யாழினி அப்பா.... 5




போன வாரம் ஞாயிற்று கிழமை எப்ரல்  ஒன்று அன்று யாழினிக்கு மொட்டை அடித்து காது குத்த முடிவு செய்தோம்.. காரணம் அன்று யாழினிக்கு நட்சத்திரபடி பாத்டே  என்பதால்  அன்றைய நாளை தேர்வு செய்தோம்.



பண்ரூட்டி அருகே லட்சுமிநாராயணபுரத்தில் இருக்கும் குலதெய்வம் கோவிலான முனிஸ்வரன் கோவிலில் மொட்டை அடிக்க முடிவு செய்து எப்ரல்  ஒன்றாம் தேதி நள்ளிரவு ஒன்றரை மணிக்கு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு விடியலில் கடலூர் போய் என் அப்பாவை அழைத்துக்கொண்டு பண்ரூட்டியில் இருக்கும் கோவிலுக்கு காலை எழுமுணிக்கு எல்லாம் சென்று விட்டோம். காலை எழுலிருந்து எட்டரைக்குள் நல்ல நேரம் என்பதால் அதற்குள் பொங்கல் வைத்து மொட்டை அடித்து காது குத்த நினைத்தோம்... பண்ரூட்டி பஸ் நிலையம் அருகே குளிக்க ரூம் போடலாம் என்றால் கரெண்ட் இல்லை அதனால் தண்ணீர் இல்லை பேன் இல்லை.. அந்த ரூமுக்கே ஐநூறு ரூபாய் அநியாத்துக்கு கேட்டுத்தொலைத்தார்கள்…

மொட்டை அடிப்பவருக்கும் ரூபாய் 500 காது குத்தும் பத்தருக்கு 500 ரூபாய் என்று ரொம்ப கேஷுவலாக சொன்னார்கள்.. எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது… சரி பண்ரூட்டியில்  இருக்கும் இரண்டு பேரை ஏற்க்கனவே அனுகினால் மொட்டை அடித்து காது குத்த அவர்கள் 150ரூபாய் கேட்டார்கள்..
அவர்களை  அமர்த்தலாம் என்றால் நெத்தியடி ஜனகாராஜ் போல கை அநியாத்துக்கு நடங்கித் தொலைத்தது… காலையிலேயே டாஸ்மார்க் போய் விட்டு வர நிறைய வாய்ப்பு இருக்கும் காரணத்தாலும்  மொட்டை அடிக்கும் போது யாழினி மண்டையில் மொட்டை அடிக்கும் போது உலக மேப்பை வரைந்து வைக்கும் சாத்திய கூறு இருக்கும் காரணத்தால் பணத்தை பற்றி யோசிக்காமல் ரூபாய் ஆயிரத்துக்கு இருவரையும் அமர்த்தி மனைவியின் கஞ்ச பிசினாரி திட்டில் இருந்து தப்பித்தேன்..

நான் சிறுவனாக இருந்த போது மொட்டை அடித்து காது குத்திய போது போனக்கோவில் தானே புயல் புரட்டி போட்டு சிதிலமாக இருந்தது…யாழினிக்கு மொட்டை அடிக்கும் போது பயங்கரமாக அழுதால் தலையில் சின்ன  சின்ன வியர்வை  கொப்புளங்கள் இருந்த காரணத்தால் அவளால் வலியை தாங்க முடியவில்லை.. அவன் அழுத காரணத்தால் என்னால் அவள் படும் பாட்டை பார்த்துக்கொண்டு சும்மா  இருக்க முடியவில்லை.. சின்ன சின்ன தவறுக்கெல்லாம் நான் எல்லோர் மீதும்  எரிந்து விழந்து கொண்டு இருந்தேன். குழந்தை அழும் டென்ஷனில் என் மனைவி  அவள் கண்களில் காவிரியை தடையில்லாமல் வர வைக்க முயற்சித்து கொண்டு இருந்தாள் என்னாலும் முடியவில்லை எப்படா இந்த காது குத்து வேறு முடியும் என்று இருந்து.. மொட்டை அடிக்க அழுதது போல யாழினி காது குத்தும் போது அழவே இல்லை…ஆனால் காது குத்த வாங்கிய வெள்ளரி வெறை கம்மல் ஷார்ப்பாக இல்லை… திரும்ப திரும்ப  அந்த பிஞ்சு காதில் குத்த முயற்சித்துக்கொண்டு இருந்தான்.. பத்தரை இழுத்து ரெண்டு சாத்து சாத்தவேண்டும் போல இருந்தது…காது குத்த ஊசி  எடுத்து வருவார்களாம்.. ஆனால் அந்த பத்தர் அது போல எதையும் எடுத்துக்கொண்டு வராமல்  பொண்ணுபார்க்க வருவது போல கையை வீசிக்கொண்டு வந்து இருந்தான்..

ஒரு வழியாக காது குத்தி மொட்டையில் சந்தனம் தடவிய பிறகுதான் மனது  நிம்மதியாக இருந்தது..

விழா முடிந்ததும் சென்னைக்கு புறப்பட்டு விட்டோம்.. மதியம் மூன்று மணிக்கெல்லாம் சென்னை வந்து விட்டோம்..   அதன் பிறகு என் வீட்டுக்கு உறவினர்களும் நண்பர்களும் வந்து போனார்கள்.. என் உறவினர்கள் பலருக்கு அது மறக்கமுடியாத நாளாக மாறிப்போனது.. எங்களுக்கும்தான்..

யாழினி இரண்டு நாளைக்கு தன் தலையை தடவி தடவி  பார்த்து பார்த்து  ஏமாந்து போனாள்………..

============================



திரும்ப முந்தாநாள்  வெள்ளிக்கிழமை என் அத்தைபையன் வித்யாதரனுக்கு நிச்சயதார்த்தம்.. இரண்டு நாட்களாக  ஊரில் இல்லை..கடலூருக்கு போய் விட்டேன்.. என்  மனைவிக்கு குட்பிரைடே அன்று கூட  லீவ் இல்லை என்பதால் நான் மட்டுமே கடலூரில் நடந்த விழாவுக்கு சென்றேன் …நேற்று சனிக்கிழமை காலை  நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தேன்… வழக்கத்துக்கு மாறாக யாழினி என் மீது ஏறி ஏறி விளையாடிக்கொண்டு இருந்தாள்…முதன் முறையாக அப்பா அப்பா என்று அழைத்து எழுப்பி எழுப்பி விளையாடிக்கொண்டு இருந்தாள்.. நான் எழுந்திருக்காதது போல நடித்தேன்… அப்பா என்று அப்பா என்று அழைத்து என் நடு மண்டையில் ஒரு அடிக்கொடுத்தாள்.. வலியை பொறுத்துத்கொண்டு திரும்பவும் அப்பா என்று அழைக்கவும்… திரும்ப எப்போது அடிப்பாள் என்று மனம் முழுவதும் எதிர்பார்ப்புகளோடு  மிக உற்சாகமாய் யாழினியை எதிர்கொள்ள ஆரம்பித்தேன்..

===================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

19 comments:

  1. மொட்டை அருமை, என் மகள் அமிர்தாவுக்கு மொட்டை போடும் போது அழுதேவிட்டேன்.

    ReplyDelete
  2. சுவையான அனுபவம்.

    குழந்தையுடனான விளையாட்டு இன்னும் சுவை. இந்த சுவார்ஸ்யங்களை நன்றாக அனுபவிக்கவும். போனா வராது பொழுது போனா நிக்காது.

    ReplyDelete
  3. அய்யோ இந்த மொட்டை அடிக்கற போது இருக்கற டென்ஷன் இருக்கே, அப்பப்பா, எல்லா பெருசும் இப்படி சின்ன குழந்தையை படுத்தற பாடு..நம்ம மனசு எல்லா கெட்ட வார்த்தையும் use பன்னிரும்..என்னோட குழந்தைக்கு மொட்டை போடறப்ப எங்க குடும்பம் எல்லாம் தறி தெறிச்சு ஓடிரும்..அவ்வளுவ் செந்தமிழ் வரும்..ஜாக்கி,

    ReplyDelete
  4. சுவையான அனுபவம் சகோ!! என் பொண்ணுக்கு மொட்டை போடும் போது என் கணவரும் மொட்டை அடித்துக் கொண்டார்.இனிமேல் யாராவது என் பொண்ணுக்கு மொட்டை போடும்னு சொன்னீங்க நான் மனுஷனா இருக்கமாட்டேன் சொல்லிட்டார் ஹி ....ஹி இதுல வேற எங்கம்மா என் பொண்ணுக்கு 2 மொட்டை வேண்டுதல் இருக்குன்னு சொல்றாங்க,நான் என்ன செய்றது????????

    ReplyDelete
  5. யாழினியின் மொட்டைக்கும் பதிவா..? உங்களுக்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைக்குது ஜாக்கி..?

    - ரசிகவ் ஞானியார்

    ReplyDelete
  6. Popular blogger Kiruba www.kiruba.com is looking for a professional video person, he runs a corporate company which requires a person like you. Check www.kiruba.com if you are interested.

    ReplyDelete
  7. Popular blogger kiruba, www.kiruba.com is looking for a versatile video person , for his corporate division. check the website www.kiruba.com if you are interested.

    ReplyDelete
  8. போட்டோக்கள் இரண்டும் அருமை...

    ReplyDelete
  9. மொட்டை அடிக்கும்போது குழந்தைக்கு விழும் ஒவ்வொரு கீறலும்--- உண்மையில் நெஞ்சைக் கிழிக்கிற மாதிரி இருக்கும்.

    ReplyDelete
  10. ஜாக்கி சார்...

    உங்க பதிவும் யாழினியும் அருமை... நான் உங்களோட பதிவுகள் எல்லாமே படிச்சிருக்கேன்... ஆனா கமெண்ட்ஸ் போட்டதில்ல... கமெண்ட்ஸ் போட கூகிள் வேணும் அப்படிங்கறதால தான்.... இப்போ நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி கமென்ட் போடறேன்...

    ReplyDelete
  11. எதோ ஒரு வேகத்தில ஆரம்பிச்சிட்டேனே தவிர, என்ன எழுதறதுன்னு தெரியாம, ரொம்ப நாளா நான் லாகின் கூட பண்ணல.... இப்போ தான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்...



    கதை கவிதை எல்லாம் எழுதி பதிவுலகத்துல சுனாமி வரவைக்க விரும்பல... சினிமா எழுதலாம்... ஆனா, அதுக்கு பழம் தின்னு கொட்டை போட்ட பெரியவங்க இங்க ரொம்ப பேர் இருக்காங்க ஏற்கனவே... ஓரி ஐடியா கெடைச்சிருக்கு... பார்க்கலாம் வொர்க் அவுட் ஆகுதான்னு.... உங்க நேரம் அனுமதிச்சா என்னோட ப்ளாக் வந்து போங்க...

    ReplyDelete
  12. உங்க பர்சுக்கும் சேர்த்து மொட்டை அடித்துவிட்டார்கள் போல! :)

    ReplyDelete
  13. Never ever can a couple get such a wonderful 'spring time' in their lives. Every moment with the growing baby is a celebration to be remembered even during our advanced age. My wife took great pains to video shoot my son's growth from his first year of age. My son is now in the U.S., 25 years old, working and doing part time MBA. When he visits us occasionally, we try to show him his own childhood days on the video. While he looks impassionately at the young child as though the one on the video was a different person, for us, it's still enjoyable, kindling our fond memories of those moments. So, please don't miss this 'spring time', Jackie Sekar. Best Wishes.

    ReplyDelete
  14. Nice clip...the the beautiful flowers !!

    ReplyDelete
  15. Interesting post on your family's experience of the occasion. Yes, it is very hard to watch your child suffer.

    ReplyDelete
  16. neengal yaliniku piraguoru naal kaathu kuthi irukkalam yaliniyai ala vaithu viteergalae jackie anna sosad to hear she had cried please dont do that again

    ReplyDelete
  17. en makalukku thiruppathiyil mottai podumbothu, vilaiyaattukku en thalaiyil thanneer theliththuvittu,kuzhandaiyin thaliyilum theliththathaal summa irunthaal. sarrenru en thailaiyilum kaththiyai vaiththu izhuththuvittaan. nilamai kai meeri poivittathu.naanum mottai potten!!!

    ReplyDelete
  18. இயல்பான அனுபவம். இனிய நடையில் பகிர்ந்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  19. குழந்தைக்கு மொட்டை அடிக்கும் போது நான்தான் டரியல் ஆயிட்டேன்னு நினைச்சேன்.. ஆனா எல்லாரும் அப்படியேதான் இருக்காங்க.. யப்பா..... கருத்துக்களை பகிழ்ந்து கொண்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner