நான் கல்லூரியில் வேலை செய்த போது ,தினமும் கிண்டியில் இருந்து படூருக்கு காலை மாலை என இரண்டு
மணிநேரம் பேருந்து பயணம்...
போர் அடிக்கும்...அப்போது மாணவ மாணவிகளோடு அரட்டை கச்சேரியோடு பயணம் செய்வேன்...தனசேகரன் சார் தனசேகரன் சார் என்று பாசத்தோடு அழைத்து அன்பை பொழிவார்கள்..
போர் அடிக்கும்...அப்போது மாணவ மாணவிகளோடு அரட்டை கச்சேரியோடு பயணம் செய்வேன்...தனசேகரன் சார் தனசேகரன் சார் என்று பாசத்தோடு அழைத்து அன்பை பொழிவார்கள்..
இரண்டு
மணி நேரப்பயணத்தில்
நிறைய பேசுவோம்..பேருந்தில் என்னை சுற்றி எப்போதும் மாணவமாணவிகள் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு வருவார்கள்..
அரட்டை பொதுவாக எதை பற்றி வேண்டுமானாலும் இருக்கும்...அரசியல்,
சமுகம்,வரலாறு,சென்னை டிராபிக், கிமு,கிபி என்று பேச எந்த விஷயத்தையும் நாங்கள் எங்கள் அரட்டையில்
நாங்கள் மிச்சம் வைத்தது இல்லை,.
முதல்நாள் பேருந்தில் முற்று பெறாத டாபிக்கை மறுநாள் காலை பேருந்து புறப்பட ஆரம்பித்ததுமே
தொடங்கி விடுவோம்... காதல் கொண்டேன் தனுஷ் போல மக்கு போல
பேருந்தின் ஜன்னல் வழியாக வாழ்க்கையை வெறுத்து போனது போல வேடிக்கை
பார்த்துக்கொண்டு வருபவன் அரட்டையில் பேச ஆரம்பித்ததும் அவனின் பொது அறிவு கண்டு
வியந்து போய் வாய் பொத்தி இருக்கின்றேன்...
மற்ற ஆசிரியர்கள் எல்லாம் பேருந்தில் ஏறியதும் தூங்கி
விடுவார்கள்..
அவள்
எனது கல்லூரி மாணவி.. ஆனால் அவள் எனது டிப்பார்ட்மென்ட் அல்ல...பேருந்தில் ஒன்றாக பயணிப்போம்...நான் கல்லூரியில் சேர்ந்த
போது பைனல் இயர் படித்துக்கொண்டு
இருந்தாள்... உடையில் அப்படி ஒரு நேர்த்தி..அவள் அணிந்து இருக்கும்
துப்பட்டாவுக்கு இருபுறமும் பின் போடாமல் அவள் கல்லூரிக்கு வந்து நான் பார்த்தது
இல்லை..அவ்வளவு மங்களகரமாய் இருப்பாள்..சின்ன வயதில் இருந்து நடித்து கதாநாயகி ஆனா
நடிகை மோனிகாவை நீங்கள் பார்த்து இருக்கலாம் அல்லவா? அவளை போலவே இருப்பாள்.. அதனால்
அவளை மோனிகா என்று இந்த கட்டுரை முடியும் வரை ஒரு அடையாளத்துக்கு அழைப்போம்....
மோனிகா பேருந்தில் எறினாள் அமைதியாக வருவாள்.. யாரிடமும் எதையும் பேசமாட்டாள்...
மெல்லிய புன்னகை மட்டுமே உதிர்ப்பாள்..
ஒருமுறை காதல் திருமணம் பற்றியும் அதன் சாதக பாதகங்கள்
பற்றியும் பேசிக்கொண்டு இருக்கும் போது, நாங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் மோனிகா
உள்ளே நுழைந்தாள்...காதல் சுத்த பேத்தல் சார்... இத்தனை நாள் வளர்த்த அப்பா
அம்மாவுக்கு தெரியாதா? நமக்கு நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க?
படிக்கறதுக்கு காலேஜ் வராம சில பொறம் போக்குங்க... சைட் அடிக்கவே கலேஜுக்கு
வருதுங்க.. சில பொண்ணுங்களும் அந்த சனியன் பிடிச்ச பசங்க கிட்ட மாட்டிகிட்டு படிப்பையும் லைப்பையும் இழந்துடுதுங்க என்று
அவள் தரப்பு வாதத்தை வைத்தாள்..அதுதான் அவன் எங்களோடு பேசிய முதல் வாங்கியங்கள்..
அவள் நண்பர்களிடம் அவளை பற்றி விசாரித்த போது படிப்பில்
அவள் அவ்வளவு கெட்டி என்றும்...காதல் என்ற சொல்லை கேட்டாலே அவளுக்கு வாந்தி
வந்துவிடும் அளவுக்கு அதன் மெல் அவ்வளவு
வெறுப்பு அவளுக்கு இருப்பதாகவும் சொன்னார்கள்.. அது மட்டும் அல்ல காதலில் சிக்கிய
மாணவிகைளை தன் நண்பர்களாகவும் ஏற்றுக்கொள்ள மறுத்து இருக்கின்றாள்..அவள் நண்பர்கள்
காதல் என்று நின்ற போது பிரெயின் வாஷ் பண்ணி காதலே எங்களுக்கு வேண்டாம் படிப்பு
மட்டுமே எங்கள் குறிக்கோள் என்று சொல்லும் அளவுக்கு காதலில் விழ போனப் பெண்களை
தடுத்து இருக்கின்றாள்..
உனக்கு லவ் பிடிக்கலைன்னா எட்டப்போ... அதுக்காக லவ் பண்ணற
பசங்களை எல்லாம் ஏன் அட்வைஸ் என்ற பெயரில் டார்ச்சர் பண்ணறே? என்று அவளிடம்
நேருக்கு நேர் சண்டை போட்டு விட்டு பிரிந்து போன நண்பிகள் நிறையவே...
பைனல் இயர் முடிந்து கிளம்பும் போது அவள் என்னிடத்தில் சொன்னாள்... இந்த லாஸ்ட் வருஷத்தை என்னால
மறக்கவே முடியாது... இந்த பஸ்சை ரொம்ப கலகலப்பா வச்சி இருந்திங்க..கடந்த ரெண்டு
வருஷம் ஏன்டா பஸ்ல ஏறுவோம்னு இருக்கும்.. யாரும் யாரை பார்த்தும் சிரிக்க
கூடமாட்டாங்க..பஸ் வந்துடுச்சான்னு போன்
பண்ணி கேட்டாக்கூட சொல்ல மாட்டாங்க.. ஆனா நீங்க வந்த பிறகுதான் பஸ் களை கட்ட
ஆரம்பிச்சிது.. முக்கியமா பசங்களோடு நீங்க செய்யும் விவாதங்கள் அருமை.. பல
டாபிக்கை கேட்டுகிட்டு பயணிக்கறதே அலாதி இன்பம்... யூ மேட் திஸ் இயர் என்று சொல்லி
விட்டு எனது மெயில் ஐடியை அவளது டைரியில் குறித்துக் கொண்டு கண்கலங்க
பிரிந்து சென்றாள்..
கல்லூரி விட்டு போனாலும் மோனிகா என்னோடு மெயிலிலும் போனில்
தொடர்பில் இருந்தாள்...அவள் மேற்ப்படிப்புக்கு ஹைதரபாத் சென்றாள்.. முதல்
ஆறுமாதங்கள் நன்றாக ஜாலியாக பேசியவள். அடுத்த சில மாதங்கள் மூட் ஆப், வேலைப்பளு
என்று போன் பேசுவதை என்னிடத்தில் தவிர்க்க ஆரம்பித்தாள்... ஒரு வருடம் கழித்து
கேமரா பார்ட்ஸ் வாங்க ஸ்பென்சர் சென்ற போது வெகுதூரத்தில் மோனிகா சாயலில் ஒரு பெண்
நடந்து செல்வது தெரிந்தது.. ஆர்வத்தில்
அந்தபெண் நடக்கும் திசையில் நானும் நடந்தேன்...திரும்பி பார்த்தாள் அவளேதான்...
என்னை பார்த்து விட்டு அதிர்ச்சியும் பாசமுமாக ஒரு சேர ஓடி
வந்து என் கைபிடித்துக்கொண்டாள்..முகத்தில் மலர்ச்சி இல்லை...அவள் கழுத்து
எலும்புகள் துருத்திக்கொண்டு சோமாலியா
தேசத்தை நியாபகப்படுத்தின...படிப்பு எப்படி போகுது? என்று கேட்டேன்...ஏதோ போகுது
என்று சொன்னாள்..முன்பு போல பட பட என்று போல்டாக பொறிவது போலான பேச்சு அவளிடத்தில்
இல்லை.
அவளாக சொல்லாமல் நானாக எதையும் கேட்கக்கூடாது என்பதில் நான்
தீவிரமாக இருந்தேன்.. காபி சாப்பிடலாமா என்றேன்.. சார் உங்களுக்கு வேலை
இருக்கும்னு கேட்கலை..கண்டிப்பா சாப்பிடலாம் என்று சொன்ன போது அவளிடம் சின்ன
உற்சாகம்..
முதல் சிப்பை உதட்டுக்கு கொடுக்கும் முன்னே மோனிகா ஆரம்பித்தாள்..
எதை நம்ப அதிகமா வெறுக்கின்றோமோ அதை செய்ய வச்சி அழகு பார்க்கறது கடவுளுக்கு
அப்படி என்ன சந்தோஷமோ தெரியலை சார்...
ம்
ஹைதரபாத்ல கூட படிக்கற பையனோடு எனக்கு காதல்... நான் ரொம்ப
கண்ரோல்டாதான் இருந்தேன்.. பட் நான் அவனை என்னையும் அறியாம ரசிக்க ஆரம்பிச்சேன்..
அவன்தான் என்னை சுத்தி சுத்தி வந்தான்....ஒரு ஆறுமாசம்...அப்படி ஒரு சந்தோஷத்தை
நான் அனுபவிச்சதே இல்லை..அவன் கூட கை கோர்த்து கிட்டு நடக்கும் போது.. ஹீ இஸ் மை
மேன்ன்ற பெருமை எனக்கு ரொம்பவே அதிகமா இருந்திச்சி.. உங்களுக்கு தெரியுமா? எங்க
அப்பாவுக்கு அப்புறம் வெளித்தெருவுல விரல் பிடிச்சி நடந்த ஆள் அவன் மட்டும்தான்..
நீ லவ்ல விழுவேன்னு நான் நினைச்சிக்கூட பார்க்கலை மோனிகா... சோ சேட்..என்றேன்..
எல்லாம் உங்க சாபம்தான்... என்றாள்..
எனக்கு தூக்கி வாரிப்போட்டது..
லவ்வே பிடிக்காது...லவ் வாந்தி வரும் விஷயம்னு சொல்லறே டீன்
ஏஜ்லதான் நீ இருக்கே... காதல் யாருக்கும் எந்த வயசிலயும் அழகியதீயே படத்துல வருவது
போல பூம்ன்னு ஒரு நாள்வந்து தொலைக்கும் அப்ப என்னை நினைச்சிக்குவேன்னு சொன்னிங்களே
சார்...கருநாக்கு சார் உங்களது என்றாள்..
ச்சே அது ஜஸ்ட் சும்மா விளையாட்டுக்கு சொன்னது என்று சமாதானம்
சொன்னேன்...சரி..ஓகே.. ஏன் இப்படி இருக்கே? சரியா சாப்பிடறது இல்லையா?
சார் நடைபொணமா வாழ்ந்துகிட்டு இருக்கேன்..என்றாள்...பழகியது
ஆறுமாசம்தான்.. ஆனா வலி ஒரு
வருஷத்துக்கு மேல இருக்கு...நானும் வெளியே வரனும்னு நினைக்கறேன் முடியலை
சார்..சரியா சாப்பிடறது இல்லை...தூக்கம் சரியா வரதில்லை...ஆனா என்னை விட்டு விட்டு
இரண்டு வாரத்துல வேற ஒரு பொண்ணோட என் கண்முன்னால நடமாடினா உங்களுக்கு எப்படி இருக்கும்??? சொல்லுங்க,..?
படித்த பெண் நிறைய விஷயம் அறிந்தவள்.. நல்லது கெட்டது
தெரிந்தவள்.. நீ இப்படி சொல்வது வியப்பாக இருக்கின்றது.. உங்கள் காதலுக்கு என்னாச்சு
என்று கேட்டேன்.?
கேட்டா நீங்களே அசந்து போய்டுவிங்க..
சொல்லனும்னு தோனிச்சின்னா சொல்லு என்றேன்.
யாருகிட்டயாவது கொட்டனும் நினைச்சேன்... நம்ம சர்க்கிள்ள
யாருகிட்டயும் சொல்லலை..நக்கல் விடுவாங்க.. காதலுக்கு பெரிய லெக்ச்சர் கொடுத்தவ
நான்... அதனால சொல்லறதுக்கு எனக்கே கூசுது அதான் யாருகிட்டயும் சொல்லலை உங்க கிட்ட
சொல்லறேன் என்றாள்...
ஹைதரபாத்ல ஐமேக்ஸ் தியேட்டரில் திரி டி படம் பார்க்க ஒரு
நாள் கூட்டிகிட்டு போனான்.. அதுதான் நாங்க தியேட்டருக்கு முதன் முதலா போனது..
எல்லாரும் திரி டி கண்ணாடி போட்டுகிட்டு படம் பார்த்து
கிட்டு இருக்காங்க... இவன் தோளில் கை போட்டான்.. அப்படியே கழுத்துக்கு கீழே கையை
இறக்கினான்..
நான் திரி டி கண்ணாடியை அவுத்துட்டு அவனை பாத்தேன்.. அவன்
கண்ணாடி போடலை... பிளிஸ் பிளிஸ்னு கெஞ்சினான் நான் சான்சே இல்லை...கல்யாணத்துக்கு அப்புறம்தான்
எதுவா இருந்தாலும்னு சொல்லிட்டேன்...அவன் கெஞ்சிகிட்டே இருந்தான்.. நான்
ஒத்துக்கலை..கோவத்துல என்னை அம்போன்னு அப்படியே தியேட்டர்ல விட்டு விட்டு போயிட்டான்..
சரி கோபம் குறைஞ்சி திரும்பி வருவான்னு பார்த்தேன்.. வரவேயில்லை..
தியேட்டர்ல போய் எப்படி சார்?? அவன் மேல இருந்த காதலுக்கு ஏதாவது ரூமா
இருந்தாக்கூட என்னையே கொடுத்து இருப்பேன்... என்று சொல்லி விட்டு கண்களில்
நீர்த்திவலை.......
இந்த ஒன்றரை வருஷ வலி வேதனைக்கு தியேட்டர்லயே வாயை திறக்காம பேசாம இருந்து இருக்கலாமோன்னு பல
நாள் நினைச்சி தூக்கம் வராம அழுது இருக்கேன்.... அதுக்கு பின்னாடி அவனை எவ்வளவோ
சந்திக்க பேச முயற்சி பண்ணேன் அவன் என்னை சந்திக்கவே இல்லை.. நான் அவனை ரொம்ப சின்சியராக லவ் பண்ணேன் சார்
அவன் பிரண்ட்ஸ்கிட்ட என்னை பத்தி சொல்லி இருக்கான் நான் கிராமத்து பொண்ணாம்.. எனக்கு நாகரிகமே தெரியலையாம்...
ஏன் சார் இந்த ஆம்பளை பசங்க இப்படி இருக்கானுங்க???
என்னிடத்தில் பதில் இல்லை......
==============
குறிப்பு..
ஒரு வருடத்துக்கு முன் ஸ்பென்சரில் பார்த்த போது
அவளிடம் கீழே எழுதியதை அப்படியே சொல்லிவிட்டு அவளை பிரிந்தேன்....
அவன் நோக்கம் என்னன்னு தெரிஞ்சிடுத்து.. நல்லவேளை
தப்பிச்சேன்னு நினைச்சிக்கோ..உசுப்பி விட்டு குழநைதையை குடுத்திட்டு உன்னை அம்பபோன்னு விட்டு விட்டு போய் இருந்தா என்ன ஆயிருக்கும்..?? நீ அவனையே நினைச்சிக்கிட்டு இகரக்கேன்னு சொல்லற பாரு எனக்கு அவன் மேல கோபமே இல்லை.. உனமேலதான் எனக்கு கேபாம்...ஒழுங்க சாப்பிட்டு தூங்கி சந்தோஷமா பொழதை கழிக்கற வழியை பாரு....காலம் காயங்களை ஆற்றும் இதை நாம சொல்லி சிரிக்கும்
நாள் நிச்சயம் வரும் என்றேன்..
ஒரு மாதத்துக்கு முன் மோனிகா போன் செய்தாள்..
ஹைதராபாத்தில் பெரிய
மென்பொருள் நிறுவனத்தில் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து மாதம் எழுபதாயிரம் சம்பளத்தோடு மகிழ்ச்சியாக இருக்கின்றாள்...இரண்டு
வருடம் கழித்து அப்பாவிடம் மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருக்கின்றேன் என்று
சொல்லிவிட்டு சிரித்தாள்...
சார் நான் ஒன்னு
சொன்னா நிச்சயம் சிரிப்பிங்க..இப்பெல்லாம் ஜமேக்ஸ் தியேட்டர்ல எந்த படத்தையும்
விடறது இல்லை என்றாள்..
நான் அவளிடம் சொல்ல
நினைத்து சொல்லாமல் விட்டது கீழே எழுதி இருக்கின்றேன்.
இரண்டு வருடம் கழித்து மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருக்கின்றாய்..
இந்த இரண்டு வருடத்தில் திரும்பவும் யார் மேலாவது
அழகியதீயே படத்தில் வருவது போல பூம் என்ற
சவுண்டுடன் உனக்கு காதல் யார்மீதாவது காதல் பூக்க வாய்ப்பு இருக்கின்றது என்று சொல்ல வாய்
எடுத்தேன்.. சொல்லவில்லை..
திரும்ப அவளிடம் கருநாக்கு பட்டம் வாங்க நான் தயாரில்லை..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
அட ...அழகிய தீயே -2 பண்ணலாம் போல இருக்கே !!!!! வாழ்த்துக்கள்
ReplyDeletejackie anna all males are not bad some males who had arranged marriage had been tortured to give divorce in scientific ways by their wives even today.Now it get in to worst as males cannot argue to live together if his wife apply for divorce and also females will get divorce soon as per law introduced a month before.another thing is male have to share his assets if his wife apply for divorce.
ReplyDeletelet your friend know this rules and regulations that are killing men.
Wow... Very Inserting....
ReplyDeleteRealistic
ReplyDeleteஏதோ ஆர்வத்தில் ப்ளாக் ஆரம்பித்து எழுதவும் துவங்கியாகிவிட்டது . .எழுத எழுத நம்மையுமறியாமல் நமக்குள் சமுதாய சிந்தனை விழுந்து விடுகிறது . . அதன் பின் பின் பின் . . நாம் மற்றவர்களுக்காக செய்தி சேர்க்க துவங்குகிறோம் . .அப்படியே அவர்களுக்காக நல்ல அறிவுரைகளையும் . . .பின் எழுதி பதிவு செய்யும் அறிவுரைகளை வாழ்க்கையிலும் கடை பிடிக்க ஆரம்பிக்கிறோம் . . .நம்மையுமறியாமல் அதன் பலன் பலருக்கும் சென்று சேர்கிறது . . இதுதான் மனிதம் . என்கிறேன் நான் .. மறுத்து சொல்வீர்களா ஜாக்கி
ReplyDelete/*இந்த ஒன்றரை வருஷ வலி வேதனைக்கு தியேட்டர்லயே வாயை திறக்காம பேசாம இருந்து இருக்கலாமோன்னு பல நாள் நினைச்சி தூக்கம் வராம அழுது இருக்கேன்*/
ReplyDeleteSo SAD Line...,
ஹ்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்... திரும்பவும் அந்த பொண்ணுக்கு போன் பண்ணி காதல் பூம் அழகிய தீயே அப்புடின்னு ஏதாவது சொன்னிங்க பிட்சி புடுவோம் பிட்சி
ReplyDeleteகொஞ்சமாவது சந்தோசமா இருந்துட்டு போவட்டும், என்னா மக்களே நான் சொல்றது ?
ரசித்தேன்.
ReplyDeletevery nice..........
ReplyDeletevery nice......
ReplyDeletevery nice.......
ReplyDeleteninaithu paarththu yosikka thondiya pakuthi.pathivukku nandri jacky sir
ReplyDeleteமனசுக்கு ரொம்ப வலிக்குது சார்
ReplyDeleteReally interesting and crying...
ReplyDeleteManathai varudiya kathai ... ஆனால் அது என் வாழ்க்கையில் நடந்தது ... ஆனால் இன்னமும் நான் அவளை நேசிக்கிறேன் ...
ReplyDeleteஇத ஒரு சோர்ட் பிலிம் பண்ணலாம்
ReplyDeleteசில ஆண்களை, ஆண்கலாக்கலாம்,
சில பெண்களை, பெண்கலாக்கலாம்
சார் உங்க அனுபவத்தை எப்படி சார் இவ்வளவு அருமையா உங்களால எழுத முடியுது? ஆனால் கண்டிப்பா இதெல்லாம் பகிர்ந்துக்க கூடிய விசயம் சார்
ReplyDeleteI am admiring the amount of experiences, incidents that you came across in your life. I am not sure whether i can remember each and every thing.
ReplyDeleteSeems, you live today as there is no tomorrow.. Athanai rasanai.
Bala
Bangalore
Nice post. You are a good man. :-)
ReplyDeleteகொஞ்சம் முரண்படும் Characterization
ReplyDelete1. மோனிகா பேருந்தில் எறினாள் அமைதியாக வருவாள்.. யாரிடமும் எதையும் பேசமாட்டாள்.
2. முன்பு போல பட பட என்று போல்டாக பொறிவது போலான பேச்சு அவளிடத்தில் இல்லை.
கொஞ்சம் முரண்படும் Characterization
ReplyDelete1. மோனிகா பேருந்தில் எறினாள் அமைதியாக வருவாள்.. யாரிடமும் எதையும் பேசமாட்டாள்.
2. முன்பு போல பட பட என்று போல்டாக பொறிவது போலான பேச்சு அவளிடத்தில் இல்லை.
This is nice Jackie... very nice.
ReplyDeleteரோஜன் நீங்கள் சொன்ன பல கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு..
ReplyDeleteநன்றி பெங்களுர் பாலா..
நன்றி அருள் தம்பி உங்கள் கடிதத்துக்கு.......
தமிழ் பையன் திரும்பவும் படிங்க... அவுங்க அமைதியா பஸ்ல வருவாங்க... ஒரு நாள் திடிர்னு எங்க டாபிக்ல கலந்துகிட்டாங்க.. அதுல இருந்து போல்டா எங்க கூட்டத்துல பேச ஆரம்பிச்சிட்டாங்க..போதுமா? திரும்பவும் நல்லா ஒரு வாட்டி படிங்க. உங்களுக்கே புரியும்..
படிக்கும்போதே மனதை பாதிக்கவைத்தது இந்த நிஜம்.. மோனிகாவுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்
ReplyDeletesupper anna
ReplyDeleteமோனிகா அவர்கள் இப்பதிவை படிக்காதிருக்க வேண்டும்! இல்லையென்றால் உங்களுக்கு பட்டமும், பத்திரமும் நிச்சயம்! :)
ReplyDelete