Kalakalappu 2 Tamil movie Review by Jackiesekar #Kalakalappu2 #கலகலப்பு2 #Tamilcinemareview
சுந்தர் சி சினிமா இயக்க ஆரம்பிச்சி... 23 வருஷம் ஆகுது... இன்னும் பிசியான இயக்குனர்... ரஜினி கமலை வச்சி இயக்குனர்கள் எல்லாம்.. காணம போய் இருக்காங்க... உதாரணத்துக்க ஆர்வி உதயகுமார்...
கலகலப்பு திரைப்படம்... வழக்கமான சுந்தர் சி திரைப்படம்தான்..
மூனு சென்ட்டிமென்ட்.. செமயான கிளாமர்.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடி.. இரட்டை அர்த்தவசனங்களும் அவ்வப்போது வந்து போவும்.... கதைன்னு பார்த்த் ரொம்ப லாஜிக் இல்லாம மேம்போக்கா சொல்லுவார் இந்த படமும் விதிவிலக்கில்லை..
படம் ஆரம்பித்து 20 நிமிடத்துக்கு மேல் தியேட்டர் அமைதியாக இருக்கின்றது... ஆனால் யோகி பாபு நித்தியானந்தா கெட்டப்பில் வந்தவுடன் ஆரம்பிக்கும் சிரிப்பு திரைப்படம் முடியும் வரை.. சான்சே இல்லை... யோவ் விட்டுங்கய்யான்னு கெஞ்சும் அளவுக்கு சிரிச்சி மாளலை....
கேதரின் தெரசா ரசிகர்கள் யாராவது இருந்தால் கண்ணை முடிக்கொண்டு டிக்கெட் புக் செய்யவும்..
உலக படம் பார்த்து இது போல சினிமா தமிழில் வராதா என்று ஏங்குபவர்கள் , தமிழ் சினிமா அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு திட்டமிடுபவர்கள்.. இந்த திரைப்படத்தை தவிர்த்து விடுங்கள்...
இந்த படம் உங்களுக்கானது அல்ல...
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:
Post a Comment