சென்னையில் பட்டம் விட்டு கழுத்து அறுத்து சாகடிக்கும் சனியன்கள்..



ஹெல்மெட் போடாமல் ஒரு நாள் சென்னை சாலையில்  போய் பாருங்கள்... அசோக் பில்லர் லேப்ட்டில் வாகனத்தோடு திரும்பினால் ஏதோ பின்லேடனை பிடிக்க பாய்ந்து வருவது போல பாய்ந்து வந்து, பைக் கீயை போலிஸ்காரர்கள்..
எடுத்து தமிழ்பட வில்லன்கள் போல கையில் உருட்டு தடி இல்லாமல் உங்களை ரவுண்ட் கட்டுவார்கள்..

ஆபிஸ் போகும் அவசரத்தில் இருக்கும் பொதுஜனம் காலையில் மனைவி முகத்திலேதானே விழித்தோம்.. அதுக்கே இப்படியா? என்று யோசிக்க கூட நேரம் இல்லாமல் பைன் கட்டுவார்கள்.. அல்லது கெஞ்சி 100ரூபாய் தாளை தாரை வார்த்து விட்டு கடனெழவே என்று அலுவலகத்துக்கு கிளம்பி செல்வார்கள்..

காவல்துறை சொல்லும் காரணம் ஹெல்மெட் போடவிட்டால் உயிர்பலி ஆகிவிடும் என்ற நல்ல எண்ணத்தில் பைன் போடுகின்றோம்.. என்று சொல்லுவார்கள்.. ஆனால் கொடை காலம் வந்தால் பள்ளி கல்லூரி விடுமுறை காலங்களில் பட்டம் விட்டு பலருடைய கனவுகளை சில நாதாரிகள்  சிதைக்கின்றார்கள். அது பற்றி அரசும் காவல்துறையும் அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை...

தமிழ்நாட்டு மக்கள் தொகை ஏழு கோடிப்பேர்... இதில் ஆடிக்கு  ஒன்னு அம்மாவாசைக்கு ஒன்னுன்னு பட்டத்தின் மாஞ்சா நூல் அறுத்து சாவது இயல்பு என்று தமிழக அரசோ அல்லது காவல் துறையோ நினைக்கின்றது போலும்...

கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி சமையல் வேலைக்கு சென்ற இருபத்தி நான்கு வயதான ராஜ்குமார் இன்று இந்த பூமியில் உயிருடன் இல்லை... அவருக்கு இரண்டு பசங்க...ஒருவனுக்கு மூன்று வயது மற்றவனுக்கு ஏழு மாதம்.. இப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனாதையாகிவிட்டன.. அவர் எந்த குற்றமும் செய்யவில்லை... சென்னை சாலையில் வாகனத்தில் பயணித்தார்.. அவ்வளவே...


ஏப்ரல் இரண்டாம் தேதி..  மாஞ்சா கழுத்தை அறுத்து ஒருவர் இறந்த சுவடு இன்னும் மறையவில்லை.. அதற்க்குள் அதுக்கு மறு நாளே பூந்தமல்லியில் 40 வயது மதிக்கதக்க ராஜா என்பவர் தனது கட்டை விரலை இழந்து கழுந்து அறுப்பட்டு இன்னும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றார்...

ராஜா பரிதாபத்தின் உச்சம்... வாகனத்தில் சென்றுக்கொண்டு இருக்கும் போது திடிர் என்று பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை இறுக்க.... சுதாரித்து இறங்கி அதனை எடுக்க முயற்சிக்கும் போது, பட்டம் விட்டவர்கள் கயிற்றை இழுத்து இருக்கின்றார்கள்... இதில் அவரது கையின் கட்டை விரல் துண்டாகி விட்டது...கழுத்தை வேறு கயிறு அறுத்து ரத்தச்சகதி ஆக்கி இருக்கின்றது... இன்னமும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றார்...

இரண்டு பேருமே அப்பாவிகள்... அவர்கள் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள்..?? மருத்துவச்செலவுக்கு  எங்கே போய் நிற்ப்பார்கள்....ஒரு குடும்பத்தின் தூணாக இருக்கும் ஆண் இருபத்தி நாலு வயதில் மரித்து போவது கொடுமை இல்லையா?,
காற்றாடி விடும் தேவிடியா பசங்களின் அண்ணனோ அல்லது தம்பியோ இப்படி  கண் எதிரில் கழுத்து அறுபட்டு ரத்தசகதியில் துடிதுடித்து இறப்பதை பார்த்தால் சும்மா இருப்பார்களா? அடுத்த நாள் காற்றாடி விடும் போது இன்னும் மாஞ்சாவை அழித்தி தடுவுவார்களா?

சென்னைவாசிகளே... கொடைக்காலம் வந்து விட்டது..அரசும் காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை...நாம் வாங்கி வந்த வரம் அப்படி??

உங்கள் பகுதிக்கு பக்கத்தில் இருக்கும் சமவெளி இருக்கும்னால் அந்த பகுதியில் ஜாக்கிரதையாக பயணிக்கவும்... காரணம் சமவெளியில் பட்டம் விடுவார்கள்அதனால் சொல்லுகின்றேன்.....ஆனால் இப்போது எல்லாம் மொட்டை மாடியில் இருந்தே பட்டம் விடுகின்றார்கள்.. பெரிய புளியமரமா? எதிர்க்க இருக்கு அதனால் வளைந்து வாகனத்தை ஜாக்கிரதையாக  ஓட்டிப் போகலாம் என்று நினைப்பதற்கு மிக மெலிதான கயிறு எப்படி கண்ணுக்கு தெரியும்...

வாசக நண்பர் ராஜ் நேற்று கூட டிப்பன்ஸ் காலனியில் காத்தாடி கயிறு  கழுத்தை அறுக்க எத்தனிக்க, மயிர் இழையில் உயிர் தப்பி இருக்கின்றார்...

போனவருடம் பைக்கில் முன்பக்கம் உட்கார்ந்து பயணித்த குழந்தை ஒன்று தந்தை கண் எதிரில் மாஞ்சா கயிற்றால் கழுத்து அறுபட்டு இறந்து போனது...2009ல் இதே போல ஒரு பதிவு எழுதினேன்..அதை வாசிக்க...இங்கே கிளிக்கவும்...ஆனால் உயிர்பலிகள் தொடர்ந்த  வண்ணம் இருக்கின்றன... எந்த மாற்றமும் எவர் ஆட்சியிலும் மாறவில்லை என்பதே உண்மை.


கடந்த திமுக ஆட்சியிலும் இதே போல சம்பவங்கள் நடைபெற்றன..இந்த ஆட்சியிலும் இந்த காத்தாடி கழுத்து அறுப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி இருக்கின்றன...
காரில் பயணிக்கும் கலைஞருக்கும் ஹெலிகாப்ட்டரில் பயணிக்கும் ஜெவுக்கு சாமான்ய மனிதர்களின் சங்கடங்கள்  எளிதில் புரியப்போவதில்லை..

ஒருவேளை ஹெலிகாப்டரில் முதல்வர் ஜெ பறக்கும் போது அவரது ஹெலிகாப்டரின் இறக்கையை ஏதாவது ஒரு காத்தாடி சேதப்படித்தினாலோ அல்லது அவர் பறக்கும் ஹெலிகாப்டருக்கு இணையாக எதாவது ஒரு காத்தாடி பறக்கும் பட்ச்சத்தில் சென்னையில் காத்தாடி விடுபவர்கள் மேல் குண்டர் சட்டம் அந்த நொடியில் இருந்தே பாயலாம்.. அதுக்கு அப்புறம் எந்த பயபுள்ளைக்காவது காத்தாடி விட தைரியம் இருக்கும்னு நினைக்கிறிங்க...?????????

=======
நன்றி தினத்தந்தி.




பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

15 comments:

  1. //காரில் பயணிக்கும் கலைஞருக்கும் ஹெலிகாப்ட்டரில் பயணிக்கும் ஜெவுக்கு சாமான்ய மனிதர்களின் சங்கடங்கள் எளிதில் புரியப்போவதில்லை//
    True...
    Is anyone punished or arrested for this type of crime…?

    ReplyDelete
  2. சோகமான நிகழ்வு...தயவு செஞ்சு பைக்கில் செல்பவர்கள் ஹெல்மெட் உடன் கழுத்தில் ஸ்கார்ப் சுத்தி செல்லும் படி அறிவுறுத்துங்கள் ...

    ReplyDelete
  3. கொடுமை.. படிக்கும் போதே பதறுகிறது. உயிருக்கு மதிப்பில்லாத ஒரு நாட்டில் வாழ்வது கொடுமை. போலீஸ் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படியே.. வெள்ளிக்கிழமை அண்ணாசாலையில் ரேஸ் விடும் சனியன்களையும் பிடித்து உள்ளே போட்டால் பரவாயில்லை. செய்வார்களா...?

    ReplyDelete
  4. காத்தாடிகள் விடுவதை தடை செய்யவேண்டும். அல்லது அதற்கென ஒரு இடத்தை ஒதுக்க வேண்டும்.

    ReplyDelete
  5. இப்படி உயிர் போகும் அளவுக்கு அஜாக்கிரைதையாக காற்றாடி விடுபவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அரசுக்கு எதன் விலையைக் கூட்டலாம் என்று கணக்கு பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

    ReplyDelete
  6. நவீ பிள்ளைக்கு ஓட்டு போடுவோம்! நன்றியுடன் இருப்போம்!!
    ஐ.நா. மனித உரிமை அமைப்பின் தலைவர் - ஆணையாளராக தென் ஆப்பிரிக்காவின் தமிழரான நவீ பிள்ளை அவர்களையும் சிறந்த 100 பேர் தேர்ந்தெடுக்கும் பட்டியலில் உள்ளார். நரேந்திர மோடியும் கூட அதிக ஓட்டுடன் முன்ன்ணியில் உள்ளதை பார்க்கும் போது, தமிழனின் வேகம் போதுமானதல்ல! உடனே நவீ பிள்ளைக்கு ஓட்டு போடுவோம்!

    http://www.time.com/time/specials/packages/article/0,28804,2107952_2107953_2109999,00.html

    ReplyDelete
  7. மாஞ்சா போடும் நாய்களை பார்த்த இடத்திலேயே அடிக்க வேண்டும்!

    ReplyDelete
  8. பாதிக்கப்பட்டவர்களை பற்றிய உங்கள் விவரிப்பை படிக்கும்போதே பயமாக இருக்கிறது. எதை எதையோ பிரேக்கிங் நியூஸ் ஆக காட்டியும், எதர் எதற்கோ விவாத மேடை அமைத்திடும் ஊடகங்கள் இதை ஏன் கண்டு கொள்வதில்லை?!

    ReplyDelete
  9. we have to be careful jackie anna about this as i had been reading this type of accidents regularly

    ReplyDelete
  10. வருத்தமளிக்கும் விசயம்.

    ReplyDelete
  11. மிக அருமையான பதிவு
    காத்தாடி விடும் தேவடியா பசங்களை மாஞ்சா கயிறால் கட்டி சித்திரவதை செய்யணும்...
    இந்த பதிவை எனது ப்ளாகில் வெளியிடலாமா?

    ReplyDelete
  12. //முதல்வர் ஜெ

    They are all just public servants. But they are being idolized in this sanian pidicha Tamilnadu/India. Vote beggars!

    ReplyDelete
  13. கருத்துக்களை பகிர்ந்த நண்பர்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  14. Very sad , surely government / police should take immediate action in this regards to protect further lives.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner