சென்னையில் நிலநடுக்கத்தினால் ஏற்ப்பட்ட பரபரப்புகள்.


 
நேற்று இந்தோனேஷியாவில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் 8.6 ரிக்டர் அளவுகோல்.. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்ப்பட்ட பெரிய மூன்றாவது நிலநடுக்கம் இது..


முதல் நில நடுக்க செய்தி எனக்கு  செல்லில் எஸ் எம் எஸ் பண்ணியது.. ஸ்ரீபெரும்பத்தூரில் இருந்து எனது உடன்பிறவா தங்கை பிரியா.. ஹேய் எர்த்குயிக் ஹியர் என்று மெசேஜ் அனுப்பி இருந்தாள்... சரியாக மதியம் 2.15 என்று நினைக்கின்றேன் அனுப்பி இருந்தாள்..

அந்த மெசேஜ் வந்த  அடுத்த சில நொடிகளில் சென்னை நகரம் பரபரப்பு அடையத் தொடங்கியது...

ஓஎம்ஆர் முழுவதிலும் உள்ள சாப்ட்வேர் கம்பெனி ஸ்டாப் எல்லோரும் அலுவலகத்தை விட்டு உயிருக்கு பயந்து அலறி அடித்துக் கொண்டு ஓடி வெளியே  வந்தார்கள்..

மூன்று மணி வரை பேரணியில் பங்கு கொள்வதை போல அபீசுக்கு வெளியே கால் கடுக்க வியற்வை பூக்க பேசி நின்று கொண்டு இருந்தார்கள்..

எல்லோரும் போனில் பேசிக்கொண்டு இருந்தார்கள்.. அதனால் எல்லா செல்போன் இணைப்புகளும் ஜாம் ஆனதால் ஒரு அவசரத்துக்கு தகவலை தெரிவிக்க முடியாமல் பலர் திண்டாடி போனார்கள்..

வழக்கம் போல  பெண்களிடமும் ஆண்களிடமும் வேலை நேரத்திலேயே கடலை போடும் கடலை பார்ட்டிகள் மதியம் இரண்டரை மணிக்கு  பொறுக்கும் வெயிலில்  முதுகில் வியற்வை  வழிய கடலை போட்டுக்கொண்டு இருந்தார்கள்..

சில கம்பெனிகள் வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி விட்டன.. எப்படியும் திரும்ப  வந்தால் யாரும் வேலை செய்யப்போவதில்லை.. நிலநடுக்கத்தை பற்றித்தான் ஸ்டாப் அத்தனை பேரும் பேசிக்கொண்டு இருப்பார்கள்.. காரிடர் முழுவதும் இதே பேச்சாக இருக்கும்  அதுக்கு லீவ் கொடுத்து தொலைத்து விட்டு நாளைக்கு ஏதாவது மீட்டிங்கில் டீ யை எடுத்து அவர்கள் வாயில் வைக்கும் போது... 

இந்த கம்பெனி ஸ்டாப்ஸ் மேல  ரொம்ப  கரிசனமா இருக்கும்.... உதாரணத்துக்கு சென்னையில் எர்த் குவிக் வந்த போது  உங்க எல்லாரையும் வீட்டுக்கு போவ சொல்லிட்டோம்.. அதனால அன்னைக்கு கம்பெனிக்கு பல கோடி லாஸ்... பட் எங்களுக்கு ஸ்டாப் போட செப்ட்டிதான் ரொம்ப முக்கியம் என்று மீட்டிங்கிள் உங்கள் மேனஜர் அல்லது எம்டி பிட்டை போடலாம்..அதைனையும் நிங்கள் கடனெழவே என்று கேட்டுத்தொலையலாம்.


சில கம்பெனிகள் அரைமணி நேரத்தில் மீண்டும் வேலை செய்ய கூப்பிட ...ஆப்படர் ஷாக் கொஞ்ச நேரத்திலேயே வந்து விட, திரும்ப  எல்லா ஸ்டாப்பு  அலறி அடித்து ஓட்டம் பிடிக்க, பாதி மனத்துடன் வீட்டுக்கு போகலாம் என்று சில கம்பெனிகள் அறிவித்தன..



ஒரு நகரமே ஒரே நேரத்தில் வீட்டுக்கு கிளம்பினால் என்னாவகும் என்பதை நேற்று சென்னையில் பார்த்தேன். எல்லோருமே வீட்டுக்கு கிளம்பி கொண்டு இருந்தார்கள்.. அதனால் சென்னை டிராபிக்கில் குலுங்கியது எனலாம் ஒஎம்ஆர் ரோட்டில் ஒரு அரை கிலோமீட்டரை கடக்க ஒரு மணிநேரம் பிடித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..அதே போல ஐடி கம்பனி கேப்புகள் எல்லாம் கிளம்பி இருந்தால் இன்னும் டிராபிக் மோசமாகி இருக்கும்..


நகரமே அழிந்து விட்டது போல ஒரு பரபரப்பு எல்லோரிடமும் காணப்பட்டது..  ரோட்டில் நடந்து சென்ற அத்தனை பெண்கள் கையிலும் செல்போன் இருந்தது.. பேசிக்கொண்டே நடந்தார்கள்..அந்த பெண்ணுக்கு பிறந்நாள் என்று நினைகின்றேன்.. ஆர்எம்இசட் மில்லேனியம் செகன்ட் ஐடி பார்க்கில் இருந்து வெளி வந்தாள்..கேரளப்பெண்கள் அணிந்து இருக்கும் வெள்ளை புடவையில் பட்டு ஜரிகை பார்டர் அணிந்து போன் பேசிக்கொண்டே நடந்தாள்.. 

அவள் நடந்தது முக்கியமே அல்ல... அவள் பா போன்ற பெரிய கழுத்து வைத்த ஜாக்கெட் அணிந்து இருந்த காரணத்தால் பல ஆண்களின் ஏக்கப்பார்வையை அவளால் தவிர்க்க முடியவில்லை..அதனால் கிடைத்த பெருமையில் அந்த நடையில் ஒரு பெரிய அலட்சியம் குடிக்கொண்டு இருந்தது

ரோட்டில் வாகனத்தில் தனியாக செல்லும் ஆண்கள்.. கோயம் பேடு, அண்ணாநகர், மவுண்ட் ரோடு, என்று அவர்கள் போகும் இடங்களை தனியா நடந்து செல்லும் பெண்கள் அருகில் கூவி கூவி சென்று கொண்டு இருந்தார்கள்..


நிலநடுக்கம் வந்து விட்டது என்று தெரிந்ததும் எல்லோரும் உயிரை காத்துக்கொள்ள அலறி அடித்து வந்த போதும், ஒரு சில பெண்கள் ரொம்ப சாவகாசமாக ரெஸ்ட் ரூம் போய்  மேக்அப் போட்டுக்கொண்டு  பில்டிங்கை விட்டு  ரொம்பப் பொறுமையாக இறங்கி வந்து இருக்கின்றார்கள்..

பூகம்பம் வந்து விட்டதை சொன்னதும் என் உறவினர் வீட்டில் முக்கியமான  சர்ட்டிபிகேட் பத்தாயிரம் பணம், வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் ரெண்டு செட் டிரஸ் எடுத்து வைத்து விட்டு நிலநடுக்கத்துக்காக  சாவகாசமாக காத்துக்கொண்டு இருந்த கூத்துகளும் நடந்து கொண்டு இருந்தது..

நிலநடுக்கம் வந்த போது மெரினா லைட் ஹவுஸ் மேலே கேமரா பொருத்தி  சுனாமி லைவ் ஷாட் எடுக்க பல டீவி மீடியாக்கள் தயாராக இருந்தன...

சன் நியூசில் 5 மணிக்கு சுனாமி சென்னையை தாக்கும் என்ற செய்தி கடலோர பகுதி மக்களிடம்  செய்தியை உடனடியாக சேர்த்து மக்களை வெளியேற வைத்தாலும்..  அந்த செய்தியை பார்த்ததும் உலகம் அழிந்து விடுவதாக நினைத்து பொதுஜனம்  முழுவதும் பரபரப்பானது வேறு விஷயம். ஜெயா டிவியில் ஊரே ஓடிக்கொண்டூ இருக்கும் போது முதல்வர் ஜெயலலிதா அறிக்கையை வாசித்துக்கொண்டு இருக்கின்றார்.. வெகு நேரம் வாசித்துக்கொண்டு இருக்க அப்புறம் மேல் இடத்தில் அப்பூருவல் கேட்டு விட்டு சுனாமி மற்றும் நிலநடுக்க செய்திகளை ஒளிப்பரப்பினார்கள்... அவ்வளவு பயம்...


பூமியின் அடியில் இருக்கும் இரண்டு பிளேட்டுகள் மேலும் கீழும் இறங்காமல் சரி சமமாக நகர்ந்த காரணத்தால் சுனாமி வரவில்லை என்று தெரிவித்தார்கள்... எங்கள் ஊர் கடலூரில் கரெண்ட் இல்லாத காரணத்தால் கடலூரில் இருந்து நிறைய போன் செய்து செய்தியை கேட்டுக் கொண்டு இருந்தார்கள்..

இலங்கையை சுனாமி தாக்கினால் நிச்சயம் நாமும் பாதிக்கப்படுவோம் என்பதால்  இலங்கை செய்திகளை நான் கவனித்துக்கொண்டு இருந்தேன்.. நல்லவேளை சுனாமி வரவில்லை..
சென்னை கடற்கரையில் சுனாமி தாக்கும் என்று ஒரு பெரிய கூட்டம் ஐந்து மணிவரை காத்திருந்து விட்டு தத்தம் வீடுகளுக்கு ஏமாற்றத்துடன் சென்றது  கொண்டு இருந்தார்கள்..


நிலநடுக்கத்தால் 5 மணிக்கே அவர் அவர் வீடுகளுக்கு சென்று மனைவி குழைந்தைகளுடன் நேரத்தை செலவிட்டார்கள்...
எல்லாத்தை விட பெரிய காமெடி..... நிலநடுக்கத்தை பற்றி மக்கள் எல்லா டிவி பேட்டியிலும் கதை அளந்து அப்படியாச்சி இப்படியாச்சி என்று பரபரப்பாய் பேசியதை பார்க்க செம காமெடியாக இருந்தது..
இன்னும் பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் தரை மட்டமாகி ஊரே போர்க்களம் போல மாறி இருந்தால் இப்படி  அவர்கள்  பேசி இருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.


அதே போல சென்னையில் இருக்கும் அத்தனை பேரும் சொல்லி வைத்தது போல கூடங்குளம் அணுமின் நிலையத்தை பத்திதான் கவலைப்பாட்டார்களே ஒழிய... நாலு முறை நிலநடுக்கம் உணரப்பட்ட சென்னைக்கு பக்கத்தில் இருக்கும் கல்பாக்கத்தை பற்றி ஒரு பய வாய் திறக்கவேயில்லை... அடப்போங்கப்பா..


டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும்
என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியவில்லை.. இந்த அம்மா ஆட்சிக்கு வந்து உட்கார்ந்தாலே சுனாமிக்கு மூக்குல வேர்த்துடுது...
என்று ஒரு ஸ்டேட்டஸ் மேசேஜ் நான்  தட்டி விட்டு கிளம்பினேன்.
===================
இரவு எட்டு மணி வாக்கில் தினமும் வேலை நாட்களிலும் ,விடுமுறை தினங்களிலும், டிராபிக்கில் தினறும் சென்னை வடபழனி லக்ஷமன் ஸ்ருதி சிக்னல் அருகே வாகனங்கள் இல்லாமல் காத்தாடிக்கொண்டு இருந்தது...

இதே நில நடுக்கம் இரவில் நடந்து இருந்தால் இந்த சென்னை மாநகரம் இந்த அளவுக்கு டிராபிக்கால் பரபரப்பு அடைந்து இருக்காது என்பது என் எண்ணம். போன வருடம் ஜப்பானில் ஏற்ப்பட்ட சுனாமியை டிவியில் பார்த்த காரணத்தால் கூட இந்த பரபரப்பு ஏற்ப்பட காரணமாக  இருக்கும். நாமும் ஒரு சுனாமியை பார்த்து இருக்கின்றோம் அல்லவா...

கடலில் 23 கிலோமீட்டருக்கு அடியில் நடந்த பூகம்ப நிகழ்வு... 1850 கிலோமீட்டருக்கும் அப்பால் இருக்கும் இந்தோனேஷியாவில் நடந்த நிகழ்வுக்கு தமிழகம் பரபரப்பாகின்றது.. அதுவும் ஒரு சில நிமிடங்களில்.. இது தெரியாமல் கொய்யால நாம் அனைவரும் ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கின்றோம்.. என்னையும் சேர்த்துத்தான் சொன்னேன்.


===========

குறிப்பு

சென்னையை விட்டு விட்டு தூர தேசங்களில் வாழ்ந்து கொண்டு சென்னையை மிஸ் செய்யும் நம்மவர்களுக்கு... இந்த லைவ் கவரேஜ் செய்திகள் நிச்சயம் உதவிடும் என்று நம்புகின்றேன்.




பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

========

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

20 comments:

  1. நீங்க சுவாரஸ்யமா எழுதறத படிக்கிறதுக்காகவே ஒரு சுனாமி வரலாம். just for fun...

    cool coverage jacky.

    ReplyDelete
  2. அண்ணே நீங்க ஒரு வில்லேஜ Vingani ... !

    ReplyDelete
  3. ///அவள் நடந்தது முக்கியமே அல்ல... அவள் பா போன்ற பெரிய கழுத்து வைத்த ஜாக்கெட் அணிந்து இருந்த காரணத்தால் பல ஆண்களின் ஏக்கப்பார்வையை அவளால் தவிர்க்க முடியவில்லை..///

    இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு :-)

    ReplyDelete
  4. அனைத்து தகவல்களை சேமித்து சரியான முறையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி . . .அதிலும் . .நம்மாளுங்களின் புளுகல் இருக்கே . .சரி அத விடுங்க ஜாக்கி . . . பா கழுத்து சூப்பர் . . .

    ReplyDelete
  5. பாத்தீங்களா ஜாக்கி . . இத்தனை பரபரப்புக்கிடையே பா கழுத்து பார்த்தது தான் நம்ம டச் . . .

    ReplyDelete
  6. I really like your posts.. But please change anti-jaya attitude.. I dont say she is the intelligent or not.. but you include about her in your post even in all unnecessary places

    ReplyDelete
  7. //பல ஆண்களின் ஏக்கப்பார்வையை//

    இவ்வளவு ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேட்க்குது பார்

    ReplyDelete
  8. குறிப்பு

    சென்னையை விட்டு விட்டு தூர தேசங்களில் வாழ்ந்து கொண்டு சென்னையை மிஸ் செய்யும் நம்மவர்களுக்கு... இந்த லைவ் கவரேஜ் செய்திகள் நிச்சயம் உதவிடும் என்று நம்புகின்றேன்.
    Nandri Jacki..Arul karur

    ReplyDelete
  9. உங்களோட வர்னனை உண்மைலேயே நேர்ல பார்க்கற மாதிரியே இருக்கு சார், எல்லா உணர்ச்சிகளையும் ஒருசேர அனுபவிச்சு எழுதியிருக்கிங்க, அந்த கேரளா ஸ்டைல் புடவை கட்டுன பொன்னோட ஜாக்கெட் எந்த ஷேப் நு மறக்காம எழுதியிருக்கிங்க பாருங்க, கலக்கறிங்க

    ReplyDelete
  10. உங்க எழுத்து, வர்னனை தனியா தெரியுது, அந்த ரணகளத்திலும் கேரளா ஸ்டைல் பொன்னோட ஜாக்கேட்டோட ஷேப் அ மறக்காம நோட் பன்னிருக்கிங்க பாருங்க, கலக்குங்க

    ReplyDelete
  11. thanks and very much for live message,jecki brother

    ReplyDelete
  12. thanku jecki brother for live message

    ReplyDelete
  13. நடு நடுக்கதுக்கும், பர பரபரப்புக்கும் நடுவே கிளுகிளுப்பு ஜாக்கிக்கு மட்டும்தான் தெரியும்.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. OMR la SP infocity la than yenga office, apdiyea nerla partha mathiri irunthuchu,.. ungal yeluthukku nan adimai


    ----gopi

    ReplyDelete
  16. ஏறக்குறைய நாலைந்து வாரங்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்தேன். உங்கள் ஒவ்வொரு தலைப்பும் மின் அஞ்சல் வழியே வந்து கொண்டே இருக்கும். இங்கு சென்னையில் நடந்த நிலநடுக்கத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்லிக் கொண்டு இருந்ததார்கள். சரி அங்கே இருப்பவர்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதற்காகவே உள்ளே வந்து படித்தால் ச்சும்மா சொல்லக்கூடாது முழுமையாக சுவராசியமாக படிக்க வச்சுட்டீங்க.

    சில இடங்களில் எழுத்துப்பிழைகளைத் தவிர.

    எழுத்து நடையில் நிறையவே மாற்றம். ஏராளமான முன்னேற்றம். ஆனால் இந்த கட்டுரையில் கதம்பம் போல ஒரு தொடர்பற்ற தன்மை தெரிகின்றது.

    ReplyDelete
  17. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

    எல்லோருமே சொல்லி வைத்தது போல அந்த பா கழுத்து ஜாக்கெட் மேட்டர்த பற்றி எழுதி இருந்தீர்கள்..
    ரனகளத்தில் கிளிகிளுப்புக்கு சரியான உதாரணம் சொல்லட்டா..??

    உயிர் போற மாதிரி பிரிச்சனைக்கு ஆஸ்பிட்டல பெட்ல இருப்பிங்க...ஒரு அழகான நர்ஸ் வந்தா கண்ணை முடிக்குவிங்களா? சொல்லுங்க??

    அதே போல சுனாமி வந்து கிட்டு இருக்கு, எல்லரும் ஓடிக்கிட்டு இருக்காங்க.. நீங்களும் உயிர் பிழைக்க ஓடிகிட்டு இருக்கிங்க.. சினேகா போல ஒரு பொண்ணு வந்து பயத்துல உங்க கையை பிடிச்சிக்கிட்டு ஓடி வந்தா..?? தே சனியனே கைய உடுன்னா சொல்லிவிங்க... அதேதான் ரனகளத்திலேயும் ஒரு கிளு கிளுப்பு..

    ReplyDelete
  18. நன்றி ஜோதிஜி... அவசரமாக எழுதி போஸ்ட் செய்தேன். சமீபகாலமாக அதிகமாக ஆணிபுடுங்கி கொண்டு இருப்பதால் அந்த தொடர்பற்ற தன்மை தெரிகின்றது... வேறு ஒன்றும் இல்லை.

    ReplyDelete
  19. Very funny entry and great elaboration on the reaction of people to the news. Thanks for sharing.

    ReplyDelete
  20. //சென்னையை விட்டு விட்டு தூர தேசங்களில் வாழ்ந்து கொண்டு சென்னையை மிஸ் செய்யும் நம்மவர்களுக்கு... இந்த லைவ் கவரேஜ் செய்திகள் நிச்சயம் உதவிடும் என்று நம்புகின்றேன்.//

    Thankyou

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner