நித்திக்கு வாழ்வுதான் என்று தன் மன வக்கிரத்தை வெளிப்படுத்தியவர்கள். கவர்னருக்கு மட்டும் பொங்குவதேன்.. என்று ஒரு கருத்தை இணையத்தில் பார்த்தேன்..
நித்தி யார் கையையாவது பிடித்து இழுத்தான் என்றோ அல்லது அவனது ஆசிரமத்தில் இருந்து
எங்களை கொத்தடிமைகளாக நடத்துகின்றார்கள்.. பாலியல் வன்புணர்வுக்கு வற்புறுத்துகின்றார்கள் என்றோ யாராவது பிராது கொடுத்தாலோ.. அல்லது ஆடியோ வெளியிட்டு இருந்தாலோ..?
யாரும் அப்படி வாழ்வுதான் என்று நக்கல் பேசி இருக்க போவதில்லை... பிரித்து மேய்ந்து இருப்பார்கள்...
‘
அதே நேரத்தில் நித்தி சைடில் இருந்து...
யாராவது நிர்மலா போல ஆள்காட்டியின் ஆடியோ வெளியிட்டு இருந்தால் கூட கிழித்து தொங்க விட்டு இருப்பார்கள்...
ஒரு அழகான பெண் கல்லூரியில் படிக்கும் போது எல்லோரும் அவளை காதலிக்க துடித்துக்கொண்டு இருக்கும் போது... அவள் ஒரு மொக்கை பையனை விருப்பபட்டு எந்த நிபந்தனையும் மிரட்டல் இல்லாமல் அவள் அவனை காதலிக்கின்றாள் என்றால் பசங்க என்ன சொல்லுவாங்க...
மச்சான் மொக்கை மோகனுக்கு வாழ்வுதான் என்று சொல்வார்கள்.
ஆனால் அதே மொக்கை மோகன் வலை விரித்து அந்த பெண்ணை ஏதோ ஒரு காரணத்தை முன் வைத்து மிரட்டி பணிய வைத்தால் அப்படி சொன்னவனே கிழித்து தொங்கவிடுவான்... இல்லையா அது போலத்தான்..
இங்க கவர்னருக்கு படையல் வைக்க ஆள் பிடிக்கும் பெண்ணின் ஆடியோ.. வந்த போது வாழ்வுதான் என்று யாரும் சொல்லமாட்டார்கள்... பிரித்து மேய்வார்கள்..
ஏம்பா நான் சரியாதான் பேசறேனா.?
ஜாக்கிசேகர்
18/04/2018
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment