Director Samuthirakani Why an conservative scene in the Movie Appa | இயக்குனர் சமுத்திரகனிக்கு ஒரு கேள்வி…

இயக்குனர் சமுத்துரகனி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அப்பா திரைப்படம் நல்ல கருத்துள்ள திரைப்படம்.. மக்களுக்கு நல் போதனைகளை போதிக்கும் திரைப்படம் என்று பரவலான பேச்சு ரசிகர்களிடத்தில் இருந்து வருகின்றது…
மகிழ்ச்சி..
உண்மையில் நிறைய பிரச்சனைகளை மிக அழகாக வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் வேளையில் ….
அப்பா படத்தில் ஒரு காட்சி எல்லாவற்றிர்க்கும் திருஷ்ட்டி போல அமைந்து விட்டது… அந்த காட்சி என்னவென்றால்..

சமுத்திரகனி (தயாளன்) மனைவி பிரசத்திற்கு மருத்துவமனையில் சேர்க்க சொல்ல.. வலியில் துடித்துக்கொண்டு இருக்க…. மருத்துவமனையில் சேர்த்தால் வயிற்றை வகுந்து விடுவார்கள் … அதனால் மருத்துமனையில் சேர்க்கமாட்டேன் என்று ஒற்றைகாலில் நிற்பார். வீட்டில் பிரசவம் பார்ப்பதுதான் சரி என்று அமைதி காப்பார்... உறவுகள் எச்சரிக்கும்… இதோ பாரு..? என் தங்கச்சிக்கு ஏதாவது ஆச்சின்னா அவ்வளவுதான்.? என்று சொல்லும்… அப்படியும் விடாப்பிடியாக மருத்துவமனையில் மனைவியை சேர்க்கவே மாட்டார்…


ஆனால் எதிர்பாராத விதமாக சமுத்திரகனி மனைவி அழகான ஆண் குழந்தையை பெற்று எடுத்து விடுவதாக காட்சி அமைத்து இருப்பார்..
ஒருவேளை பிரசவத்திற்கு பிறகு அதிகமான ரத்த போக்கு ஏற்பட்டால் என்ன மாற்று வைத்தியம் என்றோ..? ஒருவேளை பிளட்பிரஷர் அதிகமானால் என்ன தீர்வு என்றோ? நோய் தொற்று ஏற்பட்டால் என்ன தீர்வு என்பதை சொல்லவே இல்லை.. ஒரு காட்சியில் சொல்ல முடியாதுதான் ஆனால்
உலக அளவில் பிரசவகால மரணங்களில் முதலிடத்தில் இருக்கும் நாடு இந்தியா.. அடுத்தது நைஜிரியா…

காரணம் பழமைவாத எண்ணங்கள் மற்றும் அலட்சியம்…
1990 களில் ஒரு வருடத்தில் சராசரியா 20 லட்சத்துக்கு அதிகமான தாய்மார்கள் பிரசவகாலத்தின் போது முறையான மருத்துவ வசதி இன்றி அப்படியே கிடைத்தாலும் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பெரியவர்கள் வைராக்கியத்தால் இறந்து போனார்கள்..

2016 இல் அந்த எண்ணிக்கையை லட்சம் பேருக்கு 138 பேர் என்ற அளவில் இறப்பு எண்ணிக்கையை குறைத்து இருப்பது மா பெரும் சாதனை…
அதற்கு காரணம் இந்திய மற்றும் மாநில அரசுகள் ஆரம்ப சுகாதார நிலையங்களை சிறு கிராமங்களில் கூட தோற்று வித்து பேறுகால மரணங்களை தடுத்தன…


பிரசவகால மரணங்கள் அதிகம் நடக்க முக்கியகாரணம் பிரசவத்துக்கு பிறகு நிற்காமல் இருக்கும் இரத்த போக்குதான்… மருத்துவமனையில் இரத்தம் குறைத்தால் அதனை சமன் செய்ய இரத்தம் ஏற்றுவார்கள்… இரத்தம் உறைய எதிர்ப்பு மருத்துகள் கொடுப்பார்கள்.. முக்கியமாக பேறுகாலத்துக்கு பின் ஏற்படும் நோய் தொற்றை தடுப்பார்கள்… ஆனால் வீட்டில் பிள்ளை பெற்றால் அதிக ரத்த போக்கு ஏற்பட்டால் என்ன செய்வார்கள்..?????

கை பிசைந்து ஒரு உயிர் பிரிவதை துடித்து அடங்குவதை வேடிக்கைதான் பார்ப்பார்கள்.


பிரசவகத்துக்கு மருத்துவமனைக்கு செல்வதை காட்டிலும் வீட்டிலேயே மருத்துவம் பார்பபதுதான் சிறந்தது என்று ஒரு பழமைவாத காட்சியை வைத்து இருக்கின்றார்.. சமுத்திரகனி…


அதாவது மரபு வழி மருத்துவமே சிறந்தது என்றும் சொல்லவருகின்றார்…அலோபதி மருத்துவத்தில் நிறைய குற்றங்கள் நடக்கின்றன… பன்னாட்டு நிறுவனங்கள் கால் பதித்து மருந்துகளை கொள்ளை விலைக்கு விற்கின்றார்கள்… சுகப்பிரசவத்துக்கு காத்திராமல் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்து விடுகின்றார்கள் என்று பரவலான குற்றச்சாட்டு உண்டு என்பதை நான் மறுக்கவில்லை… அதே வேளையில் மருத்துவமுறையே தப்பு என்று சொல்வது எந்த வகையில் நியாயம்…
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் பெரும் அளவில் வழக்கத்திலிருந்த சிறுவர் திருமணங்கள் நம் நாட்டை பாழக்கின… அப்பாவி பெண்பிள்ளைகள் தனக்கு என்ன நிகழ்ந்தது என்று அறியாமலேயே அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்….கணவன் இறந்ததுமே விதவையானார்கள். அக்காலத்தில் பால்ய விதவை பெண்கள் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



பால்ய வயது பெண்கள் திருமண வாழ்க்கை தொடங்கியவுடன் கருத் தரிப்பதும் அதனால் ஏற்பட்ட பிரசவ கால சிக்கல்கள் பெரும் பிரச்சனைகளை சந்தித்தன… அதே போல அதிகமாக ஏற்பட்ட பிரசவகால மரணங்கள் அந்த நாட்களில் சகஜமான செய்திகளாக இருந்தன.



மருத்துவ வசதி அதிகம் இல்லாத அந்த நாட்களில் கிராமப்புறங்களில் செய்யப்பட்ட அரைகுறை மருத்துவம் பல இளம் தாய்களின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அதே போல பிரசவத்திற்கு பின் தாக்கிய நோய்களும் பெரிய அளவுக்கு சிறுவயது பெண்களை பாதித்தன. பல பெண்கள் திருமண வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவர்களாக மோசமான உடல் நிலையை சந்தித்தனர்….இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல ஆண்கள் முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாம் தாரமாக வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டனர். அல்லது முதல் மனைவியின் தங்கையையே திருமணம் செய்துக்கொண்டார்கள்.,..


அந்த கூத்து எல்லாம் கடந்த நூற்றாண்டில் நடந்தன என்பதை மறுக்க முடியாது…


இப்படி எல்லாம் இருந்த நூற்றாண்டு பழமையான விஷயத்தை விழிப்புணர்வு மூலம்… ஆரம்பசுகாதார நிலையங்கள் மூலம் பிரசவ மரணங்களை அரசு தடுத்து வரும் வேளையில் இப்படியான பழமையான காட்சியை திரைப்படத்தில் வைத்ததோடு அதை நியாப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல சமுத்திரகனிசார்…

அது மட்டுமல்ல … தான் படித்த எல்லா வற்றையும் காட்சியாக வைத்து விடவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை…இதை கூட சொல்ல காரணம்… சமுத்திரகனி சமுக்ததின் மேல் அளப்பறியா அன்பு கொண்டவர் என்பதாலே…


ஜாக்கிசேகர்
05/07/2016


#சமுத்திரகனி #இயக்குனர்சமுத்திரகனி #தமிழ்சினிமா
#பேறுகாலமரணங்கள் #பிரசவமரணங்கள் #பெண்கள் #மகளிர் #விழிப்புணர்வு #பிரசவம் #கர்பம் #தாய்மை #தமிழ்நாடு #சினிமா #samuthrakani #tamilcinema #women #tamilnadu





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
  



5 comments:

  1. என்ன ஜாக்கி அண்ணா,

    கேள்வி கேக்குறது நல்லாத்தான் இருக்கு. ஆனா இந்தியாவ அசிங்கபடுத்துனா தான் பெரிய மனுஷதனம்னு நீங்களும் தப்பா புரிஞ்சி வைச்சிஇருக்கீங்களே...

    இந்தயாவின் பாரம்பரியம் பற்றி குறை சொல்வது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது, இல்ல.?

    ஆனா, நீங்களுமா அப்படிங்கும் போது தான் வருத்தமாக இருக்கிறது

    கீழே நான் கொடுத்து இருக்கும் லிங்க்"ஸ படிச்சு தெளிவாகிகொங்கோ

    https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2223rank.html

    http://data.worldbank.org/indicator/SH.STA.MMRT?year_high_desc=true

    http://www.cdc.gov/reproductivehealth/maternalinfanthealth/pmss.html

    http://data.unicef.org/maternal-health/maternal-mortality.html

    http://data.unicef.org/Copy%20of%20MMR_Matdeaths_LTR%20trend%20estimates%201990-2015_MMEIG__2146343.xlsx

    (Please don't insult INDIA's heritage without having data)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கொடுத்திருக்கும் லிங்கில் இருந்து எடுத்தது. இதைத்தானே ஜாக்கியும் சொல்கிறார்?
      UNICEF: Haemorrhage remains the leading cause of maternal mortality, accounting for over one quarter (27 per cent) of deaths. The complications leading to maternal death can occur without warning at any time during pregnancy and childbirth. Most maternal deaths can be prevented if births are attended by skilled health personnel – doctors, nurses or midwives – who are regularly supervised, have the proper equipment and supplies, and can refer women in a timely manner to emergency obstetric care when complications are diagnosed. Complications require prompt access to quality obstetric services equipped with life-saving drugs, including antibiotics, and the ability to provide blood transfusions needed to perform Caesarean sections or other surgical interventions.

      Delete
    2. இதையும்தான் ஜாக்கி சொல்லி இருக்கிறாரே?

      "2016 இல் அந்த எண்ணிக்கையை லட்சம் பேருக்கு 138 பேர் என்ற அளவில் இறப்பு எண்ணிக்கையை குறைத்து இருப்பது மா பெரும் சாதனை…
      அதற்கு காரணம் இந்திய மற்றும் மாநில அரசுகள் ஆரம்ப சுகாதார நிலையங்களை சிறு கிராமங்களில் கூட தோற்றுவித்து பேறுகால மரணங்களை தடுத்தன…"

      Delete
  2. பிரசவ&கர்ப்ப காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறிப்பாக ஓய்வறியா செவிலியர் பணி மகத்தானது தற்போது தமிழகமெங்கும் வியாபித்த (தொடுசிகிச்சை வர்மம் என்கிற பெயரில்)போலி மருத்துவர்கள் கருத்தை சமுத்திர கனி அப்படியே கொஞ்சமும் ஆராயாது சேர்த்து விட்டார்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner