20க்கு மேற்பட்ட பெரிய நடிகர்கள் நடிக்க வைத்து பத்து வருடத்துக்கு மேல் ஒரு மெகா வில்லனை உருவாக்கி தற்போது வெளி வந்து இருக்கும் படம்தான்...
ஆவென்ஜர் இன்பினிட்டி வார்.
உதாரணத்துக்கு தமிழ் சினிமாவின் 20க்கு மேற்பட்ட முன்னனி நாயகர்கள் ஒரு திரைப்படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்... சுயம்வரம் என்ற படம் வந்து இருந்தாலும் அது காமெடி திரைப்படம்
ஆவென்ஜர்ஸ் படத்து ஹீரோக்கள் எல்லோரும் சூப்பர் ஹீரோக்கள் அவர்களை வைத்துக்கொண்டு அவர்கள் பெயர் கெடாமல் திரைக்கதை எழுதுவது என்பது... முதல் இரவு அறையில் கொஞ்சமும் சொதப்பாமல் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதோடு நிறைய முறை வாயில் பெப்பர் மென்ட்டுகளை போட்டு வாசனை வருகின்றதா? என்று திரும்ப திரும்ப செக் செய்வது போல திரைக்கதை எழுத வேண்டும்..
அவர்களுடையா சாகசங்கள் கெடாமல் அதே நேரத்தில் இப்ப என்ன தெரியமா மச்சி.. அவ இவனை லெப்ட்ல உதைப்பா என்று எல்லாம் தெரிந்த ஏகாபம்பரம் போல பேசும் ரசிகளை குழப்பி வைக்க வேண்டும்..
என்றாலும் ஆன்டனி ஜோ ரூசோ பிரதர்ஸ் நிறைய மென்கெட்டு இருக்கின்றார்கள்.. ஜோப்பி நிறைய காசு நிரப்ப வேண்டும் என்று முடிவு எடுத்து இரண்டு பாகம் எடுத்து இருக்கின்றார்கள்...
எல்லவற்றையும் விட வில்லன் தேனாஸ் விடக்கண்டன் என்பதால் எல்லாம் சூப்பர் ஹீரோவும் செக்க மாத்து வாங்குகின்றார்கள்.
மார்வல் காமிக்ஸ் ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் என்றாலும் படம் முடிந்து விட்டது என்று நம்பாமல் விளக்கு போட்டு எழுந்திருக்காமல் நம்பிக்கையோடு முடிவு தெரியும் என்று பாகுபலி படத்தின் முதல் பாக முடிவில் உட்கார்ந்து இருப்பது போல உட்கார்ந்து இருந்தது மார்வெல் கதாபாத்திரங்களுக்கு கிடைத்த வெற்றி என்பேன்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment