உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா?
குழந்தை இருக்கின்றதா?
பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டார்களா?
உங்கள் குழந்தைக்கு கார்ட்டூன் கேரக்டர்கள் என்றால் கொள்ளை பிரியாமா?
கார்ட்டூன் சேனல்கள் பார்த்து ஆங்கிலம் கொஞ்சம் பரிட்சயமா?
அப்படி என்றால் உங்கள் குழந்தைகளை இந்த விடுமுறை தினத்துக்கு Smurfs திரைப்படத்துக்கு அழைத்து செல்லுங்கள்…
ஒரு அற்புதமான அட்வென்சர் காமெடி அனிமேஷன் திரைப்படத்தை கண்டு களித்த நிறைவு இருக்கும் …
முக்கியமாக கலர்ஸ்.. சமீபத்தில் நான் பார்த்த அனிமேஷன் திரைப்படத்தில் இந்த அளவுக்கு கலர்ஸ் யூஸ் பண்ணி நான் பார்த்ததே இல்லை.. அதற்காகவே இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.
சரி Smurfs என்றால் என்ன?
மழை காளன்கள் இருக்கும் இடத்தில் வசிக்கும் நீல நிற குள்ள மனிதர்களை Smurfs என்று அழைப்பார்கள். கலிவர் கதைதான் இன்ஸ்பயர் என்றாலும் அதனை கற்பனையில் வைத்துக்கொண்டு வேறுஒரு உலகத்தை காமிக்சில் சிருஷ்ட்டிப்பது பெரிய விஷயம்….
2011 இல் முதல் பாகம் வெளியானது பெரும் வரவேற்பை பெற்ற Smurfs திரைப்படத்தை அப்படியே சும்மா விட்டு விடுவார்களா நம்மவர்கள்….
2013 இல் இரண்டாம்பாகத்தை களம் இறங்கி பெரிய அளவில் கல்லா கட்டி வைக்க… அப்போதே மூன்றாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று துடியாக துடித்தார்கள் தயாரிப்பு தரப்பு.. விளைவு இதோ… மூன்றாம் பாகம் சென்னை மல்ட்டி பிளக்சில் ஆங்கிலத்தில் திரிடியில் இந்த வெள்ளிக்கிழமையில் இருந்து வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கின்றது…
படத்தோட கதை என்ன?
நிலநிற குள்ள மனிதர்கள் வசிக்கும் அழகான அமைதியான கிராமம் அந்த கிராமத்தில் வசிக்கும் Smurfette வசிக்கும் பெண் அவளது மூன்று குள்ள நண்பர்கள்… அவர்களை அவ்வப்போது வம்புக்கு இழுக்கும் சூனியகாரன்…
அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடுவதோடு தொலைந்து போன தனது கிராமத்தை கண்டு பிடித்தார்களா இல்லையா என்பதே இந்த திரைப்படத்தின் கதை.
=====
படத்தின் சுவாரஸ்யங்கள்…
சும்மா சொல்லக்கூடாது.. அம்புலிமாமா கதை என்றாலும் சென்டிமென்ட் பீலிங் அட்வெஞ்சர் என்ற எல்லாவற்றையும் மிக்ஸ் செய்து காக்டெயில் விருந்து வைத்து இருக்கின்றார்கள் என்றே சொல்லாம்..
பெரியவர்களை விட குழந்தைகள் இந்த திரைப்படத்தை பயங்கரமாக என்ஜாய் செய்வார்கள்..
வண்ணங்களை ஒவ்வோரு பிரேமுக்கு பிரேம் இழைய விட்டு இருக்கின்றார்கள்…
முக்கியமாக நந்தியாவட்டை என்ற பூ கோவில்களில் இருக்கும்.. அதனை பறித்து கிணற்றில் போட்டால் சுழன்று கொண்ட தண்ணிரில் போய் விழும்.. அந்த பூக்களை எடுத்துக்கொண்டு பாரா சூட் போல அட்வென்சர் செய்வது செமயாக இருக்கும்.
அது போன்று நிறைய அட்வென்சர் காட்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம்..
வீட்டில் சண்டித்தனம் செய்யாமல் சொன்ன பேச்சை கேட்டுக்கொண்டு இருக்கும் குழந்தைகளை அவசியம் அழைத்து சென்று காணவேண்டிய திரைப்படம்… இந்த அனிமேஷன் திரைப்படம்…
பைனல் கிக்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்… இந்த படம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல… குழந்தை மனம் உங்களுக்கு இருந்தால் இந்த திரைப்படம் உங்களுக்கும்.
ஜாக்கிசினிமாஸ் ரேட்டிங்.
5/3
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
ஜாக்கிசினிமாஸ்
22/04/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Wow superb review sir.....
ReplyDeleteஇந்த கேரக்டர்கார்ட்டூன்ஸ் காலத்திலிருந்து பார்க்கிறோம் ..மெக்டொனால்ட்ஸில் ஒவொரு பொம்மையும் மகளுக்கு ஹாப்பி மீலில் கிடைச்சது . அவ மெக்டொனால்ட்ஸ் கூட்டிப்போக சொல்றதே இந்த பொம்மைங்க ஒவ்வொரு படத்துக்கு சீசனுக்கு கிடைக்கும் :).2011 வந்த படம் பார்த்தோம் ..இந்த படங்களை ரசிக்க நாமும் குழந்தையாய் மாறித்தான் பார்ப்போமே ..
ReplyDelete