தேங்ஸ் அண்ணே !!!



யாழினியை பள்ளியில் விட்டுவிட்டு...
 சென்னை மயிலை நாகேஸ்வரராவ் பார்க் பக்கம் பெட்ரோல் போட போய்க்கொண்டிருந்தேன்...

கழுத்தில் வேர்வை வழிய ஒரு பையன் ஓடிக்கொண்டே  இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லிஃப்ட் கேட்டு கொண்டிருந்தான்....
 நீல கலர் ஷார்ட்சும் பச்சை கலர் பனியனும் அணிந்திருந்தான்...
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அம்மாஞ்சி ராஜா என்று பாடலில் அம்மாஞ்சி ராஜா என்று ஒரு வார்த்தை வரும் அல்லவா? 

அந்த அம்மாஞ்சி ராஜா வரிக்கு இலக்கணமாக அவனது முகம் இருந்தது... முகத்திலும் வியர்வை ஆறு ஓடிக் கொண்டிருந்தது !
கண்ணாடி அறிந்திருந்தான்....


 நேற்று நள்ளிரவு அவனுக்கு மூத்திரம் வந்து மூத்திரம் அடித்து விட்டு பக்கத்தில் இருக்கும் சுவரை சப்போட்டுக்கு பிடித்துக் கொண்டு கடைசி உலுக்கு உலுக்கும்போது !!!


ஒருவேளை சுவற்றில் இருந்த ஸ்பைடர் கடித்திருந்தால்..!
 அம்மாஞ்சியாக இருந்து கொண்டு ஸ்பைடர்மேன் ஆகக்கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளும் அவன் முகத்துக்கு பொருந்தி இருந்தன...
இங்கே ஏன்  "ஸ்பைடர்" மேன் வந்தான் என்று நீங்கள் கேட்கலாம்?!!!

அவன் ஸ்பைடர் மேன் அணிந்திருக்கும் கண்ணாடி பிரேம்தான் அணிந்திருந்தான்...!

நான் அவன் பக்கத்தில் வண்டியை நிறுத்தினேன்....
எங்க போற?

விவேகானந்தா காலேஜ்...
வண்டியில் ஏறி உட்கார சொன்னேன்...

 தேங்க்ஸ் முகத்தில் தெரிய...  ஏறி உட்கார்ந்தான்.

காலேஜுக்கு டைம் ஆயிடுச்சா என்றேன்?

இல்ல ஈவினிங் காலேஜ் தான்...!

பின்ன எதுக்கு ஓடற என்றேன்...

NCC யில் இருக்கிறேன்... எட்டே காலுக்கு அசெம்பிள் டைம்...என்றான்...
லேட்டா போனா மூணு ரவுண்டு ஓட உட போறானுங்கடா என்றேன்....
ஓட விட மாட்டாங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி எனக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு அதனால வாய்ப்பு இல்லை என்றான்...

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்பியும் பேட்டை செயின்ட் ஜோசப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது என் சி சி நேவல் யூனிட்டில் சேர்ந்தேன்...

செல்வமூர்த்தி சார் தான் வாத்தியார்...
எதிர்காலத்தில் நாட்டுக்கு கப்பலில் ஏதாவது மயிரு புடுங்க போகிறேன் என்ற நினைப்பில் விறைப்பான சல்யூட் எல்லாம் செய்திருக்கிறேன்!!! 
ஒரு நிமிடம் லேட்டாக வந்தாலும் மைதானத்தை 3 ரவுண்டு ஓட விடுவார்கள்.... தவழ விடுவார்கள் பல்டி அடிக்க வைப்பார்கள்... மார்ச் பாஸ்ட் செய்து செய்து கால் கையெல்லாம் விட்டுப் போகும்!

ஒரு மணி நேரம் வைத்து செய்வார்கள்.... ஏண்டா இந்த பேரேடுக்கு வந்தோம் என்று யோசிக்க வைத்து விடுவார்கள்...!

எல்லாம் வைத்து செய்துவிட்டு ஒரு கிச்சடி ஒன்று தருவார்கள்... உண்மையில் தேவாமிர்தம் என்ற பொருளுக்கு அந்த கிச்சடி தான் அந்த கணத்தில் அமிர்த்தமாக  இருக்க வேண்டும்...

அது எப்படி என்று நீங்கள் வினவலாம்?

யோசித்துப் பாருங்கள் மேட்டர் செய்யும் போது அடித்து, உடைத்து, கிழித்து, வெறித்தனமாக இயங்கி... கடைசியில் ஊத்தி.... இணையை விட்டு பிரியும் நேரத்தில்... ஒரு முத்தம் அவனோ அவளோ கொடுத்துக் கொள்வார்களே....
அதற்கு முன்பு செய்த அத்தனை விஷயங்களையும் தூக்கி சாப்பிட்டு விடும் அந்த தேவாமிர்தமான ஒரு முத்தம்...


வாழ்க்கையில் கூட நீங்கள் பொறுத்தி பார்த்துக் கொள்ளலாம்...
ஒரு பெரிய சண்டைக்கு பிறகு வாங்கி பருகும் காபி கூட தேவாமிர்த்த சுவை கொண்டதாகத்தான் இருக்கும்...!



சார் அந்த பையன் என்ன ஆனான்?
சரியான நேரத்தில் இறக்கி விட்டீர்களா என்பீர்கள்? 
இரண்டு நிமிடத்துக்கு முன்னதாக விவேகானந்தா காலேஜ் வாசலில் இறக்கி விட்டேன்....

சார் ஏதோ ஒரு பையன்  லிப்ட் கேட்டான்... அதுக்கு காலம் காத்தால இவ்வளவு பெரிய பதிவா ? 


என்று உங்கள் மண்டையில் ஓடும் மைண்ட் வாய்ஸ் கேட்ச் செய்து விட்டேன்!!!
எத்தனையோ பசங்களுக்கு லிப்ட் கொடுத்து கீழே இறங்கி செல்லும் போது ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாத  வேஸ்ட் லேண்டுகளை இறக்கிவிட்டு இருக்கிறேன்....


சில பசங்களை இறக்கிவிட்டு தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு உடனே நகராமல்...நின்று நிதானித்து நம் முகம் பார்த்து... தேங்க்ஸ் அங்கிள் என்று சொல்லி காலையில் ஆய் வருவதற்கு முன்பாக கஷ்டப்பட்டு முகத்தை வைத்துக் கொள்வோமே..? அப்படியான நம் முகத்தை அவர்கள் பார்த்து செல்வதற்கு அவர்களுக்கு ஆளாதியான பிரியம்... அப்படியான பசங்களையும் நான் பார்த்து இருக்கிறேன்.


இந்த பதிவை இவ்வளவு தூரம் நீட்டி முழங்க காரணம் ஒரே விஷயம் தான்...
விவேகானந்தா காலேஜ் வாசலில் அந்த ஸ்பைடர் மேன் பையன் 
"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா" என்றான்.


பிரியங்களுடன் 
ஜாக்கிசேகர்
#chennai #சென்னை #mylapore



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner