Valanjamkanam water falls near Kuttikkanam - மயக்கும் வலன்ஜ கானம் அருவி /கேரளா.



மவுனராகம் படம் எல்லோரும் பார்த்து இருப்பிங்க…
 அதுல  மோகன் ஒரு நாள் ரேவதியை அழைச்சிக்கிட்டு வெளியே போவார்… அதுவும் தாஜ்மாகாலுக்கு மத்தவங்கள  மாதிரி தொல்பொருள்துறை பாதுகாக்கும் கட்டிடம்., நுழைவு சீட்டு   வாங்கும் இடம் என்று வழக்கமாக போகும் வழியில்லாமல்…



பியட் பத்மினி  காரை  ரோட்டின் ஒரமாக  நிறுத்தி இறக்கிவிடுவார்…  அது  சரிவான இடம்..  குளிருக்கு ரேவதி கன்னத்தில்  கைகளால் தேய்த்து சூடு படுத்திக்கொண்டே  அந்த சரிவில்  இறங்கி வருவார்…

திடிர் என்று பார்த்தால் மரத்தின் கிளைகளின் டிஸ்டர்பன்சோடு அழகான ஒரு பிரேமில் திடிர் என்று   பிரமாண்ட தாஜ்மகால் தெரியும்… அது மட்டுமல்ல …


தாஜ்மகாலின் பிம்பம் யமுனை நதிக்கரையில்   பிரதிபலிப்பது போல ஷாட் வைத்து இருப்பார்கள்..... அப்படியே அந்த அழகை பார்த்து  சொக்கி, குளிரையும் பொருட்படுத்தாமல் ரேவதி அங்கேயே தரையில்  உட்கார்ந்து விடுவார்…

குமுளியில் இருந்து சபரிமலைக்கு சென்று கொண்டுஇருக்கும் போது.. காரின் சத்ததையும்  மீறி பேரிரைச்சல் கேட்கும் என்வென்று பார்த்தால் சாலைக்கு மிக அருகில் அருவி கொட்டிக்கொண்டுஇருக்கும்….



மவுனராகத்தில ரேவதி பார்த்து அதிசயத்த தாஜ்மகால் போல  நாமும் வனஜகானம் அருவியை பார்த்து அதிசயப்போம்…  ரோட்டுக்கு பக்கத்தில்  பொங்கி கொட்டும் அருவியை அப்படியே விட்டு விட்டு செல்ல மனம் இல்லாமல்  அந்த  இடத்தில் பத்து நிமிடம்   அருவியின் அழகை ரசித்தபடி உட்கார்ந்து விட்டு செல்வோம்... 


எந்த  அவசர வேலையாக இருந்தாலும் காரை ஓரம் போட்டு விட்டு பத்து நிமிடம்  அந்த  இடத்தில் இளைப்பாறி விட்டு செல்ல வைக்கும் அந்த இயற்கை சூழல்… இது குமுளிக்கு பக்க்ததில் உள்ள  குட்டிக்கானம் என்ற இடத்தில் இருக்கின்றது...

வலன்ஜகானம் பால்ஸ்… எழுபத்தி ஐந்து அடி உயரத்தில் இருந்து விழுகின்றது… வருடத்தில் பத்து மாதங்களுக்கு தண்ணி கொட்டிக்கொண்டே இருக்கும்…

மிக முக்கியமாக குளிர்காலத்தில் சென்றால்…அருவியும் சுற்றி இருக்கும் பனி புகையும் பார்ப்பதற்கே ரம்யமாக இருக்கும்…


 கடல் மட்டத்தில் இருந்து 3200 மீட்டர் உயரத்தில் வனஜகானம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது…


தேனியில் இருந்து இரண்டரை மணி நேர கார் பயணம்… குமுளியில் இருந்து 38 கிலோ மீட்டர்… ஏறக்ககுறைய அரை மணி நேர பயணம்.


வாழ்வில் ஒரு முறையாவது வலன்ஜகானம் அருவியை பார்த்து விடுங்கள்..

 நான் இதுவரை குற்றாலமும் பார்த்தது இல்லை… ஒகேனக்கல்லையும் பார்த்தது இல்லை..சபரி மலை   சென்ற போது என்னை  கவர்ந்த அருவி இது.

=============
இந்த அருவியை  நான் வீடியோவாக எடுத்து  ஆவணப்படுத்தியுள்ளேன்..  பார்த்து விட்டு கருத்துக்களை  கூறுங்கள்...





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

6 comments:

  1. is it above 3200 meter from sea level?? it might be 3200 feet coz south india's highest peak Aanai mudi itself nearly 2900 meter only...

    ReplyDelete
  2. பார்க்க வேண்டிய இடம் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. பார்க்க வேண்டிய இடம் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  4. அருமையான அருவி! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. தங்கள் பயண குறிப்பால் இன்று யான் கேள்விப்பட்டிராத அருவி பற்றி அரிந்து கொண்டேன்... நன்றி...
    www.thamizhmozhi.net

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner