பேன்கள் புத்திசாலிகள்.




யாழினி டே கேரில் அவள் தலையில் ஏபிடி பார்சல் கணக்காக பேனை  ஏற்றி அனுப்பி வைத்து இருந்தார்கள்…  வாரத்துக்கு  இரண்டு முறை  தலை குளிக்க வைத்து சுத்தம் செய்தாலும்… பசங்களோடு படுத்து உறங்கும் மதிய வேளையில்  பேன்கள் இடம்மாறி யாழினி தலைக்கு சுற்றுலா வந்து விடுகின்றன..




 சின்ன வயதில் ஒரே இரவில் பேன்கள் பதினாறு படுக்கைகளை தாண்டி போகும் என்று  முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல ரேஞ்சில் கதை கட்டி அதனை எங்களிடத்தில் உறவுக்கார அத்தை சொல்வதுண்டு.

நானும் மக்குமாதிரி ஒரு மணி நேரத்துக்கு பேனின் வேகம்.. எத்தனை படுக்கையை 12 மணி நேரத்தில் தாண்டும் நடுவில் இளைப்பாறுமா? என்ற  கேள்விகளோடு எல்லாம் கணக்கு போட்டு இருக்கின்றேன்..

 யாழினி அம்மாவுக்கு தலையில் கை வைத்து சொறிந்தால் தமிழக அர நினைத்தால் வயிறு பத்திக்கிட்டு வருமே அப்படி அவளுக்கு பத்திக்கிட்டு வரும்.. உடனே நேரம் காலம் பார்க்காமல்  பேன் வேட்டையில் இறங்கி விடுவாள்..

நேற்றும் அப்படி இறங்கி இருக்கும் வேளையில் யாழினி ஒரே ஒரு பேனுடி.. செமையா   ஆட்டம் ஓட்டம் காட்டிக்கிட்டு இருக்கு…

அரைமணி நேரமா அதுக்கூட போராடிக்கிட்டு இருக்குது.. சிக்க மாட்டேன்குதுடி…

இது சிக்காதுடி… இது யாழினி…
ஆத்தாலும் மோவலும் வாடிப்போடி என்றுதான் பேசிக்கொள்வார்கள்.. சில நேரத்தில் ஏதோ  லேடிஸ் ஹாஸ்டல் காரிடரில்  நிற்பது போன்ற பிரம்மையை கொடுக்கும்.


அந்த பேன் உங்கிட்ட சிக்காதுடி..

ஏன்டி சிக்காது…???

இல்லம்மா… நீ ஒன்னா பரேன்.. அது சிக்காது…

அதான்  ஏன்னு கேட்கறேன்…----???


 Because they are brainies

How? Yazhi??

நாம பிரெய்னி தானே…

ஆமாம்..

அதனாலதான் அதுவும் பிரெய்னி…

புரியலை…

அம்மா அது சாப்பாட்டுக்கு நம்ம ரத்தத்தைதானே குடிக்குது…

அப்ப அதுவும் பிரெய்னியாதானே இருக்கும்…

உரையாடலில் பங்கு பெற்ற  யாழினி அம்மாவும்… காதை  நீட்டி ஒட்டுக்கேட்டுக்கொண்டு இருந்த நானும் கப்சிப்


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

27/07/2017

#யாழினி #யாழினிஅப்பா #யாழினிஅம்மா #மகளதிகாரம்
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

3 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner