செயலகம் ஒழுங்காக கட்டி முடிக்கப்படவில்லையாம்..நீங்க கூட போன ஆட்சியில் கட்டி முடிக்காமல் விட்டு விட்டு போன பாலத்தையும், கட்டிடத்தையும் அப்படியேவா  கலைஞர் ஆட்சியில் அப்போ  என்று விட்டு விட்டு அறிக்கை கொடுத்தார்கள்..??? போய் பாருங்கள்.. தலைமை செயலகம் சுற்றியும் அழகாக புல்வெளியை அமைத்து இருந்தார்கள். அந்த புற்கள் நீர் இல்லாமல் காய்ந்து தீய்ந்து போய் கிடக்கின்றன...புற்கள் என்ன பாவம்  செய்தன என்று தெரியவில்லை... மருத்துவமனையாக மாற்றினாலும் அழகுக்கு எப்படியும் புற்க்களை வளர்க்க வேண்டும் அல்லவா? அதுக்காவது தண்ணி உற்றலாமே??
=====================


ரொம்ப நாள் கழித்து தியேட்டடருக்கு போய் மூன்று படம் கொடுத்த உற்ச்சாக இழப்பை புதுப்பித்துக்கொள்ள  தெலுங்கு ரகளையோ அல்லது தமிழ் ரகளையையோ பார்த்து தொலைக்கலாம் என்று நினைக்கின்றேன். அட்லீஸ்ட் தமன்னாவுக்காகவாவது பார்க்கலாம் என்று இருக்கின்றேன்.

===========
மிக்சர்
ஐபிஎல் சென்னையில் நேற்று கோலாகலமாக தொடங்கி விட்டது.. பத்தாவது படிக்கும் பசங்களின் பெற்றோர்கள் வெறுத்து போய் இருக்கின்றார்கள்.. பத்தாவது படிக்கும் அம்பளை பசங்க இஞ்சி தின்ன குரங்கு கணக்கா முகத்தை வச்சிகிட்டு புத்தகத்தை வச்சிகிட்டு படிக்கறது போல நடிக்கறானுங்க..


===============
சென்னையில் அண்ணாசாலையில் டிராபிக் ஒன்வே ஆன காரணத்தால் ஜிபி ரோட்டில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்து இருந்தவர்கள்... செய்த அராஜகத்துக்கு அளவே இல்லை.. ஆனால் இப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மவுண்ட் ரோடு எல்ஐவி பக்கம்  செல்லும் அனைத்து வாகனங்களும் ஜிபி  ரோட்டில் செல்லுகின்றன...அடப்பாவிங்களா.. ஒரு ரோட்டையே ஆட்டையை போட்டு வச்சி இருந்திங்களேடா??
=================
டிபன்ஸ் காலனியில் 13 வயது மதிக்கதக்க சின்ன பெண்ணை பார்த்தேன்.. அவள் ரொம்ப கேஷுவலாக ரோட்டை பார்த்துக்கொண்டும் பேராக்கு பார்த்துக்கொண்டும் நடந்து கொண்டு இருக்கின்றாள்.. ஆனால் கையில் இருக்கும் செல்போனில் விரல்கள் நடனமாடி மெசேஜ் டைப் செய்துக்கொண்டு இருந்தன... சான்சே இல்லை.. செமை பிராக்டிஸ்... கண்ணால் பார்த்து அடிக்கறதுக்குள்ள நமக்கு நாக்கு தள்ளிடுது...அநத பொண்ணு என்னடான்னா? பார்க்காமலே அடிச்சி தள்ளிது... கண் எதிரில் கடுப்பேத்தறாங்க மை லார்ட்...
=============
தகவல்.
தினமும் பதிவு போடறது சாமான்ய விஷயம் இல்லை.. பெண்டு கழட்டற வேலை.. ஆனா இப்ப இதை சிலர் புராஜெக்ட்டா செய்ய ஆரம்பிச்சிட்டாங்க...365 நாளும்  அவுங்களுக்கு பிடித்த துறையை பற்றி தினமும் எழுதுவது என்று எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள்......  எனது நண்பர் சின்னப்பையனும் தினமும் ஒரு பதிவாக போட்டு தாக்குகின்றார்..மென் பொருள் நண்பர்கள் வாசித்து பயண்பெற அது உதவும் என்று நம்புகின்றேன். விருப்பம் இருப்பவர்கள் வாசித்து பார்க்க கிளிக்கவும்..
===============================

============== 
இந்தவாரகடிதம்..

