மச்சான் படம் பார்த்துக்கிட்டு இருக்க சொல்ல…. பயத்துல பீ கயிட்டிக்கிச்சி மச்சி என்று ஹாரர் கம் திரில்லர் படத்தை பார்த்து விட்டு யாராவது நண்பர் சொல்லக்கேட்டு இருக்கலாம்….
இந்த படத்தை உங்கள் நண்பர்கள் பார்த்து இருந்தால்… அல்லது பக் …ஆஸ் ஹோல் என்று ஆங்கிலத்தில் சொல்லாமல் கலீஜாக தமிழில் பேசும் நண்பர்கள் யாராவது உங்களுக்கு இருந்தால்…. இந்த படத்தை பார்த்து விட்டு கட்டுரையின் ஆரம்ப வரிகளை பேசி இருக்கலாம்…
எனக்கு ஹாரர் திரைப்படங்கள் சுத்தமாக பிடிக்காது… இந்த படம் ஹாரர் மற்றும் திரில்லர் ஜானரில் வந்த படம்.. முக்கியமாக என் அலைவரிசை ஒத்த தம்பி ரமேஷ் இந்த திரைபபடத்தை பற்றி போனில் அவசியம் பார்க்க சொன்னான்….
நைட்டு 12 மணிக்கு இந்த திரைப்படத்தை ஓட விட்டேன்… சான்சே இல்லை… படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் சவுண்டை சன்னமாக வைத்து விட்டு பயப்படும் காட்சிகளில் எல்லாம் எழுந்து போய் பாத்ரூம் போய்விட்டு வந்தேன்…
மனைவியும் சேர்ந்து படம் பார்த்தார்… யோவ் முக்கியமா பயப்படற நேரமா பார்த்து பாத்ரூம் போவுது பாரு என்று என்னை திட்டி விட்டு காதை மூடிக்கொண்டார்..
அந்த அளவுக்கு படம் மிரட்டல்… பிரெஞ்சு ரோமானிய தயாரிப்பு இந்த திரரைப்படம்.
கதை பெரிய கதை எல்லாம் இல்லை..
ஒரு டீச்சர் பிரான்ஸ் தேசத்தில் இருக்கும் புறநகரில் இருக்கும் தனியான வீட்டில் தனது எழுத்தாளர் பாய் பிரண்ட் டோட வசிக்கிறா…ஆனா அவ வசிக்கும் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு அம்மாவும் பொண்ணும் கொடுரமா கொலை செய்யப்படுறாங்க… அந்த கொலையின் தாக்கம் இந்த தம்பதிகளையும் தாக்குது அதில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதே கதை.
படத்தின் சுவாரஸ்யங்கள்.
ஆனா மிரட்டி இருக்காங்க.. இரண்டே இரண்டு கதாபாத்திரம்தான்… அதை வச்சே பின்னி இருக்காங்க..
வள வளன்னு அளக்காம 74 நிமிஷத்துல கதை சொல்லி இருக்காங்க.. அது மட்டுமல்ல.. இந்த திரைப்படத்தை நாம் ரசிக்க முக்கியகாரணம்.. இந்த படம் உண்மை சம்பவத்தால் உருவாக்கப்பட்ட திரைப்படம்.
இந்த பூமி பந்தில் யாருக்கோ எப்போதோ நடந்த சம்பவம் எனும் போது அந்த திரில் நம்மையும் தொற்றிக்கொள்கின்றது அல்லவா? அதுதான் இந்த திரைப்படத்தின் வெற்றியும்..
David Moreau தன் திறமையையும் இரண்டு ஆர்ட்டிஸ்டுகளையும் நம்பி இந்த திரைப்படத்தில் களம் இறங்கி வெற்றியும் பெற்று இருக்கின்றார்.
இந்த திரைப்படத்தின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும்… நிதர்சனம் என்பது இதுதான் என்பதை ஏற்றுக்கொள்ளும் போது நம் இந்த திரைப்படத்தையும் ஏற்றுக்கொள்வோம்.
டிரைலர்.
directed by David Moreau
Xavier Palud
Produced by Richard Grandpierre
Written by David Moreau
Xavier Palud
Starring Olivia Bonamy
Michaël Cohen
Music by René-Marc Bini
Cinematography Axel Cosnefroy
Edited by Nicolas Sarkissian
Release date
July 19, 2006
Running time
74 minutes
Country France
Romania
Language French
Romanian
Box office $2,727,971
ஜாக்கிசேகர்
19/04/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
உங்கள் விமர்சனம் படித்துவிட்டு கடும் பிரயத்தனத்துக்கு அப்புறம் ஒரு வழியாக லிங்க கண்டுபிடித்து சப் டைட்டில் கண்டுபிடித்து படம் பார்த்து முடித்தேன்,ஆனால் நீங்கள் சொல்லியபடி “அது” கட்டிக்கொள்கிற அளவுக்குகெல்லாம் திரில்லர் இல்லை இது. ஆனால் நல்ல கேமரா மற்றும் பின்னனி இசை ! கதை நான் ஏற்கெனவே பார்த்த "STARANGERS" ன் அச்சி அசல் ஆதலால் படம் நகர்வு மற்றும் முடிவு ஊகித்தபடியே நகர்ந்தது மற்றும் முடிந்தது . As a Thriller movie lover ஒரு தபா பார்க்கலாம்.
ReplyDelete