கணவன் மனைவி உறவில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை உப்பு பெறாத விஷயத்துக்கு கேவலமாக
சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள்..இரண்டு பேருமே
மோட்டுவாலையை பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டு உட்கார்ந்து விட்டு,
யாராவது
ஒருவர் விட்டுக்கொடுக்க, சண்டை மறந்து பிறகு முத்தத்திலோ அல்லது சூழ்நிலை ஒத்துழைத்தால் கலவியிலோ ,அந்த
மானங்கெட்ட சண்டை முடிவுற்று, இருவரின்
வேர்வையோடு அஸ்தமனத்தை நோக்கி பயணிக்கும்...இந்த இரண்டு நாள் சண்டையையும் , காதலையும், ஏக்கத்தையும்
திரைக்கதையாக்கினால் அது ராஜேஷ் படம் என்று கற்புரம் அடித்து சத்தியம் செய்து
விடலாம்.
காதலர் இருவரும் உப்பு பெறாத சின்ன விஷயத்தை பெரிதாக்கி
அதனை காம்ளிகேட் செய்து, அதன் பின் அதை ஊதி
பெரிதாக்கி பின் சமாதனத்தை அடைவதுதான்.. இதுக்கும் முன் இயக்குனர் ராஜேஷ் எடுத்த இரண்டு திரைப்படங்களின் அடிநாதம். இந்த
படத்திலும் அதே பாணி திரைக்கதையை பயண்படுத்தி இருக்கின்றார்..
ஒரு படம் பார்க்க போகும் போது என்னவெல்லாம் எதிர்பார்ப்பீர்கள்.. படத்தை பார்த்துட்டு வெளியே வந்தா என் கவலை
எல்லாம் போவனும் சார் என்று சொல்லும் நம்மில் பலர்
ஜாலியாக போய் பார்த்து ரசித்து விட்டு வரும் படம்தான் ஒரு கல் ஒரு கண்ணாடி.
===================
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் ஒன்லைன்.
போலிஸ் உயர் அதிகாரி மகளை தமிழ் ஆசிரியர் மகன் தன்னை
காதலிக்க வைக்க போராடுவதே படத்தின் ஒன்லைன்.
======================
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் கதை என்ன?
போலிஸ் உயர் அதிகாரி சியாஜிஷாண்டே ,உமாபத்மநாபன் தம்பதிக்கு
பிறந்த ஹன்சிகா மோத்வானியை.. தமிழ் ஆசிரியரான அழகம் பெருமாள், சரண்யா பொண்வண்ணன்
மகனான உதயநிதி காதலிக்க துரத்துவதும், அதற்கும் பால்ய நண்பன் பார்த்தசாரதி
என்று சொல்லாமல் செல்லமாக பார்த்தா என்று
அழைக்கப்படும் சந்தானம் உதவி செய்கின்றார்..
அந்த காதல் ஜெயித்ததா? அல்லது
ஊத்திக்கொண்ட்தா என்பதை திரையில் பார்த்து சிரித்து மகிழுங்கள்..
==============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
படத்தை ஆரம்பிக்கும் போதே இயக்குனர் ராஜேஷ் ஒரு விஷயத்தில்
தெளிவாக இருந்து இருக்கின்றார்.. பொங்கலில் மிளகை புறக்கணிப்பது போல இந்த படத்தில் கதையை புறக்கணித்து
இருக்கின்றார்..
படம் பார்க்க வரப்போறவனை சிரிக்கவைத்து அனுப்பினால்
போதும் என்று முடிவுக்கு வந்து விட்ட
காரணத்தால் கதையை பற்றி நாம் பேசவேண்டிய அவசியம் இல்லை.
உதயநிதி... நான் சின்ன வயதாக இருக்கும் போது டிடியில் குறிஞ்சி
மலர் என்ற சீரியல் ஒளிப்பரப்பானது... அதில் உதயநிதியின் அப்பா ஸ்டாலின் ஒரு கேரக்டர் செய்து இருந்தார்.
அவர் இப்போது போல அப்போது ஸ்மார்ட்டாக இருக்கவில்லை...ஆனால் வட்டியும் முதலுமாக
ஒரு தலைமுறை தான்டி ஸ்மார்ட் லுக்கோடு முன்னாள் முதல்வர் விட்டுக்கலைப்பயணம்
தொடங்கி இருக்கின்றது..
உதயநிதி நன்றாக சொதப்புவார் என்று எதிர்பார்த்தால்.. நன்றாகவே
நடித்து இருக்கின்றார்.. நிறைய காட்சிகளில் முதல் படத்து தயக்கங்கள் அவரின்
முகத்தல் நிறைய பார்க்க முடிகின்றது...
நிறைய ஒன்மோர் போய் ஷாட் ஓகே ஆனா டயர்டுகளை
உதயநிதி முகத்தில் பார்க்க முடிகின்றது. காமெடி டைமிங்கில் முதல் படத்தில்
நடிப்பதும் அதை சக்சஸ் செய்வதும் பெரிய விஷயம். அதை சிறப்பாகவே செய்து
இருக்கின்றார்..நடனத்திலும் அவருக்கு என்ன வருமோ அதையே கியூட்டாக ஸ்டெப்பாக மாற்ற தினேஷ் மாஸ்டர் படாத பாடு
பட்டு இருக்கின்றார். ஆனால் அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றார்.
உதயநிதிக்கு காதல் காட்சிகளில் பெரிய தயக்கம் இருக்கின்றது.... அதில்
கேமரா பின் இருக்கும் மனிதர்களை பார்த்து வெட்கப்பட்ட புன்னகை பூப்பது
அப்பட்டமாக தெரிகின்றது... பட் நல்லாவே
செய்து இருக்கின்றார்..ஹன்சிகா சட்டையை இழுத்து கட்டிபிடிக்கும் போது ஜென்ம
சாபல்யம் உதயநிதி அடைந்து இருக்க வாய்பு அதிகம் இருக்கின்றது.
ஹன்சிகா எங்கேயும் காதல் படத்துக்கு பிறகு ரோட்டு ஓர பரோட்டவை தின்று தின்று கொழுத்தது
போல திமிரிய உடம்புடன் வருகின்றார்.. சின்ன தம்பி குஷ்பு என்றழைக்கும் அளவுக்கு
உடல்வாகு மற்றும் கியூட் புன்னகை
ஹன்சிகாவுக்கு இருப்பதை மறுப்பதற்கு இல்லை. கொடுத்த காசுக்கு டைட் உடை கொடுத்து
பாலைவன பாடலில் பெருத்த மார்பு அதிர ஓட
விட்டு இருக்கின்றார்கள்.. அந்த பாடலில் ஹன்சிகா காஸ்ட்யூம் மற்றும் அந்த பாறை
லொக்கேஷன் எல்லாம் அருமை..கேமராமேன் பாலசுப்ரமணியத்தின் விஷுவல்கள் நன்றாக
இருக்கின்றன..
பார்த்தா கேரக்டரில் கலக்கும் சந்தானம் இந்த படத்தின் ரியல்
ஹீரோ.. கதையையோ அல்லது லாஜிக்கேயோ படம் பார்ப்பவன் கொஞ்சமும் யோசிக்க வண்ணம்
பார்த்துக்கொள்ளவேண்டிய பெரிய பொறுப்பை அசத்தலாய் சுமந்து இருக்கின்றார் சந்தானம்..
திரையில் சந்தானம் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டர் களைக்கட்டுகின்றது...
திருவல்லிக்கேணி ஐயர் ஆத்துல இருந்து ஒரு அம்பி வந்து பேசினா எப்படி இருக்குமோ? அதே
போல பேசுகின்றார்.. சான்சே இல்லை.. என்ன முகபாவம் பாடி லாங்வேஜ்... ஹேட்ஸ் ஆப்
சந்தானம்.
சன்டிவி உமாபத்மநாபன் காலம் கடந்து ஒரே ஷாட்டில் சீ துரு
சேலையில் தன் இளமையை நிரூபிக்க முயன்று தோற்றுப்போகின்றார்.
வேணாம் மச்சான் வேணாம் சாங் வரும் போது தியேட்டர் எழுந்து
ஆடுகின்றது.. அதை கவரும் விதமாக சிம்பின் ஸ்டெப் அந்த பாடலை இன்னும் ரசிக்க
வைக்கின்றது.. வேணாம் மச்சான் பாட்டில் பின்னால் ஆடும் பெண்களில் திரையின் இடது
ஒருத்தில் மஞ்சள் புடவையோடு மங்களகரமாக ஒரு பெண் ஆடுகின்றார்.. பார்க்க அவ்வளவு அழகாக
இருக்கின்றார்.. பின்னால் எல்லாமே அழகு பெண்களாக செலக்ட் செய்யாமல் சுமாரான பெண்களை அந்த சுட்ச்சிவேஷனுக்கு எற்றது போல பெண்களை
செலக்ட் செய்து இருப்பது சிறப்பு.
எனக்கு ரொம்பவும் பிடித்த காதல் ஒரு பட்டர்பிளையை போல வரும்.... சாங் மேங்கிங் எனக்கு ரொம்ப பிடித்து
இருக்கின்றது..
படத்தில் காமெடி காட்சிகளில் மனம் விட்டு சிரிக்க
வைக்கின்றார் சந்தானம்..பிளைட் விபத்தில் சிக்க போவுதுன்னா நாங்க உங்களுக்கு பாராசூட்
கொடுப்போம்.. என்று ஹன்சிகா சொல்ல... உயிர் போகும் போது தேங்காய் எண்ணெயை வச்சிகிட்டு நாங்க என்ன செய்யறது என்று
கேட்பது.. கிருஸ்துவ மதபோதகர் போல பேசுவது என்று கலக்கி இருக்கின்றார்கள்.
சந்தானம் நிறைய இரட்டை அர்த்த வசனங்கள் பேசினாலும்
சிலருக்கு புரிந்து கொள்ள வயது பத்தவில்லை..
ஹாரிசின் வெற்றி பாடல்கள்.
பளிச் என காட்சிகளில் கவனம் செலுத்தும் கேமராமேன் பாலசுப்ரமணியம், அதே
சந்தானம் உதயநிதியின் பணம் என நம்பிக்கையுடன் களம் இறங்கி வெற்றிபெற்று
இருக்கின்றார்...
சத்யம் தியேட்டர், அடையாறு பிரிட்ஞ் மற்றும் மத்திய கைலாஷ் இரண்டு வீடுகள் இதுதான்
படத்துக்கு லோக்கேஷன் என்று சிம்பிளாக முடித்து இருக்கின்றார்..
ஆர்யா மற்றும் ஆண்ட்ரியா வரும் காட்சிகள் கலகல என்றாலும்
அன்ட்ரியாவை பார்க்கும் போது, இருக்கு ஆனா
இல்லை என்று எஸ்ஜெ சூர்யா டயலாக் நியாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
படம் முடியும் போது புளுபர்ஸ் காட்சிகள் போடுகின்றார்கள்.
அதில் சினேகாவிடம் இருங்க..பிரசன்னாவுக்கு கால் செஞ்சி சொல்லறேன். என்று உதயநிதி
போன் எடுக்க அந்த காட்சி ஜாலி சரவெடி.,..
கோடி கோடியாய் செலவு செய்து சங்கர் அடிக்கும்
ஹாட்ரிக்குக்கும் சிம்பிள் பட்ஜெட்டில் ராஜேஷ் அடிக்கும் ஹாட்ரிக்கும் நிறைய
வித்யாசம் இருக்கின்றது...ராஜேஷ் வெற்றியை தக்க வச்சிக்கோங்க.
வயிறு குலங்க சிரிக்க வைத்து கவலையை மறக்க வைத்தமைக்கு
நன்றி ராஜேஷ்...ஆல் த பெஸ்ட் ராஜேஷ்...
உதயநிதி ஹன்சினா காதலை இன்னும் உணர்பூர்வமாய் சொல்லி இருக்கலாம்..
சரண்யா பொண்வண்ணன் மற்றும் அழகம் பெருமாள் போஷன் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்த வில்லை...பாஸ்
என்கின்ற பாஸ்கரன் படம் போல பல கேரக்டர்கள் வந்து இருந்தால் இன்னும் நன்றாக
இருந்து இருக்கும் படம் முழுக்க ஹன்சிகா உதயநிதி வருவதால் சில இடஙகளில் தொய்வு
ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை..
===============
படத்தின் டிரைலர்..
==============
படக்குழுவினர் விபரம்
Directed by M. Rajesh
Produced by Udhayanidhi Stalin
Written by M. Rajesh
Starring Udhayanidhi Stalin
Hansika Motwani
Santhanam
Music by Harris Jayaraj
Cinematography Balasubramaniem
Editing by Vivek Harshan
Studio Red Giant Movies
Release date(s) 13 April 2012
Country India
Language Tamil
Produced by Udhayanidhi Stalin
Written by M. Rajesh
Starring Udhayanidhi Stalin
Hansika Motwani
Santhanam
Music by Harris Jayaraj
Cinematography Balasubramaniem
Editing by Vivek Harshan
Studio Red Giant Movies
Release date(s) 13 April 2012
Country India
Language Tamil
========
தியேட்டர் டிஸ்கி.
இஇந்த படத்தை கமலாவில் ஸ்கீரின் ஒன்னில் நேற்று காலை பதினோஐ
மணிக்காட்சியில் பார்த்தேன்...
ஒரு பெரிய கல்லூரி மாணவர்கள்.. கத்தி முகம் சுளிக்க
வைத்துக்கொண்டு இருந்தார்கள்.
பின்னால் உட்கார்நது கொண்டு நொய்
நொய் என்று மொக்கை கமெண்ட் அடித்து உயிரை வாங்கிக்கொண்டு இருந்தார்கள்.
இலவச அரசி கொடுக்கும் தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில்
கமலா தியேட்டரில் பைக் நிறுத்த 20 ரூபாய் கட்டணம் வாங்குவது பகல் கொள்ளையோ
கொள்ளை.. எல்லாரும் சாபம் விட்டுக்கினே டோக்கன் வாங்கறாங்க.,..
சத்தியம் தியேட்டர்ல காரை விடுவதற்க்கே 20 ரூபாதான் ஆனா
கமலாவில் பைக் விட 20 ரூபாய் வாங்குவது
எல்லாம் கொடுமை.. கடவுவள் இருக்கான்
கொமாரு.. அவன் பார்த்துக்குவான்.
=====
பைனல் கிக்...
இந்த படம் பார்க்கவேண்டிய திரைப்படம் முக்கியமாக காதலியை,
காதலியான மனைவியை,மனைவியாகி காதலியானவளை என
அழைத்துசென்று உற்சாகமாக படத்தை பார்த்து விட்டு வரலாம்.. சம்மருக்கும் இப்போதைக்கு வேறு படம் இல்லாத
காரணத்தால் உதயநிதி காட்டில் வசூல் மழையோ
மழை.
ஓகே ஓகே.= ஓகே
ஓகே ஓகே.= ஓகே
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
தம்பி.. சத்யமில் 30 ரூபா காருக்கு. தகவலுக்காக..
ReplyDeleteGood review Jackie... Surelu want to see this movie
ReplyDeletenice review anna
ReplyDeleteசமீப காலங்களில் நான் அதிகம் எதிர்பார்த்த படம் . . அது என்னவோ தெரியல சிமச . . பாஎபா . இரண்டும் புடிச்சி போச்சா . .இதுவும் நல்லா இருக்கணுமேன்னு ஒரு தவிப்பு . பஹ்ரைன்ல இன்னும் வரல . .ம் ம் ம் வந்த உடனே பாத்துடுவோம்ல . . . விமர்சனத்திற்கு நன்றி ஜாக்கி . . .
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...Nice review..
ReplyDeletenicereview
ReplyDeletenice review
ReplyDeleteSPECTRUM ஊழல் கொள்ளையர்கள் FINANCE செய்து எடுத்த படம் என்பதை எல்லோரும் அறிவர்.
ReplyDeleteதி மு க அனுதாபிகளான திரு கேபிள் சங்கர் அவர்களுக்கும், திரு. ஜாக்கி சேகர் அவர்களுக்கும் இந்த படம் பிடிக்காமல் இருக்குமா ?
VERY GOOD REVIEW JACKIE SIR. BUT, I DONT KNOW WHETHER MOVIE COME HERE OR NOT.
ReplyDeleteLETS HOPE.
Good review jackie sir. but i dont know whether movie come here or not. Lets hope.
ReplyDeletenice
ReplyDeleteதங்கள் விரிவான விமர்சனம் நன்று. நேற்றுதான் படத்தைப் பார்த்தேன் நானும் கவிதையில் படத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். நேரம் இருப்பின் வருகை தரவும்.
ReplyDeleteஇயக்குநர் உஷாராக நிறைய குளோசப் காட்சிகளை தவிர்த்து விட்டு உதயநிதிக்கு உதவியிருக்கிறார்.
ReplyDeleteபடம் பார்த்து முடிந்தவுடன் ”பாட்டி வடை சுட்ட கதை”யின் மேல் மதிப்பு பன் மடங்கு உயர்ந்து விட்டது.
ஹாய் ! விமர்சனம் மிக அருமை. பார்க்கிங்க்கு கமலாவிற்கு கொடுத்த காசில் , நம்ம ஊரு கமலத்தில் படம் பார்க்கலாம்.என்ன! ஒரு மாதம் ஆகும்.
ReplyDelete