திரு. ஜாக்கிசேகர் அவர்களே,

நான் உங்கள் பதிவுகளை ஓரிரு வருடங்களாக படித்து வருகிறேன். இயல்பிலேயே பிரச்சினைகளை கண்டு ஒதுங்கி செல்லும் எனக்கு, மனதில் பட்டதை எழுதும் உங்கள் பாணி மிகவும் பிடிக்கும்!


நான் காமிக்ஸ் புத்தகங்களின் பெரும் ரசிகன். இந்த காலத்து பள்ளி மாணவர்களும், கல்லூரி இளைஞர்களும் காமிக்ஸ் பற்றிய எந்த அறிதலும் இல்லாது அவற்றை குழந்தைகளுக்கான புத்தகங்கள் என நினைத்து புறக்கணிப்பது வேதனையை தருகிறது! உதாரணத்திற்கு லயன் காமிக்ஸ் ஆசிரியரின்
இந்த பதிவை பாருங்கள்! இது குழந்தைகள் விஷயமல்ல!

காமிக்ஸை விடுங்கள், பொதுவாகவே தமிழில் வாசிக்கும் வாடிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனாலும் உங்களை போன்ற நட்சத்திர வலை பதிவர்களுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து மிகவும் வியந்து போகிறேன்! கேபிள் சங்கர், யுவகிருஷ்ணா  மற்றும் உங்களுடைய சமீப பதிவுகளில் ஓரிரு பின்னோட்டம் எழுதி எனது காமிக்ஸ் பற்றிய வலைதளத்திற்கு சுட்டி கொடுத்தவுடனேயே  எனது வலைதளத்திற்கு வருவோர் எண்ணிக்கை கூடியது எனக்கு  மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது! காமிக்ஸ் பற்றிய அறிதல் இல்லாத இத்தலை முறையினர் எனது பதிவுகளையும், எனது சக காமிக்ஸ் பதிவர்களின் (தோழர்களின்) வலைத்தளங்களையும் எனது  வலைத்தளத்தில் உள்ள சுட்டிகள் மூலம் பார்த்து காமிக்ஸ் பற்றி சற்றேனும் அறிந்து கொண்டால் அதுவே எனக்கு போதுமானது!

நேரம் கிடைத்திடும் போது எனது தளத்தை ஒருமுறை வாசிக்க வேண்டுகிறேன்! அனுபவமிக்க உங்களுடைய கருத்துக்கள் எனக்கு உதவியாக இருக்கும்!

http://bladepedia.blogspot.com/


நான் உங்களுக்கு இக்கடிதம் எழுதிட முக்கிய காரணம், நான் உங்கள் தளத்தில் எனது தளத்திற்கு விளம்பரம் கொடுக்க விரும்புகிறேன் என்பதை தெரிவிக்க! நான் வெறுமனே பின்னூட்டமிட்டு எனது தளத்திற்கு இலவச விளம்பரம் அளித்தது உங்களை எரிச்சல் படுத்தி இருக்காது என்றே நம்புகிறேன். அவ்வாறிருந்தால், மன்னிக்கவும்! உங்கள் தள முகப்பின் மேற்பகுதியில் ஒரு மாதம் விளம்பரம் கொடுத்திட நான் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பதை தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.


மிக்க நன்றி! அன்புடன்,

கார்த்திக்

=======================
அன்பின் கார்த்திக்,

படிக்கும் விஷயம் பலரிடம் சென்று சேரவேண்டும் என்பது நல்ல விஷயம்.. இதுக்கு காசு எல்லாம் வேண்டாம்... உங்கள் கடிதத்தை நான் அப்படியே பிரசுரிக்கின்றேன்..   அதில் இருக்கும் தொடுப்பு மூலம் என் தளத்துக்கு வருபவர்கள் மற்றும் காமிக்ஸ் மேல் விருப்பம் இருப்பவர்கள்.. நிச்சயம் உங்கள் தளம் வந்து வாசிப்பார்கள்.. உங்களிடம் காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தால் கொடுக்கவும் படித்து வெகுநாள் ஆகின்றது...

நன்றி 
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


=======================
படித்ததில் பிடித்தது..

தொப்பி வியாபாரியும் குரங்குகளும்.

சின்ன வயசில் படித்த தொப்பி வியாபாரியும் குரங்குகளும் கதையின் புதிய வடிவம் இது.


தலைமுறைகள் கடந்து போக, அதே சரித்திரம் திரும்புகிறது. தொப்பி வியாபாரியின் எள்ளுப் பேரன் ஒருவன், தாத்தாவைப் போலவே தொப்பி வியாபாரம் செய்கிறான். வியாபாரத்துக்காக வெளியூர் சென்றபோது, நிழலுக்காக தாத்தா ஒதுங் கிய அதே மரத்தின் கீழ் இவனும் ஒதுங்க வேண்டிவருகிறது. தாத்தா போலவே தூங்கியும் விடுக
ிறான். தாத்தா காலத்தைப் போலவே மரத்தின் மேலிருக்கும் குரங்குகள் இறங்கி வந்து அவனது கூடையிலிருந்த தொப்பிகளையெல்லாம் தூக்கிக்கொண்டு போய் விடுகின்றன.
தூக்கம் கலைந்தவன், தன் தொப்பிகள் பறிபோனதைப் பார்க்கிறான்.ஆனால், தான் கேள்விப்பட்டிருந்த தாத்தா கதை நினைவுக்கு வர, உள்ளூர ஒரு தெம்பு வருகிறது.

தாத்தா காலத்து வித்தை பலிக்கிறதா என்று பார்க்க, குரங்குகளைப் பார்த்தபடி தன் தலையை தேய்க்கிறான். என்ன ஆச்சரியம், மரத்திலிருந்த குரங்குகளும் அப்படியே தலையைத் தேய்த்தன. இனி பிரச்னை இல்லை என்று உற்சாகமானவன் தன் தலையிலிருந்த தொப்பியை எடுத்துக் கீழே வீசினான். குரங்குகளும் அந்த தொப்பிகளை வீசும் என்று எதிர்பார்த்தால்.. ம்ஹம்.. குரங்குகளிடம் ஒரு அசைவில்லை. ஒரு குரங்கு மட்டும் மின்னல் வேகத்தில் இறங்கி வந்து அவன் வீசிய தொப்பியையும் எடுத்துக்கொண்டு போய்விட்டது.

மேலே போன அந்த குரங்கு அவனிடம் சொன்னது... ''உங்களுக்கு மட்டும்தான் தாத்தாக்கள் இருக்கிறார்களா? எங்களுக்கும் உண்டு!

நண்பர் கேஷவ் பாஷியம் கூகுள் பிளஸ்சில்......

==================
பிலாசபி பாண்டி

காதல் சுவாரஸ்யமான, விலைமதிக்க முடியாத அற்புதமான பரிசு .... அந்த பரிசை எல்லாருகிட்டயும் எதிர்பார்க்க முடியாது..காரணம் எல்லாராலையும் இதயம் பூரிக்கும் அளவுக்கு மகிழ்வித்து அந்த பரிசை காதலோடு கொடுக்கத் தெரியாது...
=========== 
பேன்ட் காதல்னா... உள்ள போட்டு இருக்கற ஜட்டி நட்பு போல...சம்டைம்ஸ் பேன்ட் எதிர்பாராத விதமா பரக்குன்னு கிழிஞ்சி போனாலும்....உள்ள போட்டு இருக்கும் ஜட்டி நம்ம மானத்தை காப்பாத்தும்.... நண்பேன்டா....

=========== 
வாழ்க்கையில் நம் நண்பர்களை தேர்வு செய்வது நம் கையில்தான் இருக்கின்றது..யாரை முற்றிலும் புறக்கணிக்கவேண்டும்.. யாரோடு கைகுலுக்க வேண்டும்... யாரை இறுக்கப்பற்றிக்கொள்ளவேண்டும் என்பதில் மிக கவனமாக இருப்பதில்தான் நம் வெற்றியே....
==============
நான்வெஜ்18+

நில நடுக்கம் அதிகம் வரும் ஜப்பான்ல  ஒரு வாழப்பழ சோம்பேறி இருந்தானாம்.  செமை துட்டு பார்ட்டி,  சரி வாழப்பழ சோம்பபேறின்னு அவனுக்கு பேர் எப்படி வந்துச்சி..? எல்லாரும் வாழப்பழத்தை கைல கொடுத்த உறிச்சி சாப்பிடுவாங்க.. அவனுக்கு வாழப்பழத்தை வாயில உறிச்சி வைக்கனும்.. அப்பதான் தின்னுவான். அந்த அளவுக்கு சோம்பேறி.. அந்த நாதரியை  எந்த பொண்ணும் கட்டிக்கலை... எல்லா பொண்ணுங்களுக்கும் இந்த சோம்பேறியை வச்சிகிட்டு  என்ன செய்யறதுன்னு பயம்தான்.. ஒரே ஒரு பொண்ணு சொத்துக்கு ஆசைப்பட்டு அவனை கட்டிக்கிச்சாம்... கல்யாணம் ஆன அன்னைக்கு நைட்டு என்னைக்கு இல்லாம சோம்பேறித்தனத்தை எல்லாம் விட்டு விட்டு அவளை கொஞ்சி தீர்த்தானம்.. எல்லாரும் உங்களை வாழப்பழ சோம்பேறின்னு சொல்லறாங்க.. உங்களை பார்த்த அப்படி இல்லையே?ன்னு சொன்னாளாம்...  அவ உடை எல்லலாத்தையும்  அவுத்தான்....சரி மேட்டர் நடக்க போவுதுன்னு உற்சாகத்துல புதுப்பொண்ணு ரொம்ப சந்தோஷமா இருந்தா..ஆனா ஆனா அவன் அவள் மேல படுத்த வாக்கிலேயே எந்த இயக்கமும் இல்லாம இருந்தான்.. அவளுக்கு ஒரே ஆச்சர்யம்.. இப்படி கூட இருப்பாங்களா? என்னங்க எதையுமே செய்யமா? என்று வாயை திறக்கும் முன் அவள் வாயை பொத்திவிட்டு  அந்த வாழப்பழசோம்பேறி சொன்னான்....இன்னும் 30செகன்டுல வழக்கமா வரும் நிலநடுக்கம் வந்துடும்.. நான் எதுக்கு தேவை இல்லாம..செஞ்சிக்கினு? எல்லாத்தையும் அது பார்த்துக்கும்னு சொன்னானாம்.



 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.





நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

10 comments:

  1. மாம்ஸ், இன்று வடை எனக்கே...

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஜாக்கி!!! உங்களுக்கு ஒரு பெரிய பதிலை எனது இந்த பதிவில் எழுதியுள்ளேன்! பொறுமையாக படித்துப் பாருங்கள்!

    பிருந்தாவனமும் ப்ளேட்பீடியாவும்!

    >>> உங்களிடம் காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தால் கொடுக்கவும் படித்து வெகுநாள் ஆகின்றது...<<<

    நிச்சயமாக, உங்களது முகவரியை மின்னஞ்சலில் எனக்கு அனுப்புங்கள்!

    ReplyDelete
  3. தி.மு.கவுக்கு ஓட்டுப் போட்டு, ஓய்ந்து போய் இந்த முறை அ.தி.மு.கவுக்கு ஓட்டுப் போட்டவன். இருப்பினும் கண்கள் பணித்ததையும், சசிகலா இணைந்ததையும் ஒரே தராசில் எடை போட என்னால் முடியவில்லை. கண்கள் பணித்ததற்கு பின் இந்த நாட்டை லட்சம் கோடிக்கு விற்றவர்களின் தவறு இருந்தது. இவர்கள் ஒரு மாநில அளவில் இருப்பவர்கள் தானே.

    ReplyDelete
  4. why are you linking every news to jayalalitha.....most of your comments are in public interest, so people likes it. taking advantage of this you are propagating your personnel hate- jaya message...

    ReplyDelete
  5. thanks jackey anna for giving some new introductions

    ReplyDelete
  6. அன்புள்ளம் கொண்ட ஜாக்கி அவர்களுக்கு,
    உங்கள் வாசகன் சித்தார்த்தன் எழுதுவது,
    தங்கள் எழுத்து எனக்கு 3 வருடங்களாகப் பழக்கம்...நன்றாக
    உள்ளது...வாழ்த்துக்கள்...சிலபேர்கள் உங்களைக் கிண்டல் பண்ணுவதாக நினைத்தது கொண்டு உங்கள் நடையை காபி
    அடிக்கிறஆற்கள்....

    ReplyDelete
  7. அன்புள்ளம் கொண்ட ஜாக்கி அவர்களுக்கு,
    உங்கள் வாசகன் சித்தார்த்தன் எழுதுவது,
    தங்கள் எழுத்து எனக்கு 3 வருடங்களாகப் பழக்கம்...நன்றாக
    உள்ளது...வாழ்த்துக்கள்...சிலபேர்கள் உங்களைக் கிண்டல் பண்ணுவதாக நினைத்தது கொண்டு உங்கள் நடையை காபி
    அடிக்கிறஆற்கள்....

    ReplyDelete
  8. நன்றி நண்பர்களே உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு..அன்புள்ள சித்தார்த்.. அவர்கள் என் தீவிர அடிவருடிகள்..அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.. நமக்கு ஆயிரம் வேலை இருக்கு பாசுசுசுசுசுசு

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner