கோவில்ல வச்சி ஐந்து நாலு...
வயசு வித்தியாசம் பார்க்காம ரேப் பண்ணி இருக்கானுங்க...
வீரியமாக போதை மருந்து கொடுத்து இருக்கானுங்க...
எட்டு வயசு பெண் குழந்தையின் இடுப்பு எலும்பை உடைச்சி வச்சி இருக்கானுங்க... அந்த அளவுக்கு ரேப் பண்ணி இருக்கானுங்க... இதுல பாரத் மாதகி ஜே வேற...
எனக்கு நினைக்க நினைக்க ஈரக்கொலை எல்லாம் நடுங்க காரணம்... இந்த ஐந்து நாள்ல... நினைவு வரும் போது எல்லாம் யாராவது தன்னை எப்படியும் காப்பாத்திடுவாங்கன்னு ஆசிபா நினைச்சி அது கடைசி வரை பொய்த்து போயிடுச்சி பார்த்திங்களா.. அதைதான் என்னால ஏத்துக்க முடியலை..
அந்த கடவுளுக்கே கண்ணு இல்லை...
நுங்கம்பாக்கம் சுவாதி வெட்டு பட்டு விழுந்த போது.. பதறினோம்.. ஆசிபாவுக்கும் பதறுகின்றோம்..
காரணம் மதம் பார்க்கலை... ஒரு உயிர்.. அவ்வளவுதான் சம்பந்தம்...
ஆனா சுவாதிக்கு கொலைக்கு இந்த லோகத்துல பாதுகாப்பே இல்லைன்னு பெரிய லெவல்ல பொங்கிய ஏவனும் ஆசிபாவுக்கு வாயை திறக்கவேயில்லை...
ஒரு கண்டன அறிக்கையாவது--???
நடத்துங்கடே... உங்க சாயம் கொஞ்சம் கொஞ்சமா வெளுத்துக்கிட்டு இருக்கு...
மனிதனா இருங்க.. மதத்து பின்னே போகதிங்க..அந்த தப்பை செஞ்சவனுக்கு வக்காலத்து வாங்காதிங்க.. அது எந்த மதமா இருந்தாலும் சரி....
அது ஒரு நாள் உங்க பக்கமும் திரும்பும்.
அன்னைக்கும் நாங்கதான் வருவோம்.
#JusticeForAsifa
ஜாக்கிசேகர்.
13/04/2018
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:
Post a Comment