சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன்/11/04/2012


ஆல்பம்.
தமிழக அரசு தமிழ்அறிஞர்களுக்கு விருதுகளை அறிவித்து இருக்கின்றன..ஔவையார் விருதை பெற்று இருப்பவர் யார் தெரியுமா?
ஔவை பிராட்டி போல அனுதினமும் தமிழ் தொண்டு செய்யும் திருமதி ஒய்ஜி பார்த்தசாரதிக்கு கொடுத்து இருக்கின்றார்கள்..இனி தமிழ் மெல்ல வாழும்... வாழ்த்துகள்.. ஔவையார் விருது பெற்ற திருமதி ஒய்ஜிபார்த்தசாரதிக்கு..
============
சென்னையில் வாடகை வீட்டில் குடி இருக்கும் நடுத்தர மக்களின் நிலை மிகவும் பரிதாபமானது.. மின்சார உயர்வை காரணம் காட்டி ஒரு யூனிட் வீட்டு உரிமையாளர்கள். எட்டு ரூபாய்க்கு உயர்த்தி இருக்கின்றார்கள்.. ஏற்கனவே ஒரு யூனிட்டுக்கு  ஐந்தில் இருந்து ஆறு ரூபாய்வரை வசூலித்து வந்தார்கள்... இப்போது மின்சார  கட்டணம் உயர்ந்து விட்ட காரணத்தால்... யூனிட்டுக்கு எட்டு ரூபாய் அநியாயமாக கொள்ளை விலைக்கு ரேட்டை ஏற்றி விட்டார்கள்..நான்கு பேர் இருக்கும் குடும்பம் உறுப்பினர்கள். இருக்கும் வீட்டில் 250 யூனிட் மின்சாரம் சாதாரணமாக பயண்படுத்த படுகின்றது..250x8= 2000 அப்படியே இரண்டு மாதத்துக்கு கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்...மாதம் நான்காயிரம்... மின்சாரத்துக்கு மட்டும் கட்டணத்தை வீட்டு ஓனருக்கு கொடுக்கவேண்டும்.. ரொம்ப கொடுமையான விஷயம்.. இதையெல்லாம் யார் கேட்கப்போகின்றார்கள்..?? மீறி எதிர்த்தால் அடுத்த மாதத்தில் இருந்து வீட்டை காலி செய்து விடுங்கள் என்று வாய் நோகாமல் சொல்லி விடப்போகின்றார்கள்..வாடகைக்கு உடனே வீடு சென்னையில் கிடைத்து விடுமா?  வீட்டை காலி  செய்து அடுத்த வீட்டுக்கு போய் செட்டில் ஆவது போன்ற ஒரு கொடுமையான விஷயம் வேறு எதுவும் இல்லை...நான் ஐந்து வீடுகளுக்கு ஜாகை மாற்றிய அனுபவம் உள்ளவன் நான்..இந்த ஐந்து வீட்டில் ஒரு ஹவுஸ் ஒனர்  சட்டசபையில் மின்கட்டணத்தை பற்றி பேசினாலே போதும் அறிவிக்கவேண்டிய அவசியமே இல்லை.. இரண்டு ரூபாய் ஏற்றி விடுவார்...அவரைப்போலத்தான் பல ஹவுஸ் ஓனர்கள் சென்னையில் இருக்கின்றார்கள்..

=============================

பெப்சி சங்கத்தை உடைத்தே திருவோம் என்று தயாரிப்பாளர் சங்கத்தினர் ஒற்றைக்காலில் நிற்க்கின்றார்கள்.. காரணம் பெப்சியில் இருக்கும் லைட்மேன்கள் கொடுத்த டார்ச்சர் அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களை வெறுப்பு ஏற்றி இருக்கின்றது... ஸ்டிரைக் அறிவித்தார்கள்..இரண்டு நாள் போக்கு காட்டினார்கள்.. இப்போது ஸ்டிரைக் வாபஸ் பெற்றுவிட்டார்கள்..பார்ப்போம் பொருத்து இருந்து பார்ப்போம். என்ன நடக்கின்றது என்று..
=============================
களவானி படத்துல ஆடி போய் ஆவனி வந்தா அவன் டாப்புல வருவான்னு சரண்யா சொன்னது இதுதானோ? கடுப்பேத்தறாங்க மைலார்ட்.

================
மிக்சர்..
வேலைப்பளு காரணமாக தொடர்ந்து முன்பு போல எழுத முடிவதில்லை..ஆனால் தினமும் ஒரு முறையாவது எழுதினாலும் எழுதாவிட்டாலும் என் தளத்தை ஏட்டிப்பார்த்தபடி இருப்பது மகிழ்ச்சியே.. அந்த எதிர்ப்பார்ப்புக்காகவேணும் எழுதவேண்டும் என்று மனது சொல்லுகின்றது..
============
பதிவர் விந்தை மனிதன் ராஜராம் திருமணத்துக்கு என்னால் போக முடியவில்லை.. சரியாக  அதே நாளில் எனது அந்தை பையன் வித்யாதரன் திருமண நிச்சயதார்த்தம் கடலூரில் நடந்த காரணத்தால் என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. ஜாக்கி அண்ணே ஏண்ணே என் கல்யாணத்துக்கு வரலை என்று உரிமையாக போன் செய்து ராஜாராம் கேட்ட போது பதில் சொல்ல முடியாமல் தவித்த தவிப்பு இருக்கின்றதே... அது கொடுமையான  கணங்கள்.
================
ரியாத்தில் இருக்கும் அயனாவரத்தை  சேர்ந்த ஆனந் என்பவர் தினமும் எனக்கு மதியம் அங்கே தொழுகை நடக்கும் போது போன் செய்வார்..பதிவுகள் தினமும் படித்து விட்டு அது பற்றி ஒரு அரைமணிநேரம் பேசுவார்..தினமும் பேசுவார்..முதலில் ஆச்சர்யமாக இருந்தாலும்..போக போக பழகி வெகுநாள் பழகிய நண்பர்கள் போல பேச ஆரம்பித்தோம்.. அவர் பெண்ணுக்கு திருமணம் செய்து பேரனை கொஞ்சிக்கொண்டு இருப்பவரை போய், வாய போயா என்று எல்லாம் பேசி இருக்கின்றேன்...  சென்னைக்கு விடுமுறையை கழிக்க வந்த போது நேரில் சந்தித்தேன்.. 50 வயதை தொட்டர்வர் என்று என்னால்  சொல்லவே முடியவில்லை..அந்த அளவுக்கு இளமையாக இருந்தார்..இனிமேலும் வாயா போயா என்று அழைப்பது எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது...சில தினங்களுக்கு முன் அவருக்கு ஐம்பதாவது பிறந்தநாள்...அவருக்கு பேஸ்புக்கில் அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணாத்தே என்று எழுதிய போதுதான் நான் அவரை சந்தித்தை விட அதிகம் மகிழ்ந்தேன்..
=============
இந்தவாரகடிதம்.




திரு ஜாக்கி அவர்களுக்கு,

நான் மணிகண்டன். ரொம்ப நாளா உங்க வலைப்பூவை படிக்கிற எவ்வளவோ பேர்ல நானும் ஒருத்தன். உங்க பதிவை படிக்கும் போதெல்லாம் எனக்கும் அது மாதிரி ஏதாவது செய்யனும்ன்னு தோணும்.  ஆனா ஒன்னும் வேலைக்கு ஆகல. என்னால கதையோ கவிதையோ எல்லாம் எழுத முடியாது. (அப்படி இருந்தும் ஒரு தடவை ட்ரை பண்ணி ஊத்திகிச்சி). 
இருந்தாலும் மாரியாத்தா மேல பாரத்தை போட்டு ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிட்டேன். ஆனா என்ன எழுதறதுன்னு தெரியாம அப்படியே தான் இருந்துச்சி ரெண்டு மாசமா. கடைசியா ஒரு ஐடியா கெடைச்சி இப்போ தான் எழுத ஆரம்பிச்சிருக்கேன். உங்களை மாதிரி பெரியவங்க தான் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லணும். வரவேற்பை பொறுத்து தான் அடுத்து என்ன பண்றதுன்னு முடிவு பண்ணனும்.
அதே மாதிரி இதுல இருக்கற technical விஷயங்கள் எல்லாம் ஒன்னும் தெரியல... எப்படியோ கஷ்டப்பட்டு தமிழ் மணம் திரட்டியில இணைஞ்சிருக்கேன். அது வேலை செய்தா இல்லையான்னு எப்படி செக் பண்றது இன்னும் தெரியல. ஒரு தடவை இணைஞ்சா போதுமா...? இல்லை என்னோட ஒவ்வொரு பதிவும் தனித்தனியா இணைக்கனுமா...?  நான் ஒன்னு ஒண்ணா அப்பப்போ கேட்டுக்கறேன். தயவு கூர்ந்து எனக்கு சொல்லி குடுங்க. இபோதைக்கு என்னோட வலைப்பூவுக்கு ஒரு அறிமுகம் மட்டும் ஏற்படுத்தி குடுங்க... என்னோட வலைப்பூ முகவை கீழே...

தங்களுக்கு நன்றிகள் பல...
- மணிகண்டன்.

 ============
 பொதுவா நான்  தொடர்ந்து தள அறிமுகம் செய்தது இல்லை.. அவ்வப்போது கண்ணில் படும் விஷயங்களுக்கு தொடுப்பு கொடுத்து இருக்கின்றேன்.. என்னை பார்த்து பிளாக் எழுத வந்தேன்னு பல பேர் சொல்லக்கேட்டு இருக்கேன்.. நான் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் எல்லாம் இல்லை..ஆனால் அப்படி  உண்மையிலேயே என்னால்தான் பிளாக் எழுத வந்து இருந்தால் அதைவிட சந்தோஷம் எனக்கு  வேறு  என்ன இருந்து விடமுடியும்....??மணிகண்டன் வேதியல் பத்தி எல்லாம் எழுதி இருக்கிங்க.. அறிவியல் பத்தி பிளாக்கில் எழுதுபவர்கள் குறைவு.. யாராவது வந்தாலும் வராட்டாலும் தொடர்ந்து எழுதுங்க.. நிச்சயம் யாராவது ஒருத்தருக்கும் பயனுள்ளதா இருக்கும்..
நன்றி.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
 =============
பிலாசபி பாண்டி

உண்மையை உரக்க பேசுங்கள்..ஆனால்  உண்மையை பேசிவிட்டு ஓடி விடப்பாருங்கள்.. காரணம் உண்மையை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது..உண்மையை பேசினால் உதைதான் கிடைக்கும்.


=================


நான்வெஜ்18+


அப்பா நான் ஒரு பையனை லவ் பண்ணறேன்.. பையன் எப்படிம்மா இருப்பான்.. அதை ஸ்கேன் பார்த்துதாம்பா சொல்ல முடியும்... அப்பா?????



 ==========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

8 comments:

  1. ஏனுங்க...இது சாண்ட்விச் தானே...

    ReplyDelete
  2. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று நம் பெரியோர்கள் சொல்லி வைத்திருகிறார்கள் ஜாக்கி ......நீங்கள் மனம் வைத்தால் நாங்கள் தினமும் உங்கள் ப்ளாக் பக்கம் வந்து ஏமாற்ற அடைய வேண்டாமே .....

    ReplyDelete
  3. ஏன் மஞ்ச துண்டு போட்டு போலி பகுத்தறிவு தொழில் செய்யும் கருணாநிதிக்கு “பெரியார் விருது” கொடுத்த போது ”கழக கண்மணி”களுக்கும், உடன்பிறப்புகளுக்கும் இனித்ததே!!!

    இப்போ அவ்வையார் விருது வழங்கறப்போ ஏன் கசக்குது??????????????

    ReplyDelete
  4. ஹல்லோ ஜாக்கி,

    நான் இதை எதிர்ப்பாக்கவே இல்லை... என்னோட மெயிலை உங்க பதிவுல பார்த்ததும் என்னோட சந்தோசத்துக்கு ஒரு அளவே இல்லை.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  5. ஹல்லோ ஜாக்கி,

    நான் இதை எதிர்ப்பாக்கவே இல்லை... என்னோட மெயிலை உங்க பதிவுல பார்த்ததும் என்னோட சந்தோசத்துக்கு ஒரு அளவே இல்லை.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. ///
    களவானி படத்துல ஆடி போய் ஆவனி வந்தா அவன் டாப்புல வருவான்னு சரண்யா சொன்னது இதுதானோ? கடுப்பேத்தறாங்க மைலார்ட்.
    ///

    stomach burning...

    ReplyDelete
  7. //தமிழக அரசு தமிழ்அறிஞர்களுக்கு விருதுகளை அறிவித்து இருக்கின்றன..ஔவையார் விருதை பெற்று இருப்பவர் யார் தெரியுமா?
    ஔவை பிராட்டி போல அனுதினமும் தமிழ் தொண்டு செய்யும் திருமதி ஒய்ஜி பார்த்தசாரதிக்கு கொடுத்து இருக்கின்றார்கள்..இனி தமிழ் மெல்ல வாழும்... வாழ்த்துகள்.. ஔவையார் விருது பெற்ற திருமதி ஒய்ஜிபார்த்தசாரதிக்கு..//

    தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி நடக்கிறது.
    மாற்றான் தோட்டத்து ஆரிய மல்லிகைக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது.
    இதை அனுபவிக்கணும்...ஆராயக்கூடாது.

    ReplyDelete
  8. இருந்தாலும் இந்த ஓர வஞ்சனை சரியில்ல ஜாக்கி.
    படத்த முழுசா போட்டிருக்கணும்.
    இல்ல 2 பேருக்கு மட்டுந்தான் இடம்னா விமலையும் சிவாவையும் கட் பண்ணிட்டு மத்த 2
    பேர மட்டும் போட்டிருக்கணும் :-)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner