கார்த்திகேயன் மாணிக்கம் திட்டக்குடிகாரன்… நம்ம தென்னார்காடு மாவட்டத்து பையன் என்பது கூடுதல் சிறப்பு…. எப்படி பழக்கம் எல்லாம் நம்ம வலைபதிவு படிச்சிட்டுதான்...
நான்கு தங்கைகளோடு பிறந்தவன் நான். இணையத்தில் எழுத ஆரம்பித்து நிறைய தம்பி தங்கைகளை இன்று வரை பெற்று வருபவன் ….
அதில் கடலூர் ராஜசேகர், சுருதிடிவி கபிலன், சிக்ஸ்சென்ஸ் ரமேஷ் என்று நிறைய பேரை சொல்லிக்கொண்டு போனாலும் தம்பி கார்த்திகேயன் மாணிக்கமும் முக்கியமானவன்…
தற்போது பெங்களூருவில் குடும்பத்தோடு வசித்தாலும் நான் பெங்களுர் சென்றால் அவனை பார்க்காமல் சென்னை வந்ததில்லை… அந்த அளவுக்கு பாசம்… பெங்களுருக்கு வருகிறேன் என்று சொன்னால் அவன் எனக்கு பிளான் சொல்லுவான்… அந்த அளவுக்கு என் மீது அளவுகடந்த அன்பு.
சினிமா விரும்பி…. உங்க கூட ஒரே ஒரு படம் பார்க்கனும் ஜாக்கி அண்ணே என்று ஆரம்பித்த சினேகம் இன்று வரை தொடர்கின்றது. ஏதோ ஒரு விமல் படத்தை போய் பார்த்தோம்…. அதன் பின் பிரேமம் யூடேர்ன் என்று நிறைய படங்கள்… கன்னடத்தில் பட்டய கிளப்புவான்.
நல்ல பையன்.. பார்க்கதான் ஆள் ஜெகஜான்டிக்காக டரியல் கிளம்புவான்… ஆனால் ஒரு வெகுளியான பையன்…ஜாக்கி அண்ணன் எனக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? என்று நொடிக்கு நொடி நிரூபிக்க போராடுபவன்…
அவனுக்கு அவன் அப்பா என்றால் அவ்வளவு உயிர்… நிறைய பர்சனல் பக்கங்களை என்னோடு பகிர்ந்து கொள்வான்… சினிமா என்று நிறைய பேசுவோம்…எனக்கு அவனோடு ஒரு பியரும் கையுமாக பேசிக்கொண்டு இருக்க ரொம்பவே பிடிக்கும்.
நேற்று சென்னைக்கு கிளம்பினேன்… இன்று வருவதாய் பிளான்… ஆனால் பிளானில் சின்ன சேஞ் நான் கிளம்பிவிட்டேன்,…. பத்து நிமிடத்தில் அப்பார்ட்மென்ட் வாசலில் ஆஜர்.
டிக்கியை திறக்க சொல்லி நாலு டின் பியரை போட்டு விட்டு….அண்ணிக்கு என் பிரண்டு கம்பெனியில சொல்லி இருக்கேன் அண்ணே…. இந்த வாரத்துல கால் பண்ணுவாங்க என்றான்….
நாலு மாசம் எப்படிண்ணே சாமாளிக்கறே…. ? ஆட்ட தூக்கி மாட்டுல போட்டு மாட்டை தூக்கி ஆட்டுல போட்டு எப்படியோ பல்லை கடிச்சிக்கிட்டு ஓட்டறேன்டா என்றேன்..….
இரண்டு மணிக்கு பெங்களுரூவில் இருந்து கிளம்பினேன்… நேத்து நைட்டு ஒள்பது மணிக்கு போன் செய்தான்..? அண்ணே சென்னைக்கு போயாச்சா.. இல்லைடா கார் ஓட்டிக்கிட்டு இருக்கேன்,.. அப்புறம் கால் பண்ணறேன்னு சொன்னேன்…
பத்து நிமிஷத்துல வாட்சப்புல…. அவன்தான்….
அண்ணே தப்பா நினைச்சிக்காம உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பரை அனுப்புங்க என்று….
நெகிழ்ச்சிடா தம்பி….
இன்று பிறந்தநாள் கானும் தம்பி கார்த்திகேயன் மாணிக்கம் இன்னும் சீறும் சிறப்புகள் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டிக்கொள்கிறேன்.
ஜாக்கிசேகர்.
26/12/2016
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment