Saithan - movie Review - சைத்தான் திரைவிமர்சனம்.




 
சைத்தான் என்றே சொல்லே வழக்கு ஒழிந்து போய் விட்டது…. 1980களில் தமிழ் திரைப்படங்களில் மார்வாடி சேட்டு கேரக்டர்கள் தன்னிடம் லந்து கொடுக்கும்  பொடியன்களை  சைத்தான் கி பச்சே என்று கத்தி துரத்துவார்கள்..  நீண்ட  இடைவேளைக்கு பிறகு இந்த வார்த்தையை கேட்கிறேன்.
 
1992 இல் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் எழுத்தாளர் அமரர் சுஜாதா அவர்கள் ஏழுதிய ஆ நாவலின் முதல் பாதியை மட்டும் வைத்துக்கொண்டு  திரைக்கதை  கொஞ்சம் கரம் மசாலா எல்லாம் சேர்ந்து  பிரைட் ரைஸ் செய்து இருக்கின்றார்கள்.
 
 ஆ நாவல் மொத்தம் 33 எபிசோட்… ஒவ்வோரு பாகத்தின்  முடிவிலும் ஆ என்று முடிவது போல எழுதி அசத்தி இருந்தார் ஆசான் சுஜாதா…
 
இத்தனைக்கும் ஆ நாவலில்  கணேஷ் வசந்த் துப்பறிவார்கள்… ஆனால்  அந்த விஷயத்தை மறந்தும் இந்த சைத்தான் படத்தில்  எடுக்கவில்லை.. மண்டையில் அடிக்கடி குரல் கேட்கும் ஐடி நாயகன் என்ற ஒற்றை லைனை எடுத்துக்கொண்டு கதை பண்ணி இருக்கின்றார்கள்.
இரண்டாம்பாதியில் சில விஷயங்களை  சொருகி இருக்கின்றார்கள்.. அதை பெரிதாய்  உறுத்திக்கொண்டு  தெரியாத அளவுக்கு செய்து இருக்கின்றார்கள்.
 
விஜய்  ஆண்டனியின் நடிப்பு நாளுக்கு நாள்  மெருகி ஏறிக்கொண்டே போகின்றது… இந்த படத்தில் அவரது பாத்திரத்தைஅவர்  மிக சிறப்பாகவே செய்துள்ளார்.
 
அதே போல அருந்ததி நாயர்  செமையாக பொருந்துகின்றார்… கொஞ்சம் பூசினது போல இருப்பது அவருடைய பலம்.. அதை விட  பால் சாப்பிட்டது இல்லையா? என்று  கிறக்கத்துடன் முதல்  இரவு அறையில் கேட்கும் போது நாம்  ஏன் பால் சாப்பிடக்கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றார்.
 
 கிட்டி ஒய்ஜிமகேந்திரன் சாருஹாசன் என்று 1980 பிரபலங்கள் படத்தில்  நடித்து இருக்கின்றார்கள்..
 
 கேமராமேன் பிரதீப் படத்தின் பெரிய பலம் என்று சொல்லுவேன்… முதல் பாடல் ஒரு ரிசர்ட்டில் படமாக்கி இருக்கின்றார்கள்.. பிரேமுக்கு  பிரேம் அசத்தி இருக்கின்றார்..
 
பாடல்கள் மற்றும்  பின்னனி  இசை அருமை..
 
மைனஸ் என்று பார்த்தால் ஐஸ்வர்யா கேரக்டரின் பின்னனியை கொஞ்சம் விவரித்து இருக்கலாம்..
 
டீச்சர் வேலையில் சேருவதற்கு முன்பே ஜெயலட்சுமி ஸகூல் குருப் போட்டோவில் எப்படி வரமுடியும்..?
 
கினற்றில் பச்சைகலர் பிவிசி பைப் என்று கவனம்  சிதறவிட்டு இருக்கின்றார்கள்.
 
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி முடிந்த வரை சலிப்பு தட்டாமல் இயக்கி இருக்கின்றார்… டென்சில் வாசிங்டன்  நடித்த ஈக்குலைசர் படத்தில் இருந்து ஒரு சண்டை காட்சியை உருவி இருக்கின்றார்.
 
  மொத்தத்தில் ஒரு சைக்கலாஜிக்கல் திரைப்படம்  என்ன விதமான திருப்தியை ஏற்படுத்துமோ  அந்த விஷயத்தை இந்த சைத்தான்  செய்து இருப்பதாகவே எனக்கு படுகின்றது.
 
இந்த திரைப்படத்துக்கு ஜாக்கி சினிமாஸ்  அளிக்கும்  மதிப்பெண்
 
3.10/5
 
ஜாக்கிசேகர்
01/12/2016
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
  


0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner