காலையில் வலை விரிக்கப்பட்டது.. தந்திரமாக அமைதி காத்து தப்பித்தேன்

காலையில் வலை விரிக்கப்பட்டது..  தந்திரமாக அமைதி காத்து தப்பித்தேன்.

மயிலை சாய்பாபா கோவில் வழியாக இன்று நானும் மனைவியும்  இரு சக்கரவாகனத்தில் சென்றோம்.

இரண்டு தேவதைகள்  சாய்பாபாவை பார்த்து விட்டு ஏதோ  கோரிக்கை வைத்து விட்டு மங்களகரமாக நடந்து வந்தார்கள்.

நமக்குதான் பிரச்சனை அதிகம் என்று நினைத்தால் தேவதைகளுக்கும் பிரச்சனை இருக்கும் என்பதை இன்றுதான் அறிந்தேன்.



இது போன்ற தேவதைகளை கண்  எதிரில் காணும் போது  சட்டென கொஞ்சம் ஜெர்க் ஆகி  அதன் பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது என் வழக்கம்..
 இப்படி ஜெர்க் ஆகும் போது எல்லாம் என் வீட்டு அம்மா சொல்வார்கள்..

 ஏம்பா நான் வேணா வண்டியை விட்டு இறங்கிட்டுமா?

 ஏம்மா இப்படி எல்லாம்??-

பின்ன நான் வேணா வண்டியை விட்டு இறங்கிக்கறேன்.. நீ போய் அவளுங்களை  எங்க போறிங்கன்னு கேட்டு வீட்டுல போய் விட்டு விட்டு வாயேன் என்றார்…

இவ்வளவு தன்மையாக பேசுகின்றாரே என்று நாமும் நம்பி சரிம்மா இறங்கி ஆட்டோ புடிச்சிக்கோ நான் அழைச்சிகிட்டு போய்  விட்டு விட்டு வந்துடுறேன் என்று சொல்லத்தான் நினைத்தேன்…

ஏதோ போய்  நின்னு ஹாய் டியர்ன்னு சொன்னதும் வண்டியில ஒட்கார்ந்து  போலாம்ன்னு சொல்ற பர்சனாலிட்டியில நாம இருந்த கூட பரவாயில்லை…நம்ம நிலமை நாமக்கே  நல்லா தெரியும் போது... எதுக்கு இந்த ரிஸ்க் எல்லாம்???

ஸ்மூத்தா போய்க்கிட்டு இருக்கற லைப்பை போய் ஏன் காம்பிளிகேட் ஆக்கனும்ன்னு

வேண்டாம்மா.. என்னை போல யாராவது  சாய்பாபா  புண்ணியத்துல  அவங்களுக்கு உதவி செய்வாங்க என்று ...

முதல் வரியை  மீண்டும்  படிக்கவும்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
15/09/2017

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

1 comment:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner