#Chennai28II
சென்னை 28 2 விமர்சனம்.
2007 ஆம் ஆண்டு சென்னை 28 திரைப்படம் வெளியானது… குரோம்பேட் ராகேஷில் அந்த திரைப்படத்தை பார்த்தேன். அந்த படத்துக்கு என் தோழியோடு சென்று இருந்தேன்…
முன் சீட்டில் உட்கார்ந்து இருக்கும் நண்பரிடம் படம் மறைக்கின்றது என்று கொஞ்சம் சீட்டில் சாய்ந்து உட்காருங்கள் என்று சொல்லப்போக படம் முடியும் வரை சாய்ந்து உட்கார்ந்தவர் படம் முடியும் வரை சாய்ந்தே உட்கார்ந்தே இருந்தை மறக்க முடியாது…
உன்னை சரணடைந்தேன் சமுத்திரகனி இயக்கத்தில் அந்த திரைப்படம் வெளியானது… வெங்கட் பிரபுவிடம் அவ்வளவு திறமை இருக்கும் என்று நானே எதிர்பார்க்கவில்லை… அந்த அளவுக்கு அந்த திரைப்படம் என்னை ஈர்த்த திரைப்படம் என்றால் அது மிகையில்லை… எல்லாவற்றையும் விட என்னை நான் திரையில் பொருத்தி பார்த்துக்கொண்டேன்
அந்த அளவுக்கு கதை மாந்தர்களோடு நம்மை பொருத்தி பார்த்துக்கொள்ளும் ஸ்கிரிப்ட்….
சரியாக ஒன்பது வருடங்கள் கழித்து சென்னை 28 இரண்டாம் பாகம் வந்துள்ளது..
எல்லோருக்கும் திருமணம் ஆகி விட்டது… ஜெய் திருமணத்துக்கு தேனிக்கு செல்ல சென்னை 28 நண்பர்கள் சந்திக்கும் பிரச்சனைதான் கதை…
முதல் பாதி பெரிதாய் சுவாரஸ்யம் இல்லை… இரண்டாம் பாதி ஓரளவுக்கு தேத்தி விடுகின்றார்கள்… முதல் பாகத்தில் நடந்த எல்லா விஷயத்தை இரண்டாம் பாகத்தில் கோடிட்டு காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.. கதையின் ஊடே சொன்னாலே போதுமானது…
ஆனால் இதில் மிக விரிவாய் முதல் பாதி போகின்றது… படத்தில் நான் ரசித்தது.. கேரள வரவான ஜெய்யின் ஜோடியாக வரும் ஷனா அத்லப்…. சான்சே இல்லை… கிட்டிஷ்ஆனா முகம்…
மத்தபடி ஆங்காங்கே வெங்கட் பிரபுவின் டச் படம் நெடுகிலும் தென்பட்டாலும் முதல் பாதியை போல இரண்டாம் பாதி இல்லை என்பதும் இதற்கு மேல் இந்த கதையை அடுத்த பாகத்துக்கு வளர்க்க வேண்டாம் என்பதுமே நம் வேண்டுகோள்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:
Post a Comment