பேஸ்புக் வரமா சாபமா? வினுப்பிரியா மரணம் எழுப்பும் கேள்வி -?




சேலம்வினுப்பிரியாவுக்கு அன்றைய தேவை ஆதரவான வார்த்தைகளே ... பெற்றவர்களே நம்பவில்லை என்பதுதான் அந்த பெண்ணின் தற்கொலைக்கு முக்கியமான காரணம்.. பேஸ்புக்கிற்கு போகாமல் படங்களை பதியாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அடக்கம் ஒடுக்கமாக அந்த பெண் இருந்து இருந்தால் அந்த பெண் இறந்து போய் இருக்காது என்று பதறுபவர்களை பார்த்தால் மிரட்சியாக இருக்கின்றது.. எல்லா வற்றையும் விட உச்சக்கட்ட கொடுமை டியர் தங்கச்சி உன் போட்டோவை பேஸ்புக்கில் இனி பதியாதே என்று வேண்டுதல்கள் எல்லாம் பார்க்கும் போது நம் சமுகத்தில் புரையோடி போய் உள்ள குரூர மனம் நன்கு வெட்ட வெளிச்சமாகி வருகிறது. வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கின்றோம்... ஒருவன் வேண்டும் என்றே வண்டியில் இடித்து விட்டான்.. சார் நான் சரியாகத்தான் வந்தேன் ஆனால் இவன் வேண்டும் என்றே என்னை இடித்து விட்டான் என்று ஒரு பெண் சொன்னாள் பொம்பளை புள்ளையா அடக்கம் ஒடுக்கமா பஸ்ல போகாம உன்னை யார் வண்டி ஓட்ட சொன்னது...??? இப்ப பார் போலிஸ்ஸ்டேஷனுக்கும் வீட்டுக்கும் நாய் மாதிரி நடந்துக்கிட்ட இருக்கறேன் என்று பாதிக்க பட்டவளிடமே எரிந்து விழுந்தால் எப்படி இருக்கும்?? கடைசி வரை தப்பு செய்தவனை தவறாக வந்து வேண்டும் என்று சைக்கோ தனமாக தன் வண்டியை வந்து இடித்தவனை யாரும் கேள்வி கேட்காமல் நீ வண்டி ஓட்டாம இருந்து இருந்தா? எந்த பிரச்சனையும் இல்லை என்று திரும்ப திரும்ப பெற்றோர்களில் இருந்து போலிஸ் வரை சொன்னால் அந்த பெண் என்னதான் செய்வாள்? தற்கொலைதான் செய்வாள்.? இந்த சமுகமும் நாடும் நாட்டு மக்களும் நாசமாகப்போவட்டும்.




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. உண்மை. நாம் பெண்களைப் புரிந்து கொள்ளவே இல்லை. வினுவின் பெற்றோர்கள் ஆதரவாகப் பேசியிருந்தாலே அந்தப் பெண் செத்திருக்காது. வலுக்கட்டாயமாக ஒருவன் பலாத்காரம் செய்து கரற்பழிக்கும் போது. என்னைய்யா கற்பு பெண்களுக்கு மட்டும். கழுவி விட்டு போவதைத் தவிர. பெற்றோர்களே உங்கள் பங்கு என்ன. உங்கள் பையன் பெண்ணிடம் எப்போது நண்பனாக பேசினீர்கள். வேதனையுடன்
    விஜயன்

    ReplyDelete
  2. பெண்ணை கோட்டைக்கனுப்பிய தமிழன் மற்ற விஷயங்களில் கோட்டைவிடுகிறான்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner