aaha kalyanam-2014 ஆஹா கல்யாணம்/ அசத்தல் கல்யாணம்.



 முதலில் என்னை இந்த படம் பார்க்க வேண்டும் என்று என்னை கவர வைத்தது.. கலர்புல்லான  டிரைலர்... சான்சே இல்லை.. அசத்தி இருந்தார்கள்... 



பிரேமுக்கு பிரேம் ஹோலி கலர்களை கண்ணில் பூசி  விட்டிருந்தார்கள். அப்போதே படத்தை பார்க்க  வேண்டும் என்ற ஆர்வம் இயல்பாய் எழுந்து விட்டது... அதுக்கப்புறம் வாணிக்கப்பூர்  புராணம்....

ஆஹா கல்யாணம் படம் வருவதற்கு இரண்டு  மாதத்துக்கு  முன்னாடியே வாணிக்கப்பூர் வாணிக்கப்பூர் என்று  தமிழ் பத்திரிக்கைகள் எழுதி தள்ளின... பாடல் வெளியீட்டு விழாவில் வாணி புடவை கட்டி கலந்து கொள்ள.. அதில் முந்தானை சரிந்து வலப்பக்க மார்பு கனிசமாய்  தெரிய அது இணையம் எங்கும் சுற்றிக்கொண்டு இருந்தது...  நண்பர்கள் சொன்னார்கள்.. Band Baajaa Baaraat" இந்தியில் நன்றாக இருக்கும்  தமிழ் தெலுங்கில் எப்படி எடுப்பார்கள் என்று தெரியாது என்று  சொல்ல  அந்த படத்தின் மீது பெரிதாய் ஆர்வம் இல்லாமல் இருந்தது..


படம் பார்த்து இரண்டு  நாள் ஆகி   விட்டது.. ஆனாலும் உடம்பில் இன்னும் வாணி ஜுரத்தின் அறிகுறி  உடம்பில் இன்னும் மிச்சம் இருக்கின்றது...  காதில்  கம்மல் இல்லை, பூ இல்லை... நெற்றியில் பொட்டு இல்லை....பழமை வாதத்தில் திளைத்து போன  தமிழ் ரசிகனை அசரடிக்கும்  எந்த அடிப்படை அழகும் இல்லை....உதாரணத்துக்கு ஒல்லயாக வரும் நடிகர்கள் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க... கொஞ்சம் பூசினார் போல குண்டடிப்பார்கள்...  ஆனால் வாணியிடம் அப்படி  எந்த லட்சனமும் இல்லை.... பெரிய நெற்றி, ஒல்லியான உடல்வாகு.... சத்யராஜே ஆப் பீட் ஸ்டூல் போட்டு ரோமான்ஸ் செய்யும் உயரம்,.. ஒல்லியான தெகம்.. தெகிலான வயிறு.. சிரித்தால்   உதடு சற்றே கோனால், பெரிய நெற்றி, பல  பிரேம்பகளில் கம்மல் இல்லை... பெரிய நெற்றியல்  பொட்டு இல்லை... முக்குத்தி  இல்லை.... இருந்தாலும்  வாணியை தமிழ் ரசிகனுக்கு பிடித்து போகின்றது....


தினகரன் வெள்ளி மலரில் முட்டு சந்தில் நானி என்று எழுதி வைக்க நல்ல நடிகளை வாழ வைக்க  வேண்டும் என்று  இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று கண்டிப்பாக முடிவு எடுத்து விட்டேன்....


செவ்வாய்க்கிழமை இரவு சத்தியம் சீசனில் படத்தை பார்த்தேன்... முன்னாள் சுபம் தியேட்டர் ((டிடிஎஸ் ஸ்பீக்கர்களை தவிர்த்து ரெண்டு பெரிய ஸ்பீக்கர்கள் வைத்து இருக்கின்றார்கள்.. ))அது என்ன  சிஸ்டம் என்று தெரியவில்லை... தெரிந்தவர்கள் விளக்குவீர்களாக.....


 இவ்வளவு எனர்ஜட்டிக்காக ஒரு பெண்ணை திரையில் பார்த்து வெகு நாள் ஆகி விட்டது... நிறைய பிரேம்களில் நடிக நடிகைகள் கடனெழவே என்று ஆடி பார்த்து இருக்கலாம்..ஆனால்  வாணி பொறி கலக்க என்ர்ஜியாக உற்சாகமாக ஆடி இருக்கின்றார்....  அந்த பிரேம்களை பார்க்கையிலேயே உற்சாகம் உங்களுக்கு தன்னால் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை... அவ்வளவு எனர்ஜி... முக்கியமாக இரண்டாவத கல்யாண பாடலில் வாணியின் ஆட்டம்  செம.


 வாணி புராணம் போதும் மேட்டருக்கு வருவோம்.


கல்யாண காண்ட்ராக்டர் வேலை.... அதில் இணையும் நாயகனும்  நாயகியும்   அந்த தொழிலில் வெற்றி பெற்றார்ககளா?  அவர் சொந்த வாழ்க்கை என்னவாயிற்று என்பதுதான்  இந்த படத்தின்  கதை...


  பிரேமுக்கு பிரேம்  அசத்தி இருக்கின்றார்கள்... பணத்தை கொட்டி காம்பரமைஸ் இல்லாமல் செலவு செய்து இருக்கின்றார்கள்.. யூடிவி   தென்னகத்தி தொடர்ந்து மொக்கை படங்களும் நல்ல படங்களும் எடுத்துக்கொண்டு இருக்க... முதல் படத்திலேயே  வெற்றியை ருசித்து இருக்கின்றது... யஷ் நிறுவணம் வாழ்த்துகள்.... இந்த படத்தை எக்சிகியூட் யாரு பண்ணாங்களோ.. அவங்களுக்குதான் இந்த நன்றி போய் சேரனும்...  சான்சே இல்லை...


 சென்னையில்  மவுண்ட் ரோட்டில் உள்ள நிர்மலாதக்ஷ்ன் ஓட்டலில்தான் கெட்டிமேளம் ஆபிஸ்.... பிரேமுக்கு பிரேம்  அசத்தி இருக்கின்றார்கள்.. நேரடி தமிழ் படம் பீலை  ஏற்ப்படுத்தி இருக்கின்றார்கள்..  அதே வேளையில்  நானி  பேசும் தமிழ்தான் முதலில் எரிச்சலை தந்தாலும் ரஜினியின் கன்னட குரல் எப்படி பழகி  ரசிக்கிறோமே... அதே போல இரண்டு மூன்று சீனுக்கு  பிறகு புல்லாக ரசிக்க  ஆரம்பிக்கிறோம்...
டயலாக் எல்லாம்  ரொம்ப நீட்டாக தேவையில்லாமல்  நீட்டி முழங்கவே இல்லை... நிறைய அடித்து திருத்தி எழுதி இருக்க வேண்டும்...  எனக்கு ரொம்ப பிடிச்ச சீன் டயலாக் எதுவென்றால்...


கல்யாண காண்ட்ராகட்ர் வேலை ஆரம்பிக்க நாயகன் நாயகி பேசிக்கொள்ள... நாயகன் கேட்கின்றான்... இது எப்படி மக்களுக்கு புரியும்...   மொபைல்போன் , கம்யூட்டர் எம்பி3  புரியுதுல்ல.....ஆமாம்...  நான் சொல்லறது கல்யாணம்தனே என்று  டயலாக்கில்  பின்னி இருக்கின்றார்கள்.....


 சீரியல்பல்பிலே ஆஹா கல்யாணம்  டிசைன் செய்தவருக்கு  ஒரு பூங்கொத்து... கல்யாணத்தில் பெரும் பங்கு வகிக்கும் சீரியல் பல்புகளை பெரியதாய் கண்டுக்கொள்ள மாட்டார்கள்..   இதை வைத்தே டிசைன்.... அதே போல டிரைலர் மற்றும் யூடியுபில் வெளியிட்ட  பாடல்களில்  பிரேம் சுற்றி சீரியல் பல்புகள்... அசத்தி இருக்கின்றார்கள்..
 மெயின் மேட்டர் முடிந்து சட்டென  நாணியை  வாணி  நீங்க வாங்க என்று கூப்பிடுவதும் அந்த வெட்கமும் அடக்கமும்.. நன்றாக ஸ்கோர்  செய்கின்றார்... அதைவிட ரொம்ப மரியாதையான காதலான  மேட்டர் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது அதையே செஷன் என்று  சொல்ல  அப்படியே கேட்டு விட்டு  அவன் சென்ற பின் வெடித்து அழும் அழுகை இருக்கின்றதே.... வாவ் நடிப்பிலம் பின்னுகின்றார் வாணி..


 ஒரு  பணக்காரம் கெட்டி மேளத்தில் திரும்ப ரெண்டு பேரும்  இணைந்தால் மட்டுமே வாய்ப்பு என்று  அழைக்க வாணி கஸ்ட்யூம் கார்பரேட்  ரகம்.. இண்டர்வெல்லுக்கு முன் வரும் ரொமாண்டிக் லிப் லாக்... தமிழ் சினிமாவுக்கு புதுசு...நானிக்கு கொடுத்து   வைத்த  உதடுகள்... போன ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்து இருக்க வேண்டும்....  நீ வாழுட தம்பி.....

ரொம்ப நாள் கழித்து எண்ர்ஜிட்டிக்கான படம் பார்த்த உணர்வு.. அது மட்டுமல்ல  நிறைய கல்யாணத்தை அட்டன்   செய்து விட்டு வந்த உணர்வு... அதே போல  அந்த பஞ்ச் பாடலுக்கான பிரிப்பரேஷன் அதுக்கான உழைப்பு... லைட்டிங்  செட் என்று அசத்தி இருக்கின்றார்கள்....


புதுசா எப்படி உனக்கு எப்படி வேலை கொடுக்கறதுன்னு பையனோட அப்பா கேட்க.. 40 வருஷத்துக்கு முன்ன 40  ஆயிரம் பணம் இருந்தா டயர் கம்பெனி ஆரம்பிக்கலாம் என்று நின்ன போது புதுசுன்னு உங்களை ஒதுக்கி இருந்தா என்பதாக சொல்லும் காட்சியில் நெகிழ்ச்சியில் கண் கலங்க வைக்கின்றார்கள்..



 படத்தோட  வெற்றிக்கு ரெண்டு  பேர் முக்கிய காரணம் ஒன்று  மியூசிக் டைரக்டர் தரண்... அசத்தி இருக்கான் மனுஷன்... மழையின் சாரலில் மெலோடி அருமை... கல்யாண  மேளங்களில் எல்லா வாத்தியங்களையும் கலந்து கட்டி கல்யாண மண்டபத்தில் இருக்கும் உணர்வை கொடுத்து இருக்கின்றார்... அதே போல  படத்தோட கேமராமேன்....Loganathan Srinivasan பிரேமுக்கு பிரேம் அசத்தி இருக்கின்றார்.... இரண்டு   படத்தோட ஷாட்டுங்க... அதுவும் நிறைய பிரிப்பரேஷன் ஷாட்ஸ் எல்லாத்தையும் கட் பண்ணி கோர்த்து அழகா காட்டி எடிட்டர்     Bavan Sreekumar பாராட்டுக்குறியவர்... அது மட்டுமல்ல.... இத்தனை பேரையும்  வச்சி வேலை வாங்கின  இயக்குனர் கோகுலுக்கு  ஒரு லாரி மலர் கொத்து....
=======
படத்தின் டிரைலர்...


==========
 படக்குழுவினர் விபரம்


Directed by A. Gokul Krishna
Produced by Aditya Chopra
Screenplay by Habib Faizal
Rajiv Rajaram (Dialogues)
Story by Maneesh Sharma
Starring Nani
Vaani Kapoor
Music by Dharan Kumar
Cinematography Loganathan Srinivasan
Editing by Bavan Sreekumar
Studio Yash Raj Films
Release dates
February 21, 2014
Country India
Language Tamil

==========
பைனல்கிக்...

 எனர்ஜட்டிக்கான படம்...  நிறைய கல்யாணம்  சென்று வந்த திருப்தி... காதலர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்பட்ம்...
==========
படத்தின்  ரேட்டிங்.

பத்துக்கு ஏழு.



=======

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

7 comments:

  1. தோழர், நீங்க ஹசீ தோ பாசீயும் மிஸ் பண்ணாம பார்க்கணும். பரிநீத்ராசோப்ராவை காதலிக்க ஆரம்பிச்சிடுவீங்க.

    ReplyDelete
  2. SERENE and Seasons la Dobly ATMOS system installed..

    ReplyDelete
  3. Dolby ATMOS sound system installed in SERENE, Seasons, Streak, S2 Thiyagaraja Screen 2 and S2 Perambur Screen 3 & 4.

    http://www.dolby.com/in/en/professional/technology/cinema/dolby-atmos.html#Theatre_Setup

    ReplyDelete
  4. சார்,

    கடந்த இரண்டு நாட்களில் என்னுடைய இரண்டு நண்பர்கள் இந்த படத்தை பரிந்துரைத்து விட்டார்கள்.

    ஏற்கனவே தோழர் யுவாவும் இந்த படத்தை பற்றி சிறப்பாகவே எழுதி இருக்கிறார்.

    கண்டிப்பாக பார்த்து விடுகிறேன்.



    தோழர் யுவா,

    ஹசி தோ பஸி பட ஹீரோயினின் பெயர் பரினீதி சோப்ரா.

    ReplyDelete
  5. Band Baaja Baarath-ல் அனுஷ்கா ஷர்மாவும் ரன்வீர் சிங்கும் நீங்கள் சொல்வதுபோலவே அசத்தியிருப்பார்கள். ரசித்துப்பார்த்த படம்.

    ReplyDelete
  6. நன்றி சஹா..

    தோழர் யுவா கண்டிப்பாக அந்த படத்தை பார்க்கறேன்.. டிரைலர் பார்த்து இ இருக்கேன்... கண்டிப்பாக பார்க்கறேன்...

    விஷ்வா கண்டிப்பா படத்தை பார்க்கவும்





    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner